search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் விபத்தால் வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு தடை
    X
    தொடர் விபத்தால் வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு தடை

    தடை நீக்கத்திற்கு பின்னும் தொடர் விபத்தால் அதிர்ச்சி- கல்லட்டி சாலையில் வெளிமாநில வாகனங்கள் செல்ல 3 நாட்களுக்கு தடை

    வெளி மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு செல்ல 23-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப் பாதையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு நடந்த கார் விபத்தில் சென்னையை சேர்ந்த 5 பலி பலியானார்கள். ஒரு வாரத்துக்கு பின்னரே கொடூர விபத்து குறித்து தெரியவந்தது.

    இதுபெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. இதைனையடுத்து அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கல்லட்டி பாதையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வாகனங்களுக்கு தடைவிதித்தார்.

    மசினகுடி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த 8-ந்தேதி முதல் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    சாலை திறக்கப்பட்ட முதல் நாளே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கார் விபத்துக்குள்ளாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 19-ந்தேதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு கார் விபத்துக்குள்ளானது.

    நேற்றும் கேரளாவில் இருந்து ஊட்டி வந்த கார் 21-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அடுத்தடுத்த நடந்த விபத்துக்களை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உடனடி நடவடிக்கையில் இறங்கினார்.

    இது குறித்து எஸ்.பி. பாண்டியராஜன் உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    வெளி மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு செல்ல 23-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) வரை தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் உரிய ஆய்வுகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும்.

    வெளி மாநில வாகனங்களை இந்தசாலையில் தொடர்ந்து இயக்க அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×