என் மலர்

    செய்திகள்

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை- அழுகிய நிலையில் உடல் மீட்பு
    X

    காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை- அழுகிய நிலையில் உடல் மீட்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் மேரி (வயது 25). இவர் திருப்பூர் ஸ்ரீநகரில் உள்ள தனியார் பனியன் கம்பெனி விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் சென்னையை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

    இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கு தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து டோரிஸ் மேரியும், மணிகண்டனும் திருமணம் செய்து கொண்டனர்.

    புதுமணத்தம்பதி அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் சிவகுமாருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினர். காதல் கைகூடிய மகிழ்ச்சியில் புதுமணதம்பதி சந்தோ‌ஷமாக வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஞாயிறுக்கிழமை மணிகண்டன் சென்னை செல்வதாக கூறிவிட்டு சென்றார். சென்னையில் வேலையை முடித்து விட்டு நேற்று இரவு மணிகண்டன் திருப்பூர் திரும்பினார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்போடப்பட்டிருந்தது. மணிகண்டன் கதவை தட்டிப்பார்த்தார்.

    வெகுநேரமாகியும் எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது டோரிஸ் மேரி தூக்கில் பிணமாக தொங்கினார். மனைவி பிணமாக தொங்குவதை பார்த்த மணிகண்டன் கதறி அழுதார்.

    மணிகண்டனின் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டோரிஸ் மேரியின் உடல் அழுகிய நிலையில் தொங்கியது.

    இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக டோரிஸ் மேரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் திருமணம் செய்த கணவர் தன்னை விட்டு பிரிந்து செல்ல சென்னை சென்று விட்டார் என்ற அச்சத்தில் இறந்தாரா? அல்லது வேறு காரணமா என்று போலீசார் பல்வேறுகோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தவிர திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.#tamilnews
    Next Story
    ×