என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
முதல்வர் மு.க ஸ்டாலின்
லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றினோம்- முதல்வர் ஸ்டாலின்
By
மாலை மலர்13 Jan 2022 3:36 AM GMT (Updated: 13 Jan 2022 5:54 AM GMT)

பதவி ஏற்றுக்கொண்டது முதல் தற்போது வரை 2619 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
திமுக அரசின் 8 மாத செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வீடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:-
முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன். நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். 12.15 கோடி குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டங்கள் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். அரசு ஊழியர்களின் அகவிலைப்ப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம். வாக்குறுதி அளித்த திட்டங்கள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றுகிறோம்.

வெளிப்படையான நிர்வாகத்தை திமுக அரசு நடத்தி வருகிறது. பதவி ஏற்றுக்கொண்டது முதல் தற்போது வரை 2619 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றினோம்.
கொடுத்த வாக்குறுதிகளை நிச்சையம் நிறைவேற்றுவோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். எங்கள் செயல்பாடுகளுக்கான ஆதாரம் பொதுவெளியில் இருக்கிறது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story
×