என் மலர்

  செய்திகள்

  விஜய் வசந்த்- பொன்.ராதாகிருஷ்ணன்
  X
  விஜய் வசந்த்- பொன்.ராதாகிருஷ்ணன்

  நேருக்குநேர் சந்தித்து கொண்ட பாரதிய ஜனதா-காங்கிரஸ் வேட்பாளர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார்.
  நாகர்கோவில்:

  கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்பு மனு தாக்கல் செய்ய நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் மனு தாக்கல் செய்தபின்பு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ் ராஜன் மனு தாக்கல் செய்ய சென்றார். அவருடன் விஜய் வசந்தும் சென்றார்.

  அப்போது அங்கு நாகர்கோவில் சட்டசபை தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி மனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான பாரதிய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனும் இருந்தார்.

  நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் விஜய் வசந்த் - பொன். ராதாகிருஷ்ணன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். உடனே அவர்கள் இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர். இதனை கண்டு கூடியிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
  Next Story
  ×