என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோல், டீசல், கேஸ் உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    பெட்ரோல், டீசல், கேஸ் உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    கம்யூனிஸ்ட்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல், கேஸ் உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    மாவட்டக் குழு சேகர், பத்மாவதி, கண்ணன், ஒன்றியக்குழு ரவிச்சந்திரன், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் கண்டன உரை நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு மகாராஜன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×