search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலத்தில் மாணவரிடம் செல்போன் பறிப்பு- 2 பேரிடம் போலீசார் விசாரணை
    X

    திருமங்கலத்தில் மாணவரிடம் செல்போன் பறிப்பு- 2 பேரிடம் போலீசார் விசாரணை

    மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேர் விபத்தில் சிக்கியதால், போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பேரையூர்:

    திருமங்கலம் கலை நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விஸ்வம் (வயது 16) தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    நேற்று கடைக்குச் சென்ற விஸ்வம், கையில் செல்போனை எடுத்துச் சென்றார். அதனை பார்த்துக் கொண்டே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் விஸ்வத்தின் கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் விஸ்வம் புகார் செய்தார். அப்போது செல்போன் பறித்த மர்ம நபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் நம்பர் பற்றியும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு 11 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அது செல்போன் பறித்தவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது.

    அதில் வந்த லோகேஸ்வரன் (25), ராகுல் ரோ‌ஷன் (18) ஆகிய 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×