என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘செர்விகல் கார்சினோமா’ (Cervical carcinoma) எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உண்டாவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human Papilloma Virus) காரணம்.

    இது ஆணிடம் இருந்து பெண்ணுக்குத் தாம்பத்ய உறவின் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் மனித உடலில் இருந்தாலும், எல்லோருக்கும் இது பிரச்னையை உண்டாக்குவது இல்லை. உடலிலேயே தங்கும்போது அல்லது எதிர்ப்புச் சக்தி குறையும்போதுதான், இந்த வைரஸ் வீரியத்துடன் தாக்கும். இந்தப் புற்றுநோய் திடீரென்று ஒருநாளில் தோன்றுவது இல்லை. வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்து திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி, பல வருடங்கள் கழித்தே புற்றுநோயாக வெளிபடும். அதற்குள், அதைக் கண்டுபிடித்து, தொடர்ந்து சிகிச்சை எடுத்தால், முற்றிலுமாகக் குணப்படுத்திவிடலாம்.

    சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொண்டால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியும். சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாததே எல்லா நோய்களுக்கும் முக்கிய காரணமாகும். பெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

    புற்றுநோய் வந்திருக்கிறது என்பதை முதல் நிலையில் கண்டறிந்தால் 95 சதவீதம் காப்பாற்ற முடியும். 2-வது நிலை என்றால் 60 சதவீதமும், 3-வது நிலை என்றால் 40 சதவீதமும் காப்பாற்ற முடியும். முற்றிப்போன நிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது கடினம். மார்பகத்தில் கட்டி இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வாய், குடல், தொண்டை, மூளை, எலும்பு போன்றவற்றிலும் புற்றுநோய் வரும்.

    புகையிலையால் புற்றுநோய் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்த சொல்ல வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பாப்ஸ்மியர் (Papsmear), வயா, வில்லி (VIA,VILI) பரிசோதனைகள் மூலம், திசுக்களில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய முடியும். மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் CRYO என்ற எளிதான முறையில், சரிசெய்துவிடலாம். அல்லது அந்த இடத்தை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். சிகிச்சைக்குப் பிறகும்கூட, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    தடுப்பூசி: இந்த வைரஸ் கிருமி உடலுக்குள் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்கு, தடுப்பூசி உள்ளது. பெண்குழந்தைகள் அனைவருக்கும், 10 முதல் 11 வயதுக்குள் இந்த ஊசியைப் போடவேண்டும்.

    ஆறு மாதங்களுக்குள் மூன்று முறை போடவேண்டும். இந்த வயதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், 45 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். இது முதல்நிலைத் தடுப்பாகச் செயல்படும். தடுப்பூசி போடப்படும் குழந்தைகளுக்கு, திருமண வயது வரும்போது, பாப்பிலோமா வைரஸை எதிர்க்கும் அளவுக்கு எதிர்ப்புச் சக்தி உருவாகிவிடும்.

    பெண்கள், கர்ப்பப்பையில் தொற்றுகள், தொடர்ந்து வெள்ளைப்படுதல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு வழியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அறிகுறிகள் இருந்தால்தான் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. மணமான பெண்கள் அனைவரும் 3 வருடங்களுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.  அவ்வாறு முடியாவிட்டால், 35 வயது முதல் 45 வயதுக்குள் ஒரு முறையேனும் பாப்ஸ்மியர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 
    குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை எப்படி சேமித்து வைப்பது, எத்தனை நாட்கள் வரை சேமித்து வைப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப்.

    வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும். தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும்.

    ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள், வெளியில் தாய்ப்பாலை வைக்க நினைக்கும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது....

    தாய்ப்பாலை உங்களது கையின் மூலமாகவோ, மேனுவல் பிரெஸ்ட் பம்ப் அல்லது எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை சேமித்து வைத்தால் 1-2 மணி நேரம் வரைதான் கெடாமல் இருக்கும். உங்களது ரூம் வெப்பநிலைப்படி 1-2 மணி நேரம் வரைதான் தாய்ப்பாலை வெளியில் வைத்து இருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

    இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் சேகரிக்க நினைக்கிறீர்கள் என்றாலோ அடுத்த நாளுக்கு தாய்ப்பால் சேகரிக்க வேண்டுமென்றாலோ நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாம். இரண்டு நாள் வரை தாய்ப்பால் கெடாமல் இருக்கும்.

    ஒரு வாரம் நீங்கள் எதாவது அலுவல் ரீதியாக குழந்தையை விட்டு வெளியே செல்லுவதாக இருந்தால், சேமிக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். ஃப்ரீசரில் வைக்கின்ற தாய்ப்பாலை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    10 நாட்களுக்கு மேல் ஃப்ரீசரில் வைத்திருக்கும் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
    பெண்கள் குழந்தை பெற்ற பிறகு முதுகு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அதிகமாக அவதிப்படுகின்றனர். பெண்களின் இந்த பிரச்சனைகான தீர்வுகளை பார்க்கலாம்.
    இளமையிலே முதுகு வலி, மூட்டு வலி என அவதிப்படும் பெண்கள் அதிகம். அதுவும் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பிரச்சனையில் அதிகமாக அவதிப்படுகின்றனர். தைலம், மருந்துகள் என எதுவும் பெரிதாகப் பலன் தருவதில்லை. இந்த வலிக்கான காரணமாக நம் வாழ்வியல் மாற்றமே முதலிடத்தில் இருக்கிறது. இதைச் சரி செய்வது எப்படி எனப்பார்க்கலாம்.

    முதுகு வலி


    நடு முதுகில் வலி அல்லது அடி முதுகில் வலியா எனக் கவனியுங்கள்.

    சிசேரியன் செய்த தாய்மார்களுக்கு, முதுகில் ஊசி போடப்படுவதால் அதன் வலி நீண்ட காலத்துக்கோ இறுதி வரைக்குமோ இருக்கலாம்.

    சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்கள், அனஸ்திஷியாவின் தாக்கத்திலிருந்து தப்பிக்க நிறைய தண்ணீர், பழச்சாறுகள், இளநீரைக் குடிக்கலாம்.

    நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளாதீர்கள்.

    உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை இருந்தாலும் முதுகு வலி வரும்.

    சில நேரத்தில் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.

    தாய்மார்களுக்கு வரக்கூடிய மன அழுத்தமும் ஒரு காரணம்.

    சிறுநீரகம், சிறுநீரக பையில் கல் இருப்பதாக் கீழ் முதுகில் வலி வரலாம்.

    வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தாலும் கீழ் முதுகில் வலி வரலாம்.

    கூன் விழுந்த நிலையில் உட்காருவது, நிற்பது, நடப்பதும் ஒரு காரணம்.

    மேடு, பள்ளம் உள்ள சாலைகளில் தினமும் பயணிப்பது கூடாது.

    திடீரென குனிவது, நிமிர்வது ஒரு காரணம்.

    உடல்பருமனாக இருப்பதும் ஒரு காரணம்.



    தீர்வுகள் :

    நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் நாற்காலியில் அடி முதுகுக்கு சிறு தலையணை வைத்துக்கொள்ளுங்கள். கூன் விழாமல் உட்காருவது நல்லது. அடிக்கடி எழுந்த சின்ன நடை போடுங்கள். உட்கார்ந்திருக்கும்போது தொங்கவிட்ட கால்களின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

    உடற்பயிற்சி, நடை, நீச்சல், யோகாசனம் போன்ற ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்தால் முதுகுவலி வராமல் தடுக்கலாம். வந்தாலும் சரி செய்ய முடியும்.

    ஆர்கானிக் பசும்பால், முட்டை, கொண்டைக்கடலை, கருப்பு எள்ளு உருண்டை, ஆரஞ்சு, பாதாம், உளுந்து ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

    முதுகு வலி உள்ளவர்கள், கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையே தலையணை வைத்து உறங்கலாம். சமதளமான மெத்தையில் படுத்து உறங்குங்கள்.

    உயரமான காலணிகளை அணிய வேண்டாம். நடப்பது, நிற்பது போன்றவை இரண்டு கால்களுக்கும் சமமாக இருப்பதைப் போல நிற்க வேண்டும். ஒரு காலுக்கு மட்டும் அதிக எடை இருக்க கூடாது.

    அதிக சுமையுள்ள பையை ஒரு தோளில் மட்டும் மாட்ட கூடாது. கைப்பை, குழந்தைகளுக்கான பைகளையோ ஒரு பக்கம் மட்டும் மாட்ட கூடாது. ஒரு பட்டி உள்ள கைப்பையை நீங்கள் பயன்படுத்தினால், அந்தப் பட்டி அகலமாக இருக்க வேண்டும். பல பெண்களுக்கு இதனால் முதுகு வலி வரும். இரு தோள்ப்பட்டையிலும் மாட்டும் படியான பையை அணிவது நல்லது.

    உங்கள் தலை, தோள்ப்பட்டை, இடுப்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

    முறையாக யோகாசனங்களை கற்றப்பின் தினந்தோறும் செய்து வந்தால் முதுகு வலியிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.
    கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கான சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.

    அடினோமையாசிஸ் என்றால் என்ன:-

    கர்ப்பப்பையில் மூன்று பகுதிகள் இருக்கும் வெளியே உள்ள பகுதி சீரோசா என்றும் உள்ளே உள்ள உள்பகுதி எண்டோமெட்சியம் என்றும் மத்தியில் உள்ள பகுதி மையோ மெட்ரியம் என்றும் பிரிக்கப்படுகிறது.

    கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியம் சிதைந்து மையோமெட்ரியம் பகுதிக்கு சென்று கட்டியாக மாறுவது.

    அடினோமையோசிஸ் வகைகள்:-

    1. கர்ப்பப்பை முழுவதும் பாதிக்கப்படுவது டிபியூஸ் வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் பெரும்பான்மையான பகுதி பாதிக்கப்படு கிறது.

    இன்னொரு வகைக்கு லோக்கலைஸ்டு வகை என்று பெயர். இதில் கர்ப்பப்பையில் உள்ள மையோமெட்ரியத்தின் எல்லா பகுதியும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குறிப்பாக கர்ப்பப்பையின் பின்பகுதியை பாதிக்கிறது.

    அடினோமையோசிஸ் ஒரு பெண்ணிற்கு இருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது.



    இந்நோயின் அறிகுறி:-

    அதிக இரத்தப் போக்கு ஏற்படுதல், அடிவயிற்றின் வலி குறிப்பாக மாதவிடாயின் போது அடி வயிற்றில் வலி ஏற்படுதல், குழந்தை பேறுயின்மை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுதல், அடி வயிற்றில் கட்டி தென்படுதல்

    இதனுடைய பரிசோதனை முறைகள்:-

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் MRI ஸ்கேன் மற்றும் பையாப்சி (Biopsy) மூலம் உறுதிபடுத்தி கொள்ளலாம்.

    சிகிச்சை முறைகள்:-

    ஆரம்ப காலத்தில் மருந்து மாத்திரை மூலம் சரி பண்ணிபார்க்கலாம். இதில் சரியாகவில்லை என்றால் முன்பு (Open) சாதாரண முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இப்போது அடினோ மையோசிஸ் கட்டிகள் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.

    ஏற்கனவே நிறைய குழந்தைகள் இருந்தும் தாங்கமுடியாத வலி, அதிகபடியான இரத்தப்போக்கு இருந்தால் சில சமயங்களில் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    அதுவும் இப்பொழுது நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.

    சுசிலா மருத்துவமனை, பாவூர்சத்திரம்
    இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு.
    இன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. மாதவிடாய்க் காலத்தில் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படுகிறது, எத்தனை நாள்களுக்கு ரத்தப்போக்குத் தொடர்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். 28 முதல் 35 நாள்களுக்குள் ஏற்படும் சுழற்சியும், மூன்று முதல் ஏழு நாள்கள் வரை ரத்தப்போக்கு ஏற்படுவதும் ஆரோக்கியம். ஆனால், உடல் அமைப்புக்கு ஏற்றவாறு சுழற்சிக்கான காலமும் ரத்தப்போக்கின் அளவும் மாறுபடும்.

    எது அதிக ரத்தப்போக்கு?

    மாதவிடாய் நாள்களில்,

    * ஒரு நாளில் ஆறு நாப்கின் வரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவது

    * தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்படுவது

    * ரத்தம் கட்டியாக வெளியேறுவது

    * ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு இருப்பது

    * அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் சிரமப்பட்டுச் செய்வது

    * மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வது; மூச்சுவிடுவதில் சிரமம்

    சிலருக்கு, மூன்று நாள்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும். ஆனாலும், அந்தக் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், அவர்களும் அதிக ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களே. மாதவிடாயின்போது வெளியேறுவது அனைத்தும் கெட்ட ரத்தம் என்று நினைத்து பலர் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்துவதுண்டு. அது நல்லதல்ல... மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.  

    மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அதிக ரத்தப்போக்குப் பிரச்சனையை `மாதவிடாய் மிகைப்பு' (Menorrhagia) என்று சொல்வார்கள்.

    அதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்சனைகள்...

    * ஹார்மோன் இம்பேலன்ஸ் (Hormone Imbalance): கர்ப்பப்பையின் சீரான செயல்பாட்டுக்கு, ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரொஜெஸ்ட்ரோன் (Progestrone) ஆகிய ஹார்மோன்களே காரணம். இவை சுரப்பதில் சிக்கல் ஏற்பட்டால், ரத்தப்போக்கு அதிகமாகும். ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை ஏற்பட உடல்பருமன், நீர்க்கட்டி, தைராய்டு போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும்.

    * கர்ப்பப்பை செயல்பாட்டில் சிக்கல்: கர்ப்பப்பையிலிருந்து கருமுட்டை சரியாக வெளியேறாவிட்டால், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். புரொஜெஸ்ட்ரோன் சீரான அளவு சுரக்காவிட்டால், ஹார்மோன் இம்பேலன்ஸ் ஏற்பட்டு, ரத்தப்போக்கு அதிகமாகும்.

    * கர்ப்பப்பையில் கட்டி: கர்ப்பப்பையின் சுவரிலோ, சுற்றுப்புறத்திலோ கட்டி ஏற்பட்டால் மாதவிடாய்க் காலத்தில் அதிக ரத்தப்போக்கு அல்லது தொடர்ந்து ஏழு நாள்களுக்கும் மேலாக ரத்தப்போக்கு, இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு போன்றவை ஏற்படலாம்.

    * கருச்சிதைவு: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, தொடர் ரத்தப்போக்கு போன்றவை கரு கலைந்துவிட்டதைக் குறிக்கும்.

    * புற்றுநோய்: கர்ப்பப்பையில் ஏற்படும் சில கட்டிகள், புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டுக்குமான முக்கியமான அறிகுறி, அதிக ரத்தப்போக்குதான்.

    * மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மெனோபாஸ் காலகட்டத்துக்குப் பிறகும்  ரத்தப்போக்கு ஏற்படுவது, புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

    * மேற்கூறிய எந்தப் பிரச்னையும் இல்லாமல், ஊட்டச்சத்துக்குறைபாடு காரணமாக சிலருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். இப்படியான அதிக ரத்தப்போக்கு, ஒருகட்டத்தில் ரத்தச்சோகை, இரும்புச்சத்துக் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். தோல் வெளிறிக்காணப்படுதல், மிகவும் சோர்வாக உணர்தல், வலுவிழந்து காணப்படுதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும். 
    கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும்.
    நீரழிவு நோய் பற்றி அறியாதவர்கள் யாருமில்லை. ஏனென்றால் இப்போதுள்ள காலகட்டத்தில் 30 வயதினர்களுக்கு கூட நீரழிவு என்ற சர்க்கரை வியாதி வந்து விடுகிறது. மருத்துவர்களும், பத்திரிகைகளும் ஊடகங்களும் சர்க்கரை வியாதியை பற்றி விழிப்புணர்வையும் வருமுன் தவிர்க்க தேவையான வழி முறைகளையும் அறிவுறுத்துகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது. பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் சர்க்கரை நோய் இருக்காது. ஆனால் மிகச் சிலருக்கு அதாவது அதிக பருமன் கொண்டவர்கள், குடும்பத்தில் பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருத்தல், முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் மற்றும் குழந்தை இறப்பு ஏற்பட்டவர்களுக்கும், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும். அவை என்னவென்றால் மிகவும் சோர்வடைதல், இரவில் சிறு நீர் அடிக்கடி கழித்தல், அதிக தண்ணீர் தாகம் எடுத்தல் ஆகியவை ஆகும்.

    அவர்களின் எடை மிக அதிகமாகி கொண்டே செல்லும். சில சமயம் இரத்த அழுத்தம் (BP), சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு, இருதய பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு முறையாக இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், நீரின் சர்க்கரையின் அளவை பரிசோதித்தல், கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை இருதய பரிசோதனை ஆகியவை செய்ய வேண்டும்.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனும் கருவி கொண்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், தண்ணீர் சத்து நன்றாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

    மேலும் குழந்தையின் இருதய துடிப்பை பார்க்க வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக உள்ளதா என்றும் வயிற்றுப்பகுதி பெரிதாக உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். சர்க்கரை நோயின் கட்டுப்பாடு சரியாக இல்லை என்றால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் கருவுற்ற எட்டு (8) வாரத்திற்குள் வந்தால் குழந்தையின் உறுப்புகளில் குறைபாடு இருக்கும்.

    உதாரணமாக தலைப்பகுதி (Anencephaly) உருவாகாமல் இருத்தல், கால் பகுதி குறைவுற்று இருத்தல் ஆகியவையாகும். குழந்தை பிறப்பின் போதும் அதிக எடையுள்ள குழந்தையினால், தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்புகள் எற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தனியான முறையான மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.

    உணவு கட்டுப்பாடு வேண்டும், உடற்பயிற்சி (உதாரணமாக) நடத்தல், மிதமான தேகப்பயிற்சி செய்ய வேண்டும். இன்சுலின் என்ற ஊசி மருந்து போட வேண்டும். குளுக்கோ மீட்டர் உபயோகிக்கும் முறையும் மருத்துவர் கற்றுக் கொடுப்பார். குழந்தை பிறந்த பின்பும் சர்க்கரையின் அளவையும், சிறுநீரின் சர்க்கரையின் அளவையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
    இதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    இதய நோயுள்ள பெண்களை ரெண்டு விதமாப் பிரிக்கலாம். சிலர் பிறக்கற போதே இதய நோய்களோட பிறக்கறவங்க ஒரு வகை. அதுக்குப் பிறகு வர்ற இதய நோய்களால பாதிக்கப்படறவங்க அடுத்தது. சாதாரணமா பெண்களுக்கு 5.5 லிட்டர் ரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்துல இது 30 சதவிகிதம் அதிகமாகும். கர்ப்பத்தோட 10-12வது வாரங்களில் இது அதிகமாகத் தொடங்கும்.

    இதயம் பம்ப் பண்ற வேகமும் இதயத்துடிப்பும் அதிகமாகும். ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதயம் ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு இதெல்லாம் பிரச்சனையைக் கொடுக்காது. ஆனா, பிரச்சனை உள்ளவங்களோட இதயத்தால ஈடுகொடுக்க முடியாது. இதயக் கோளாறுகளை அலட்சியப்படுத்திட்டு, கர்ப்பம் தரிச்சா, முதல் 10-12 வாரங்களிலேயே கரு கலையலாம்.

    இதயம் இன்னும் பழுதடையலாம். ரத்தம் உறைஞ்சு, மூளைக்கும் நுரையீரலுக்கும் போகும் ரத்தக்குழாய்களில் அடைப்பு உண்டாகி, பக்கவாதம் வரலாம். சில வேளைகளில் மரணமும் நிகழலாம். சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறதுதான் பாதுகாப்பு. இதய வால்வுகளில் சுருக்கம் இருந்தாலோ, இதயத்தைச் சுத்தின நான்கு சுவர்களில் பிரச்சனை இருந்தாலோ கூட கர்ப்பம் தரிக்கிறது ரிஸ்க்.

    வால்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடைப்புகளுக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கலாம். சில பெண்களுக்கு இதய வால்வு மாற்று சிகிச்சை’ செய்யப்பட்டிருக்கும். அவங்களுக்கு வால்வுகளுக்குப் போகும் ரத்தம் உறையாமலிருக்க தினசரி மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை எடுத்துக்கிறப்ப, அவங்க கர்ப்பம் தரிக்கிறது சிரமம்.

    சில சிறப்பு கேஸ்களில், அவங்களுக்கு பிரத்யேக மருந்துகளைக் கொடுத்த பிறகுதான் கர்ப்பம் தரிக்க அறிவுறுத்துவோம். சிகிச்சை மற்றும் ஆபரேஷன் முடிஞ்ச பிறகு அந்தப் பெண் கர்ப்பம் தரிச்சாலும், கர்ப்ப காலம் முழுக்க, ஒரு இதயநோய் நிபுணரோட கண்காணிப்புல இருக்கிறது பாதுகாப்பானது. அட்வான்ஸ்டு வசதிகள் உள்ள மருத்துவமனையில் பிரசவ காலத்தைச் செலவழிக்கிறது அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு.
    பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும்.
    குடும்பம் என்பது குழந்தைகள் இருந்தால்தான் முழுமை அடைகிறது. குழந்தையின்மையினால் மனவருத்தம், திருமண வாழ்க்கையில் கசப்பு, கடினமான சொல்லை கேட்க வேண்டிய நிலைமை, திருமணங்கள் முறிவு அடைதல் ஆகிய பல இன்னல்கள் ஏற்படுகிறது. ஆனால் இன்றைய நிலைமை மிகவும் வித்தியாசமானது. விஞ்ஞானம் பல மடங்கு முன்னேறி இருக்கிறது. இன்றைக்கு குழந்தையின்மைக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து அந்த குறைக்கு தேவையான சிகிச்சையை செய்கிறார்கள்.

    ஸ்கேனில் 3 D, 4D பாப்லர் (இரத்த ஓட்டம் பார்ப்பது) ஆகியன நவீன வசதிகள் உள்ளன. இதனால் கர்ப்பப்பையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை கண்டுபிடித்து அதற்குரிய சிகிச்சையை அளிக்கலாம். ஹிஸ்ட்ரோ சால்பின் ஜோக்ராம் (Hystero Salphingogram) என்னும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர்கோர்த்தல் ஆகியவைகளை கண்டுபிடிக்கலாம். ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறை மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம்.

    நுட்பமான முறையில் விந்தின் குறைகளை கண்டுபிடித்து அதற்கான சிசிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம். ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கிறது. மருந்துகள் மூலமும் லேப்ரோஸ் கோப்பிக் அறுவை சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். கர்ப்பப்பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நார் கட்டிகள், நீர்கட்டிகள், இரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவைகளை 3-D லேப்ரோஸ்கோபி, ஹிஸ்ட்ரோஸ் கோப்பி மூலம் சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்தலாம்.

    3D லேப்ரோஸ்கோபி மூலம் மிக நுட்பமாக அறுவை சிகிச்சை செய்வதால் இரத்தக் கசிவு குறைவாக உள்ளது. கட்டிகளை எடுத்த பின் தையல் போட்டு அதை நிலமைக்கு எடுத்து வருவதால், கர்ப்பம் அடையும் வாய்ப்பும் கர்ப்பத்தில் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் உபயோகமாக இருக்கிறது. 3D விஞ்ஞானத்தின் மகிமை இது என்று கூறலாம்.

    நவீன அறுவை சிகிச்சை முறைகளை கடைப்பிடிப்பதால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் 90 சதவிகித பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும்.

    மீதியுள்ள 10% பெண்களுக்கு IUI - கருப்பையில் விந்து செலுத்துதல் அல்லது டெஸ்ட்டியூப் பேபி (IVF/ICSI) விந்தை முட்டையில் செலுத்தும் முறை தேவைப்படுகிறது. IUI ஆறுமுறை தோல்வி அடைந்தால் ICSI முறைக்கு மாறுவது நல்ல பயனை அளிக்கும்.

    IVF லேப்பில் ஹ்யுமிடிக்ரிப் என்னும் கருவி முட்டையையும், கருவையும் நம் உடம்பில் இருக்கும் வெப்ப நிலையிலேயும், ஆகிசிஜென் போன்ற வாயுக்களையும் நம் உடம்பில் இருக்கும் நிலையிலேயும் வைக்க உதவுவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

    இதை தவிர லேசர் கணினி முறையை உபயோகிப்பதால் 38 வயது தாண்டியவர்களுக்கும் பலமுறை தோல்வி அடைந்தவர்களுக்கும் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 5-வது நாள் கருவை (பிளாஸ்போசிஸ்ட்) கர்ப்பப்பையில் செலுத்துவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்து, கர்ப்பப்பை இவை மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். முட்டை வளர்ச்சியையும் அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும் யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன.

    பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும் தாம்பத்தியத்தில் சிக்கல் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும், சிகிச்சை ஆரம்பித்து விட்டால் அடுத்தடுத்து இடைவிடாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக 35 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் விரைவாக சிகிச்சை தொடங்குவது நல்லது.
    பெண்கள் சரியான அளவு பிராவை தேர்வு செய்யாமல் அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு, இந்த கேள்விகளும், பதில்களும் நல்ல தீர்வை தரும்!
    பெண்களில் பலருக்கு `பிரா’ பற்றிய சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. சரியான அளவை தேர்வு செய்யாமல் பிராவை அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

    அப்படிபட்டவர்களுக்கு, இந்த கேள்விகளும், பதில்களும் நல்ல தீர்வை தரும்!

    கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

    பதில் : உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ரா பதிந்த இடங்கள் சிவந்துபோய் காணபட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்துகொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ரா ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பதுபோல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

    கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

    பதில் : தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

    கேள்வி: குண்டாக 36 சைஸ் உள்ளவர்கள் எலாஸ்டிக் ஸ்ட்ரா வைத்த பிரா அணியலாமா?

    பதில் : அணியக்கூடாது. மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழிவகுக்கும்.

    கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?

    பதில் : தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிராசைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

    கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?

    பதில் : இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணியலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை கலர் பிராக்களை அணிந்து அழகு பார்க்கலாம்.

    கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?

    பதில் : பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தை பொறுத்ததுதான். 34 இஞ்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதைவிட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்துபோய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிபட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை. கர்ப்பிணி பெண்களும் தாய்பால் கொடுபவர்களும் அதற்குரிய பிராக்களை அணிந்து மார்பழகை பாதுகாக்க வேண்டும்.
    பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. பெண்களுக்கும் சிறுநீரக கற்கள் பிரச்சனை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
    சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு முக்கியமானதொரு காரணம் சரியான அளவில் தண்ணீர் குடிக்காததுதான். இது பலருக்கும் தெரியும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளும்போது நம் உணவின் வழியாக நாம் உட்கொண்ட நச்சுப்பொருட்கள் அல்லது அவற்றில் உள்ள தேவையற்ற உப்புகள் சிறுநீர் வழியே வெளியேறி விடுகிறது.

    ஆனால், தண்ணீர் சரிவர குடிக்காதபோது உடலில் உள்ள உப்பு முழுவதும் வெளியேறாமல் சிறிது சிறிதாக கற்களாக மாறிவிடுகிறது. இதுதவிர சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு மற்றுமொரு காரணம் சிறுநீரை அடக்கிக்கொள்வதும் முக்கிய காரணமாகிறது. சரியான அளவு இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவது, சிறுநீரை அடக்குவதை தொடர்ந்து வழக்கமாக்கிக் கொள்வது ஆகியவையும் ஆகும்.

    பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. சரியான அளவு தண்ணீர் உட்கொள்ளாத நபர் யாராயிருப்பினும் அவர்களுக்கு கற்கள் உருவாகிறது.

    நம் நாட்டில் இன்னும் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. இதன் காரணமாகவே பெரும்பாலான பெண்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது இல்லை. வீட்டை விட்டு வேலை காரணமாகவோ, பயணம் காரணமாகவோ வெளியே சென்றால் அது பெரிய அவஸ்தையையும் உண்டுபண்ணிவிடுகிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்போது, ‘கழிவறை எங்கே இருக்கிறது’ என்ற கேள்வியைக் கேட்கக்கூட பலர் தயங்குவார்கள். இந்த நெருக்கடியான சூழலால் பெண்களுக்கும் அதிகம் சிறுநீரகக்க் கற்கள் பிரச்சனை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆயுர்வேதத்தில் என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?



    அலோபதி மட்டுமல்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கான வழிகள் அதிகப்படியாக உள்ளன. ஆரம்ப நிலையில் அல்லது கற்களின் அளவைப் பொறுத்து முறையாக சிகிச்சை பெற்றால் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சிறுநீரகக் கற்களை எளிதில் கரைக்க முடியும்.சிறுநீரகக் கற்கள் வந்து சிகிச்சை பெற்று கரைந்த பின்னும் திரும்பத்திரும்ப வரும் என்பது பற்றி...

    ஆயுர்வேத மருத்துவத்தில் சிறுநீரகக் கற்கள் உருவானதற்கான காரணம், உடலில் உள்ள கால்சியத்தின் அளவு மற்றும் உணவு முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டே சிகிச்சையை அணுகுவதால் கற்கள் திரும்ப உருவாவதற்கான காரணம் மிகக் குறைவு.

    அது தவிர கற்கள் திரும்ப உருவாவது என்பது அந்த நபரின் தண்ணீர் அருந்தும் அளவு மற்றும் உணவு முறையை சார்ந்தது. சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கு சிகிச்சையின் போதே நிறைய தண்ணீர் உட்கொள்ள அறிவுறுத்தப்படும். சிகிச்சை முடிந்து கற்கள் கரைந்த பின் சரியான அளவு தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவோ அல்லது குறைத்துக் கொண்டாலோ மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

    காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆனால், அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்ட உணவை அதிகம் விரும்பி உண்பவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். அவ்வாறு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள உப்புகள் அனைத்தும் வெளியேறிவிடும். கற்கள் உருவாகாது.

    சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு...விதைகள் உள்ள காய்கறிகள், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், சுண்ணாம்பு சத்துள்ள உணவுகள் இவற்றை குறைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக தக்காளியை தவிர்ப்பது அவசியம். தவிர்க்க முடியாதவர்கள் அதில் உள்ள சதை பாகத்தை நீக்கிவிட்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிகிச்சையின் போது இடையிடையே வாழைத்தண்டை ஜூஸாகவோ அல்லது பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

    ஆயுர்வேதத்தில் உள்ள கற்களை கரைக்கும் மூலிகைகள்பாஷாணபேதி, சிறுநெருங்சில்முள், மூக்கிரட்டை மூலிகை போன்றவற்றில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர கற்கள் கரைய ஆரம்பிக்கும். முக்கியமாக இன்றைய தலைமுறையினர் பலரும் சிறுநீரகக் கற்களால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு எளிதான முறையில் கற்களை கரைக்க மேற்கண்ட மூலிகைகளை கஷாயமாக்கி எடுத்துக் கொள்ளும்போது நல்ல பலனளிக்கும்.

    சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?


    கற்களின் அளவைப் பொறுத்து அறுவை சிகிச்சை அவசியமா இல்லையா என்பது தீர்மானிக்க முடியும். 11, 12 மி.மீட்டர் அளவு வரை ஆயுர்வேதத்தில் கற்கள் கரைத்திருக்கிறோம். அதற்கு மேல் செல்லும்போது ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு கற்களின் அளவு குறைய ஆரம்பிக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது. 
    இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பை கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். அந்த வாய்ப்பை வயப்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.
    நவீன வாழ்க்கை முறையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது எளிதாக உள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் மிக அதிக தூரத்தை நாம் கடந்துவிடுகிறோம். ஆனால் நவீன வாழ்க்கை முறை மறைமுகமாக நமது உடலுக்கு ஊறுவிளைவித்து பல நோய்கள் வருவதற்கு அடித்தளமாகிறது. இந்த சுற்றுச்சூழல் மாசு, சாயப்பட்டறை கழிவுகள் தண்ணீரில் கலப்பது, வாகனப் புகை அதிகம் காற்றில் கலப்பது போன்றவற்றால் ஆண்களுக்கு உணர்வுகள், உணர்ச்சிகள் குறைந்துள்ளது. சமீப கால ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிவர நிலவரப்படி, சில நகரங்களில் ஆண் மலட்டுத்தன்மை அதிகமாகியுள்ளது.

    முறையான எளிய உடற்பயிற்சி இன்று இல்லை. அருகில் இருக்கும் கடைக்கு செல்வதற்கு கூட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். உடல் உழைப்பே இல்லாமல் குளிர் சாதன அறைகளில் வேலை செய்யும் சூழல், பெண்களுக்கு வீட்டு வேலை சுலபமாகிவிட்டது. மொத்தத்தில் யாருக்குமே இன்றைய வாழ்க்கை முறையில் சீரான உடற்பயிற்சி இல்லை.

    அப்படி இல்லாமல் தினசரி உடற்பயிற்சி என்பதை முறைபடுத்தினால், இதுபோன்ற பிரச்சினைகள் வராது. பெரும்பாலான குழந்தையின்மை தம்பதியினருக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால் பெண்களுக்கு கருத்தரித்தலில் தேக்க நிலை ஏற்படுகிறது. முறையான திட்டமிடல், முறையான எளிய உடற்பயிற்சி இருபாலருக்கும் வேண்டும்.

    பெண் 21 வயது முதல் 35 வயது வயதிற்குள் கருத்தரித்தல் என்பது ஏற்ற வயதாகும். திருமணமாகி 2-3 வருடங்களில் குழந்தை பேறு இல்லையெனில் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம். சில தம்பதியினர் குழந்தைபேறு இல்லாத காரணத்தினால், சிலரின் அறிவுரைகளின்படி ஜாதகம் மற்றும் கோவில்களுக்கு சென்று காலம் கடத்துவதினால் அவர் தாய்மை அடைவதை இழக்க நேரிடுகிறது.

    அதுபோல ஆண்களுக்கு இருக்கும் புகை, மது மற்றும் போதை பழக்கத்தால் அதிக அளவில் ஆண்மைக்குறைவு மற்றும் விந்தணு உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், அதிக கதிர்வீச்சு உள்ள தளங்களில் வேலை செய்பவர்கள், அதிக நேரம் லேப்டாப், கணிப்பொறி போன்றவற்றை பயன்படுத்துவர்களுக்கும் விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்படுகிறது. தற்போது அதிக நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன.

    இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பை கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். அந்த வாய்ப்பை வயப்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.

    டாக்டர் டி.செந்தாமரைச்செல்வி
    பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். எந்த வயதில் எந்த மாதிரியான இதயநோய் வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.
    15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும். இவற்றை எளிதில் குணப்படுத்தலாம். 10 சதவீதம் பேருக்கு இதயத்தில், “மைட்டிரல் வால்வு புரலாப்ஸ்’ ஆகலாம். கிராமப்புற, ஏழ்மை நிலையிலுள்ள இளம் பெண்களுக்கு, “மைட்டிரல் ஸ்டினோசிஸ்’ என்ற வால்வு நோய் இருக்கலாம். பெரும்பாலும் குடும்ப, சமூக ரீதியாக குழப்பத்தால் ஏற்படும் விளைவுகள் இவை.

    25 முதல் 45 வயது வரை: திருமணம் செய்தவுடன் புகுந்த வீட்டில் ஏற்படும் கலாசார குடும்ப சூழ்நிலை மாற்றத்தினால் ஏற்படும் மனமாற்றம் பயம், வெறுப்பு, படப்படப்பு ஏற்பட்டு, நாளடைவில் ரத்த அழுத்தம் ஏற்படலாம். வேலை செய்யும் பெண்கள், குழந்தைகள் பெற்றவுடன், உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகள் வளர்ப்பு, அலுவலகம், குடும்பம் இரண்டையும் பராமரிப்பதில் சிக்கல் ஆகியவற்றால், மன உளைச்சல், படப்படப்பு ஏற்படும். குடும்ப பாரம்பரிய வியாதி இருந்தால், அதுவும் வரலாம்.

    45 முதல் 65 வயது வரை: குடும்ப சுமை, பிள்ளைகள் படிப்பு, எதிர்கால சுமை, பொருளாதார தடுமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளை தாங்க முடியாத பெண்களுக்கு, எளிதில் ரத்த அழுத்தம், சிலருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு, அதன் தாக்கத்தால் ஏற்படும் உறுப்புகளின் செயலிழப்பு. மார்புவலி, மாரடைப்பு, கார்டியோ காமயோபதி வர வாய்ப்புகள் உண்டு.

    65 முதல் 85 வயது வரை: இந்த வயதில் 80 சதவீதத்தினர், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, அதிக எடை, அதிக கொழுப்பு, இடுப்பின் அளவு அதிகரித்து, தொப்பை ஏற்பட்டு மெட்டபாலிக் சிண்ட்ரோம் நோய் ஏற்படும்.

    இவர்களிடம் ஏற்படும் கோளாறுகள்:

    தொப்பை போடுதல், இடுப்பின் அளவு 90 செ.மீ.,க்கு மேல் அதிகரித்தல், டிரை கிளிரிரைடு 150ஐ தாண்டுதல், எச்.டி.எல்., என்ற நல்லக்கொழுப்பு 40எம் கீழ் குறைதல், ரத்த அழுத்தம் 130/85க்கு மேல், வெறும் வயிற்று சுகர் 110க்கு மேல் இருத்தல். இந்த அறிகுறிகள் பெரும்பாலான பெண்களுக்கு உண்டு. இதனால், மார்பு வலியும், மாரடைப்பு இதய வீக்க நோய் ஏற்பட்டு, நிரந்தர நோயாளியாகி விடுகின்றனர். அடுத்த வரும் நோய்: தைராய்டு சுரப்பு குறைதல். இது 45 வயது முதல் ஆரம்பமாகி விடுகிறது. இதனால், சுறுசுறுப்பு இல்லாமை, அதிக தூக்கம், அதிக எடை, அலுப்பு, சலிப்பு, அதிக கொலஸ்ட்ரால் உருவாகி, இதய நோய் ஏற்படும்.
    ×