என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    வெரிகோஸ் வெயின் ஆண் பெண் என இரு பாலருக்கும் வரும். இருப்பினும் பெண்களை அதிகமாக தாக்குகிறது என்கின்றனர்.
    வெரிகோஸ் வெயின் ஆண் பெண் என இரு பாலருக்கும் வரும். இருப்பினும் பெண்களை அதிகமாக தாக்குகிறது என்கின்றனர். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடையால் இரத்த அழுத்தம் அதிகமாவது ஆகும். வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும்வேதனையும் குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும்.
     
    கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
     
    வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்க ஒரு இயற்கை முறை கொடுக்கப்பட்டுள்ளது.

    வெரிகோஸ் வெயின்
     
    செய்முறை: பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும். இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும். மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம்.
     
    இந்த இயற்கை முறை வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இதை தினமும் சரியான அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதனுடன் சேர்த்து உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சியுடன் இந்த முறையை பயன்படுத்தினால் விரைவில் வெரிகோஸ் வெயின் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
     
    வெரிகோஸ் வெயின் சிகிச்சை எடுக்கும் போது உங்கள் மருத்துவரிடம் டயாபெட்டீஸ் ஹைபர் டென்ஷன் இருக்கா என்பதை அறிந்து கொள்வது நல்லது. பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின் இயற்கையாகவே நமது உடலில் இரத்தம் கட்டுதலை குறைக்கிறது. இது உங்கள் நரம்புகளின் சுவர்களை வலிமையாக்குகிறது. எனவே எளிதாக வெரிகோஸ் வெயினை குணப்படுத்துகிறது.
    கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு, 20 வயதிற்கு மேல் நம் உடல் எப்படி மாற்றம் அடைகிறது, மனரீதியாக தாய்மையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    தாய்மை அடைவதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு, 20 வயதிற்கு மேல் நம் உடல் எப்படி மாற்றம் அடைகிறது, மனரீதியாக தாய்மையை எப்படி எதிர்கொள்வது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், அன்பான குடும்ப சூழல் என கர்ப்பம் காலம் இனிமையாகவும், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கவும் இந்த அம்சங்களெல்லாம் அவசியமாகின்றது. இந்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

    உங்கள் உடல் 20 வயது - 24 வயதில் எப்படி இருக்கும்

    இந்த காலகட்டங்களில் உடல் சீராக இருக்கும். மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் அதிகம் வராது. கரு உருவாவதற்கான வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும். இந்த வயது வரம்பிற்குள் உட்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 % கருத்தரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கர்ப்ப காலங்களில் உயர் ரத்த அழுத்தமும், கர்ப்பகால நீரிழிவு பிரச்சனைகளும் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வருவதை காட்டிலும் 50 % வரும் வாய்ப்புகள் 20 - 24 வயதுள்ளவர்களுக்கு வருவது குறைவு.

    பெரும்பாலும் இந்த வயதில் இருப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான காலம் அவகாசம் இன்னும் அதிகமாக இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். குழந்தை பிறந்த பிறகு தங்களுடைய வெளித்தோற்றத்தை பற்றி கவலை கொள்வார்கள். இந்த வயதில் பெண்கள் திருமணம், வேலை இதற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட தாய்மை அடைவதற்கு குறைவாகவே கொடுக்கிறார்கள்.

    இந்த காலங்களில் கருச்சிதைவு ஆவதற்கு வெறும் 9.5 % வாய்ப்புகளே உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். ஒப்பீட்டளவில் இந்த காலகட்டங்களில் கருமுட்டைகள் வளமையாக இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் டவுண் சிண்ட்ரோம் எனப்படும் கிரோமோசோம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் வருவது மிக குறைவு. மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப புற்று நோய் வரும் வாய்ப்பும் குறைவாக இருக்கும்.

    வயது 25 - 34

    இந்த வயதுக்கு உட்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவும், சரியான உடற்பயிற்சியும் செய்தால் பிரசவத்தை எளிமையாக எதிர்கொள்ளலாம். மேலும் இதனால் பிரசவத்திற்கு பின்னும் உடலை பழைய மாதிரி திரும்ப கொண்டு வர முடியும். ஆனால் 30 வயதிற்கு பிறகு கருமுட்டைகளின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். உடலில் படிபடியாகவே இதன் மாற்றங்கள் நடைபெறும். குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படும் போது செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இந்த 25 வயது

    34 வயது காலகட்டத்தில் கருச்சிதைவுக்கான வாய்ப்பு 10 % ஆக உள்ளது. மேலும் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை கையாளவதற்கான பக்குவம் இருக்கும். தாய்மையை சிறிது அனுபவத்தோடு எதிர்கொள்வீர்கள். 30 வயது மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு 20-24 வயது உடையவர்களிவிட இரண்டு மடங்கு அதிகம் என்கிறார்கள். 30 வயதிற்கு மேல் பிரசவத்தின்போது கருச்சிதைவு ஏற்பட 11.7 % வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. இந்த வயது பெண்களுக்கு பிறக்கும் 952 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சின்றோமால் பாதிப்படைகிறது. பிரசவத்தின்போதும் குழந்தை வளர்ப்பிலும் மனதளவில் தெளிவுடன் செயல்படுவார்கள்.

    35 வயதிற்கு மேல்

    இந்த காலகட்டத்தில் கருமுட்டைகளின் சக்தி பெருமளவு குறைந்துவிடும். உடலிலும் சக்தி இழக்கின்றனர். மேலும் 10% -20% வரை உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக வயிற்றிலிருக்கும் கருவின் மீது அழுத்தும் ஏற்பட்டு குழந்தை பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகள் உருவாகிறது. இதனால் கருவை காப்பாற்ற வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. மேலும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதும் அதிகமாகிறது. 35 வயதிற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட 18% வாய்ப்புகள் உள்ளது.

    35- 40 வயது

    35-40 வயதுள்ளவர்களுக்கு ஹார்மோன் தூண்டுதலால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இதனால் இரட்டை குழந்தைகள், மூவர் மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க வாய்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 35 வயதை கடந்தவர்கள் கருதரிக்கும்போது தாயின் உடல் நலம், கருவின் வளர்ச்சி குறித்த மருத்துவ சோதனை செய்து பார்ப்பது அவசியம். அதன் பிறகு அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் தாய் சேய் இருவருக்கும் நல்லது.

    வயது அதிகமாகும் போது வாழ்க்கையில் வசதி, அனுபவம் பெருகுவது போல் உடலில் மாற்றங்களும், நோய்களும் வரத் தான் செய்யும். சரியான காரணம் இல்லாமல் தாய்மையை தள்ளிப்படுவது எல்லா நேரங்களிலும் நன்மையாக அமையும் என்று சொல்ல முடியாது. எல்லா வயதிலும் உடல் மன ஆரோக்கியம், விழிப்புணர்ச்சி, சரியான ஆலோசனை எல்லா பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிறது.
    கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும்.
    கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும்.

    சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும் கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம்.

    முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும். “கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும். இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது.

    பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும்.

    அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.

    இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.

    பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும்.

    எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

    மூன்றாம் மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் இதுவாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும்.

    இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
    பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருவுறாமை பிரச்சனையைக் கண்டறியப் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.

    மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.

    லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.

    எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.

    ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.

    அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.

    இவை மட்டுமல்லாமல் மேலும் பல பரிசோதனை முறைகள் இன்று மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனையைக் கண்டறிந்து உங்கள் உடலில் இருக்கும் கருவுறாமைக்கான சிக்கல்களைச் சரி செய்ய முடிகிறது.
    ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கர்ப்பிணி பெண்கள் என்ன செய்வது என்பதை பற்றி விளக்கமாக பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த டீனா அபிஷேக். இவர் குழந்தைப் பேறு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளர்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் பொதுவாக பலரும் பாதிக்கப்பட்டாலும் கர்ப்பிணிகள் முறையாக சிகிச்சை பெற மருத்துவ மனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற பேச்சு தற்போது நிலவுகிறது.

    அப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கர்ப்பிணி பெண்கள் என்ன செய்வது என்பதை பற்றி விளக்கமாக பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த டீனா அபிஷேக். இவர் குழந்தைப் பேறு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளர். அதே சமயம் மனநல ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

    ஊரடங்கு உத்தரவு காலத்தில், புதிதாக கர்ப்பம் தரித்தால் என்ன செய்வது?

    ஊரடங்கு உத்தரவு மேலும் சில காலம் நீட்டிக்கப்பட்டால், அதனால் பெரிதும் பாதிக்கப்பட இருப்பது புதுமண தம்பதிகள்தான். மருந்து கடைகளில் கிடைக்கும் கர்ப்ப பரிசோதனை உபகரணங்களை கொண்டு கர்ப்பம் தரித்திருப்பதை கண்டுபிடித்து விடலாம் என்றாலும், அதை மருத்துவமனையில் உறுதிப்படுத்தும் வாய்ப்பு குறைவு. அதேசமயம், கர்ப்ப காலத்தில் மனைவியை எப்படி கவனித்து கொள்வது, எந்தெந்த உணவு பொருட்களை சேர்ப்பது, தவிர்ப்பது என்பதிலும் குழப்பம் ஏற்படும். இப்படி ஒரு சூழலில் நீங்கள் சிக்கியிருந்தால் கவலைப்படாதீர்கள். உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டிய கட்டாயமும் இல்லை.

    தலைவலி, உடல் சோர்வு, முதுகு வலி, வாந்தி, உடல் நடுக்கம் போன்றவை இந்தச் சூழலில் இயல்பானது. பிறப்பு உறுப்பில் எரிச்சல், ரத்தக் கசிவு, தொடர் வயிற்றுவலி போன்றவை இருக்கும்பட்சத்தில் மருத்துவரை கட்டாயம் அணுகவேண்டும். கருவில் இருக்கும் குழந்தையை பரிசோதிக்க என்.டி.ஸ்கேன் பயன்படுகிறது. குழந்தை வளர்ச்சியில் இருக்கும் குறைபாடுகளை இந்த ஸ்கேன் மூலம் கண்டறியலாம். இதை கரு உருவாகிய 12 வாரங்களுக்குள் செய்வது நல்லது. அதனால் ஊரடங்கு உத்தரவு காலத்தில் கர்ப்பம் தரித்தாலும், கருவின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க, 12 வாரங்கள் உள்ளன. அதனால் பதற்றப்படாமல் இருங்கள்.

    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் சூழல் உருவானால், மருத்துவர்களை ஆன்லைனில் தொடர்பு கொள்ளலாம். நிறைய நகரங்களில் ‘டாக்டர் ஆன் கால்' முறையில், மருத்துவர்கள் வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கிறார்கள். இல்லையேல், அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் ‘102' நடமாடும் மருத்துவ வாகன சேவையை பயன்படுத்துங்கள்.

    4 முதல் 6 மாத கர்ப்பிணிகளுக்கு சில டிப்ஸ்?

    கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 3 மாதத்தில் ஒரு தடுப்பூசியும், அடுத்த 2 மாத காலத்திற்குள் ஒரு தடுப்பூசியும் போடப்படுவது வழக்கம். எனவே அந்த தடுப்பூசியை அந்த மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் போடலாம். அதேபோலதான் குழந்தையின் உடல் வளர்ச்சியை பரிசோதிக்க பயன்படும், அனாமலி ஸ்கேனையும் அந்த மாத காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். அதனால் அவசர உதவிக்கு மட்டும் மருத்துவமனை சென்றால் போதுமானது.

    இரும்பு சத்து, புரத சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை எல்லா கால கர்ப்பிணிகளும் உட்கொள்ளவேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. 15 நிமிட நடைபயிற்சியும் அவசியம்.

    பிரசவ காலத்தை நெருங்குபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன?

    35 வாரத்தை கடந்தவர்கள் கவனமாக இருக்கவேண்டும். இவர்களுக்குதான் மருத்துவ ஆலோசனை அடிக்கடி தேவைப்படும். ஏனெனில் இந்த காலக்கட்டத்தில்தான் பிரசவத்திற்கான அறிகுறிகள் அதிகமாக வெளிப்படும். 36-வது வாரம், 37-வது வாரத்தில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஒரு நாளில் இரு முறை (நீண்ட இடைவெளியில்) வயிற்று வலி ஏற்படுவது இயல்பானது. ஆனால் வயிற்று வலியும், இடுப்பு வலியும் தொடர்கதையாகும் பட்சத்தில், மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    குழந்தையின் நகர்வையும், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கவனிக்கவேண்டும். 30 வார கர்ப்பிணிகளுக்கு ஒரு நாளில் 3 நகர்வுகளும், 36 வாரத்தை கடந்தவர்களுக்கு ஒரு மணிநேரத்தில் 6 நகர்வுகளும் இருக்கவேண்டும். குழந்தையின் நகர்வு வழக்கத்தைவிட குறையும்பட்சத்திலும் அது சிக்கலாக முடியலாம். சிலருக்கு பனிக்குடம் உடைந்துவிடும். அப்போதுகூட நீங்கள் பதற்றப்பட வேண்டாம். முடிந்தவரை விரைவாக மருத்துவமனை செல்ல முற்படுங்கள். பனிக்குடம் உடைந்ததில் இருந்து, அடுத்த 2 மணிநேரத்திற்குள் மருத்துவமனை சென்றுவிடவேண்டும்.

    யூ-டியூப் மூலம் மருத்துவ தகவல் பெறுவது நல்லதா?

    உடல்நிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி-மயக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு வெகு குறைவாகவே இருக்கும். அதனால் நேரடி மருத்துவ ஆலோசனையே சிறந்தது. கிடைக்காத பட்சத்தில், தொலைப்பேசி மூலமாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மேலும் யூ-டியூப் சேனல்களில் உண்மை தன்மையை ஆராய்வது மிகமிக முக்கியம்.

    டீனா அபிஷேக்
    இதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    இதய நோயுள்ள பெண்களை ரெண்டு விதமாப் பிரிக்கலாம். சிலர் பிறக்கற போதே இதய நோய்களோட பிறக்கறவங்க ஒரு வகை. அதுக்குப் பிறகு வர்ற இதய நோய்களால பாதிக்கப்படறவங்க அடுத்தது.

    சாதாரணமா பெண்களுக்கு 5.5 லிட்டர் ரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்துல இது 30 சதவிகிதம் அதிகமாகும். கர்ப்பத்தோட 10-12வது வாரங்களில் இது அதிகமாகத் தொடங்கும்.

    இதயம் பம்ப் பண்ற வேகமும் இதயத்துடிப்பும் அதிகமாகும். ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதயம் ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு இதெல்லாம் பிரச்சனையைக் கொடுக்காது. ஆனா, பிரச்சனை உள்ளவங்களோட இதயத்தால ஈடுகொடுக்க முடியாது. இதயக் கோளாறுகளை அலட்சியப்படுத்திட்டு, கர்ப்பம் தரிச்சா, முதல் 10-12 வாரங்களிலேயே கரு கலையலாம்.

    இதயம் இன்னும் பழுதடையலாம். ரத்தம் உறைஞ்சு, மூளைக்கும் நுரையீரலுக்கும் போகும் ரத்தக்குழாய்களில் அடைப்பு உண்டாகி, பக்கவாதம் வரலாம். சில வேளைகளில் மரணமும் நிகழலாம். சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறதுதான் பாதுகாப்பு.

    இதய வால்வுகளில் சுருக்கம் இருந்தாலோ, இதயத்தைச் சுத்தின நான்கு சுவர்களில் பிரச்சனை இருந்தாலோ கூட கர்ப்பம் தரிக்கிறது ரிஸ்க். வால்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடைப்புகளுக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கலாம். சில பெண்களுக்கு இதய வால்வு மாற்று சிகிச்சை’ செய்யப்பட்டிருக்கும்.

    அவங்களுக்கு வால்வுகளுக்குப் போகும் ரத்தம் உறையாமலிருக்க தினசரி மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை எடுத்துக்கிறப்ப, அவங்க கர்ப்பம் தரிக்கிறது சிரமம். சில சிறப்பு கேஸ்களில், அவங்களுக்கு பிரத்யேக மருந்துகளைக் கொடுத்த பிறகுதான் கர்ப்பம் தரிக்க அறிவுறுத்துவோம்.

    சிகிச்சை மற்றும் ஆபரேஷன் முடிஞ்ச பிறகு அந்தப் பெண் கர்ப்பம் தரிச்சாலும், கர்ப்ப காலம் முழுக்க, ஒரு இதயநோய் நிபுணரோட கண்காணிப்புல இருக்கிறது பாதுகாப்பானது. அட்வான்ஸ்டு வசதிகள் உள்ள மருத்துவமனையில் பிரசவ காலத்தைச் செலவழிக்கிறது அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு.

    பெண்களுக்கு, இரும்புச் சத்து அவசியம். அதனால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான கீரை, தானியங்கள், பழங்களை நிறைய சாப்பிட வேண்டும்.
    பெண்களுக்கு, இரும்புச் சத்து அவசியம். ஏனெனில், ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் காலத்தில் ரத்தப் போக்கு ஏற்படும். அதற்கு தேவையான ரத்தம் உற்பத்தியாக, இரும்புச் சத்து அவசியம்.பெண்களுக்கு, முடி மீது அதிக அக்கறை உள்ளது. அதனால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான கீரை, தானியங்கள், பழங்களை நிறைய சாப்பிட வேண்டும்.

    வீட்டிலும், அலுவலகத்திலும், அயராது உழைக்கும் பெண்களுக்கு, வலுவான உடல் கட்டமைப்பு வேண்டும். அதற்கு, பலமான எலும்புகள் அவசியம்.அதை, கால்சியம் வழங்குகிறது. குறிப்பாக, இடுப்பு எலும்பு உறுதியாக இருந்தால் தான், பிரசவம் எளிதாக இருக்கும். மகப்பேறுக்குப் பின், குழந்தைக்கு பால் ஊட்டுவதற்கும், கால்சியம் அவசியம்.

    அதுபோல, போலிக் ஆசிட் மற்றும் விட்ட மின்களும், இளம் வயது பெண்களுக்கு அவசியம். பெண் குழந்தைகள், பூப்பெய்திய உடன், அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகள் வழங்க வேண்டும். குறிப்பாக, உளுந்து களி, உளுந்து வடை, நல்லெண்ணெய், வெந்தயம், பனை வெல்லம் போன்றவை அவசியம்.மேலும், நாட்டுக்கோழி முட்டையை அப்படியே குடிக்க கொடுக்கலாம்.

    இல்லை என்றால், குழந்தைகள் விரும்பும் விதத்தில், நாட்டுக்கோழி முட்டையை, பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். வட மாநிலத்தவர்கள், தங்கள் உணவில் தாமரைத் தண்டை அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். அதுபோல நாம் பெண் குழந்தைகளுக்கும் கொடுத்தால், இடுப்பு எலும்பு பலப்படும். இதற்காக, புரதச்சத்து மிகுந்த சோயா பீன்ஸ், வாரம் ஒரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மேலும், நாட்டுத் தக்காளி, விதையுள்ள உலர்ந்த திராட்சை, கறுப்பு திராட்சை, பேரீச்சம் பழம் உள்ளிட்டவற்றை, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெரியவர்களான பின், மாதவிடாய் பிரச்னை இருக்காது.பெரும்பாலான பெண்களுக்கு, 40 வயது ஆனதுமே, 'மெனோபாஸ்' எனப்படும், மாதவிடாய் நின்று விடுதல் பிரச்னை உள்ளது. கால்சியம் மாத்திரை எடுத்துக் கொண்டால், சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அதை தவிர்க்க, கேழ்வரகு, சுண்டைக்காய், பாதாம் பருப்பு, பால், புடலங்காய், வெண்டைக்காய், முருங்கைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை அடிக்கடி சாப்பிட வேண்டும். எள், வேர்க்கடலை, தனியா, வெந்தயம் போன்றவற்றை, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, நம் பெண்களுக்கு, 'இந்தியன் ஸ்டைல் டாய்லெட்' தான் சிறந்தது!
    ஒரு பெண்ணானவள், குழந்தையாகப் பிறக்கும்பொழுதே ஒரு மில்லியன் முட்டைகளை உருவாக்கும் கரு அணுக்களை உடையதான இரு சூலகங்களுடன் பிறக்கின்றது.
    ஒரு பெண்ணானவள், குழந்தையாகப் பிறக்கும்பொழுதே ஒரு மில்லியன் முட்டைகளை உருவாக்கும் கரு அணுக்களை உடையதான இரு சூலகங்களுடன் பிறக்கின்றது. கருவானது ஒரு பருவமடைந்த பெண்ணில் ஒரு பாதாம் பருப்பு விதையினைப் (almond-sized) போன்ற இரு சூலகங்களில் அல்லது கருவறைகளில் உற்பத்தியாகின்றன.

    இந்த சூலகங்கள் இரண்டும் கர்ப்பப்பைக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளது ஒரு பெண் பருவமடைந்தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் சுமார் 20 கரு முட்டைகள் தயாராகி வளர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றன. ஆனால் அவற்றுள் பெரும்பாலும் ஒன்றோ அல்லது சிலவே மாத்திரம் முதிர்ச்சி அடைந்து வெளிவருகின்றன. வெளிவரும் முட்டைகள் பலோப்பியா குளாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லுகின்றது.

    கருக்கட்டல் பலோப்பியா குளாயினுள்ளே நடைபெறுகின்றது. இந்தக் கருமுட்டைக்கு தானாகவே நகரும் திறன் கிடையாது. சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப்பைக் குழாயினால் (பலோபியன் குளாயினால்) உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பையினுள்ளே நுழைகிறது.

    இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அந்த கருமுட்டையோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த கருமுட்டை சினைப்பட்டு தொடர்ந்து உயிர்வாழ முடியும். கரு முட்டையை கருவாக்கும் (சினைப்படுத்தும்) ஆணின் விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது.

    அவை கழிவாக மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது. பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த விந்தணு (உயிரணு) இணையும்போதுதான் புதிய சிசுவுக்கான கரு உருவாகும். இதனை கருக்கட்டல் என அழைக்கப்படும். கருக்கட்டல் நிகழாதுவிடின் பெண்ணில் உருவாகிய கருமுட்டை அழிந்துவிடும். அதுவே மாதவிடாய் என கழிவாக வெளிவருகின்றது.
    உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.
    கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

    இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

    உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.
    கருக்குழாய் அடைப்பு என்றால் என்ன? அது எப்படி குழந்தையின்மைக்குக் காரணமாகிறது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தையின்மைக்கான காரணங்களில் சுமார் 40 சதவிகிதப் பெண்களைப் பாதிக்கிற பிரச்னை கருக்குழாய் அடைப்பு. அப்படி என்றால் என்ன? அது எப்படி குழந்தையின்மைக்குக் காரணமாகிறது என்பதை எல்லாம் பார்ப்பதற்கு முன், கருக்குழாயின் அமைப்பைப் பற்றியும் அதன் வேலைகளைப் பற்றியும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு கருப்பைக்கும் இரண்டு கருக்குழாய்கள் உண்டு. இக் கருக்குழாய் நான்கு கூறுகளாக (Segments) பிரிக்கப்பட்டுள்ளது. அவை

    1. கருப்பை - உள் இருக்கும் பகுதி (Intra Mural Segment / Cornual Segment)
    2. இடை இணைப்புப் பகுதி (Isthmial Segment)
    3. குடுவைப் பகுதி (Ampullary Segment)
    4. மருவிகள் பகுதி (Fimbrial Segment).

    இதில் கருக்குழாயில் உள்ள துவாரம், கருப்பை உள்ளிருக்கும் பகுதியிலும் இடை இணைப்புப் பகுதியிலும் மிகக் குறுகியதாகவும் குடுவை பகுதியிலும் மற்றும் மருவிகள் பகுதியிலும் சற்று விரிந்தும் காணப்படும். கருக்குழாயின் துவாரம் (Lumen) அடர்ந்த உயிர்மங்கள் (Cells) உடையதாக இருக்கும். இந்த உயிர்மங்கள் சளிப்படலங்களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்டதாகவும் இருக்கிறது.

    இந்த உயிர்மங்கள் பலதுக்கும் நுண்ணி மயிரிழைகள் (Cells) என்று சொல்லப்படும் சிறு மயிரிழை இணைப்பகங்கள் உண்டு. இந்த உயிர்மங்கள் சளிப்படலங்களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்டதாகவும் இருக்கும். இந்த மயிரிழைகள் எப்போதும் கருப்பையை நோக்கி அசைந்து கொண்டு இருக்கும்.

    கருக்குழாயின் முக்கிய பணிகள்...

    1. கருமுட்டையைக் கைப்பற்றுவது
    2. ஆண் விந்தணுக்களை கருமுட்டையிடம் சேர்த்து கருத்தரிக்கச் செய்வது.
    3. சிசு (Embryo) உருவாகிய பின் அதைப் பாதுகாத்து கருப்பைக்குள் சேர்ப்பது.

    கருவணுவகத்திலிருந்து (Ovary) கருமுட்டை உருவானதும் கருக்குழாயின் மருவிகள் பகுதி சினைப்பையைச் சூழ்ந்து கொள்ளும். கருமுட்டை வெளிப்படும்போது அதைக் கைப்பற்றி உள்ளிழுத்துக் கொள்ளும். இவ்வாறு கருக்குழாயை அடைந்து குடுவைப் பகுதியில் 2 - 3 நாள் வரை தங்கியிருந்து முழுமையான வளர்ச்சியை அடையும். ஆண் விந்துக்கள் கருமுட்டையை இப்பகுதியில்தான் கருவுறச் செய்யும் (Fertilization). இப்படி கருவுற்ற கருமுட்டை பகுப்படைந்து சிசு ஆகிறது.

    8லிருந்து 16 உயிர்மங்களாகப் (8-16 Cell Stage) பிரிந்து இந்தச் சிசு கருக்குழாயில் இருக்கும் மயிரிழை உயிர்மங்களின் அசைவுகளாலும் கருக்குழாய்ச் சுவரின் தசைகளின் சுருக்கங்களாலும் கருப்பையை அடைந்து கருப்பையினுடைய படல உறையில் தன்னைப் பதித்துக் கொண்டு வளர்கிறது. கருக்குழாயில் உண்டாகும் நோய்களும் அதன் விளைவுகளும் கருக்குழாய் நோய்களில் முதன்மையானது நுண்கிருமிகளால் இடுப்புப் பகுதியில் (Pelvis) ஏற்படும் அழற்சி நோய்கள் (Pelvic Inflammatory Disease).

    இப்போது பால்வினை (Sexually Transmitted Diseases) நோய்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கிளமைடியா ட்ரக்கோமேடிஸ் (Chlamydia Tracomatis) என்கிற நுண்கிருமியும் நைசீரியா குனோரியா (Neissieria Gonnorhoea) என்கிற நுண்கிருமியும் 40 சதவிகிதம் பால்வினை நோய்களை ஏற்படுத்தி கருக்குழல் சிதைவுக்குக் காரணமாகின்றன. மேலும் மைக்கோபேக்டீரியம் ஹோமினிஸ் (Mycobacterium Hominis), யூரோபிளாஸ்மா யூரோலைட்டிகம் (Ureaplasma Urealyticum), ஹீமோபிளஸ் இன்புளூயென்ஸா (Hemophilius Influenza) போன்ற நுண்கிருமிகளும் 2-3 சதவிகிதம் குழலின் சிதைவுக்குக் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. சில நேரங்களில் பல கிருமிகள் ஒன்று சேர்ந்து இந்த நோய்த் தன்மைக்குக் காரணமாகலாம். இப்படி வரக்கூடிய நோய்கள் பிறப்புறுப்பு வழியாகக் கருப்பைக் குழியை (Endometrium) அடைந்து அங்கிருந்து கருக்குழாயை அடைகிறது.

    சில நேரங்களில் இந்த நுண்கிருமிகள் ரத்த நாளங்கள் (Arteries) மூலமாகவோ, ரத்தச் சிரைகள் (Veins) மூலமாகவோ அல்லது நிணநீர் (Lymph) மூலமாகவோ கருக்குழலை அடைந்து சேதத்தை ஏற்படுத்தக் கூடும். பெருங்குடலில் ஏற்படும் நோய்களும், குடல்வாலில் ஏற்படும் நோய்களும் கருக்குழலை பாதிக்கக்கூடும். சிலருக்கு கருச்சிதைவு செய்த பின்னரோ, முதல் குழந்தை பிறந்த பிறகோ அல்லது தகுந்த காரணம் இல்லாத நிலையிலும் இந்நோய் பாதிப்பு உருவாகலாம்.

    பெண்கள் கருவுறாமல் இருக்க கருக்குழாயில் பொருத்தப்படும் காப்பர்-டி (Cu-T) போன்ற சாதனங்களும் தூய்மையான நிலைகளில் போடப்படாவிட்டால் இந்நோய்கள் உருவாகலாம். மேலும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometriosis) என்று சொல்லப்படும் ரத்தக் கட்டிகளும் கருக்குழாயை பாதிக்கக்கூடும். இந்த நுண்கிருமிகள் கருக்குழலின் உயிர்மங்களின் மயிரிழைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி சளிப்படலங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளச் செய்கிறது. மேலும், கருக்குழலின் துவாரத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருவுறாமைக்கு முக்கிய காரணமாகிறது.

    மேலும் இப்படி வரக்கூடிய நோய்கள் கருக்குழாயிலிருந்து வெளிப்பட்டு கருப்பையைச் சுற்றியுள்ள வயிற்று உள்ளுறையை (Peritonium) அடைந்து கருக்குழாய் குடல்களோடு ஒட்டச் செய்து அதன் இயக்கத்தை தடுத்துவிடுகிறது. இப்படி ஏற்படக்கூடிய நோய்கள் கருக்குழலின் தசைகளில் நீர்க்கட்டுகளை (Hydrosaiphinx) ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் இவை நீர்க்கட்டிகளாகவும் இருக்கலாம். கருக்குழலின் மருவிகள் அல்லது குடுவைப் பகுதிகளை இந்நோய் அதிகம் பாதிக்கிறது.

    இது கருக்குழல் துவாரத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையான அடைப்பையோ உண்டாக்கி கருக்குழலில் உள்ள தசைகளுக்கும் சளிப்படலங்களுக்கும் உயிர்மங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி கருக்குழல் வீக்கங்களுடன் காணப்படுகிறது. மிகக் கடுமையாக இந்நோய்த் தாக்கப்பட்டால் உயிர்மங்களின் மயிரிழைகள் அசையாத் தன்மையோடு அல்லது அனைத்தும் சேதமடைந்து காணப்படலாம்.

    இப்படி கருக்குழாயின் துவாரங்களுக்கு ஏற்படும் அடைப்புகளே கருவுறாமைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. நுண்கிருமிகளால் ஏற்படும் இடுப்புப்பகுதி நோய்களுக்கு அவ்வப்போதே தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டால் கருவுறாமை தன்மையின் சதவிகிதம் குறைந்துவிடும்...’

    கருக்குழாயின் அமைப்பைப் பற்றியும் அதன் வேலைகளைப் பற்றியும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

    நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை அணிகிறார்கள். அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல.
    உள்ளாடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நிறைய பேர் உள்ளாடை விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். ஈரமான,
    இறுக்கமான உள்ளாடைகளை அணிவது நல்லதல்ல. அது சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்துவதோடு நோய் தொற்று ஏற்படகாரணமாகிவிடும்.

    துணிகளை துவைத்தபின்பு நறுமணம் வீசச்செய்யும் ‘டிடர்ஜெண்டுகளை’ நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அவை சருமத்திற்கு தீங்குவிளைவிக்காததாக இருக்க வேண்டும்.

    பெண்கள் நிறைய பேர் இடுப்பு தசையை குறைக்கும் நோக்கத்துடனும், கட்டுடல் அழகை தக்கவைக்கவும் ‘ஷேப்வேர்’ எனப்படும் உள்ளாடைகளை அணிகிறார்கள். அதனை நீண்ட நேரம் அணிந்தால் ரத்த ஓட்டம் தடைப்படும். அதோடு வாயு, உடல் வீக்கம், அஜீரணம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

    சிலருக்கு உடல் பகுதியில் தேவையற்ற முடி வளரும். முடியை சூழ்ந்து வீக்கம், தடிப்பு போன்ற பிரச்சினையும் உருவாகும். இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நீண்டகாலமாக இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கு ஈஸ்ட் நோய்தொற்று பாதிப்பு அதிகரிக்கும்.

    உள்ளாடைகள் வழியே சருமத்திற்கு போதுமான அளவு காற்று ஊடுருவி செல்ல வேண்டும். நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை அணிகிறார்கள். அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல. பருத்தி போன்ற காற்று ஊடுருவக்கூடிய உள்ளாடைகளே சிறந்தது.
    குடும்ப நலன் மீது முழுமூச்சாக கவனம் செலுத்தும் குடும்ப தலைவிகள் தங்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் போதுமான அக்கறை கொள்வதில்லை.
    குடும்ப நலன் மீது முழுமூச்சாக கவனம் செலுத்தும் குடும்ப தலைவிகள் தங்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் போதுமான அக்கறை கொள்வதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான முயற்சியையும் அவர்கள் மேற்கொள்வதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தாய்மார்கள் நலன் சார்ந்த ஆன்லைன் நிறுவனம் ஒன்று, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு நாடு முழுவதும் 500 பெண்களிடம் சர்வே நடத்தியுள்ளது. அவர்களின் உடல்நலன் சார்ந்த விஷயங்களை குறுந்தகவல், ஆடியோ, வீடியோ வடிவில் பதிவு செய்தது. அதில் 86 சதவீத தாய்மார்கள் கொரோனா வைரஸ் குறித்து போதுமான விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

    10 பெண்களில் 7 பேர், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்திருக்கிறார்கள். 5 பேர் பயணங்களை தவிர்த்திருக்கிறார்கள். அதேவேளையில் 50 சதவீத பெண்கள் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசங்களை பயன்படுத்துகிறார்கள். 10 தாய்மார்களில் ஒருவர் மட்டுமே தங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டிருக்கிறார்கள்.

    10 தாய்மார்களில் 8 பேர் உணவு பழக்கம் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள். ஆனால் 70 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றும் சர்வே தகவல் தெரிவிக்கிறது. மேலும் 60 சதவீதம் பேர் தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதில்லை என்றும் கூறி இருக்கிறார்கள். 10 தாய்மார்களில் 6 பேர் தங்கள் வீட்டு உபயோக பொருட்களைத் தான் மருந்தாக பயன்படுத்துவதாக கூறி இருக்கிறார்கள். உடல் மிகவும் பல வீனம் அடைந்த நிலையில்தான் மருத்துவமனையை அணுகுகிறார்களாம்.
    ×