search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப கால உடல் நலம்
    X
    கர்ப்ப கால உடல் நலம்

    கர்ப்ப காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வது எப்படி?

    உடலைக் குளுமைப்படுத்த மற்றவர்களைக் காட்டிலும் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடலை குளுமை படுத்த கர்ப்ப காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது அவர்களின் ஹார்மோன் மாற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். அந்த ஹார்மோன் மாற்றம் அவர்களின் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். இந்நிலையில் வெயில் காலத்தில் உருவாகும் வெப்பமும் கர்ப்பிணிகளின் அதிகமான வெப்பமும் தாங்க முடியாத எரிச்சலை உண்டாக்கும். எனவேதான் உடலைக் குளுமைப்படுத்த மற்றவர்களைக் காட்டிலும் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    நேரடி சூரிய வெளிச்சத்தைத் தவிர்த்திடுங்கள். வெளியே செல்லும் வேலை இருந்தாலும் அதிகாலை அல்லது சூரிய மறைவுக்குப் பின் செல்வது நல்லது.

    ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடித்தால்தான் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனில் கூடுதலாக தண்ணீர் அருந்துவது அவசியம்.

    வீட்டிற்குள் இருந்தாலும் சரி, வெளியே செல்வதானாலும் சரி வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகளை அணியுங்கள் அல்லது ரேயான், லினென் ஆடைகளையும் அணியலாம்.

    வெளியே சென்றால் தண்ணீரை பீச்சி அடிக்கும் ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு செல்லுங்கள். அதிக வெப்பத்தை உணரும்போது முகத்தில் ஸ்பிரே செய்து குளுமைபடுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் இருந்தால் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.

    கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதைத் தவிறுங்கள். வெயில் காலத்தில் நீச்சல் பயிற்சி சிறந்த வழி.

    உணவு விஷயத்தில் கஞ்சத்தனம் வேண்டாம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுங்கள். குறிப்பாக இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து ஆகியவை மிக முக்கிய சத்துக்கள் என்பதை மறவாதீர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.தாணியங்கள், கீரை, தண்ணீர் பழங்கள், காய்கறிகள் என உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றுங்கள்.

    முடிந்தால் வெயில் காலத்தில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துதல் நல்லது. அதேபோல் இளநீர் குடிப்பதும் உடலை குளுமையாக வைத்துக்கொள்ள உதவும். வெப்பத்தை அதிகரிக்கும் பழங்களைத் தவிறுங்கள்.
    Next Story
    ×