என் மலர்
பெண்கள் மருத்துவம்
ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது. பெண்கள் சாப்பிடும் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
உடலுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக இரும்புச்சத்து இருக்கிறது. உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்த சிவப்பணுக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. மேலும் ஆற்றலை உற்பத்தி செய்யவும், செல்களின் சுவாசத்தை எளிதாக்கவும் துணைபுரிகிறது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது. பருவ வயதை எட்டிய பெண்ணுக்கு தினமும் 18 மில்லி கிராம் இரும்பு சத்து தேவையாக இருக்கிறது.
கர்ப்பகாலத்தில் இரும்பு சத்தின் தேவை 27 மில்லி கிராமாக அதிகரிக்கிறது. ஆனால் ஆணுக்கோ ஒரு நாளைக்கு 8 மில்லி கிராம் இரும்பு சத்துவே போதுமானது. ஆண்களை ஒப்பிடும்போது கர்ப்பகாலத்தில் மூன்று மடங்கு அதிகம் தேவைப்படுகிறது. அதனால் பெண்கள் சாப்பிடும் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மாதவிடாய் சுழற்சியும், கர்ப்பமும்தான் இரும்பு சத்தின் தேவைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா கூறுகையில், “மாதவிடாய் சுழற்சி காரணமாக பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரத்தத்தை இழக்க வேண்டியிருக்கிறது. கர்ப்ப காலமும் இரும்பு சத்தின் தேவையை அதிகரிக்க செய்துவிடுகிறது. கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு ரத்தத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நிவர்த்தி செய்வதற்கு இரும்பு சத்து துணை புரிகிறது. பிரசவத்தின்போது எதிர்கொள்ளும் ரத்த இழப்பை ஈடு செய்ய இரும்பு சத்து தேவைப்படுகிறது. மாதவிடாய் காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரத்த இழப்பு உண்டாகும். அது உடலில் ஒட்டுமொத்த இரும்பு உள்ளடக்கத்தை பாதிக்கும். ரத்தத்தை மீண்டும் நிரப்புவதற்கு இரும்பு சத்து அதிகமாக தேவைப்படும். அதனால் பெண்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எப்போதும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்” என்கிறார்.
கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் உறவு பாலமாக விளங்கும் நஞ்சுக்கொடியை உருவாக்குவதற்கு இரும்பு சத்து உதவுகிறது. கருவில் இருக்கும்போதும், பிறந்த பிறகு ஆறு மாதங்கள் வரையும் அதன் வளர்ச்சியில் இரும்பு சத்து முக்கிய பங்கு வகிக்கும். உடலில் இரும்பு சத்து குறையும்போது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்கும். அதன் காரணமாக ரத்தசோகை ஏற்படக்கூடும். உடல் சோர்வும் உண்டாகும். பச்சை இலை காய்கறிகள், முட்டை, உலர்ந்த பழங்கள், நட்ஸ்கள், தானியங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், மீன் உள்ளிட்ட இரும்பு சத்து அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆண்களை காட்டிலும் பெண்கள் இரும்பு சத்தை விரைவாக இழந்துவிடுவார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்ன வென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான்.
சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும். ஆனால் சிலருக்கு பிரசவத்திற்கு பின் ஆறு மாதம் ஆகியும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்போது அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளோமோ என்று நினைப்பார்கள். அவ்வாறு நினைக்க வேண்டாம்.
ஏனெனில் பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சி அனைவருக்குமே ஒரே மாதிரி ஏற்படும் என்பதில்லை. அது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். இப்போது எதற்கு அந்த மாதிரியான தாமதம் ஏற்படுகிறது என்று பார்ப்போமா!
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படும். ஏனெனில் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதால், உடல் நிலையானது பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும். ஏனெனில் புரோலாக்டின் என்னும் தாய்ப்பாலை சுரக்கும் ஹார் மோனானது அண்ட விடுப்பினால், மாதவிடாய் நடைபெறுவதை குறைக்கிறது.
இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சில பெண்கள் தாய்ப்பால் கொடுத்தாலும், மாதவிடாய் முறையாக நடைபெறும். சிலருக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை கூட தாமதம் ஆகும். நிறைய ஆய்வுகளில் போதிய உடல் எடை இல்லாமல் இருந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்தாலோ, மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஆகும் என்று கண்டறியப் பட்டுள்ளது.
மேலும் உடலில் போதிய ஊட்டசத்துக்கள் இல்லா விட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும். எனவே பிரசவத் திற்கு பின் நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்டால் தான் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க முடியும். எனவே காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பிரசவத்திற்கு பின் செய்ய வேண்டிய உடற் பயிற்சிகளை செய்து வர வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியை சரியாக நடைபெற வைக்க முடியும்.
பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சரியான நேரத்திலோ அல்லது சில மாதங்கள் வரையிலோ மாதவிடாய் சுழற்சியானது தடைபடும். ஏனெனில் தாய்ப்பாலை சுரக்கும் புரோலாக்டின் ஹார்மோனானது, பிரசவத்திற்கு பின் நடைபெறும் மாதவிடாய் சுழற்சியை தாமதமாக்கும். சொல்லப்போனால் பொதுவாகவே அண்டவிடுப்பு சுழற்சி மாதவிடாய் சுழற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்டவிடுப்பு சுழற்சியானது சரியாக நடைபெறா விட்டால், மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறாது.
அதிலும் சில சமயம் பிரவத்திற்கு பின் இரத்த வடிதல் ஏற்படும். இவை முற்றிலும் வித்தியாச மானது. இதை மாதவிடாய் சுழற்சி என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் சிலருக்கு பிரசவத்திற்கு பின், ஒரு வாரம் அல்லது மாதம் வரை இரத்தம் வடியும். ஆகவே பிரசவத்திற்கு பின் ஒரு வருடம் ஆன பின்பும் மாதவிடாய் சுழற்சி நடைபெறா விட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அவ்வாறு மருத்துவரை அணுகி ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், பின் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.
சொல்ல ப்போனால், மாதவிடாய் சுழற்சி தாமதமானால், அதற்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு, நன்கு ஆரோக்கி யமான உணவுகளை சாப்பிட்டாலே சரி செய்து விடலாம்.

உள்ளாடை அணிவதால் ஆரோக்கியம் எந்த விதத்திலும் மேம்படாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
பெண்களின் உள்ளாடை குறிப்பாக பிரா அணிவதால் ஏதேனும் நண்மை உள்ளதா என்று ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
உள்ளாடை என்பது வழக்கமாக நாம் அணியும் ஆடையைப் போன்று இல்லை... அது நம் இனப்பெருக்க உறுப்புக்களின் பாதுகாப்பு கவசங்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். உண்மையில், உள்ளாடை அணிவதால் ஆரோக்கியம் எந்த விதத்திலும் மேம்படாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

* அவரது ஆய்வின்படி, பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. இதற்கு மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன.
* பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பதற்கு இந்த ஆய்வில், 18-35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்களிடமிருந்து சில தகவல்களை பெற்றுள்ளார். அதன்படி, இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார்.
* தினமும் பிரா அணிபவர்களை கேட்டபோது, அவர்களுக்கு பிரா அணிவதனால் அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால், பிரா அணிவதால் மேலும், மார்பகங்கள் தொங்கும் நிலையை தான் அடையும் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.

தாம்பத்தியம் மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும்.
ஆண்களுக்கு இருப்பதை போன்று பெண்களுக்கான வயகராவான பில்பென்சரின் ஆகஸ்ட் மாதம் 2015_ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்களுக்கான வயகரா அவர்களின் மேற்கொள்ளும் உடலுறவில் விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி நீண்ட நேரம் உறவில் ஈடுபட உதவும். ஆனால் பெண்களுக்கான வயகரா வேறுமாதிரி வேலை செய்யும். இது பிங்க் நிறத்தில் சிறிய அளவிலான மாத்திரையாக இருக்கும்.
உடலுறவு மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரையை மதுவுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது.அப்படி செய்தல் உங்கள் இரத்த அழுத்தம் கீழ்நிலைக்கு சென்று உயிரே போய் விடும்.
இந்த வயகராவை பெண்கள் எப்போதும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக உட்கொள்ள வேண்டும். இதனுடைய பலன் ஏதும் தெரியவில்லை என்றால் உட்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆண்கள் வயகரா அவர்களின் ஆணுறுப்பின் மீது செயல்படுவது போல இல்லாமல் இது பெண்களின் பிறப்புறுப்பை காட்டிலும் அவர்களின் மூளையின் மீது செயல்பட்டு உறவில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தும். இது மூளையில் செயல்பட்டு மனஅழுத்தத்தை போக்குவதுடன் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களான டோபமைன் போன்றவற்றை சுரக்க வைக்கிறது.
தாம்பத்தியத்தில் திருப்தி இருக்கும் பெண்களுக்கு இது தேவையில்லை. அதே போல கல்லீரல் பிரச்சினைகள், நரம்பு மண்டல பிரச்சினைக்காக வேறு மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தக் கூடாது. ஆண்கள் வயகரா பொதுவாக உடனடியாக வேலை செய்யும், ஆனால் பெண்கள் வயகரா அப்படியில்லை, இதை நீங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வேலை செய்ய தொடங்க ஒரு மாதமாவது தேவைப்படும். சில பெண்களுக்கு எட்டு வாரங்கள் கூட ஆகலாம்.
இது ஆண்கள் வயகரா செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆண்களின் பயன்படுத்தும் வயகரா விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி அவர்களை நன்றாக செயல்பட வைக்கும். பெண்கள் பயன்படுத்தக் கூடிய இந்தவகையான வயகராவோ பாலியல் ஆசை இல்லாத பெண்களுக்கு பாலியல் ஆசையை பெருக்கி அவர்களின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைத்து செக்ஸ் ஆசையை தூண்டி விடுகின்றது.
நாம் பயன்படுத்துவதில் பக்க விளைவுகள் இல்லாத பொருட்கள் என்று எதுவும் கிடையாது. அதே போன்று இந்த வயகரா மாத்திரையால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை பயன் படுத்தும் பெண்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.பெண்கள் பயன்படுத்தக்கூடிய இந்த வகையான வயகராவில் மேலும் சில குறைபாடுகளும் உள்ளது. இந்த வயகரா மாத்திரைகளை கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்ளும்போதும், மது அருந்தும்போதும் பெண்கள் உட்கொள்ளக் கூடாது .

மாதவிடாய் காலம் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் போது நேர்மறையான, எதிர்மறையான எண்ணங்கள் தலைதூக்கும். அதேவேளையில் மாதவிடாய் நிற்கும்போது ஒருசில நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.
45 வயது முதல் 50 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் காலம் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அப்போது மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் நிறுத்தம், உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நேர்மறையான, எதிர்மறையான எண்ணங்களும் தலைதூக்கும். அதேவேளையில் மாதவிடாய் நிற்கும்போது ஒருசில நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.
* மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்கள் ஹார்மோன் சார்ந்த தலைவலியை சுமந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் மாதவிடாய் சுழற்சியின்போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சமநிலையற்று இருக்கும். அது தலைவலியை தூண்டிவிட்டுவிடும். 70 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் மாதவிடாயுடன் தொடர்புடைய ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்துவிடும். அதனால் தலைவலி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
* மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பு கால்வலி, தலைவலி, பசி, எரிச்சல் போன்ற உடல் ரீதியான மாற்றங்களை அனுபவிப்பார்கள். சிலர் எளிதில் உணர்ச்சி வசப்படவும் செய்வார்கள். ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு இதுபோன்ற அறிகுறிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்காது. அன்றாட வேலைகளை நிம்மதியுடன் செய்யத்தொடங்குவார்கள்.
* மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட நேரிடும். அந்த சமயத்தில் வழக்கமான வேலைகளை செய்ய முடியாமல் சிரமப்படுவார்கள். வெளி இடங்களுக்கு செல்ல முடியாமலும் அவதிப்படுவார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியாலும் நிறைய பேர் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். இத்தகைய துயரங்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் நிவாரணம் அளிக்கும்.
* மாதவிடாய் காலத்தில் உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் இருக்கும் என்பதால் சிலருக்கு கர்ப்பப்பை கட்டிகள் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் கர்ப்பப்பை பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் முடியும்.
* மாதவிடாய் நிற்கும்போது உடலில் பெரிய அளவில் மாற்றங்கள் நேரும். சிரமங்களையும் எதிர்கொள்ள நேரும்.
* மாதவிடாய் நின்றபிறகு உடல் ஆரோக்கியம் சீராக இருக்க சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். காபின் அதிகம் கலந்த பானங்களை பருகக்கூடாது.
* கொழுப்பு குறைவான உணவுகளை சாப்பிட வேண்டும். எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கு கால்சியம், வைட்டமின் டி சத்து கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.

சிகரெட் பழக்கம் ஆண்-பெண் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தினாலும், பெண்களுக்கு சற்று கூடுதலாக பாதிப்பை உண்டாக்குகிறது.
கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்
சிகரெட் புகைப்பதற்கு பெண்கள் பல காரணங்களை கூறினாலும், அது அவர்களின் கர்ப்பக்காலத்தில் பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. மேலும் எடை குறைவான குழந்தை, பிரசவத்தில் சிக்கல் என அடுக்கடுக்கான காரணங்களை, மருத்துவர்கள் அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள்.
மார்பக புற்றுநோய்
அதேபோல, புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
இதுபோக நுரையீரல் பாதிப்பு, சுவாச கோளாறு, வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

ஆறு மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தை, மற்ற குழந்தைகளைக் காட்டிலும் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டப்பட வேண்டும் என்றும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தாய்ப்பாலுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களும் தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி 20.6 விழுக்காடு குழந்தைகளுக்கு மட்டுமே ஆறு மாதங்கள் வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என்றும் ஓராண்டு வரைக்கும் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 14 விழுக்காடாகும் என்றும் 9 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தாய்ப்பால் அருந்துகின்றன என்றும் தெரிய வந்துள்ளது.
கிராமப்புற தாய்மார்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் அதிகமானோர் அலுவலக வேலைக்குச் செல்கின்றனர். அரசு வேலையை செய்பவர்களைப் போல் அல்லாமல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு மாதம் கிடைப்பதே அரிதாக உள்ளது. அதற்குப் பின்னர் அவர்கள் பணிக்குத் திரும்பியாகவேண்டும். இதுபோன்ற சூழ்நிலை நகர்ப்புற பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவதை கைவிட்டுவிட காரணமாகிறது.
ஆறு மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தை, மற்ற குழந்தைகளைக் காட்டிலும் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. தாய்ப்பாலில் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பலபடித்தான பாலிபூரிதமல்லாத கொழுப்பு அமிலங்கள் நீண்ட சங்கிலியாக காணப்படுகின்றன. இது ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். ஆகவே, தாய்ப்பாலருந்தும் குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர்.
தாய்ப்பால் ஊட்டுவதால், குழந்தை வீட்டில் மற்றவர்களைக் காட்டிலும் தாயிடம் அதிக நெருக்கமாக இருக்கும். வேறு யாருடனும் குழந்தைக்கு உடல்ரீதியான நெருக்கம் அதிக அளவில் இருப்பதில்லை. ஆகவே, தாய்ப்பால் அறிவுடன் அன்பையும் சேர்த்தே குழந்தைக்கு ஊட்டுகிறது.
பாலூட்டும் தாய், ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து வேளை குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அப்படி பாலூட்டவில்லையென்றால், பால் கட்டுவதால் அதிக வலி ஏற்படும்.
கடந்த 2015ம் ஆண்டு தமிழக அரசு பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் பேருந்து நிலையங்களில் தாய்ப்பாலூட்டுவதற்கு பிரத்யேக அறைகளை ஒதுக்கியது.
பல பேருந்து நிலையங்களில் இவை சரியாக பயன்படுத்தப்டாமல் உள்ளன. சில பேருந்து நிலையங்களில் இவை 12 மணி நேரம் மட்டுமே திறந்துள்ளன. பேருந்து நிலையங்களில் இரவும் பகலும் பேருந்துகள் வந்து சென்று கொண்டிருப்பதால் அறைகள் முழு நேரமும் திறந்திருந்தால்தான் பயனளிக்கும். பல பேருந்து நிலையங்களில் இந்த அறைகள் சரியாக பராமரிக்க்ப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அநேக தாய்மார்கள் இந்த அறைகளில் போதுமான மறைவிடங்கள் இல்லை என்றும் கண்காணிப்பு காமிரா போன்றவை இருக்கக்கூடும் என்று பல்வேறு தயக்கங்களினால் பயன்படுத்தாமல் உள்ளனர்.

மருத்துவமனைக்கே அதிக அளவில் பணம் செலவு செய்யாமல், இயற்கை முறையில் உங்களது உடலை பார்த்துக் கொண்டால் மிக விரைவில் தானாகவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தற்போதைய வாழ்க்கை முறையில் குழந்தையின்மைப் பிரச்சனை பலருக்கும் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக தற்போதைய வாழ்கை முறையும், உணவு பழக்கவழக்கம் முறையும் இருந்து வருகிறது. திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு வருடங்களிலேயே, குழந்தை இல்லையே என கவலைப்பட தேவை இல்லை.
அவ்வாறு இருந்தால், மருத்துவரிடம் சென்று இருவரும் தங்களது உடல் நிலையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. மனதில் எந்த கவலையும் வைத்துக் கொள்ளாமல் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது மிகச் சிறந்தது ஆகும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் கொஞ்ச நாட்களுக்கு இறைச்சியை தவிர்ப்பது நல்லதாகும். மீன், முட்டை, கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.
குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் ஒரு போதும் புகை, மது உள்ளிட்ட போதை பழக்க வழக்கங்களை ஒருபோதும் செய்யவே கூடாது. ஆண்கள் தினசரி இரண்டு வேளை உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்ததாகும். அதுவும் குறிப்பாக, அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் நபர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தானிய வகைகள் அதிகம் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை போன்றவற்றை தினமும் எடுத்துக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிக நேரம் உறங்குவது சிறந்ததாகும். மருத்துவமனைக்கே அதிக அளவில் பணம் செலவு செய்யாமல், இயற்கை முறையில் உங்களது உடலை பார்த்துக் கொண்டால் மிக விரைவில் தானாகவே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கர்ப்பிணிகளை கொரோனா வைரஸ் குறிவைப்பது ஏன்? என்பது குறித்து மதுரை சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள்.
தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. எனவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
500 பேருக்கு பரிசோதனை
மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள் அனைவருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது பிரசவ தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு பாதிப்பு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாத இறுதியில் இருந்து அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனை போன்று கொரோனா தொடர்பான பரிசோதனையும் செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை புறநகர் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுபோல் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் மற்ற நபர்களும் வெளியே சென்று வரும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய் தொற்று அவர்களை விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதாவது காலை முதல் மதியம் 12 மணி வரை மற்ற நோயாளிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே மற்ற நோயாளிகளிடமிருந்து கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க மதியத்திற்கு மேல் கர்ப்பிணிகளை சிகிச்சைக்கு வரவைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறையின் மூலம் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடைபிடிக்கும்பட்சத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
தனிமைப்படுத்தவும்
கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகளில் உள்ள மற்ற நபர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். அதுபோல் வீட்டிலுள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். குழந்தைகள் வெளியே சென்று விளையாடி விட்டு வரும்போதும் அதன்மூலம் நோய்த்தொற்று கர்ப்பிணிகளுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது. கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும் போது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியமான உணவுகள், பழங்களை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகளில் ஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரை தவறாமல் பார்வையிடுவதோடு உங்கள் மருந்துகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
குழந்தைகளில் ஆட்டிசத்தைத் தடுக்க கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரை தவறாமல் பார்வையிடுவதோடு உங்கள் மருந்துகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வது அவசியம். இது உங்கள் உடலிலும் குழந்தையின் உடலிலும் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் கண்காணிக்க உதவும். கர்ப்ப காலத்தில் நீங்கள் உருவாக்கும் பழக்கங்கள், இறுதியில் உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்பதால் இது ஒரு முக்கியமான நேரம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Harvard School of Public Health நடத்திய ஆய்வில் தாயின் மூன்றாவது மூன்று (Third trimester) மாதங்களில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உருவாகும் ஆபத்து இரட்டிப்பாகிறது. அவர் அந்த நேரத்தில் அதிக மாசுபாட்டால் பாதிக்கப்படுகிறார். ஆனால் இதற்கு காரணமான குறிப்பிட்ட மாசுபடுத்தி எது என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனவே மாசுபாட்டின் அளவு அதிகமாக இருக்கும்போது வீட்டுக்குள் இருப்பது அல்லது உட்புற பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுவது நிச்சயமாக உதவும்.
கர்ப்பிணிப் பெண் தினமும் 500 முதல் 800 மி.கி. வரை ஃபோலிக் அமிலத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை பரிந்துரைக்கிறது. கர்ப்ப காலத்தில் குறைந்த அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வது, குழந்தைக்கு ஆட்டிசம் உருவாக வழிவகுக்கும் என்கிறது ஆராய்ச்சி. எனவே மருத்துவர் பரிந்துரைப்படி சரியான அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு முதல் ஐந்து வருட இடைவெளியில் அடுத்த கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு ஆட்டிசம் உருவாகும் வாய்ப்பு மிகக் குறைவு. முதல் கர்ப்பத்திற்குப் பிறகு அடுத்த 12 மாதங்களுக்குள் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆட்டிசம் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகம். அதிக வயதில் கருத்தரிக்கும் பெற்றோரின் குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
கர்ப்ப காலத்தில் தாயின் உணவுமுறை, பழக்கவழக்கம், உடல்நிலை மற்றும் மனநிலை போன்ற அனைத்தும் சரியாக இருப்பது அவசியம். துரிதவகை உணவுகள், உடல் நலத்திற்கு தீங்கு உண்டாக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதும் குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் இவற்றை தவிர்ப்பது அவசியம்.

சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளியாகும் புகை, குழம்பு கொதிக்கும்போது வெளியாகும் நீராவி போன்றவை கண்களில் படுவதாலும் எரிச்சல் உண்டாகலாம்.
நாம் புழங்கும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது சமையலறை. அதை, ‘ஒரு குட்டி தொழிற்சாலை’ என்று சொல்லலாம். கொதிக்கும் கலன்கள், எண்ணெய்களின் பயன்பாடு, கத்தி, முள்கரண்டி போன்ற கூர்மையான பொருட்கள் என அங்கே உள்ளவற்றை சரியாக கையாளாவிட்டால் கண்கள் பாதிக்கப்படலாம். சமையலறை உபகரணங்களால் கண்ணில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தால், தண்ணீர்விட்டு கழுவக் கூடாது. சுத்தமான துணியால் முகத்தை லேசாக மூடி, உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பாத்திரங்களை சுத்தப்படுத்தும் பொருட்கள் கண்களில்பட்டால் உடனே கண்களைக் கழுவ வேண்டும். இதை முதலுதவியாக செய்துவிட்டு, பிறகு கண் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மிளகுத்தூள், மசாலாத்தூள் போன்ற காரம் அதிகம் உள்ள மசாலா பொடிகளை பாத்திரத்தில் கொட்டும்போது அவை காற்றில் பறந்து கண்களில் படுவதாலோ, அவற்றை பயன்படுத்திவிட்டு அதே கைகளால் கண்களை தொடுவதாலோ கண்களில் எரிச்சல் உண்டாகும்.
எனவே, இந்த பொடிகள் காற்றில் பறக்காத வண்ணம் பாத்திரத்தின் வாய்ப்பகுதிக்கு அருகே வைத்து கொட்ட வேண்டும். இந்த பொடிகளை பயன்படுத்தியதும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
தாளிக்கும்போதும், காய்கறிகளை வதக்கும்போதும் கண்களில் தெறிக்கலாம். எனவே, மிக நெருக்கமாக நிற்கக் கூடாது. அல்லது, நீளமான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. வெங்காயத்திலுள்ள ‘ஆலினேஸ்’ என்ற நொதி, நறுக்கும்போது சல்பினிக் அமிலமாக மாறுகிறது. எரிச்சல் கொடுக்கும் தன்மைகொண்ட இந்த அமிலம், காற்றில் ஆவியாகி கண்களில் படுவதால் கண்ணீர் வருகிறது. வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் போட்டுவைக்கலாம். அல்லது பத்து நிமிடங்களுக்கு ப்ரீஸரில் வைத்து நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படுவது குறையும்.
சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளியாகும் புகை, குழம்பு கொதிக்கும்போது வெளியாகும் நீராவி போன்றவை கண்களில் படுவதாலும் எரிச்சல் உண்டாகலாம். எனவே, புகை வெளியேறும்விதமாக ‘எக்சாஸ்ட் பேன்’ அமைக்க வேண்டும். அல்லது, சமையலறை காற்றோட்டமாக இருக்குமாறு ஜன்னல்கள் இருக்க வேண்டும். கண்களில் அடிபட்டாலோ அல்லது கண்கள் சிவந்து போனாலோ சிலர் மருந்துக்கடையில் ஏதாவது சொட்டு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அது ஆபத்து.
கண்களில் தீக்காயம்பட்டால் மஞ்சள்தூள், களிம்பு, பேனா மை போன்றவற்றை போடக் கூடாது. அவற்றை பயன்படுத்தினால் காயத்தின் தீவிரத்தை சரியாக தெரிந்துகொள்ள முடியாது. மேலும் அவற்றை சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும். தொற்றும் ஏற்படக்கூடும்.
கண்களில் எண்ணெய் விடுவது, தாய்ப்பால் விடுவது போன்ற சுய மருத்துவத்தையும் செய்யக் கூடாது. முக்கியமாக கண்களில் வலி, எரிச்சல், சிவந்துபோவது, கண்களை திறந்து வைத்திருக்க முடியாதது, தொடர்ச்சியான உறுத்தல், இமைகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் டாக்டரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இளநீர் குடித்தால், சில பெண்களுக்கு அது சூட்டை கிளப்பிவிடும். இதனால் பலருக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா என்ற சந்தேகம் மனதில் எழும்.
இளநீர் மிகவும் குளிர்ச்சியானது. இதனை கர்ப்ப காலத்தில் குடித்தால், சில பெண்களுக்கு அது சூட்டை கிளப்பிவிடும். இதனால் பலருக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா என்ற சந்தேகம் மனதில் எழும். ஆனால் இளநீர் கர்ப்பிணிகளுக்கான மிகவும் அற்புதமான பானம்.
ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. எப்போதுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை மறவாதீர்கள். இளநீர் கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.
இளநீரில் கொழுப்புக்கள் இல்லை மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே ஏற்கனவே உடல் பருமனுடன் இருக்கும் கர்ப்பிணிகள் இளநீரைக் குடித்தால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இளநீர் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை தான் பாதுகாக்கும்.
கர்ப்ப காலத்தில் உடலில் எலக்டோலைட்டுகளை சமநிலையுடன் வைத்து, குமட்டல், சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கினால் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க உதவும். இளநீரில் உள்ள முக்கிய எலக்ட்ரோலைட்டுகள் தசைகளின் செயல்பாட்டிற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும் உதவும்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இளநீரில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இப்பிரச்சனைகளைத் தடுக்கும்.
இளநீரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இது கர்ப்ப காலத்தில் பெண்களின் நோயெதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்க உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. இது வைரஸ்களை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்த மோனோலாரினை உற்பத்தி செய்து, நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
இளநீரில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் இளநீரைக் குடித்தால், கர்ப்ப கால சர்க்கரை நோய் வரும் அபாயம் குறையும்.
இளநீர் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வைப் போக்கி, உடலில் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இளநீர் சரும செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை ஊக்குவித்து, ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருவதைத் தடுக்கும்.
இளநீரை கர்ப்பிணிகள் குடித்தால், பனிக்குட நீரின் அளவு அதிகரித்து, கருப்பையில் வளரும் கருவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக கடைசி மூன்று மாத காலத்தில் பெண்கள் குடித்தால், இந்த நன்மை கிடைக்கும்.