என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  நகை திருடிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாழப்பாடியில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  வாழப்பாடி:

  வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டையைச் சேர்ந்தவர் கோபால் (48). இவர் குடும்பத்தோடு வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளர். 

  இதுகுறித்து கோபால் அளித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கோபால் குடும்பத்தோடு வெளியூர் சென்றதை அறிந்து கொண்டு, அதே தெருவில் வசித்து வரும் ஹரிஹரசுதன் (21) தங்க நகைகளை திருடியதை கண்டுபிடித்த போலீசார், அவரைக் கைது செய்தனர். இவரிடம் இருந்த அரை பவுன் மோதிரத்தை கைப்பற்றினர். 

  பேளூரில் தனியார் வங்கியில் ரூ. 57, 200 க்கு அடகு வைத்துள்ள தங்கச் சங்கலியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
  Next Story
  ×