என் மலர்
செய்திகள்

நரேந்திர மோடி அரசு மீது அ.தி.மு.க. கடும் பாய்ச்சல்
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் மோடி அரசின் மூன்றாண்டு ஆட்சியை சித்ரகுப்தன் என்ற பெயரில் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. நாளேட்டில் மோடி அரசின் மூன்றாண்டு சாதனையை சித்ரகுப்தன் என்ற பெயரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
* மோடி அரசின் மூன்றாண்டு.
இது- நாடு காக்கும் அரசா?
காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா?
* கருப்பு பணத்தை ஒழித்த அரசா?
கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா?
* ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை...
ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்... என வாக்குறுதி காத்த அரசா?
* பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா?
பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா?
* மம்தா உயிருக்கு பதினோரு லட்சம்...
பினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்
ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?
ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா?
* ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு...
‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு...
எய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு...
வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்
இது- நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?
* எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு. ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story