என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    சிசேரியனின் போது பெண்களுக்கு முதுகில் போடப்படும் ஊசியால் கடுமையான முதுகு வலி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிசேரியனின் போது முதுகில் போடப்படும் மயக்க ஊசிக்கும் முதுகுவலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முதுகெலும்பைச் சுற்றியுள்ள ஜவ்வுப் பகுதிகளிலோ தசைகள் மற்றும் எலும்புகளிலோ ஏற்படும் பாதிப்புகள் காரணமாக முதுகுவலி வரலாம். ஆனால் பலர் இப்படித்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

    சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது இரண்டுவிதமான மயக்க மருந்துகள் கொடுக்கப்படும்.

    இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு வால்வு பிரச்சனை உள்ளவர்களுக்கு ‘எபிடியூரல்’ என்கிற மயக்க மருந்து கொடுப்போம். இது முதுகுத் தண்டு வடத்துக்கு வெளியே போடப்படுவது. இந்த மருந்தை `கதீட்டர்’ என்னும் டியூபின் உதவியோடு அறுவை சிகிச்சை முடியும் வரை சிறுகச்சிறுக செலுத்துவோம். இந்த மருந்தால் இஇரத்த அழுத்தம் அதிரடியாக இறங்காது. பக்க விளைவுகளும் ரிஸ்க்கும் குறைவு.

    ‘ஸ்பைனல் அனஸ்தீசியா’ என்பது ஒரே ஊசியாக முதுகுத் தண்டுவடத்தின் உள் பகுதியில் போடப்படுவது. இதில் ரிஸ்க் அதிகம். ஆரோக்கியமானவர்களுக்கு மட்டும்தான் தேவையின் அடிப்படையில் இது கொடுக்கப்படும்.

    ‘யாருக்கு எந்த வகை மயக்க மருந்து கொடுப்பது’ என்பதை மருத்துவர்களே முடிவுசெய்வார்கள். இந்த இரண்டு மருந்துகளுமே முதுகுவலிக்குக் காரணமாவதில்லை.

    தாய்ப்பால் கொடுக்கும் பருவத்தில் பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். அதனால்கூட முதுகுவலி வரலாம்.

    பற்றாக்குறையை ஈடுகட்ட கால்சியம் சத்தும் வைட்டமின் டி சத்தும் சேர்ந்த சப்ளிமென்ட்டுகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். முதுகுவலிக்கான முக்கியக் காரணங்களில் எடை அதிகரிப்பும் ஒன்று. பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு எடை அதிகரிக்கும். உடற்பயிற்சிகளையும் உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.

    குறிப்பிட்ட வயதுக்குப்பின் பெண்களுக்கு இயல்பிலேயே தசை மற்றும் எலும்புகள் நலிவடையும். ஈஸ்ட்ரோஜென் குறைந்து முதுகெலும்பு பலவீனமடையும். முதுகுவலிக்கு இவையெல்லாம்கூட காரணமாகலாம்.
    ஆண்டுதோறும் மகளிர் தினம் கொண்டாடி அவர்களுக்கான உரிமைகள்பற்றி விவாதிக்கும் நாம், உடல்நலனில் அவர்கள் அக்கறை காட்டுகிறார்களா என்பதைக் கவனிக்க மறந்துவிடுகிறோம்.
    பெண்கள் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மே 28-ம் தேதி சர்வதேசப் பெண்கள் ஆரோக்கியத்துக்கான நடவடிக்கை தினம் (International Day of Action for Women’s Health) அல்லது சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம் (International Women’s Health Day) அனுசரிக்கப்படுகிறது.

    பெண்களின் சுகாதாரப் பிரச்னைகளை ஒவ்வொருவருக்கும் நினைவூட்டும் விதமாகப் பெண்கள் மற்றும் சுகாதாரக் குழுக்களால் இந்த சிறப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    “பெண்களுக்கு 10 வயதுக்குள் இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையும், 11 முதல் 20 வயதுக்குள் பூப்பெய்தல், மாதவிடாய்ப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. 21 முதல் 40 வயதுக்குள் ரத்தசோகை, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, பி.சி.ஓ.டி என்னும் சினைப்பைக் கட்டிகள், மெனோபாஸ், அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, எலும்பு அடர்த்திக் குறைவு, உடல் பருமன், அதீத உடல்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ், அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள், சர்க்கரைநோய் போன்றவை அவர்களைப் பாதிக்கின்றன.

    41-ல் இருந்து 60 வயதுக்குள் இதய பாதிப்பு, சர்க்கரை நோய், கண் நோய்கள், எலும்பு அடர்த்திக் குறைவதால் ஏற்படும் எலும்பு முறிவு பிரச்னை போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.

    இவர்களில் பலர், தங்களுக்கு ஒரு நோயின் அறிகுறி ஏற்பட்டபிறகும் நேரமின்மை அல்லது அலுவலகப் பணிச்சுமை காரணமாக மருத்துவரிடம் செல்வதில்லை. இது, அனைத்துப் பெண்களிடம் பரவலாகக் காணப்படும் மனநிலையாக இருக்கிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவது மிகவும் அவசியம்.

    பெண்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய 10 ஆரோக்கிய விதிகள் குறித்துப் பார்ப்போம்.

    * வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டிலிருப்பவர்களும்கூட காலை உணவைத் தவிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. காலை உணவுதான் அன்றைய நாளின் உற்சாகத்துக்கு அடிப்படை. காலை உணவாக, ஒரு முட்டை, இரண்டு பழங்கள்/ இட்லி, சாம்பார்/ சாண்ட்விச், ஜூஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.

    * உடல்பருமன் பல்வேறு நோய்களுக்கு நுழைவுவாயிலாக இருக்கிறது. எனவே, உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். ஒருவருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 கலோரி தேவை. ஒருவரின் உடலுழைப்பு, பி.எம்.ஐ அளவைப்பொறுத்து மாறுபடும் என்பதால், உணவியல் நிபுணரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். குறிப்பாக, பெரியளவில் உடலுழைப்பு இல்லாத பணிகளைச் செய்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை முடிந்தஅளவு குறைக்க வேண்டும். உணவில் எப்போதும் அதிகமான காய்கறிகள் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * ஹார்மோன் சமச்சீரின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது மாதவிடாயில் தொடங்கி மகப்பேறுவரை பல்வேறு வகையில் பெண்களைப் பாதிக்கிறது. எனவே, ஹார்மோன்கள் சரியாக சுரக்கின்றனவா என்பதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிப்பது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.

    * ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அத்துடன் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி, சூரிய ஒளியிலிருந்து கிடைப்பதால் காலை அல்லது மாலை நேரங்களில் சூரிய ஒளிபடுமாறு நடைப்பயிற்சி செய்யலாம். இதுதவிர, குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு நடந்து செல்வது அல்லது சைக்கிளில் செல்வது எனப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.

    * உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. தினமும் 30 நிமிடம் யோகா அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான தேகத்துக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசித்து, வீட்டிலேயே எளிமையான பயிற்சிகளைச் செய்யலாம்.

    * கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாகப் பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் மார்பகத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் `மாமோகிராம்’ (Mammogram) பரிசோதனை செய்வது நல்லது. மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு மற்றும் வேறுவிதமான மாற்றங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுக்க வேண்டும். பொதுவாக 40-லிருந்து 50 வயதுவரையுள்ள பெண்களுக்குத்தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், இந்தப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. `பாப் ஸ்மியர் டெஸ்ட்’ (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

    * ஆரோக்கியமான உடலுக்குச் சராசரியாக எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். அதிலும் பெண்கள் 8 முதல் 10 மணிநேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். சிறந்த உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியக் காரணி தூக்கம். ஆகவே, தூக்க நேரத்தைக் குறைத்து வேலையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    * 40 வயதைக் கடந்த பெண்களுக்கு மெனோபாஸ் நின்றுவிடும் என்பதால், ஹார்மோன்களின் சுரப்பு குறைந்துவிடும். இதனால் `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பின் அடர்த்தி குறையும் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் முதுகு வலி, எலும்பு முறிவு பிரச்னைகள் ஏற்படும். இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் அடர்பச்சை நிறக் கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எலும்பு மருத்துவரின் ஆலோசனைப்படி வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை உட்கொள்ளலாம்.

    * வயது அதிகமாகும்போது சருமத்தில் எண்ணெய் சுரப்பு குறைந்துகொண்டே வரும். இதனால், சரும வறட்சி, சருமச் சுருக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, முதுமை தோற்றம் ஏற்படும். பொதுவாக 30 வயதைக் கடந்தவர்களுக்கு சருமப் பிரச்னைகள் வரலாம். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், சரும நோய் நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

    * உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதே. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும். இதன்மூலம் டிஹைட்ரேசன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்” .
    20 முதல் 30 வயது வரையுள்ள பெண்கள்தான் ஆன்லைன் மருத்துவத்தை அதிகம் நாடுகிறார்கள். பெண்கள் பெறும் ஒட்டுமொத்த ஆலோசனைகளில் 66 சதவீதம் மகப்பேறு மருத்துவம் தொடர்புடையதாக இருக்கிறது.
    இணையதளம் வழியாக டாக்டர்களை அணுகி ஆலோசனை பெறும் நடைமுறை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அப்படி மருத்துவ ஆலோசனை பெறும் பெண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மட்டும் 119 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆன்லைன் மருத்துவ மையம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுபற்றி ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கி வரும் டாக்டர் பிரியா கூறுகையில், ‘‘இத்தகைய ஆலோசனை முறை பெண்களுக்கு சவுகரியமாக இருக்கிறது. தங்கள் பிரச்சினைகளை தயக்கமின்றி பகிர்ந்து கொள்ள வழிவகை செய்கிறது. அலைச்சல் இல்லாமல் உடனடியாக சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கிறது’’ என்கிறார்.

    மகளிர் நலம் சார்ந்த விஷயங்களைத்தான் அதிக அளவில் பெண்கள் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். 20 முதல் 30 வயது வரையுள்ள பெண்கள்தான் ஆன்லைன் மருத்துவத்தை அதிகம் நாடுகிறார்கள். பெண்கள் பெறும் ஒட்டுமொத்த ஆலோசனைகளில் 66 சதவீதம் மகப்பேறு மருத்துவம் தொடர்புடையதாக இருக்கிறது. கடந்த ஆண்டில் மகப்பேறு மருத்துவ ஆலோசனை பெற்ற பெண்களின் எண்ணிக்கை 44 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வசிப்ப வர்களில் ஆன்லைன் மருத்துவத்தை நாடுபவர் கள் எண்ணிக்கை 67 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் மெட்ரோ நகரங்கள் அல்லாத பகுதியில் ஆலோசனை பெறுபவர்கள் வளர்ச்சி 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒழுங்கற்ற மாதவிடாய், கர்ப்பம் போன்றவை குறித்து தான் பெண்கள் அதிக அளவில் ஆலோசனை கேட்கிறார்கள். ஆன்லைன் ஆலோசனை பெறும் பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அதற்கேற்ப மாலை 6 மணி முதல் 8 மணி வரை மகளிர் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுகிறார்கள்.

    மகளிர் மருத்துவத்திற்கு அடுத்தபடியாக சரும நோய் சார்ந்த விஷயங்களைதான் அதிகமாக கேட்டு தெரிந்துகொள்கிறார்கள். சரும மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் பெறுவது கடந்த ஆண்டு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சரும ஒப்பனை, கூந்தல் பராமரிப்பு குறித்த தகவல்களை நிறைய பேர் தெரிந்து கொண்டிருக் கிறார்கள். பாலியல் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்வது பற்றிய விழிப்புணர்வும் 130 சதவீதம் உயர்ந்துள்ளது. 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் குழந்தை நலன், பராமரிப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். குழந்தை மருத்துவம் குறித்து ஆன்லைன் மருத்துவர்களை நாடி யவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சளி, இருமல் மற்றும் தடுப்பூசி போடுவது குறித்த விஷயங்களுக்காக நாடியிருக்கிறார்கள்.

    குழந்தைகளுக்கு இரவு நேரங்களில்தான் நோய்த் தொற்றுகளின் தாக்கம் அதிகரிக்கும். அதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மருத்துவ ஆலோசனை பெறுபவர்களின் எண்ணிக்கை 93 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களில் 76 சதவீதம் பேர் மூட்டுவலி பாதிப்பு குறித்து ஆலோசனை பெறுகிறார்கள். மூட்டுவலி, எலும்பு முறிவு, கீல்வாதம், முதுகுதண்டுவட பாதிப்பு உள்ளிட்டவை குறித்து எலும்பியல் நிபுணர்களை நாடுபவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆன்லைனில் ஆலோசனை வழங்கும் மருத்துவ நிபுணர்கள் வீடு தேடி வந்து சிகிச்சையும் அழிப்பதால் ஆன்லைன் மருத்துவ ஆலோசனையை நாடுபவர்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    தாய்ப்பால் கட்டு இருப்பதால் தான் மார்பில் வலி என்பதை உணராமல் தாய்ப்பால் கொடுப்பதால் தான் வலி என்று தவறாக புரிந்துகொள்பவர்களும் உண்டு.
    முதல் பிரசவத்தை சந்திக்கும் இளம்பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது சிலருக்கு தாய்ப்பால் கட்டு உண்டாகி மார்பில் அதிக வலி உண்டாகும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் முறைகளை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடமோ வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ கேட்டு அதன்படி செய்ய வேண்டும்.இல்லையெனில் தாய்ப்பால் கட்டு உண்டாகும். அப்படி தாய்ப்பால் கட்டிகொள்ளும் போது காய்ச்சல், மார்பில் வலி, மீண்டும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத அளவு வலி, குழந்தைக்கு தாய்ப்பால் வராமல் அடைத்துகொள்வது, மார்புபகுதி சிவந்தும் தடித்தும் இருப்பதும் கூட உண்டாகும். தாய்ப்பால் கட்டிலிருந்து குணமாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

    மார்பு வலி அல்லது வீக்கம் இருந்தால் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலியை குறைக்க முடியும். பொறுக்கும் சூட்டில் வெந்நீரை கொண்டு ஒத்தடம் செய்யலாம். அல்லது மெல்லிய காட்டன் துணியை வெந்நீரில் பிழிந்து மார்பு பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். வலி இருக்கும் பக்கம் மட்டும் இல்லாமல் இரண்டு பக்கமும் இந்த ஒத்தடம் கொடுக்கும் போது வலி வேகமாக குறையும். பால் கட்டு தளர்ந்து வெளியேறும். வெந்நீரை போன்று ஐஸ் கட்டிகள் கொண்டும் ஒத்தடம் கொடுக்கலாம். மார்பு பகுதி இறுக்கமாகும் போது பால் கட்டு தளர்ந்து விரைவாக வெளியேற உதவும்.

    தாய்ப்பால் கட்டு இருக்கும் போது மார்பில் கை வைக்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். சிறு வலி இருக்கும் போதே மசாஜ் செய்ய தொடங்குங்கள். வலி அதிகமானால் மசாஜ் செய்வது அதிக சிரமத்தை உண்டாக்கும். உள்ளங்கைகளால் வட்ட வடிவில் மார்பின் மீது கைவைத்து மசாஜ் செய்யுங்கள். அழுத்தமாக இல்லாமல் மிதமாக 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தாலே போதுமானது. இதனால் வலி குறைவதோடு பால் கட்டும் குறைய தொடங்கும்.

    எப்போதும் படுக்கும் போது ஒருக்களித்து படுங்கள்.மல்லாந்து படுக்கும் போது தாய்ப்பால் கட்டு தளராது. மேலும் அதிகரித்து மார்பகங்களை மேலும் கனமாக மாற்றும். இதனால் மறுநாள் காலை எழும் போது மேலும் வலியும் அதிகரிக்கும். குழந்தையால் பாலும் குடிக்க முடியாது. அதனால் எப்போது படுத்தாலும் ஒருக்களித்து படுங்கள்.

    தாய்ப்பால் கட்டு இல்லையென்றாலும் இதை பின்பற்றுங்கள். ஆனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது ஒருக்களித்து படுத்தபடி கொடுக்க கூடாது. இதனால் பால் வேகமாக வருவதோடு குழந்தைக்கு மூச்சுத்திணறலும் உண்டாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
    ​பற்று போடலாம்.

    தாய்ப்பால் கட்டுக்கு மல்லிப்பூவை அரைத்து பற்று போடுவார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இவை தாய்ப்பால் சுரப்பை கட்டுப்படுத்திவிடும் என்பதால் தாய்ப்பால் கட்டுக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். மல்லிகைப்பூக்கு பதிலாக பச்சைபயறு அல்லது கடலை பருப்பு அரைத்து சுத்தமான தண்ணீரில் குழைத்து மார்பின் மீது பற்று போடுங்கள். நன்றாக உலர்ந்ததும் மார்பை மிதமான நீரில் கழுவினால் பால் எளிதாக வெளியேற்ற முடியும். மீண்டும் தாய்ப்பால் சுரப்பதிலும் பிரச்சனை இருக்காது.

    தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்லாமல் குழந்தை பெற்ற உடல் பலம் பெறுவதற்கும் சத்துமிக்க உணவை எடுத்துகொள்வதுண்டு ஆனால் தாய்ப்பால் கட்டு இருக்கும் போது உணவையும் குறைத்து எடுக்கவேண்டும். இல்லையெனில் பால் சுரப்பு அதிகரித்து மார்பிலும் வலியை உண்டாக்கிவிடும்.

    இவையெல்லாம் 15 வருடங்களுக்கு முன்புவரை இளம் தாய்மார்கள் அதிகம் சந்தித்திருக்கிறார்கள். தற்போது பெரும்பாலான பெண்கள் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை என்று தான் தெரிவிக்கிறார்கள். எனினும் குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் இந்த தாய்ப்பால் கட்டுக்கு உள்ளாவதுண்டு. ஆனால் தாய்ப்பால் கட்டு இருப்பதால் தான் மார்பில் வலி என்பதை உணராமல் தாய்ப்பால் கொடுப்பதால் தான் வலி என்று தவறாக புரிந்துகொள்பவர்களும் உண்டு. பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போதும்மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் தாய் சேய் இருவரது ஆரோக்கியமும் மேம்படும்.
    கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது.
    கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது. ஆம் ஒரு சில உணவை நாம் வழக்கமான நாளில் எடுத்துக்கொண்டாலும் கர்ப்ப காலத்தில் தேவையற்ற ஒவ்வாமை பிரச்சனையை அது ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது.
    சோயா கோதுமை பசு பால் முட்டை வேர்க்கடலை பாதாம் அக்ரூட் பருப்புகள் மீன் போன்றவை ஒருமுறை அலெர்ஜி ஏற்படுத்தும்போது மீண்டும் உண்ண முயலாதீர்கள். ஆனால் ஒரு சில ஆய்வின் முடிவுப்படி தெரியவருவது என்னவென்றால் அலெர்ஜி அற்ற உணவை நீங்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கும் உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.
     
    கர்ப்ப காலத்தில் எந்த வகையான உணவுகள் என்ன பலனை தருகிறது? நச்சுக்கள் அடங்கிய உணவுகள் எவை? அவற்றை நாம் எவ்வளவு சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கும் உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது போன்ற பல விஷயங்களை பற்றி அறிவது அவசியம். இயற்கையை பாட்டிலிலும் பிளாஸ்டிக் கவரிலும் அடைத்து வைத்து பதப்படுத்தப்பட்ட உணவை உண்ணுவதில் எந்த வித பயனுமில்லை.
     
    கர்ப்பிணிகளுக்குப் பால் அவசியமானது. கால்சியம் பற்றாக்குறையைச் சரிசெய்ய எல்லாருக்கும் பால் குடிக்கச் சொல்லி பரிந்துரைப்பார்கள் மருத்துவர்கள். பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிப்பது கிருமித் தொற்றுகளுக்கும் அவை ஏற்படுத்துகிற நோய்களுக்கும் வழிவகுக்கும். பாலை எப்போதும் நன்றாகக் காய்ச்சியே குடிக்க வேண்டும்.
     
    கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.
     
    வெளியிடங்களில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. வீட்டில் செய்கிற போதும் முழுமையாக சமைக்கப்பட்டவையா எனப் பார்த்து சாப்பிட வேண்டும்.
    உடலைக் குளுமைப்படுத்த மற்றவர்களைக் காட்டிலும் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடலை குளுமை படுத்த கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது அவர்களின் ஹார்மோன் மாற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். அந்த ஹார்மோன் மாற்றம் அவர்களின் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். இந்நிலையில் வெயில் காலத்தில் உருவாகும் வெப்பமும் கர்ப்பிணிகளின் அதிகமான வெப்பமும் தாங்க முடியாத எரிச்சலை உண்டாக்கும். எனவேதான் உடலைக் குளுமைப்படுத்த மற்றவர்களைக் காட்டிலும் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நேரடி சூரிய வெளிச்சத்தைத் தவிர்த்திடுங்கள். வெளியே செல்லும் வேலை இருந்தாலும் அதிகாலை அல்லது சூரிய மறைவுக்குப் பின் செல்வது நல்லது.

    ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடித்தால்தான் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனில் கூடுதலாக தண்ணீர் அருந்துவது அவசியம்.

    வீட்டிற்குள் இருந்தாலும் சரி, வெளியே செல்வதானாலும் சரி வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகளை அணியுங்கள் அல்லது ரேயான், லினென் ஆடைகளையும் அணியலாம்.

    வெளியே சென்றால் தண்ணீரை பீச்சி அடிக்கும் ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு செல்லுங்கள். அதிக வெப்பத்தை உணரும்போது முகத்தில் ஸ்பிரே செய்து குளுமைபடுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் இருந்தால் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.

    கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதைத் தவிறுங்கள். வெயில் காலத்தில் நீச்சல் பயிற்சி சிறந்த வழி.

    உணவு விஷயத்தில் கஞ்சத்தனம் வேண்டாம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுங்கள். குறிப்பாக இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து ஆகியவை மிக முக்கிய சத்துக்கள் என்பதை மறவாதீர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.தாணியங்கள், கீரை, தண்ணீர் பழங்கள், காய்கறிகள் என உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றுங்கள்.

    முடிந்தால் வெயில் காலத்தில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துதல் நல்லது. அதேபோல் இளநீர் குடிப்பதும் உடலை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும். வெப்பத்தை அதிகரிக்கும் பழங்களைத் தவிறுங்கள்.
    கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
    கர்ப்பவதிகள் தங்களது உடல் நிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். அதற்கு யோகப்பயிற்சியே சிறந்தவழிமுறையாகும்.  கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக எளிமையான ஆசனங்கள் தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி மிகவும் முக்கியம். எல்லாவற்றையுமே, ஒரு யோகா பயிற்சியாளர் மூலம் கற்று, செய்வது நல்லது. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும். இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.

    பிரசவத்தை எளிய, சுகமான அனுபவமாக மாற்றிவிடக்கூடிய பயிற்சிகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

    அமர்ந்தபடி செய்யும் வண்ணத்துப்பூச்சி ஆசனம் :

    சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்து, இரு கால்களையும் மடித்துப் பாதங்களைச் சேர்த்துவைத்துப் பிடித்துக்கொள்ளவும்.வண்ணத்துப்பூச்சி சிறகுகளை விரிப்பதுபோல இரு தொடைகளையும் பக்கவாட்டில் உயர்த்தித் தாழ்த்தவும். தொடர்ந்து 10 முதல் 20 முறை வரை இப்படிச் செய்யலாம்.

    படுத்தபடி செய்யும் வண்ணத்துப்பூச்சி ஆசனம் :

    கால்களை நீட்டி, கைகளை சிறிது தள்ளி விரித்துவைத்துப் படுக்கவும். இரு கால்களையும் மடக்கி, இரு பக்கமும் பக்கவாட்டில் வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகள் போல லேசாக மேலும் கீழும் ஆட்டவும்.

    வண்ணத்துப்பூச்சி ஆசனம் இருவகைப்படும் :

    1. அமர்ந்தபடி செய்யும் வண்ணத்துப்பூச்சி ஆசனம்

     2. படுத்தபடி செய்யும் வண்ணத்துப்பூச்சி ஆசனம்

    ஹத யோகா :  

    ஹதயோகா என்பது கர்ப்ப காலத்தில் செய்யப்பட வேண்டிய மென்மையான மற்றும் மிகவும்  ஆரம்பநிலை யோகா பயிற்சியாகும்.

    ஆனந்த யோகா :

    ஹத யோகா தொடர்பான, இந்த வடிவம்  ஆனந்த யோகாவாகும்.  தியானம்,  மூச்சுப்பயிற்சி மற்றும்  மந்திரங்கள் வாசித்தல் போன்றவை இவற்றுள் அடங்கும்.

    வினி யோகா :

    வினி யோகா என்பது கர்ப்ப காலத்தில் செய்யப்பட வேண்டிய முக்கியமான சுவாசப் பயிற்சி ஆகும்.

    சிவானந்தா யோகா :

    இந்தப் பயிற்சியின் மூலம், கர்ப்பவதிகளின் நேர்மறை சிந்தனைகள் அதிகப்படுத்தப்படுகின்றது.

    மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.
    வலிப்பு நோயும் தீர்க்கக்கூடிய நோய்தான். அது பரவக்கூடிய நோய் அல்ல! வலிப்பு நோய் இருக்கும் பெண்கள் மற்ற பெண்களைப் போல் கல்யாணம் செய்துகொள்ளலாம்; தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்; குழந்தை பெற்றுக்கொள்ளலாம்; தாய்ப்பால் கொடுக்கலாம் என்பதை மருத்துவர்கள் மூலம் ஊடகங்கள் மக்களின் மனதில் கொண்டு சேர்த்தால்தான் வலிப்பு நோய் பற்றிய பழமையான மூடநம்பிக்கைகளை ஒழிக்க முடியும்.

    வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.

    பொதுவாக பெண்களுக்கு இரண்டு ஹார்மோன்கள் முக்கியமானவை. முதலாவது ஈஸ்ட்ரோஜன். இரண்டாவது புரோஜெஸ்டீரான். இதில் ஈஸ்ட்ரோஜன் வலிப்பினை அதிகரிக்கும் தன்மை உடையது. புரோஜெஸ்டீரான் வலிப்பினை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் என்னுமிடத்திலிருந்து சுரக்கும் ஹார்மோனானது, சுரப்பிகளின் தலைமை செயலகமான பிட்யூட்டரி சுரப்பியினை தூண்டிவிட்டு எஃப் எஸ்எச்(FSH), எல்ஹெச்(LH) என்று சொல்லக் கூடிய இரண்டு ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது. இவ்விரு ஹார்மோன்களும் பெண்களின் சினைப்பை வரை சென்று முறையே ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது.

    மாதவிடாய் நாட்களில்...

    பெண்களுக்கு மாதவிடாய் வரும் 28 நாட்களில், முதல் 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும், இரண்டாவது 14 நாட்கள் புரோஜெஸ்டீரான் ஹார்மோன் அதிகமாகவும் இருக்கும். மாதவிலக்குடன் ஏற்படும் வலிப்புக்கு  கேடமேனியல் எபிலப்ஸி(Catamenial epilepsy) என்று பெயர். இவ்வகையான வலிப்பு மாதவிலக்கு ஏற்படும் சமயத்திலேயோ அல்லது அதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தோ அல்லது மாதவிலக்கு முடிந்து அடுத்து வரும் மூன்று நாட்களிலேயோ வரக்கூடும்(Peri menstrual seizures). பொதுவாக மாதவிலக்கு வந்த முதல் நாளிலிருந்து எண்ணி 14 நாட்கள் கழித்து பெண்களின் சினைப்பையிலிருந்து கருமுட்டை உடையும் இதை ஒவுலேஷன்(Ovulation) என்று சொல்வோம்.

    ஹார்மோன்களின் மாறுபாட்டால் இந்த நாட்களிலும் வலிப்பு ஏற்படலாம். இதனை பெரி ஓவுலேடரி(Peri ovulatory seizures) வலிப்பு என்று கூறுவோம். பெண்கள் தனக்கு எந்தெந்த நாட்களில் வலிப்பு வருகிறது என்பதை ஒரு டைரியில் குறிப்பு எடுத்துக் கொண்டு வந்தால், முன்னெச்சரிக்கையாக வலிப்பு வரக்கூடிய நாட்களை முன்கூட்டியே கணக்கில்கொண்டு அசிடோசோலமைடு (Acetazolamide), க்ளோபசம்(Clobazam), க்ளோனசிபம்(Clonazepam) அல்லது புரோஜெஸ்டீரான் லாசன்ஜஸ்(Progesterone lozenges) போன்ற மாத்திரைகளை முன்கூட்டியே கணித்து தேவையான நாட்களில் மட்டும் எடுத்துக் கொண்டார்களேயெனில் மாதவிலக்கு சார்ந்து வரும் வலிப்பினை வெகுவாகக் குறைக்க முடியும்.

    கல்யாணம் செய்து கொள்ளலாமா?

    இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.

    தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின் ஒப்புதலுக்கு பின்பே  திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது  நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.

    தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

     வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால் வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.

    குழந்தைப்பேற்றில் என்ன சிக்கல்கள் உள்ளன?

    வலிப்பு நோயுள்ள பெண்கள் கருத்தரித்த பின்பும் அவர்களது வலிப்பு மாத்திரைகளை தொடர்ந்து விடாமல் சாப்பிட வேண்டும். மாத்திரையினால் சிசுவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோரது மனதிலும் தோன்றக்கூடிய சந்தேகம். பிரசவ காலத்தில் வலிப்பு
    மாத்திரைகளை திடீரென்று குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ வலிப்பு திரும்ப வரும் வாய்ப்புகள் அதிகம், அவ்வாறு வலிப்பு ஏற்பட்டால் தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்து குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

    அதனால் மாத்திரைகளின் பக்க விளைவுகளை பற்றி அதிகமாக யோசிக்காமல் பிரசவ காலத்தில் பெண்கள் தமக்கு வலிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. ஒரு சில மருந்துகளே குறிப்பாக வால்பிரோயேட்(Valproate) பினோபார்பிடோன்(Phinobarbitone) ஆகியவற்றை வலிப்பை குறைக்க அதிக அளவில் எடுத்துக்கொண்டால், சிசுவின் உறுப்பின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

    பெரும்பாலும் இந்த மருந்துகளை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. அப்படியே இம் மருந்துகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளின் அளவை குறைத்துக் கொண்டு வேறு வலிப்பு மருந்துகளை சேர்த்துக்கொள்ளலாம். தாயின் கருவில் இருக்கும் சிசுவிற்கு முதல் மூன்று மாதங்களில் தான் முக்கிய உறுப்புகள் உருவாகின்றன.

    எனவே, வலிப்பு நோயுள்ள பெண்கள்தான் கருத்தரித்த உடனேயே அருகில் இருக்கும் மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து தனது வலிப்பு மருந்துகளை ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. கர்ப்பகாலத்தின்போது உடல் எடை கூடுவதாலும், நீர்ச்சத்து அதிகரிப்பதாலும், உடம்பில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் புரதங்களில் மாற்றங்கள் ஏற்படுவதினாலும் வலிப்பு மருந்துகளின் செயல் `தன்மைகளில்(Pharmacokinetics) சிறிது மாற்றம் ஏற்படும். ஆகவே 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை மூளை நரம்பியல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகளின் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ சாப்பிடுவது நல்லது.

    சுகப்பிரசவமா சிசேரியனா?

    எல்லா வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிரசவத்திற்கான நேரத்தில்தான் இதனை முடிவு செய்ய முடியும். தாயின் உடல்திறன், சிசுவின் வளர்ச்சி, உடம்பில் உடனிருக்கும் வேறு ஏதும் தொந்தரவுகள், வலிப்பு நோயின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு மகப்பேறு மருத்துவர் நரம்பியல் நிபுணர், மயக்க மருந்து நிபுணர் அனைவரும் கூடி அந்த நேரத்தில் முடிவு செய்வதை பொறுத்துதான் சுகப்பிரசவமா அல்லது சிசேரியன் டெலிவரியா என்பதை தெளிவாக கூற முடியும்.

    தாய்ப்பால் கொடுக்கலாமா?

    கட்டாயமாக கொடுக்க வேண்டும். வலிப்பு நோயுள்ள தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுடைய  குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் செயல்திறன் வலிப்பு நோயுள்ள தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களின் குழந்தைகளை விட அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

    எனவே, தாய்ப்பால் வழியாக வலிப்பு நோய் குழந்தைக்கு பரவி விடுமோ என்ற பயம் அல்லது, தான் எடுத்துக் கொள்ளும் வலிப்பு மாத்திரைகளினால் தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு ஏதேனும் தீங்கு வந்துவிடுமோ என்ற எண்ணங்களை கைவிட்டுவிட்டு முழுமையாக ஆனந்தமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சாலச்சிறந்தது.
    வெள்ளைப்படுதல் மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன் வரும். இதனால் பிரச்சனையில்லை. ஆனால் வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
    வெள்ளைப்படுதல் மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன் வரும். இதனால் பிரச்சனையில்லை. நமது கர்ப்பப்பையில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை கர்ப்பப்பையே வெஜைனா மூலம் வெளியேற்றும். இது சாதாரணமானது தான்.

    ஆனால்  வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் கிருமித்தொற்று அதிகமாக இருக்கும் என்று அர்த்தம். இதனை உடனேயே சரிப்படுத்திவிடலாம்.

    ஆனால் வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உடனடியாக மருத்துவரை நாடவும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

    மாதவிலக்கு பின்பு....

    மாதவிலக்கு முடியும் நேரத்தில் வந்தால் அது இறந்த ரத்த செல்கள் கலந்து பழுப்பு நிறமாக வெள்ளைப்படுதல் வெளிப்படும்.

    மாதவிலக்கு முன்பு...

    மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு முன் உண்டானால் உங்கள் உடலில் பொரோஜஸ்டிரான் அளவு குறைவாக இருக்கிறது என அர்த்தம்.

    இடையில் வந்தால்...

    மாதவிலக்கிற்கு இடைப்பட்ட நாட்களில் வந்தால் உண்டாகியிருக்கலாம் அல்லது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம்.
    அழகான கர்ப்பகால முன்னேற்பாடுகள் இன்னும் ஆளுமை மிக்க ஆரோக்கியமான குழந்தைகளையும் தலைமுறையையும் கொண்டுவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
    இளம் வயதில் திருமணம், உணவுமுறை விபரீதம், வாழ்வியல் சூழலில் பெரும் மாற்றம், மனதளவில் நிலவும் பதற்றச்சூழல், குழந்தையின்மைக்கு எடுத்துக்கொள்ளும் அதிதீவிரமான சிகிச்சை, பொறுமையில்லாமல் அவசர அவசரமாக எதையும் செய்ய நினைக்கும் நவநாகரிக வேகம், வயது கடந்து உண்டாகும் கர்ப்பம்... இவையெல்லாம்தான் முக்கியக் காரணிகள். இவற்றையெல்லாம் சரிசெய்த பின்னர், தாய்மையும்கூட இன்னும் சற்றுக் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் நல்ல தாய்மைக்குத் தயார் ஆகி, நல்ல மக்கட்பேறு உண்டானால் இந்த நாடும் ஒவ்வொரு வீடும் ஆரோக்கியமாக இருக்கப்போவதில் ஐயம் இல்லை.

    உலகில் உள்ள எண்ணற்ற பிரச்னைகளுக்கு மூலகாரணமாகவும் குறைகளின் ஆரம்பமாகவும், கவலைகளின் தொடக்கமாகவும், போராட்டங்களின் ஆணிவேராகவும் இருப்பது... அன்பு குறைவதே. நோய்களின் ஆரம்பமாகட்டும், மன உளைச்சலின் மருந்தாகட்டும், உறவுகளின் சிக்கலாகட்டும், சிறிய விஷயம் முதல் பெரிய பெரிய நிகழ்வுகளின் மூலாதாரம் என்பது எங்கோ, யாரோ அன்புக்காக ஏங்கும் அந்த நிமிடத்தில் தொடங்குகிறது. அதைச் சரிசெய்யாமல் எந்த மாதிரி சோதனைகள் அதன் பின்னால் நடந்தாலும் எதிலும் மாற்றம் வராது.

    கணவன், மனைவியிடம் அன்பு குறையும் பொருட்டு அது குழந்தைகளிடம் எதிர்மறை குணாதிசயங்களாக வெளிப்படும் என்பது மிகப்பெரிய உண்மை. அது அனைவருக்கும் புரிந்தே ஆக வேண்டும். குழந்தை என்பதும் கடவுள் என்பதும் என்னைப் பொறுத்தவரை வேறு சொற்கள் இல்லை.

    ஒரு குழந்தை வளரும் தருவாயில் எந்த நேரமும் கணவன், மனைவிக்குள் இருக்கும் உறவுச் சிக்கல்கள் எல்லாம், பின்னர் எதிர்காலத்தில் குழந்தையிடம் எதிர்மறை எண்ணங்களாக வெளிப்பட்டே தீரும் என்கின்றன ஆராய்ச்சிகள்.

    ஒரு குழந்தையின் உருவாக்கமும் வளர்ப்பும் அப்படி தாய்க்கு மட்டுமே பெரும்பங்கானதாய் இருப்பது ஏன் என்று ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. கருமுட்டையிலேயே தொடங்குகிறது அந்த வேறுபாடு.

    ஆணின் விந்துவின் அளவை ஒப்பிட்டால் பெண்ணின் கருமுட்டை 30 மடங்கு பெரியது. அடுத்தபடியாகக் குழந்தையை வளர்த்து ஆளாக்க அவள் தன் உதிரம், தனக்குக் கிடைக்கும் பிராணவாயு, அவளுடைய ஆற்றல் இப்படி அனைத்திலும் 30% கொடுத்து இன்னோர் உயிரை ரத்தமும் சதையுமாக மாற்றுகிறாள். அதோடு தூக்கத்தை எல்லாம் இழந்து, தன் எண்ணங்கள் முழுக்க அக்குழந்தையை மட்டுமே ஆக்கிரமித்து, அவளின் உடலில் நடக்கும் பற்பல மாற்றங்களைத் தாங்கி, மனதளவில் அதைவிட பலமடங்கு நடக்கும் மாற்றங்களை ஏற்று, இப்படி எல்லா இடங்களிலும் அவள் ஆணைவிட ஒரு படி மேலே இருக்கும் ஒரு தெய்வத்தைப் போன்ற ஜீவன். அன்பு காண்பிப்பதில் அவள் ஆதி ஊற்று. உணர்ச்சியின் உச்சம். ஆக, பெண் இனத்தை உடல், மன, ஆன்ம நிலையில் யாரிடமும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு அவளுக்கு நிகர் அவள் மட்டுமே.

    அப்படியிருக்கையில் கர்ப்பிணிப்பெண்ணை நாட்டின் கண்களாகப் பேண வேண்டும். படைப்பின் கடவுளாக நான் அவர்களை எப்போதும் உருவகப்படுத்துவேன். அது மிகையாகாது. அடுத்த தலைமுறை நல்லபடியாக உருவாக அவளே ஆணிவேர். அப்படிப்பட்டவள், தாய்மைக்கு நல்ல முறையில் தயார்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மட்டுமே என்னில் ஓங்கி நிற்கிறது. இன்னும் அதிகப்படியாக இன்றைய பதின்ம வயதுப் பெண்ணிடமிருந்து இந்த முன்னேற்பாடுகள் தொடங்கியே ஆக வேண்டும். அது கட்டாயம்.

    அப்படிப்பட்ட அழகான கர்ப்பகால முன்னேற்பாடுகள் இன்னும் ஆளுமை மிக்க ஆரோக்கியமான குழந்தைகளையும் தலைமுறையையும் கொண்டுவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் நாளை கர்ப்பம் ஆன பிறகு கருச்சிதைவு, உதிரப்போக்கு, குறைமாத பிரசவம், குறைவான வளர்ச்சி, பலவீனமான நஞ்சுப்பை, பனிக்குட நீர் வற்றிப்போதல்,நோய்த்தொற்று போன்ற பலவிதமான குழப்பங்கள் இன்றியும் குழந்தைகள் பிறப்பார்கள். பின்னாளில் அந்தக் குழந்தைகள் நல்ல புரிந்துணர்வும் பக்குவமும், முதிர்ச்சியும் பெறுவதை தாயின் கர்ப்பகாலமே தீர்மானிக்கிறது என்பதையெல்லாம் சற்று உள்வாங்கி அடுத்த தலைமுறையை நல்வழியில் எடுத்துச்செல்வோம்.

    ஆக முடிவுரையாக, கர்ப்பகாலத்தில் ஆண், பெண்ணின் நல்ல அணுக்களின் கூட்டு மட்டுமே குழந்தையாக மாறுவது இல்லை. அதோடு அந்தக் கர்ப்பிணியின் சுற்றுப்புறச் சூழலும் பாதி குழந்தையைத் தீர்மானிக்கிறது என்ற உண்மையை உணர்ந்து நல்ல உணவுகளைச் சாப்பிட்டு, நல்லமுறையில் ஆழ்ந்து தூங்கி எழுந்து, அளவான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு, மனதளவில் பதற்றம் இல்லாமல் சாந்தமாக இருக்க எல்லா வழிமுறையும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கர்ப்பத்துக்குத் தயாராவதற்கு முன்பே வைட்டமின் குறைபாடுகள், ரத்தசோகை, ஹார்மோன் மற்றும் வேறு சில ஆரோக்கியக் குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால் அவற்றையெல்லாம் சரிசெய்து அதற்கான தீர்வு தரும் சில உணவுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    கர்ப்பப்பையைத் திடமாக்க சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஆணும் இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு செயல்படுத்தி, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் கணவன், மனைவி அடுத்த தலைமுறைக்குப் பெரும் புண்ணியத்தையும் ஆரோக்கியத்தையும் தங்கள் குழந்தை மூலமாகச் சேர்க்கிறார்கள். குழந்தையை மட்டுமல்ல... நல்ல சமுதாயத்தையே உருவாக்கிய பெருமையைப் பெறுவார்கள்.
    கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மறக்கமுடியாத காலகட்டமாகவே உள்ளது.அதிலும் மசக்கையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதைப்பற்றி சற்று விரிவாகக் காணலாம்.
    கர்ப்பிணிப் பெண்களுக்கு தாங்கள் கருவுற்ற காலம் தொட்டு 12 முதல் 14 வாரங்கள்(முதல் மூன்று மாதங்கள்) வரை மசக்கைத் தொந்தரவு ஏற்படுகின்றது. காலை எழுந்தவுடன் வாந்தி,மயக்கம், குமட்டல், உடல் சோர்வு போன்ற பல தொந்தரவுகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் ஆளாகின்றனர். இதனையே ‘மசக்கை’ என்று அழைக்கின்றனர். இந்த மசக்கை பெரும்பாலும் காலை நேரத்தில் சற்று அதிகமாகக் காணப்பட்டு பின்னர் படிப்படியாகக் குறைகின்றது. அதனாலேயே மசக்கையை ஆங்கிலத்தில் ‘மார்னிங் சிக்னஸ்’ என்று கூறுகின்றனர்.

    * காரம், எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.

    * அதிகமாக வாந்தி எடுப்பதால் உடலிலிருந்து நீர்ச் சத்து கணிசமான அளவு குறைந்துவிடுகிறது இதன் காரணமாகவே கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் உடல் சோர்வாக உணர்கின்றனர். ஆகையால் அவர்கள் தண்ணீர் போதுமான அளவு அருந்த வேண்டும். சிறிது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு தண்ணீர் அருந்திக் கொள்ளலாம். அதனால் அவர்களின் உடல் அசதி குறைய நிறைய வாய்ப்பு உள்ளது.

    * மசக்கையினால் அவதிப்படும் பெண்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ளலாம்.அப்படிச் செல்ல நேரும் பட்சத்தில் கையில் புளிப்பு மிட்டாய் வைத்துக் கொள்வது நல்லது.

    * சித்த வைத்திய கடைகளில் இஞ்சி மிட்டாய்கள் விற்கப்படுகின்றன.இதனை உட்கொள்வதாலும் வாந்தி கட்டுப்படும்.

    * எலுமிச்சைப் பழத்தை நுகர்வதால் குமட்டல் உணர்வு குறைகிறது.

    * செயற்கை நிறம் கலக்கப்பட்ட உணவுப் பண்டங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் துரித வகை உணவுகள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதுவே தாய்க்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.

    * உயிர்ச்சத்து பி6 நிறைந்த காய்கறிகளான பீன்ஸ்,கேரட் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    * இளநீர்,நுங்கு, மோர் மற்றும் பழவகைகளை அதிகம் உட்கொள்ளலாம்.குறிப்பாக மாதுளையை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    * பழங்களைச் சாறு பிழிந்தும் அருந்தலாம்.

    * எதுவுமே சாப்பிட இயலாத சூழல் நிலவினாலும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போதிய ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. ஆகையால் அதை மனதில் நிறுத்திக் கொண்டு உணவுகளைச் சற்று சிரமப்பட்டாவது, கர்ப்பிணிப் பெண்கள் உண்ண வேண்டும். ஒருவேளை என்ற கணக்கை விட்டுவிட்டு, ஆறு வேளையாகக் கூடப் பிரித்து, உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம்.

    * உடல் மிகவும் அசதியாக இருக்கும் தருணங்களில் மதிய வேளையில் சிறு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

    * உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்லாமல் சுமார் ஒரு மணி நேரமாவது அமர்ந்துவிட்டுச் செல்வது நன்று.

    * மாலை வேளையில் சிறு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வெளிக்காற்று புத்துணர்ச்சி அளிப்பதோடு மனச்சோர்வை அகற்றவல்லது.

    * மசக்கைக் குறித்தும் பிரசவத்தைக் குறித்தும் நேர்மறையாகப் பேசுபவரோடு பழகுவது நல்லது.

    * மசக்கை காலத்தில் புளிப்புச் சுவையை உண்ண நாவிற்குப் பிடிக்கும்.அதனாலேயே கர்ப்பிணிப் பெண்கள் மசக்கை காலத்தில் மாங்காய்களையும் புளியங்காய்களையும் விரும்பி உண்கின்றனர்.இதுகுறித்து,“மாங்காய் திருடித் தின்ற பெண்ணே மாசம் எத்தனையோ?”என்று ஒரு அழகான பாடல் கூட உள்ளது.

    * மசக்கையில் அவதிப்படும் பெண்களுக்கு வாய்க்கு ருசியான உணவைப் படைத்துத் தரலாம்.

    * மசக்கையைக் கண்டு சில பெண்கள் மன பயமும் விரக்தியும் கொள்கின்றனர். இது மாதிரியான மனநிலை கொண்ட பெண்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்குவது நல்லது.இவர்களைத் தனிமையான சூழலில் விடாமல் இருப்பது நல்லது.

    * ஒரு சில பெண்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வந்து விடுகின்றது.அது மாதிரியான சூழலில் தவிக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையை நாடி,அவர்களின் அறிவுரையோடு உரிய மாத்திரைகளைக் எடுத்துக்கொண்டு வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.
    கர்ப்பிணிகள் கார், பேருந்து, ரெயில் எதில் பயணிப்பது பாதுகாப்பானது? பயணிக்கத் திட்டமிடும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    கர்ப்பிணிகள் எந்தக் காலத்தில் பயணிக்கலாம்; பயணிப்பதைத் தவிர்க்கலாம். கார், பேருந்து, ரெயில் எதில் பயணிப்பது பாதுகாப்பானது? பயணிக்கத் திட்டமிடும் முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

    ஒவ்வொருவரின் உடல்நிலையும் ஒவ்வொரு மாதிரி. நீங்களும் உங்களது கருவும் ஆரோக்கியமாக இருந்தால் 36வது வாரம் வரை நீங்கள் பயணம் செய்யலாம். சிலருக்கு உடல்நிலை மோசமாக இருக்கும். அவர்கள் பயணிக்க கூடாது. பயணித்தால் கருவுக்கு பாதிப்பு வரலாம். இந்த மாதிரி பிரச்னையுள்ளவர்கள் குறைவான சதவிகிதம்தான். எனவே, தங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி ஏற்று நடப்பது நல்லது.

    முதல் மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டர் பாதுகாப்பானது அல்ல. ஆரோக்கியமாக உள்ளவர்கள், 14-28 வது வாரம் வரை பயணிக்கலாம். இரட்டைக் குழந்தை வயிற்றில் இருப்பவர், ப்ரீகிளப்சியா, ப்ரீடர்ம் லேபர், ப்ரீமெச்சுர் ரப்சர் ஆஃப் மெம்ப்ரேன் போன்ற பிரச்னை உள்ளவர்கள் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

    டிரிப் போகும் முன் உங்களது மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை கேட்டுவிட்டு செல்லலாம். உங்களுடன் வருபவர் உங்களை நன்கு பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும். ஏதாவது எமர்ஜென்ஸி என்றால் அதை சமாளிக்க தெரிபவராக இருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், ப்ரீநேடல் விட்டமின், முதலுதவி கிட் இருப்பது நல்லது. எந்த இடத்துக்குப் போக திட்டமிட்டாலும், அந்த இடத்துக்கு எந்த டிரான்ஸ்போர்ட் விரைவில் செல்லுமோ அதைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில், நீண்ட நேரம் பயணத்தில் இருப்பதைத் தவிர்க்கலாம். டிராவல் திட்டம் எளிதில் மாற்றக்கூடியதாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்.

    குறுகிய நேரம் பயணிப்பது நல்லது. நீண்ட நேரம் பயணித்தால், சில இடங்களில் நிறுத்தி எழுந்து, கை, கால்களை அசைத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு பின்னர் பயணிக்கலாம். வயிற்றுக்கும் இடுப்பு எலும்புக்கும் இடையே சீட் பெல்ட் அணியுங்கள். தோள்ப்பட்டை பெல்ட்டை வயிற்றுக்கும் மார்பகங்களுக்கும் இடையே அணியலாம்.

    பயணிக்கையில் எப்போதும் உட்கார்ந்தே இல்லாமல் அடிக்கடி எழுந்து கை, கால்களை ஸ்ட்ரெச் செய்து கொள்ளுங்கள். தண்ணீர், ஜூஸ், மோர் போன்றவற்றைப் பருகுவது நல்லது. பயணிக்கையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். மலச்சிக்கலை விரட்ட நார்ச்சத்து, நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது. மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது.

    சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும் முன்னரே சிறுநீர் கழித்துவிடுங்கள். சிறுநீர் அடக்கி வைத்தால் யூடிஐ பிரச்னை வந்துவிடும். பிளாடர் முழுமையாகவதற்கு முன்னரே அடிக்கடி சிறுநீர் கழித்துவிடுங்கள். ஹெல்தி ஸ்நாக்ஸை கைகளில் வைத்திருங்கள். மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ் கைகளில் வைத்திருங்கள். இருசக்கர வாகனம் ஓட்டுவது, இருசக்கரத்தில் தொடர்ந்து பயணிப்பது பாதுகாப்பானது அல்ல. எப்போதாவது மிதமாக வேகத்தில் இரு சக்கரத்தில் பின்னாடி உட்கார்ந்து செல்லலாம். பேருந்தைவிட ரயிலில் பயணிப்பது நல்லது. நீண்ட நேரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
    ×