என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்தது- மு.க.ஸ்டாலினிடம் டிஆர்.பாலு ஒப்படைத்தார்
    X

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்தது- மு.க.ஸ்டாலினிடம் டிஆர்.பாலு ஒப்படைத்தார்

    திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டதால் அதை இறுதி செய்வதற்காக மு.க.ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலு சமர்ப்பித்துள்ளார். #mkstalin #dmk #electionmanifesto

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டிருந்தது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இதற்காக கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு தலைமையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி, கனிமொழி எம்.பி., ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழுவை தேர்தல் அறிக்கை தயாரிக்க நியமித்திருந்தார்.

    இந்த குழுவினர் கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தொகுத்து அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளை அறிந்து தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்துள்ளனர்.

    இதுதவிர பொதுமக்கள் இ.மெயில் கடிதம் மூலம் தெரிவித்த தகவல்களையும் கவனத்தில் கொண்டு பல்வேறு அம்சங்களை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்துள்ளனர்.

    கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை, நெசவாளர்களுக்கு சலுகை, மேகதாது, முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழக உரிமையை நிலை நாட்டுதல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் குறித்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர்.


    தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டதால் அதை இறுதி செய்வதற்காக மு.க.ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலு சமர்ப்பித்துள்ளார்.

    இதில் திருத்தங்கள் ஏதும் இருந்தால் அதை சரிசெய்த பிறகு முறைப்படி அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். #mkstalin #dmk #electionmanifesto

    Next Story
    ×