என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை: எம்.பி. இல.கணேசன்
By
மாலை மலர்11 July 2017 7:20 AM GMT (Updated: 11 July 2017 7:20 AM GMT)

கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என மேட்டூரில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் கூறியுள்ளார்.
மேட்டூர்:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் இன்று காலையில் மேட்டூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சி தொடக்க காலத்தில் இருந்தே அமைப்பு ரீதியான விஸ்தரிப்பு பணியை அன்றாட பணிப்போல் செய்து வருகிறது. இதனை விஸ்டார் ரோஜனா என்று கூறுவார்கள். கட்சி அமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுக்கு 11 நாட்கள் ஒவ்வொரு பகுதிகளில் தங்கி விஸ்தரிப்பு பணியை நடத்த வேண்டும். இதன் அடிப்படையில் மத்திய பிரதேசத்தில் 2 நாட்கள் பணியை முடித்த நான், தற்போது தமிழ்நாட்டில் ஏலகிரி மலையில் 2 நாட்கள் தங்கி இந்த பணியை மேற்கொண்டேன்.
இன்றும், நாளையும் மேட்டூரில் தங்கி இந்த பணியை மேற்கொள்வேன். மலை, ஆறு, கடல் சார்ந்த பகுதிகளில் இந்த பணியை செய்ய வேண்டும். மேட்டூரில் 2 வாக்குச்சாவடிகள் இருக்கிற பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தும், தொண்டர்களை சந்தித்தும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளேன். இது தான் நான் மேட்டூர் வந்த நோக்கம்.
ஒரு கட்சியின் தலைவர் மறைந்தாலோ அல்லது சிறை வாசம் சென்றாலோ அல்லது கட்சி பிளவுபட்டாலோ அந்த பலவீனத்தை பயன்படுத்தி வளரும் கட்சி பாரதிய ஜனதா அல்ல.
எங்கள் சாதனைகளை எடுத்துச் சொல்லி கட்சியை வளர்ப்போம். தமிழகத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா காலுன்றி வீறுநடை போட்டு நடந்து வருகிறது.
வெற்றி விழாவிற்கான கால்கோல் விழா நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சனை உட்கட்சி பிரச்சனை. அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சனை. இதில் பாரதிய ஜனதாவுக்கு எந்த பங்கும் இல்லை.
கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரை பெற வேண்டும் என்பதில் தமிழக மக்களின் கருத்திற்கேற்ப காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாரதிய ஜனதா தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சேலம் மாவட்ட தலைவர் சவுந்தர் ராஜன், சேலம், தர்மபுரி கோட்ட செயலாளர் முருகன், நகர தலைவர் ராம்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story
×