என் மலர்
செய்திகள்

ஈரோட்டுக்கு வந்த மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினர் தூர்வாரிய செம்மாம்பாளையம் குளத்தை பார்வையிட்டபோது எடுத்த படம்.
சட்டசபை கூடும் வரை அ.தி.மு.க அரசு நீடிப்பதில் சந்தேகம்: மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை கூடும் வரை அ.தி.மு.க அரசு நீடிக்குமா என்ற சந்தேகம் உள்ளது என ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் ஈரோடு வந்தார். அவருக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மு.க.ஸ்டாலின் உத்தரவு படி ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் ஈரோடு திண்டல் செம்மாம் பாளையம் குளத்தை தூர்வாரி வருகிறார்கள். இந்த குளத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். திறம்பட பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை அவர் பாராட்டினார்.
அப்போது மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எனது ஆலோசனைபடி தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள குளங்களை தூர்வாரி வருகிறார்கள். தி.மு.க.வினரின் இந்த பணியை பார்த்து ஆளும் அரசு விழிப்படைந்து உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை தூர்வாரப் போவதாக கூறி பணியை தொடங்கி வைத்தார். வெறும் விளம்பரத்துக்காக தொடங்கப்பட்ட பணி இன்றும் அப்படியே தான் கிடக்கிறது. மக்களை ஏமாற்றவே இப்படி செய்துள்ளார்கள்.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதை மக்களும் அறிவார்கள்.
அதன்படி நீர்நிலைகளை தூர்வார கட்சி தொண்டர்களுக்கு கட்டளையிட்டிருந்தேன். அவர்களும் தூர்வாரும் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த பணிகளை நானே நேரில் சென்றும் பார்த்து வருகிறேன்.
அந்த வகையில் ஈரோடு செம்மாம்பாளையம் குளத்தை ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரி உள்ளார்கள். மழை பெய்தால் இந்த குளத்தில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இந்த தண்ணீர் விவசாயத்துக்கும் பயன்படும் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பணியை மிகவும் சிறப்பாக செய்த தி.மு.க. முன்னோடிகளையும், நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பாராட்டி அவர்களுக்கு நன்றியும் கூறுகிறேன்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது தவறில்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பால் குற்றவாளி என்று கூறப்பட்ட ஜெயலலிதா படம் வைக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி படம் வைப்பதில் ஒரு தவறுமில்லை.
வரும் 14-ந்தேதி தமிழக சட்டமன்றம் கூட உள்ளது. சட்டமன்றம் கூடும் வரை இந்த ஆட்சி நீடிக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. சட்டசபை கூடும் முன் இந்த அரசு இருக்குமா? என்பதை முதலில் பார்ப்போம்.
சட்டசபை கூடினால் தி.மு.க. தனது ஜனநாயக கடமையை சிறப்பாக ஆற்றும்.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது அ.தி.மு.க ஒரு அணியாக இருந்தது. அவர் மறைந்தபிறகு 2 அணியாக மாறி இப்போது 3-வது அணியும் உருவாகிவிட்டது. இன்னும் போக...போக எத்தனை அணிகள் உருவாகுமோ...? தெரியவில்லை.
இன்னும் 60 நாளில் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு சசிகலா கெடுவிதித்துள்ளதாக தினகரன் கூறி உள்ளாரே? என்று கேட்டதற்கு இதுபற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.
ஈரோட்டில் இன்று மாலை கொ.ம.தே.க. சார்பில் நடக்கும் நதிகள் இணைப்பு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

Next Story