என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற ஈரோடு மணமகனின் தந்தை விபத்தில் பலி
    X

    திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற ஈரோடு மணமகனின் தந்தை விபத்தில் பலி

    புளிக்கரை ஏரி அருகே திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற மணமகனின் தந்தை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு டவுன் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). இவரது மகன் பன்னீர் செல்வம்.

    இவருக்கு வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள பெரியசாமி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்காக இன்று காலையில் புறப்பட்டு மாருதி காரில் தர்மபுரியை நோக்கி சென்றார். அவருடன் அவரது தம்பி ராமசாமியும் காரில் சென்றார்.

    கார் இன்று காலை 9 மணி அளவில் புளிக்கரை ஏரி அருகே சென்றபோது எதிரே வந்த கல்லூரி வாகனமும் அந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் காரில் வந்த தம்பி ராமிசாமி பலத்த காயம் அடைந்தார்.

    விபத்துக்குள்ளான அந்த கல்லூரி வாகனத்தில் 10 மாணவ, மாணவிகள் இருந்தனர். இன்று காலையில் தேர்வு எழுதுவதற்காக அந்த கல்லூரி வாகனத்தில் வந்தனர். அவர்களுக்கு இந்த விபத்தில் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

    காயம் அடைந்த ராமசாமி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    Next Story
    ×