என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    எவரிடத்திலும் குறைகளை மட்டும் கண்டு குற்றம் சாட்டாமல், நிறைகளை பார்த்து பாராட்டினால் வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும்.
    மனம் எப்போதும் எதிர்மறை நிலையில்தான் செயல்படும். அதற்கு நிறைகளைவிட குறைகளே தென்படும். வெள்ளைநிற வேட்டியில் புள்ளி அளவு கறை இருந்தாலும் அதுதான் கண்ணில் படும். அதுபோல் எந்தவொரு நல்ல விசயத்திலும் அதில் இருக்கும் சிறிய குறைபாடுதான் தெரியும்.

    அதுபோன்றுதான் மக்கள் பிறரை எடை போடுகிறார்கள். குறைகளே அவர்கள் கண்ணுக்கு தெரிவதால் பிறரை குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
    ஒற்றை விரலை நீட்டி பிறரைக் குறை சொல்ல தொடங்கினால் மூன்று விரல்கள் தன்னை நோக்கி சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
    உண்மையில் மேதாவிகள் பிறப்பதில்லை. நல்ல சிந்தனைகள் மூலம் உருவாக்கப்படுகிறார்கள். இதனை உணர்ந்து பிறரை குறை சொல்வதை தவிர்த்து, அவர்களது நிறைகளைச் சொல்லி தட்டிக் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளைப் பார்த்து பெரும்பாலான பெற்றோர்கள் ‘உன் வயதுதானே அவனுக்கும்... திறமையாக இருக்கிறான்.எல்லா விசயத்திலும் முதலாவதாக வருகிறான். நீ சுத்த வேஸ்ட்’ என்று புலம்புவார்கள். ஆண்கள் மனைவிமார்களிடம் ‘என்னதான் சமைக்கிறியோ... உப்புசப்பு இல்லாம இருக்கு. சாப்பிட முடியல நாக்கு செத்துப்போச்சு’ என்று அங்கலாயிப்பார்கள்.
    அலுவலகத்தில் ‘என்னசார் பண்றீங்க? நேத்து வேலைக்கு வந்த பையன் எவ்வளவு அருமையா இந்த வேலையை செஞ்சிருக்கான் பாருங்க. நீங்க பத்து வருசமா இருக்கிறீங்க. ஒரு முன்னேற்றமும் இல்லை’ என்று மேலதிகாரிகளின் புலம்பல்.

    இப்படி மனித மனம் எங்கும் எதிலும் யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஏன் இப்படி குறை சொல்கிறீர்கள்? என்று கேட்டால் எல்லாம் அவர்கள் நன்மைக்குதான் என்று சொல்லி அதற்கு அரை மணி நேரம் பாடம் எடுப்பார்கள். இப்படி தங்களின் குறை சொல்லும் குணத்துக்கு ஆளுக்கொரு காரணம் வைத்திருப்பார்கள்.

    ஆனால் இதெல்லாம் சரிதானா? என்று கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். குறை சொல்வதால் ஒருவரை திருத்தி விட முடியாது. மாறாக அந்த நபர் மனம் நொந்து சஞ்சலப்படுவார். இதனால் மேலும் மேலும் அவர் செய்யும் வேலையில் தவறுகள் தான் ஏற்படும். உண்மையிலேயே ஒருவரது தவறை நீங்கள் திருத்த நினைத்தால் முதல் வேலையாக அவரை நீங்கள் குறை சொல்வதை நிறுத்த வேண்டும்.

    ஏன்னென்றால் ஒருவரை நீங்கள் அடிக்கடி குறை சொல்ல தொடங் கினால் “உண்மையிலேயே நாம் எதற்கும் தகுதியில்லாதவர்கள்தான் போலிருக்கிறது” என்ற தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகிவிடுவார்கள். தன் குறைகளை திருத்தவே முடியாது என நம்பத் தொடங்கி விடுவார்கள். அதனால்அவர்கள் தனிமைப்பட்டு போவார்கள்.

    பிள்ளைகளிடம் இருக்கும் குறைகளை சொல்லாவிட்டால் எப்படி அவர்கள் திருந்துவார்கள்? என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணம். ஆனால் உங்கள் குழந்தைகளை இந்த உலகம் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு முதல் வேலையாக அவர்களை நீங்கள் பாராட்ட வேண்டும்.

    ஆனால் பலரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா? குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளையெல்லாம் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தனது திறமையால் ஏதாவது செய்தால் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வ தில்லை. ஆனால் சிறிய குறைகள் இருந்தாலும் அதனை உற்றுப்பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறார்கள். குழந்தைகளின் மனதிலும் இது ஆழப்பதிந்து விடுவதால் அவர்களும் பிறர் குறைகளையே உற்றுப்பார்க்க தொடங்கி விடுகிறார்கள்.

    நாம் என்ன செய்கிறமோ அதுதான் பிரதிபலிக்கும். உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

    வாழ்வியல் முகாம் ஒன்றை நடத்திய போது அதில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி எழுந்து “என் கணவர் என்னிடம் எப்போதும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு குறையாவது கண்டுபிடித்து என்னை மட்டம் தட்டி பேசாவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள் கூட மறந்தும் அவர் என்னை பாராட்டியது கிடையாது” என்று கண்கள் கலங்க சொன்னார்.

    அவர் சொன்னதையெல்லாம் கவனமாக கேட்டுக்கொண்டிருந்த பயிற்சியாளர் சட்டென்று அவரிடம் ஒரு கேள்வியை கேட்டார். “உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் அல்லவா? அவன் எப்படி இருக்கிறான். நன்றாக படிக்கிறானா?” என்றார்.

    குடும்பத்தை மகிழ்விக்கும் சூத்திரம்

    கணவரைப்பற்றி பேசினால் அதற்கு பதில் சொல்லாமல் பையனைப்பற்றி சம்பந்தம் இல்லாமல் கேட்கிறாரே என்று குழம்பிய அந்த பெண் “அவன் எங்கே உருப்படுவான். கொஞ்சம் கூட பொறுப்பில்ல. அப்படியே அப்பா மாதிரி. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. தம்பியிடம் எதற்குகெடுத்தாலும் சண்டை. என்ன சத்தம் போட்டாலும் எங்கே திருந்துறான்” என்று மகனின் குறைகளை பட்டியலிட்டார்.

    சற்றுமுன் கணவர் தன்னிடம் எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார் என எரிச்சல் பட்ட அந்த பெண் இப்போது தன் மகனைப்பற்றி கொஞ்சமும் சளைக்காமல் குறை சொல்லி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.

    நீங்கள் பிறரை குறை சொல்லும் போது அவர்கள் மேல் அக்கறை எடுத்து திருத்த முனைவதாக நம்புகிறீர்கள். ஆனால் அதுவே உங்களை யாராவது குறை சொன்னால் “இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?” என்று ஆதங்கப்படுகிறீர்கள்.

    குடும்பமோ, பணியிடமோ, வெளிவட்டாரமோ எதுவாக இருந்தாலும் எந்த விசயத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்துவதைவிட, அந்த விசயத்தில் பாராட்டும் படியான அம்சம் என்ன இருக்கிறது என்பதை பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மன நிறைவு ஏற்பட்டு மற்றவரை பாராட்டும் பண்பு வளரும்.

    தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படித்த போது ஒரு நாள் அவரது ஆசிரியை ஒரு கடிதத்தை கொடுத்து அதனை அவரது அம்மாவிடம் கொடுக்க சொன்னார். அந்த கடிதத்தை வாங்கி படித்த எடிசனின் தாய் கண் கலங்கினார். மகன் திருதிருத்தப்படி நிற்க “உங்கள் மகன் ஒரு மேதாவி. அவனுக்கு கற்றுக்கொடுக்கும் அளவு திறமை வாய்ந்த ஆசிரிகளோ வசதியே இங்கு இல்லை. எனவே அவனுக்கு நீங்களே உங்கள் வீட்டில் வைத்து கற்றுக்கொடுங்கள்” என்று எழுதியிருப்பதாக தாய் சொன்னார். அதைக்கேட்ட எடிசனின் முகம் பெருமிதத்தால் மலர்ந்தது.

    பின்னர் அவர் வளர்ந்து பெரும் விஞ்ஞானியாக பேரும் புகழும் பெற்ற சமயத்தில் ஒரு நாள் வீட்டு பரணில் எதையோ தேடிய போது அந்த கடிதம் அவரது கண்ணில் பட்டது. தன்னை மேதாவி என்று அன்றே சொல்லப்பட்ட கடிதம் அல்லவா? இது என்று ஆர்வத்தோடு அதை படிக்க தொடங்கினார். அந்த கடிதத்தில் “உங்கள் மகன் அதிமுட்டாள். அவனுக்கு எங்களால் கற்பிக்க இயலாது. எனவே அவனை இனி பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என எழுதியிருந்தது”.

    அப்போதுதான் எடிசனுக்கு ஒரு விசயம் புரிந்தது. தன்னிடம் பெரும் குறை இருப்பதாக சொல்லி பள்ளியில் இருந்தே நீக்கப்பட்ட பிறகும்கூட தன்னிடம் அளப்பரிய ஆற்றல் இருப்பதாக நம்பி, என்னையும் நம்ப செய்து என் குறைகளை காணாமல் நிறைகளில் மட்டும் கவனம் வைத்து என் ஆற்றலை மேம்படுத்தியவள் தன் தாய்தான் என்பதை உணர்ந்த அவர் இப்படி சொன்னார், “ஒரு ஜீரோ தன் தாயின் நம்பிக்கையால் ஹீரோவானான்”.

    நிறைகள் சுட்டிக்காட்டப்படும் போது குறைகள் நிவர்த்தி செய்யக்கூடியவையாக ஆகிவிடும். எனவே எவரிடத்திலும் குறைகளை மட்டும் கண்டு குற்றம் சாட்டாமல், நிறைகளை பார்த்து பாராட்டினால் வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும்.
    Email:fajila@hotmil.com
    கர்ப்ப காலத்தில் எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது. என்று சொல்வதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்கப் போகும் பெண்களின் வாழ்வில் இந்த விசயம் கண்டிப்பாக நடந்திருக்கும். ‘எதை வேண்டுமானால் சாப்பிடு பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு விடாதே! குழந்தைக்கு ஆகவே ஆகாது.’ என்ற பயமுறுத்தும் வார்த்தைகளைக் கர்ப்பிணிப் பெண்கள் கடந்திருக்காமல் இருக்கவே முடியாது.

    இதற்கு என்ன காரணம்? ஏன் பப்பாளி பழங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தி பரவத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பப்பாளி பழங்களைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்று நம்பப்பட்டது தான்.

    இன்று பல கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழத்தில் நிறைந்த ஊட்டச்சத்துக்களைக் கருத்தில் கொண்டு அதை எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கனிந்த பப்பாளி பழங்கள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட உகந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன. நன்கு கனியாத பப்பாளி பழங்கள் சாப்பிட ஏற்றதில்லை. இந்த வகை காய் வெட்டான பழங்கள் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    குளிர்ச்சி தன்மையான உணவுகளைச் சாப்பிடும் பொழுது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. பப்பாளி சூடு தன்மையான உணவுப் பட்டியலில் சேர்க்கிறது. அதனாலேயே கர்ப்ப காலங்களில் பப்பாளி பழங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

    கண்மூடித்தனமாக நாம் பப்பாளி பழங்களைக் கர்ப்பத்திற்கு எதிரானவையாகக் கருதக்கூடாது. உண்மையில் நன்கு கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் பல நல்ல பலன்களை அடையலாம். அதே சமயம் சற்றுப் பச்சை தன்மையோடு சரியாகக் கனியாத பதத்தில் இருக்கும் பப்பாளி பழங்களை கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கனிந்த பப்பாளி பழங்களில் விட்டமின் ஏ, விட்டமின் பி, கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகள்.

    உண்மையில் நம் நாட்டில் குழந்தை இறப்பு அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணமே ஊட்டச்சத்துக் குறைபாடுதான்! அந்த வகையில் கனிந்த பப்பாளி பழங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளைத் தருகின்றன. அதனால் பழைய கட்டுப்பாடுகளையே நம்பிக் கொண்டு நல்ல சத்தான உணவைத் தவிர்ப்பது உகந்ததல்ல.

    கர்ப்பகாலத்தின் முதல் நிலையில் இருக்கும் பெண்கள் இந்த வகை பப்பாளிகளைச் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதை எடுத்துக்கொள்வதால் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் கர்ப்பப்பை சுருங்கி விரிய துணைபுரிகிறது. இதனால் கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

    கனிந்த பப்பாளி பழங்களைக் கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதால் நிறைய பலன்கள் ஏற்படுகின்றன என்பது உண்மை.பல கர்ப்பிணிப் பெண்கள் இதை முயன்று பலன் அடைந்து உள்ளனர்.இதில் நிறைந்துள்ள சத்துகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    கனிந்த பப்பாளி பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மசக்கை தொல்லையைத் தவிர்க்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் , மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காப்பாற்றுகின்றது.
    புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக தாம்பத்தியம் வைத்துக்கொள்ள ஏற்ற நேரம் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும், ஒருகட்டத்தில் குழந்தை பெறுவதை தள்ளிப்போட வேண்டுமென்று தோன்றும். அதுவே குழந்தை பெற்றவர்களுக்கோ அடுத்த குழந்தை வேண்டாமென்றோ, சில நாட்கள் போகட்டுமென்றோ நினைப்பார்கள். இந்நிலையில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், குழந்தை உருவாக்கி விடுமோ என்ற பயத்துடனேயே இருப்பார்கள். இந்த பயத்தினால் செக்ஸையே சிலர் தவிர்த்தும் விடுகிறார்கள். மேலும் இதில் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. கண்டிப்பாக இதை அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.

    ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.

    எனினும், சில தருணங்களில், எதிர்பாராத விதமாக சில பெண்களுக்கு கர்ப்பம் ஏற்பட்டு விடுகின்றது. இது குறிப்பாக, எப்போது முட்டை வெளியேறுகின்றது என்ற கணிப்பு தவறாகும் போது நடக்கின்றது. மேலும் ஓவுலேஷனுக்கு பின், பல பெண்கள் சில நாட்களுக்கு கருவுறும் தன்மையோடு திடமாக இருப்பதும் மற்றுமொரு காரணமாக உள்ளது.

    கர்ப்பத்தை தவிர்த்து தாம்பத்தியத்திற்கு பாதுகாப்பான நேரம்

    இதன் காரணமாகவே தம்பதியினர் போதுமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை விட, ஆணுறை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் உடல் உபாதைகளும் ஏற்படாது.

    செக்ஸ்க்கு பிறகு கர்ப்பமாகாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு கர்ப்பத்தடை ஊசி, மாத்திரைகளையோ அல்லது வேறு அசௌகரியத்தை உண்டாக்கும் வழிகளோ தேவையில்லை. இதனால் உங்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகளும், மன சங்கடங்களும் தான் ஏற்படும்.

    நீங்கள் இயற்கையாகவே, கர்ப்பமாவதை தவிர்க்க சில பாதுகாப்பான வழிகள் உள்ளது. அது, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதன் பின் பாதுகாப்பான (safe period) சில நாட்களை மட்டுமே செக்ஸ்க்குத் தேர்ந்தெடுப்பது தான்.
    சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
    சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாக வே காரணமின்றி அழுவார்கள். குழந் தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத் தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிகளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.

    சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக் கிறோம். இது ஏற்கெனவே மனநோயா ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.

    இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட் ட பெண்ணைத் தனியாகவிடுவது நல்ல தல்ல. காரணம், அவர்களுக்குத் தற் கொலை செய்து கொள்ளும் எண்ண ம் இச்சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பது தான் நல்லது.

    சிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக்கொன்றுவிடும் அளவுக்கேகூடச்செல்வார்கள்!தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகி ச்சை கொடுத்து வர மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண்டி வரலாம்..
    கருமுட்டை முழுமையான வளர்ச்சியோடும் கருத்தரிக்கும் தன்மையோடும் இருக்கின்றதா என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் கருவுறும் வாய்ப்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
    கருமுட்டை முழுமையான வளர்ச்சியோடும் கருத்தரிக்கும் தன்மையோடும் இருக்கின்றதா என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் கருவுறும் வாய்ப்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதை தெரிந்து கொள்வதால், உங்களுக்கு தற்சமயம் கருவுற விருப்பமில்லை என்றாலும், அதற்கேற்றவாறு உங்கள் நாட்களை திட்டமிடலாம். எனினும், இதனை நீங்கள் புரிந்து கொள்ள பல மாதங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியை கண்காணித்து புரிந்து கொள்ள வேண்டும்.

    எப்படி உங்கள் கருவுறும் தன்மை / நாட்களை கண்காணிப்பது? (How to track fertile days/ possibility)

    பின்வரும் முறைகள் எளிதாக மாதவிடாயை கண்காணித்து, அதன்படி கருவுறும் வாய்ப்பைத் தள்ளிப் போட உதவும்:

    * 8 முதல் 12 மாதங்களுக்கு, எந்த நாளில் மாதவிடாய் ஏற்படுகிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த மாதவிடாய் மொத்தம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகின்றது, அதாவது அதன் சுழற்சி நாட்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

    * ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் நாளே உங்கள் மாதவிடாயின் முதல் நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * அதன் பின் குறுகிய மற்றும் நீண்ட நாட்கள் அந்த மாதத்தில் எத்தனை ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    * மாதவிடாய்க்குப் பின் வளமான சாளரத்தை குறித்துக் கொண்டு அதில் இருந்து 18 நாட்களை குறுகிய சுழற்சி காலத்தில் இருந்து கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு 27 நாட்கள் குறுகிய சுழற்சி காலம் என்றால், 27ல் இருந்து 18 நாட்களை கழிக்க வேண்டும். அதன் பின் கிடைப்பது 9 நாட்கள்.

    * அதன் பின் சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வளமான சாளரத்தை உங்கள் நீண்ட கால மாத விடாய் சுழற்சி காலத்தில் இருந்து 11 நாட்களை கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 3௦ நாட்களில் இருந்து 11 கழித்தால், 19 நாட்கள் கிடைக்கும்.

    * இந்த குறுகிய மற்றும் நீண்ட கால சுழற்சிக்கு இடையில் உங்களுக்கு கிடைக்கும் நேரம் தான் வளமான சாளரம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தின் படி நீங்கள் கருவுறும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிடலாம்.

    * உங்கள் வேலையை எளிதாக்க இப்போது பல மொபைல் அப்பிளிகேஷன்கள் உள்ளன, இவற்றை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து இலவசமாகவும் டவுன்லோடு செய்யலாம். இதில் நீங்கள் எளிதாக உங்கள் மாதவிடாய் காலங்களை குறித்து வைத்து கணக்கிட முடியும். இதில் பல மாத தகவல்களை சேகரித்து வைக்கலாம்.

    * உங்கள் மாதவிடாயை நீங்கள் இத்தகைய பயன்பாடு கருவிகளை கொண்டும், உங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொண்டு கணக்கிட்டாலும்.

    * மேலும் வேறு பல விஷயங்கள் உங்கள் கணிப்பை/கணக்கை தவறாக்கக்கூடும். குறிப்பாக, உங்கள் வேலை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், இது உங்கள் உடலைக் காலப்போக்கில் பாதிப்பதால், உங்கள் மாத விடாயும் பாதிக்கக் கூடும்.

    இது மட்டுமல்லாது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவு பழக்கங்களும் உங்கள் மாதவிடாய் மற்றும் கருவுறும் தன்மையை பாதிக்கக்கூடும். இதனோடு சேர்த்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி போன்ற சில விஷயங்களும் ஓவுலேசன் நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

    உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம். அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.

    திருமணம் ஆன புதிதில் குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல்வேறு வழிகள் இருந்தாலும் எந்த முறையை பயன்படுத்தினால் பிரச்சனை வராது என்பதை பற்றி பார்க்கலாம்.
    திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கட்டுப்பாடெல்லாம் சரிப்பட்டு வராது. திருமணமான புதிதில் பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளையும் ஆண்கள் ஆணுறையையும் பயன்படுத்தலாம். கர்ப்பத்தடை மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உபயோகிக்கலாம். இதைச் சரியாக உபயோகித்தால் கருவுறாமல் இருக்கலாம். ஆனால், இந்த மாத்திரைகளை ஒன்றிரண்டு வருடத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    இந்த மாத்திரைகள் சிலருக்கு சில அசௌகரியங்களை உண்டுபண்ணலாம். அப்படியிருந்தால் ஆண் ஆணுறையையும், பெண், விந்து நாசினி கிரீமையும் சேர்த்து உபயோகிக்கலாம்.

    இப்போது இந்தியாவில் பெண்களுக்கான “பெண்ணுறை“ விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றையும் பெண்கள் உபயோகிக்கலாம். திருமணமாகி, குழந்தைகளும் பிறந்து விட்டிருந்தால் அப்போது பயன்படுத்த வேறுபல கருத்தடை முறைகள் உள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு நடுவே இடைவெளி விட நினைப்பவர்கள் காப்பர்-டி மாதிரியான சாதனத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி பொருத்திக் கொள்ளலாம்.

    குழந்தை பெற்றது போதும், இனி “நோ பேபீஸ்“ என்பவர்கள் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

    இப்போதெல்லாம் லாப்ரோஸ்கோபி முறைப்படி மிகத்துரிதமாக இந்தக் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சைகைளை செய்துகொள்ள முடிகிறது. அதிலும் ஆண்களுக்கான வாசக்டமி எனும் அறுவை சிகிச்சை ரொம்பச் சுலபம் என்பதால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் மாதவிடாயை சரியாக கணக்கிட்டு தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் விரைவில் தாய்மையை அடையலாம்.
    ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ் உறவுவைத்துக்கொள்ள ஏற்ற நேரம் என்பது ஓவுலேஷன் ஏற்படுவதற்கு சரியாக பாதியில் இருக்கும் நேரம் தான். அதாவது கருமுட்டை, கருப்பையிலிருந்து வெளியேறும் அந்த காலகட்டமே ஓவுலேஷன் என்கிறார்கள்.

    செக்ஸுக்குப் பின், ஆணின் விந்தணு குறைந்தது ஐந்து நாட்களுக்கு பெண்ணின் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் பெண்களுக்கு ஓவுலேஷன் ஏற்பட்டாலும், விந்தணு கர்ப்பப்பையில் இருப்பதால் கருவுறும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.

    பெரும்பாலான பெண்களுக்கு ஓவுலேஷன், பீரியட்ஸ் ஏற்பட்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே ஏற்படுகின்றது. அதனால் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற செக்ஸ் அவர்கள் கருவுறும் வாய்ப்பை அதிகமாக்கி விடக்கூடும்.

    சில பெண்களுக்கு குறைந்த கால இடைவெளியில் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. அதாவது 28 முதல் 3௦ நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. இதன்னாலேயே, புணர்ச்சி நேரத்தில் அந்தப் பெண் கருவுற வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, மாதவிடாய் முடிவடையும் காலத்தில் புணர்ச்சி செய்தால், அதன்பின் ஓவுலேஷன் விரைவாக ஏற்படுமென்றால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகின்றது என்று அர்த்தம். இதற்காகவே, மாத்திரைகள், ஆணுறை மற்றும் வேறு சில வழிகளை தம்பதியினர் பின்பற்றுகின்றனர்.
    கர்ப்பிணிப் பெண்கள் ஆங்கில மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவ விஷயங்களையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான குழந்தைக்கும் எளிதான பிரசவத்துக்கும் வழிவகுக்கும்.
    கர்ப்பிணிப் பெண்கள் ஆங்கில மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவ விஷயங்களையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான குழந்தைக்கும் எளிதான பிரசவத்துக்கும் வழிவகுக்கும். அவற்றைப் புறக்கணிக்கவே கூடாது.

    நம் தமிழர் மருத்துவம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சில நல்ல வழிகளைக் காட்டியிருக்கிறது. அவற்றைப் பின்பற்றினால் பிரசவம் சுகமாகும். அவற்றில் சில...

    * கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பகால வாந்தி, ரத்தசோகை, முதல் ட்ரைமெஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுக்கள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும்.

    * காரணமற்ற வெள்ளைப்போக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுந்தங்கஞ்சி சிறந்த தீர்வைத் தருபவை.

    * கர்ப்பகால ஆரம்பத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கர்ப்பப்பையில் ஏற்படும் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நல்லது.

    * தாமரைப்பூ, தக்கோலம், நெய்தல் கிழங்கு, செங்கழுநீர்க் கிழங்கு ஆகியவை கர்ப்பகால சங்கடங்களில் இருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். இவை ஃபோலிக் அமிலம் நிறைந்தவை; வலி நிவாரணி தன்மை உடையவை; வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் உடையவை. இரும்பு மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தவை.

    * வண்ணங்கள் நிறைந்த பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி சாதம் ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டியவை.

    * விலை உயர்ந்த எந்த டானிக்குகளும் தர முடியாத பயனை, முருங்கைக்கீரை, பாசிப் பருப்பு கலந்த பொரியல், கேழ்வரகு அடை ஆகியவை தந்துவிடும்.

    * முன் பக்கம் சிறுநீர்ப்பையும் பின் பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால், முறையே நீர்ச் சுருக்கமும் மலச்சிக்கலும் ஏற்படுவது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு, தினமும் நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு ஆகியவற்றைச் சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

    * கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு சர்க்கரைநோய் (Gestational Diabetes) ஏற்படும். இதற்காகக் கலங்கத் தேவையில்லை. இந்தப் பெண்களுக்கு உரிய மருத்துவமும் வெள்ளைச் சர்க்கரை சேர்க்காத உணவையும் கொடுக்கவேண்டியது அவசியம். தினமும் உணவில் வெந்தயத்தையும் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக்கொள்வது கூடுதலாக நல்லது.

    நாப்கினுக்கு மாற்றாக வந்துள்ள மென்சுரல் கப்தான், தற்போது பெரும்பாலான பெண்களின் சாய்ஸாக இருக்கிறது. அதே நேரம், இந்த மென்சுரல் கப் யாரெல்லாம் பயன்படுத்தலாம்; அதை எப்படிப் பயன்படுத்துவது என்று அறிந்து கொள்ளலாம்.
    `மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை அப்புறப்படுத்த ஆரம்ப காலங்களில் பெண்கள் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். அதன் பின் காட்டன் பஞ்சுகள் நிரப்பப்பட்ட நாப்கின்கள் புழக்கத்துக்கு வந்தன. துணி மற்றும் நாப்கின் நம்முடைய உடல் உறுப்பின் வெளிப்புறத்தில் வைத்துப் பயன்படுத்தக்கூடியவை. ஆனால், மென்சுரல் கப் என்பது பெண்களின் பிறப்புறப்பின் உள்ளே வைத்துப் பயன்படுத்தக்கூடியது. கூம்பு வடிவத்தில், சிலிகான் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இதை, மாதவிடாய் நேரத்தில் பிறப்புறுப்பில் பொருத்திக்கொள்ளலாம். மாதவிடாய் நேரத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றம், அரிப்பு, நாப்கின்களால் உண்டாகும் அலர்ஜி போன்றவை வராது என்பதுதான் மென்சுரல் கப்பின் ப்ளஸ்.

    குத்துக்கால் இட்டோ, ஒரு காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை கழிப்பறையின் மீது வைத்து கால்களை நன்றாக அகற்றி, மென்சுரல் கப்பின் வாய்ப்பகுதியை அழுத்தி 'c' போன்று மடித்து பிறப்புறுப்பின் உள்ளே பொருத்திக்கொள்ள வேண்டும். சரியாக நீங்கள் பொருத்திவிட்டால் கப்பில் சேகரமாகும் ரத்தம் வெளியே கசிய வாய்ப்பே இல்லை. மென்சுரால் கப் பயன்படுத்த ஆரம்பிக்கும் புதிதில், 'சரியாகத்தான் பொருத்தியிருக்கிறோமா' என்ற சந்தேகம் வந்தால், நாப்கினையும் வைத்துக்கொள்ளுங்கள். மென்சுரல் கப்பை  5 மணி நேரத்துக்கு ஒரு முறை வெளியே எடுத்துச் சுத்தப்படுத்தி மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.

    ``5 மணி நேரத்துக்கு ஒருமுறை, மென்சுரல் கப்பில் இருக்கிற ரத்தத்தை அப்புறப்படுத்தும்போதும், அதைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் முழுதும் பயன்படுத்திய பின்னர், கொதிக்கும் நீரில் போட்டு சுத்தம் செய்து, மீண்டும் மறுநாள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் சுத்தம் செய்யப்பட்ட கப்பை பத்திரமாக ஒரு துணியிலோ அதற்கென கொடுக்கப்பட்ட பைகளிலோதான் வைக்க வேண்டும். கண்ட இடங்களில் வைத்து, பிறகு பயன்படுத்தினால், தொற்றுக் கிருமிகளால் அலர்ஜி ஏற்படலாம்.''



    ``திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். திருமணமாகாத பெண்களுக்கு என பிரத்யேக மென்சுரல் கப்புகள் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.

    திருமணமாகாத பெண்களுக்கு, பிறப்புறப்பில் மென்சுரல் கப்பை பொருத்துவது சிரமமாக இருக்கிறது என்றால், நாப்கினையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    குழந்தை பெற்ற நேரத்தில் பிறப்புறுப்பு பாகம் அதிகமாகப் புண்பட்டு இருக்கும் என்பதால், அப்போது மென்சுரல் கப்பை தவிர்த்து விடுங்கள்.

    நீள நீளமாக நகம் வைத்திருப்பவர்கள் பென்சுரல் கப்பை வைக்கும்போது, பிறப்புறுப்பில் காயம் ஏற்படும் தவிர, நகங்களில் இருக்கிற அழுக்கு, அந்தக் காயங்களில் பட்டால் இன்ஃபெக்‌ஷனும் ஏற்படலாம். அழகுக்காக நகம் வளர்க்கிற பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.''

    மென்சுரல் கப் உடலுக்குள் சென்றுவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற வதந்தியை நம்ப வேண்டாம். கப்பில் உள்ள அழுத்தம் நாம் பொருத்திய இடத்தைவிட்டு நகரவிடாது என்பதால் வீண் பயம் வேண்டாம். அதேபோல, கப்பில் சேகரிக்கப்படும் ரத்தம் மீண்டும் உடலுக்குள் சென்றுவிடும் என்ற வதந்தியையும் நம்ப வேண்டாம். மென்சுரல் கப் கால மாற்றம் மட்டுமல்ல, பாதுகாப்பான மாற்றமும்கூட.
    பெண்களின் உடல் பருமன் பிரச்சனை குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் எப்படி பெண்களுக்கு குழந்தையின்மையை அதிகரிக்கிறது என்பது குறிந்து அறிந்து கொள்ளலாம்.
    கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

    இதற்கு முக்கிய கரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    தானியங்கள் அடங்கிய பிரெட் :

    இந்த தானியங்களில் போலிக் அமிலம் அடங்கியிருக்கிறது. அதாவது போலிக் அமிலம் என்பது வைட்டமின் - பி தான். வேறு எதுவுமல்ல... இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகைகளை ஒன்பதாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

    பழங்கள் :

    கர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு. இந்த பழங்கள் எல்லாவித ஊட்டச்சத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலை போக்க பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

    காய்கறிகள் :

    பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாக, 9-வது மாதத்தில் எண்ணெய் உணவுகளை தவிர்த்து காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.

    பால் உற்பத்தி உணவுகள் :

    சீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்து அடங்கியிருக்க, இது கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்களையும் தரவல்லது. கர்ப்பிணி பெண்கள் சோயா பால், சோயா தயிர், சோயா சீஸ் போன்றவற்றை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ள சர்க்கரை அளவு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
    சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதற்கான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டுவிடும். இதை மருத்துவ ரீதியாக, ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ் என்று கூறுவர். இதுவும் ஒரு வினோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசிவை பற்றி தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார்கள்.

    வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வருவதில்லை. மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவர்கள் இதை வயது முதிர்ச்சியால் வருவது, இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிடுவதால் இதை அப்படியே விட்டு விடுகின்றனர்.

    வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள்தான் அதிகம். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இப்போது இந்நிலை மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்தான் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்ற நிலைமை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



    சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம். இத்தகைய பிரச்சினைக்கு எளிதான தீர்வு வந்துள்ளது. ஸ்லிங் என்பது பத்து நிமிடத்தில் மாட்டப்படும் ஒரு எளிமையான சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை. இக்குறைபாடிற்கு மிகச்சிறந்த சிகிச்சை முறை இதுவே ஆகும். இதுதவிர பெண்களுக்கு சிறுநீரக பாதையில் தொற்று நோய்கள், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கழிவதில் பிரச்சனைகள் முதலியன ஏற்படுகின்றன. அவற்றை குணப்படுத்த சில இயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நிறைய தண்ணீர் குடிக்கவும். இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும். சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும். தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும். குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும். அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும். 
    ×