என் மலர்tooltip icon

    அரியலூர்

    கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    அரியலூர்:

    அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமியன்று 10 நாள் பெருந்திருவிழா தொடங்கும்.

    அதன்படி முதல் நாள் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருகில் கொடிமரத்தில் ஏறறுவதற்கான ஆஞ்சநேயர் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. இதில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் ராமதாஸ் படையாட்சி, வெங்கடாஜலபதி படையாட்சி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 2 வருடமாக கொரோனா நோய் தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு முதல் நாள் திருவிழாவானது நேற்று சூரிய வாகனத்தில் பெருமாள் இரவு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சாமி திருவீதி உலா நான்கு வீதிகள் வழியாக நடந்தது.

    திருத்தேரோட்டம் 18 -ந் தேதி காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு ஏகாந்த சேவையும், 20-ந்  தேதி காலை வெள்ளிப் படிச்சட்டம் மஞ்சள் நீர், பாலிகை நீர்த்துறை சேர்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

    மாரியம்மன்கோவில் பால்குட விழா நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் மாரியம்மன் கோயிலில் 55-வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. திருமானூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அன்று பால்குடத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நிகழாண்டு பால்குடத்திருவிழா நேற்று நடைபெற்றது. 55-வது ஆண்டாக நடைபெற்ற பால்குடத்திருவிழாவில், பக்தர்கள் கொள்ளிட ஆற்றிலிருந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பால்குடம், பால்காவடி, அலகுகாவடி, கரும்புத்தொட்டில் உள்ளிட்டவற்றை சுமந்தும், அலகுகுத்தியும் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு சென்றனர்
    .
    அங்கு, பக்தர்கள் கொண்டு வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இரவு நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், வானவேடிக்கையும் நடைபெற்றது.

    பின்னர், மலர் மற்றும் மின்னொளி அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது.  விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நியாய விலைக்கடை பணியாளர்கள் மருத்துவமுகாமை உரிய முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    அரியலூர்:

     தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நியாய விலைக்-கடைப் பணியாளர்களுக்கு நடை பெற்ற முழு உடல் பரிசோதனை முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி பார்வையிட்டார்.  

    பின்பு அவர் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தில் 263 முழு நேர நியாய விலைக்கடைகளும், 184 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் 210 விற்பனையாளர்களும், 12 இதர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 

    இவர்களுக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை, இதய நோய் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தேவைப்படும் நபர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மேல் சிகிச்கைக்கு பரிந்துரை செய்யப்படும். 

    இம்முகாமில் தினமும் 25 பணியாளர்கள் வீதம் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே. இம்மருத்துவ முகாமினை கூட்டுறவுத்துறை பணியாளர்கள் உரிய முறையில் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என  கலெக்டர் தெரிவித்தார்.
    தமிழகத்தில் போக்குவரத்து துறை முன்னேற்றத்துக்கு உரிய பணிகளை செவ்வனே செய்து முடிப்பேன் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகத்தையே உலுக்கிய கொரோனாவின் கட்டுப்பாட்டிலிருந்து பொது மக்களை காப்பாற்றும் நோக்கில் தானே முன்னின்று கொரோனா கட்டுப்பாட்டு அறைக்குள் அதற் குரிய அங்கிகளை அணிந்து உள்ளே சென்று நோயாளிகளை பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க கூறி வந்தவர் நமது முதல்வர். தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் இல்லாத இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். 

    பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கிய கலைஞரின் திட்டத்தில் இருந்து தற்போது திருமண உதவித்தொகையை உயர்த்தி வழங்கி பெண்களை கல்லூரி கல்வி வரை படிக்கச் செய்து உயர்த்தி வருகிறார். 

    வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட், தொழில் துறைக்கு தனி பட்ஜெட், வெளிநாட்டு நிறுவனங்களை தமிழ் நாட்டில் முதலீடு செய்ய வைத்து துபாய் சென்று இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை ஈட்டியது நமது முதல்வர் மட்டுமே.

    தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தவழ்ந்து சென்று காலைப்பிடித்து முதல்-அமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. நமது பகுதிக்கு போக்குவரத்துத் துறையை எனக்கு வழங்கிய பொறுப்பை முழுமையாக செய்து முடிப்பேன். போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்கு உரிய பணிகளை செய்து முடிப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தியம்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயில் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோயில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதும், வசிஷ்டர், அகஸ்திய முனிவரால் பூஜிக்க பெற்றதுமாகும்.

    இந்த கோயிலில் வியாக்ர பரத முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியருக்கும், சிலால் முனிவரின் புதல்வர் நந்தியம்பெருமானுக்கும் திருக்கல்யாண விழா இரவு நடைபெற்றது.

    முன்னதாக கோவிலின் முன்பாக உள்ள திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும் திருநந்தியம்பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, வேத வித்வான்கள் யாக பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் கோயிலின் முன்பு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாரப்பர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் மணமகன் நந்தியெம்பெருமான் தாலி கட்ட, பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் சிறப்பாக நடைப்பெற்றது.

    மண-மக்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைப்பெற்று, ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர். நந்தி திருமணம் கண்டால் முந்தி திருமணம் நடைபெறும் என்ற இறை நம்பிக்கையின்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டனர்.

    பின்னர், நந்தியம்-பெருமானும், சுயசாம்பிகை தேவியாரும் மணக்-கோலத்தில் கண்ணாடி பல்லக்கில் அமர்ந்து திருமழபாடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிகழ்ச்சியில் உள்ளதட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் பிற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருமானூர் அருகே உள்ள காமரசவல்லி சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மோகன்ராஜ் வயது 20.  இவர் சென்னையில் உள்ள  தனியார் நிறுவன த்தில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.  இவர்  அதே பகுதியைச் சேர்ந்த மாணவி (14 வயது சிறுமியை) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் மோகன்ராஜ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்து திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதைஅறிந்த மோகன்ராஜின் தந்தை முருகேசன்  சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மோகன்ராஜ் மற்றும் சிறுமியிடமும் விசாரணை செய்தனர்.  

    விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என உறுதியானதை அடுத்து மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர். சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த மோகன்ராஜின் தந்தை முருகேசன் மீது வழக்கு பதிந்து தேடி விசாரித்து வருகின்றனர்
    ஜெயங்கொண்டத்தில் அ.ம.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.ம.மு.க. செயற்குழுக்கூட்டம் துரை மணிவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.  

    கூட்டத்தில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சிவகனகசபை, கோகுல் பாலாஜி, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். 

    முன்னதாக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சந்திரமோகன்  வரவேற்றார். கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 

    மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டுமென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

    கூட்டத்தில் வரதராஜன்பேட்டை பேரூராட்சி செயலாளர் ராஜாராம், மாவட்ட மாணவரணி தலைவர் திருக்குமரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இளவழகன், நகர செயலாளர் முரளி மற்றும் பலர் பங்கேற்றனர். 

    முடிவில் மாவட்ட கழக துணை செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.
    சொத்துவரி உயர்வை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரி தொடர்பான நகர்மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கருணாநிதி நகராட்சி பொறியாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தீர்மானங்களை உதவியாளர் ஷகிலா பானு வாசித்தார். கூட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள சொத்துவரி தொடர்பான தீர்மானம் அறிக்கை வாசித்த போது, அப்போது அதிமுக கவுன்சிலர் செல்வராஜ் குறுக்கிட்டு சொத்து வரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

    6வது வார்டு கவுன்சிலரின் அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சேகர், பாண்டியன், சுப்பிரமணியன் ஆகிய 4 பேரும் வெளிநடப்பு செய்தனர். 

    அதன் பின்னர் தி.மு.க. உறுப்பினர் 10 பேர், வி.சி.க  உறுப்பினர் 2 பேர், பா.ம.க. வார்டு உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்ட 3 பேர் உறுப்பினர்களை கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கலியபெருமாள் கோவில் தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருந்ததினால் திருவிழா நடைபெறவில்லை,  இந்த ஆண்டு நாளை (10&ந்தேதி) ராமநவமி அன்று கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கொடி ஏற்று விழா, சூரியவாகனம், வெள்ளி பல்லக்கு, வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி கருட வாகனம், படத்தேர், வெள்ளியானை வாகனம், திருக்கல்யாணம், கண்ணாடி பல்லக்கு, வெள்ளி சிம்மவாகனம், புன்னை மரம் வாகனம், வெண்சனத்தாழி, வெள்ளி குதிரை வாகனம் உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது. 

    வரும் 18ந்தேதி தேர் திருவிழாவும், 19ந்தேதி ஏகாந்த சேவையும் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. 
     18ந்தேதி அதிகாலையில் சின்னதேரில் ஆஞ்சநேய சுவாமியும், பெரிய தேரில் அருள்மிகு கலியுகவரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, 

    பூமாதேவி ஆகியவைகள் மலர்களில் அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆதீன பரம்பரை தருமகர்த்தா கோ கோவிந்தசாமி, படையாச்சியார் மகன்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை திருக்கோவில் ஆதீனபரம்பரை தருமகர்த்தா கோ.கோவிந்தசாமி படையாட்சி மகன்கள் செய்து வருகின்றனர்.
    கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பால்குடம் திருவிழா நடை பெற்றது.
    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் அருகே பிரசித்திபெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுப்பது வழக்கம். 

    அதன்படி நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக மாரியம்மன் கோவிலில் தொடங்கிய பால்குடம் ஊர்வலமானது முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. 

    பின்னர் சுவாமிக்கு மஞ்சள், பால், சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை உடனடியாக அகற்ற ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலக கூட்ட மன்றத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில், துணை தலைவர் அசோகன் முன்னிலையில் நடைபெற்றது, மாவட்ட ஊராட்சி குழு அலுவலக செயலாளர் கபிலன் வரவேற்று பேசினார். 

    மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, ஷகிலா தேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனலட்சுமி, கீதா, புள்ளியியல் அலுவலர் முகிலன், இளநிலை உதவியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர், 

    இக்கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் தனியார் சிமெண்ட் ஆலைகள் ஏரி, குட்டை, குளம், அரசு புறம்போக்கு போன்ற ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும், ஏரி குளங்களில் உள்ள வேலிக்கருவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    ராணுவ கல்லூரியில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர்  ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:  

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடுனில் உள்ள இராஷட்ரிய இந்தியராணுவக் கல்லூரியில் 2023 ஜனவரி பருவத்தில் சேருவதற்கான 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம்  தேதியில் நடத்தப்பெறும் தேர்வுக்கான விண்ணப்-பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாது-காப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல். விண்ணப்பதாரர்  11  வயது நிரம்பியவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் (2.01.2010 முன்னதாகவும் 1.07.2011க்கு பின்னதாகவும் பிறந்திருத்தல் கூடாது) வயது வரம்பில் தளர்வு கிடையாது. 

    விண்ணப்படிவம் மற்றும் தகவல்கள் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளவும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் இரட்டையாக தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர், தேர்வாணையம்,  

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்-வாணையச்சாலை, பூங்கா நகர், சென்னை -600 003 என்ற முகவரிக்கு 25.04.-2022க்குள் சேர வேண்டும். மேலும்  விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள்     படைவீரர் நல துணை இயக்குநர் தொலைப்-பேசி எண்.04329-221011 அணுகி பயன்பெறலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×