என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் பொதுக்கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற போது எடுத்தபடம
போக்குவரத்து துறை முன்னேற்றத்திற்கு உரிய பணிகள்-அமைச்சர் உறுதி
தமிழகத்தில் போக்குவரத்து துறை முன்னேற்றத்துக்கு உரிய பணிகளை செவ்வனே செய்து முடிப்பேன் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.
அரியலூர்:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்தையே உலுக்கிய கொரோனாவின் கட்டுப்பாட்டிலிருந்து பொது மக்களை காப்பாற்றும் நோக்கில் தானே முன்னின்று கொரோனா கட்டுப்பாட்டு அறைக்குள் அதற் குரிய அங்கிகளை அணிந்து உள்ளே சென்று நோயாளிகளை பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்க கூறி வந்தவர் நமது முதல்வர். தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் இல்லாத இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கிய கலைஞரின் திட்டத்தில் இருந்து தற்போது திருமண உதவித்தொகையை உயர்த்தி வழங்கி பெண்களை கல்லூரி கல்வி வரை படிக்கச் செய்து உயர்த்தி வருகிறார்.
வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட், தொழில் துறைக்கு தனி பட்ஜெட், வெளிநாட்டு நிறுவனங்களை தமிழ் நாட்டில் முதலீடு செய்ய வைத்து துபாய் சென்று இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை ஈட்டியது நமது முதல்வர் மட்டுமே.
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தவழ்ந்து சென்று காலைப்பிடித்து முதல்-அமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. நமது பகுதிக்கு போக்குவரத்துத் துறையை எனக்கு வழங்கிய பொறுப்பை முழுமையாக செய்து முடிப்பேன். போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்கு உரிய பணிகளை செய்து முடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






