என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஞாயிறு ஊரடங்கு
தமிழகத்தில் ஜனவரி 16-ம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு- மு.க ஸ்டாலின்
நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
ஞாயிறு முழு ஊரடங்கு அன்று கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கடுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story






