search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ரெயில் நிலையம்
    X
    வேலூர் ரெயில் நிலையம்

    வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்துள்ளது. அங்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். நேற்று தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

    இந்நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதுவரை 50 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

    சட்டசபை தேர்தலில் முழு கவனம் செலுத்துவதால் வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவித்துள்ளார். 

    இதையடுத்து, வேலூர் தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அ.ம.மு.க.வும் போட்டியிடாத நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×