என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த போது எடுத்த படம்
    X
    ஜெயங்கொண்டம் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த போது எடுத்த படம்

    ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    சொத்துவரி உயர்வை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சொத்துவரி தொடர்பான நகர்மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கருணாநிதி நகராட்சி பொறியாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தீர்மானங்களை உதவியாளர் ஷகிலா பானு வாசித்தார். கூட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள சொத்துவரி தொடர்பான தீர்மானம் அறிக்கை வாசித்த போது, அப்போது அதிமுக கவுன்சிலர் செல்வராஜ் குறுக்கிட்டு சொத்து வரி விதிப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

    6வது வார்டு கவுன்சிலரின் அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சேகர், பாண்டியன், சுப்பிரமணியன் ஆகிய 4 பேரும் வெளிநடப்பு செய்தனர். 

    அதன் பின்னர் தி.மு.க. உறுப்பினர் 10 பேர், வி.சி.க  உறுப்பினர் 2 பேர், பா.ம.க. வார்டு உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்ட 3 பேர் உறுப்பினர்களை கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×