என் மலர்
பெண்கள் உலகம்
- செம்பருத்தி எண்ணெயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
- செம்பருத்தி எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் இளநரை மாறி மீண்டும் கருமையாக மாறிவிடும்.
செம்பருத்தி மருத்துவ குணம் நிறைந்தது. இதன் மலர் மற்றும் இலை இரண்டுமே தலைமுடிக்கு பல அற்புதங்களைச் செய்யும். தலைமுடியின் வளர்ச்சியில் இருந்து இளநரையைத் தடுப்பது வரை செம்பருத்தியை பயன்படுத்தலாம்.

முடியை வலிமையாக்க:
செம்பருத்தி எண்ணெயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் பாஸ்பரம் சத்தும் நிறைந்து இருப்பதால் இவை இரண்டும் சேர்ந்து முடியின் வேர்க்களை உறுதியாக்கும்.
அதிகமாக வறட்சியடைந்து frizzy ஆக இருக்கும் முடியை மாற்றி வறட்சியைக் குறைக்கும்.
முடி உதிர்வை தடுக்க:
முடியின் வேர்க்களுக்குப் போதிய அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கததால் முடியின் வேர்க்களில் பலத்தை இழக்கும்.
இதன் விளைவாக தலைமுடி உதிர்தல் பிரச்சினை அதிகரிக்கும். அதற்கு செம்பருத்தி எண்ணெயை பயன்படுத்தினால் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் முடி உதிர்வை தடுக்கும்.

இளநரையை மாற்ற:
இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் இளம் வயதிலேயே இளநரை பிரச்சினை வந்துவிடுகிறது.
ஒருமுறை வெள்ளை முடி வந்துவிட்டால் அதை மாற்றவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் செம்பருத்தி எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் இளநரை மாறி மீண்டும் கருமையாக மாறிவிடும்.
முடி பளபளக்க:
தொடர்ச்சியாக செம்பருத்தி எண்ணையை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் அது மிகச்சிறந்த கண்டிஷனராக மாறி இயற்கையாகவே தலைமுடியை வறட்சி இல்லாமல் பளபளவென்று மாற்றும் ஆற்றல் கொண்டது.
செம்பருத்தி எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடிக்கு ஊட்டச்சத்தைக் கொடுத்து சில்க்கியாகவும் மாறும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க:
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆயில் மசாஜ் மிகச்சிறந்த வழி.
அதிலும் குறிப்பாக செம்பருத்தி ஆயிலை லேசாக சூடு படுத்தி வெதுவெதுப்பான நிலையில் தலையின் வேர்க்களில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
இந்த செம்பருத்திலுள்ள ஆற்றல் வாய்ந்த அமினோ அமிலங்கள் வேர்க்களை வலுவாக்கி முடியின் வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும்.
எந்த நேரத்தில் பயன்படுத்துவது சிறந்தது:
தலைக்கு எண்ணெய் தேய்த்தாலே முடி வளர்ந்து விடும் என்று அர்த்தமல்ல. முடிக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்துகிறோம்? எந்த நேரத்தில் பயன்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம் விஷயம்.
இந்த செம்பருத்தி எண்ணையை இரவு நேரத்தில் முடியில் தேய்த்து, மசாஜ் செய்து கொண்டு படுப்பது நல்லது. காலையில் தலைக்கு வழக்கம் போல ஷாம்பு பயன்படுத்திக் குளித்து விடலாம்.
இரவில் அப்ளை செய்ய முடியாதவர்கள் குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அப்ளை செய்து விட்டு பிறகு வழக்கம் போல ஷாம்பு பயன்படுத்திக் கொள்ளலாம்.
தினமும் இரவு இந்த எண்ணெயை தேய்த்து, மசாஜ் செய்து வந்தால் மிக வேகமாக உங்களால் பலன்களை பார்க்க முடியும்.
- கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை தடுக்கும்.
சினைப்பைகளையும், கர்ப்பப்பையையும் இணைக்கும் பாலமாக சினைப்பாதைக் குழாய்கள் இருக்கின்றன. கருத்தரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சினைப்பாதைக்குழாய் அடைப்பின் விளைவாக, சினைப்பாதையில் கருவுறுதல் நடைபெறாது. அல்லது கருவுறுதல் நடைபெற்றாலும் (குழாய் அடைப்பின் காரணமாக), கருவுற்ற கருமுட்டை கர்ப்பப்பைக்கு செல்வதை, சினைப்பாதைக் குழாயில் உள்ள அடைப்பு தடுக்கும். இதனால் சினைப்பாதைக் குழாயில் இடம்மாறிய கர்ப்பம் ஏற்படும்.

சினைப்பாதைக் குழாய் அடைப்பின் அறிகுறிகள், அடைப்பின் காரணத்தைப் பொறுத்து இருக்கும். சினைப்பாதைக் குழாயில் திரவம் நிரம்பி இருந்தால் வயிற்றின் ஒரு பக்கத்தில் லேசான வலி ஏற்படலாம். சில பெண்களுக்கு அவ்வப்போதோ அல்லது மாதவிடாயின் போதோ இடுப்பு பகுதியில் வலி ஏற்படலாம்.
அடைபட்ட சினைப்பாதைக் குழாய்களை கண்டறிய பயன்படுத்தப்படும் பொதுவான சோதனை ஹிஸ்டெரோசால்பின்கோக்ராம் எனப்படும். இதில் ஒரு பாதுகாப்பான சாயம் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு, சினைப்பாதைக் குழாய்களிலுள்ள அடைப்புகள் கண்டுபிடிக்கப்படும்.

சித்த மருத்துவத்தில் நோய்த்தொற்றுக்குரிய சிகிச்சைகள் மற்றும் சதையடைப்புக்குரிய சிகிச்சைகள் கொடுக்கப்படும். இதை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோய்த்தொற்றுக்கு சேராங்கொட்டை நெய் 5 மில்லி லிட்டர் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும். சதையடைப்பு நீங்க மாவிலிங்கப்பட்டைச் சூரணம் 1 கிராம், வெடியுப்புச் சுண்ணம் 200 மில்லிகிராம், நண்டுக்கல் பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் வீதம் மூன்று வேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும். இதை மருத்துவர் ஆலோசனையின் பேரில் உண்பதே நல்லது.
- உங்களிடம் கேள்விகள் முன் வைக்கப்படும்போது அதற்கு எளிமையாக பதிலளியுங்கள்.
- மீட்டிங்கில் இரண்டு விதமான நபர்கள் இருப்பார்கள்.
அலுவலகத்திலோ அல்லது அலுவலக வேலையாக வெளியிடங்களிலோ, சந்திப்பு (மீட்டிங்) என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. இது போன்ற 'மீட்டிங்'குகளில் பெரிய சவாலே, நாம் எப்படி பேசுவது, எதை முதலில் பேசுவது, அவசியமான நேரங்களில் குறுக்கீடு செய்யலாமா போன்ற பல கேள்விகள்தான் மனதில் ஓடும். அதை தெளிவுபடுத்துகிறது இந்த கட்டுரை தொகுப்பு.
* பேசு பொருள் என்ன?
பல விஷயங்களைப் பற்றி பேச வேண்டும் என்ற அழுத்தம் முக்கியமான மீட்டிங்குகளில் இடம் பெறும். ஆனால் பதற்றத்தில் எதை முதலில் பேசுவது என தெரியாமல் எதாவது ஒரு விஷயத்தில் ஆரம்பித்து எங்கேயோ கொண்டுபோய் முடித்துவிடுவோம். இதனை சமாளிக்க, மீட்டிங் ஹாலுக்குள் செல்லும் முன் பேச வேண்டிய விஷயங்களை ஒரு சிறிய தாளில் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு முறை வரிசைப்படுத்துங்கள். இதைத்தான், இந்த வரிசையில்தான் பேசப்போகிறேன் என்ற நம்பிக்கையோடு பேசுங்கள். மொத்த மீட்டிங் நேரத்தில் உங்களுடைய பேச்சு 10 சதவிகித நேரம்தான் என்பதில் உறுதியாக இருங்கள். அதற்கு மேல் நீங்கள் பேசினால் உங்கள் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தாது. உங்களிடம் கேள்விகள் முன் வைக்கப்படும்போது அதற்கு எளிமையாக பதிலளியுங்கள்.

* 80:20 விதியை கடைப்பிடியுங்கள்!
ஒவ்வொரு மீட்டிங்கிலும் மேலாண்மை தத்துவமான 80:20 விதியைக் கடைப்பிடியுங்கள். ஒரு முக்கியமான மீட்டிங்கில் நீங்கள் பேசும் 20 சதவிகிதக் கருத்துக்கள் 80 சதவிகிதம் பேருக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மொத்த மீட்டிங்கும் உங்களது 20 சதவிகிதப் பேச்சை மையப்படுத்தியே இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். குறைவாகப் பேசி உங்கள் கருத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்க செய்யுங்கள்.
* அதிகம் கேளுங்கள்!
மீட்டிங்கில் இரண்டு விதமான நபர்கள் இருப்பார்கள். ஒருவர் உடலளவில் மீட்டிங்கில் இருப்பவர், இன்னொருவர் முழு கவனத்தோடு இருப்பவர். நீங்கள் இரண்டாவது நபராக இருங்கள். உங்களுக்கு தேவைப்படாத விஷயம் என்றாலும் மற்றவர் சொல்லும் விஷயத்தைக் கேளுங்கள். அவர்களது பேச்சில் உங்களுக்கான ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். மேலும் மற்ற நபர்களும் உங்களைக் கவனிக்க இது உதவும்.
* குறுக்கீடு செய்யலாமா?
ஒருவர் பேசும்போது குறுக்கிட்டுப் பேசுவதை தவிருங்கள். ஆனால் ஒரு விஷயம் தவறான கருத்தாக முன் வைக்கப்படுகிறது என்றால், மிகவும் மரியாதையாக அதில் குறுக்கிட்டு அதனைத் தவறானதாகக் குறிப்பிடாமல், அதற்கான சரியான விளக்கத்தை அளிக்க முயற்சி செய்யுங்கள். வேறு யாராவது இதனைச் சுட்டிக்காட்டுவார்கள் என இருப்பதை விட தானாக முன் வந்து சுட்டிக் காட்டுவதையே நிர்வாகம் விரும்பும்.
* செல்போன் வேண்டாம்!
உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்கள் பேசப்படும்போது கான்பிரன்ஸ் ஹாலில் செல்போன் பயன்படுத்துவது, கேம் விளையாடுவது போன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள். அது சில முக்கியமான பிரசன்டேஷன்களின் போது இருட்டாக உள்ள அறையில் தனியாகத் தெரியும். மேலும் உங்கள் மீது உள்ள நல்ல எண்ணம் பாதிக்க வாய்ப்புள்ளது. அதனால் பொதுவாக மீட்டிங்கில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்தால் பெரும்பாலான மீட்டிங்குகள் உங்கள் வசமே இருக்கும்.
- கருக்குழாயில் கரு தங்கும் முறைக்கு எக்டோபிக் கர்ப்பம் என்று பெயர்.
- அரிதாக கருப்பை வாய் அடி வயிறு அல்லது கருப்பையிலும் வளரலாம்.
கருக்குழாயில் கரு தங்கும் முறை எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கர்ப்பத்தின் போது கருவுற்ற முட்டை கருப்பையுடன் இணைக்காது.
சில நேரங்களில் கருவானது ஃபெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாய் பாதையில் நிலைபெற்று வளரத்தொடங்குகிறது இதை கருக்குழாய் கருத்தரிப்பு என்று சொல்லப்படும்.
சில நேரங்களில் இன்னும் அரிதாக கருப்பை வாய் அடி வயிறு அல்லது கருப்பையிலும் வளரலாம். இது கவலைக்குரிய நிலை என்பதோடு வலி, ரத்தப் போக்கு, வெடிப்புகளை உண்டாக்கி விடக்கூடும் என்பதால் இந்த கருக்குழாயில் குழந்தை தங்கும் ஆபத்து குறித்து முழுமையாக அறிவது அவசியம்.

காரணங்கள்:
* முந்தைய கர்ப்பம் எக்டோபிக் கர்ப்பமாக இருந்தால்
* தொற்று அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஃபெலோப்பியன் குழாய்களின் வீக்கம் மற்றும் வடு
* ஹார்மோன் காரணிகள்
* மரபணு அசாதாரணங்கள்
* பிறப்பு குறைபாடுகள்
* ஃபலோபியன் குழாய்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் வடிவம் மற்றும் நிலையை பாதிக்கும்
* புகைபிடிப்பது
அறிகுறிகள்
* இடுப்பு, தோள்பட்டை அல்லது கழுத்து பகுதியில் கூர்மையான வலி
* அடிவயிற்றின் பக்கத்தில் ஏற்படும் கடுமையான தாங்க முடியாத வலி
* லேசானது முதல் கனமான யோனி போக்கு
* மயக்கமான உணர்வு
* மலக்குடல் அழுத்தம் உணர்வு
* கருவுற்று இருக்கும் போது இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை தாமதிக்காமல் தொடர்பு கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சை அவசியம்.
இந்த எக்டோபிக் கரு குறித்த சந்தேகம் கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடல் பரிசோதனை மூலம் எக்டோபிக் கர்ப்பத்தை கண்டறிய முடியாது.

டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மூலம் யோனிக்குள் சிறிய கருவி செருகப்படும். அப்போது மருத்துவர் கருப்பையில் கரு உள்ளதா என்பதை பார்க்க முடியும்.
உங்கள் ஹெச். சி. ஜி. மற்றும் புரோஜெஸ்ட்ரான் அளவை கண்டறிய மருத்துவர் ரத்த பரிசோதனையை பயன்படுத்தலாம். இது கர்ப்பகாலத்தில் இருக்கும் ஹார்மோன்கள் ஆகும்.
இந்த ஹார்மோன் அளவு குறைய ஆரம்பித்தால் அல்லது ஒரு சில நாட்களில் ஒரே மாதிரியாக இருந்தால் அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கர்ப்பகால சாக்கு அதாவது அம்னோடிக் திரவம் இல்லையென்றால் அது கருக்குழாயில் கரு தங்கியதற்கான காரணம் ஆகும்.

கருக்குழாய் கரு தங்கினால் உண்டாகும் ஆபத்துகள்?
கருமுட்டை விந்தணுக்களுடன் இணைந்து கருக்குழாயில் தங்கி பிறகு அதன் வழியாக பயணித்து கருப்பைக்குள் உள்வைப்பு இருக்க வேண்டும். அப்போது தான் கரு வளர்ச்சி சீராக இருக்கும்.
கரு ஃபலோபியன் குழாய் வழியாக மட்டுமே வளர்ந்தால் கரு வளராது. அதனோடு கருக்குழாயும் வெடிக்க செய்யலாம்.
மேலும் தீவிர நிகழ்வுகளில் உடைந்து கடுமையான உள் ரத்தப்போக்கு ஏற்படலாம். சற்று அலட்சியம் செய்தாலும் அவை உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
இந்த கருவானது தாய்க்கு பாதுகாப்பானது அல்ல. மெலும் கருவை கர்ப்பகாலம் முழுவதும் வளர்க்க முடியாது. தாயின் உடனடி ஆரோக்கியம் காக்க உடனடியாக கருவை அகற்றுவது அவசியம்.
இந்த சிகிச்சை முறையில் எக்டோபிக் கர்ப்பம் இருக்கும் இடம் மற்றும் அதன் வளர்ச்சியை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.
சில நேரங்களில் கருக்குழாயில் கரு வளர்ச்சியை பொறுத்து அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அறுவைசிகிச்சை நிபுணர்கள் கருவை அகற்றி ஃபலோபியன் குழாய் சேதத்தை சரி செய்ய பரிந்துரைப்பார்கள். இது இலேபரோடமி என்று அழைக்கப்படுகிறது.
- சினைப்பை சீராக இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
- சிறிய அறுவை சிகிச்சை மூலமாக கர்ப்பப்பையை சீராக்க முடியும்.
பெற்றோர் முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
அந்த பெண் குழந்தைக்கு உடல் வளர்ச்சி, மார்பக வளர்ச்சி, 14 வயதிற்கான முடி வளர்ச்சி அனைத்தும் சீராக இருந்தால் ஒரு வருட காலம் பருவமடைவதற்கு காத்திருக்கலாம். கண்டிப்பாக இந்த பெண் குழந்தை பருவமடைவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கர்ப்பப்பை, சினைப்பை இவை அனைத்தும் சீராக இருந்தால் மட்டுமே இந்த வளர்ச்சிகள் சீராக இருக்கும். வளர்ச்சி சீராக வருவதற்கு சில மருந்துகள், மாத்திரைகள் கொடுத்தால் போதும். தேவைப்பட்டால் இந்த பெண் குழந்தைகளுக்கு ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து கர்ப்பப்பை, சினைப்பை சீராக இருக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டும்.

பருவமடையாவிட்டால் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?
பெண் குழந்தைக்கு முதலில் சில ரத்த பரிசோதனைகள், ஹார்மோன் பரிசோதனைகள் செய்ய வேண்டும். குறிப்பாக தைராய்டு ஹார்மோன் பரிசோதனைகள் செய்ய வேண்டும். அடுத்ததாக பெல்விக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும்.
இந்த ஸ்கேனில் பெண் குழந்தையின் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை வளர்ச்சியை பரிசோதிக்க வேண்டும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பார்க்கும் போது பெண் குழந்தைக்கு கர்ப்பப்பை இல்லாத நிலை இருந்தால் அதை எம்.கே.எச். சின்ட்ரோம் என்று மருத்துவர்கள் கூறுவர். கர்ப்பப்பை இருந்தும் சீரான வளர்ச்சி இல்லாவிட்டால் அதனை முல்லேரியன் திஸ் ஜெனசிஸ் என்று கூறுவர்.

சிகிச்சை முறைகள்:
கர்ப்பப்பை மேல் பகுதி வளர்ந்து கீழ்ப்பகுதி வளராமல் இருந்தால் இதனை சரி செய்வதற்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை முறை மூலமாக இதன் அளவு, கர்ப்ப வாய் சீராக இருக்கிறதா என்பதை பரிசோதித்து, இந்த கர்ப்ப வாய் பெண்ணின் வெஜைனாவுடன் இணைந்து இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலமாக தெரிந்து கொண்டு, சிறிய அறுவை சிகிச்சை மூலமாக கர்ப்பப்பையை சீராக்க முடியும்.
சில நேரங்களில் கர்ப்பப்பை வளர்ச்சி சிறிதாக இருந்து கர்ப்ப வாயோடு இணையும் பகுதி வளராமல் இருந்தால் இதனை சரி செய்வது முடியாத காரியமாக இருக்கும். சில பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை இல்லாத நிலையில் சினைப்பை மட்டும் நல்ல வளர்ச்சியோடு இருக்கும். அதனால் இவை அனைத்துமே குழந்தைகளுடைய மாதவிலக்கு வராததற்கான காரணங்கள் ஆகும்.

தீர்வுகள் என்னென்ன?
கர்ப்பப்பை இல்லாத பெண்களுக்கு திருமணமான பின்பு வாடகை தாய் மூலமாக சினை முட்டைகளை வைத்து குழந்தை பெற முடியும். கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை சில நாடுகளில் நடைபெறுகிறது. இதற்கான சக்சஸ் ரேட் ரொம்ப குறைவு. இதற்கான செலவுகள் மிக மிக அதிகம்.
ஒரு சாதாரண பெண்ணிடமிருந்து கர்ப்பப்பையை தானமாக பெற்று அதனை இன்னொரு பெண்ணின் கர்ப்பப்பை இருக்கும் இடத்தில் வைத்து மாற்று சிகிச்சை செய்கிறார்கள். இந்த சிகிச்சை முறை மூலமாக உலக அளவில் ஐந்து ஆறு குழந்தைகள் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு மூலமாக பிறந்துள்ளன.
2015-ம் ஆண்டு முதன் முதலில் மேட்ஸ் பிராண்ட்ஸ்டோர்ம் என்ற சுவீடன் நாட்டு விஞ்ஞானி மற்றும் மகப்பேறு சிகிச்சை நிபுணர்களின் குடும்பம் இதனை சாதித்தது. கிட்டத்தட்ட 28 கர்ப்பப்பையை டிரான்ஸ்பிளான்ட் செய்த பின் ஒரு குழந்தை பேறு கிடைத்தது.
இது இயற்கைக்கு ஏற்ற விஷயமாக கருதப்படுவதில்லை. எனவே எளிமை யான வழிமுறை என்றால் செயற்கை கருத்தரிப்பு முறை தான். வாடகைத்தாய் கர்ப்பப்பையில் தங்களுடைய ஜெனிடிக் குழந்தைபேறு பெறுவதற்கான வாய்ப்புகளை ஒரு பெண் பெறுகிறாள்.
அடுத்ததாக சில பெண்களுக்கு சினை முட்டைகள் இல்லாததால் கர்ப்பப்பை வளர்ச்சி அடையாத நிலையில் காணப்படும். இவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சிக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து ஆரோக்கியமான கர்ப்பப்பையை வளர வைக்க முடியும்.
- மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும்.
- புற்றுநோயிலும் அதிக ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது.
மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். அப்போது சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். ரத்தப்போக்கு அளவு நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் காலம் 7 நாட்களுக்கு அதிகமாகவும், ரத்தப்போக்கு அதிகரித்தும் காணப்படுவதை 'அதிகரித்த ரத்தப்போக்கு' அல்லது 'பெரும்பாடு' (மெனோரேஜியா) என்பார்கள். இதற்கான காரணங்கள் வருமாறு:-

1) ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஹார்மோன்களுக்கு இடையில் உள்ள சமநிலை மாறுபாடு,
2) கருப்பை உள்ளுறுப்புகளான சினைப்பாதை, சினைப்பை இவற்றில் கருப்பை புறணியான எண்டோமெட்ரியம் வளருதல், எண்டோமெட்ரியம் கடினமடைதல்,
3) கருப்பையில் வளரும் சாதாரண தசைக்கட்டிகள், சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் மற்றும் சாக்கலேட் கட்டிகள்,
4) கருப்பை புறணியில் வளரும் பாலிப்ஸ், அடினோமயோசிஸ், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களான காப்பர் டி இவை குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது.
இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது. அதிக ரத்த இழப்பின் காரணமாக உடல் பலவீனம், சோர்வு, மூச்சு விட சிரமம் போன்ற உணர்வு வரலாம். எனவே, என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து ஆலோசனை பெறுவது நல்லது.

சித்த மருத்துவம்
இந்த பிரச்சனைகளுக்கு கீழ்க்கண்ட சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்து பயன்பெறலாம்.
1) திரிபலா சூரணம் 1 கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கி., படிகார பற்பம் 100 மி.கி. அளவு காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.
2) கொம்பரக்கு சூரணம் 1 கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்.
3) திரிபலா சூரணம் 1 கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம் 200 மி.கி. அளவு எடுத்து தேனில் காலை, மாலை இரு வேளை ஏழு நாட்கள் உண்ணவும்.
4) வாழைப்பூ வடகம் 1-2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.
5) பூங்காவி செந்தூரம் 200 மி.கி. காலை, இரவு இருவேளை சாப்பிடலாம்.
6) இம்பூறல் மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.
7) கரிசாலை லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.
உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை, முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் இவைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
- ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கும் பெண்கள் எளிதாகவே இதை கண்டறிந்துவிட முடியும்.
- கர்ப்பப்பை இறக்கத்தை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியும் போது சிகிச்சை பெறுவதும் எளிதாக இருக்கும்.
கர்ப்பப்பை இயல்பாகவே நான்கு பக்கமும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதசைகளால் சூழப்பட்டவை. அதனால் தான் ஓர் அங்குல வயிற்றில் குழந்தை வளரும் போது அதற்கேற்ப தசைகள் விரிவடைவதும், பிறகு தனது இடத்துக்குள் சுருங்கி கொள்வதுமாய் இருக்கிறது.
இவை இருக்குமிடத்தில் இருந்து தள்ளி கீழிறிங்கி வருவது தான் கருப்பை இறக்கம் என்று அழைக்கப்படுகிறது. இவை எல்லோருக்கும் வருவதில்லை. 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கம் செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அதிக குழந்தைகள், பிரசவத்துக்கு பிறகு உடனடியாக அதிக எடைகளை தூக்குவது. அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது. உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து கர்ப்பப்பை இறக்கம் உண்டாகிறது.கர்ப்பப்பை இறக்கத்தை ஒரு சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும் போது தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது. அப்போது கர்ப்பப்பை அருகில் இருக்கும் குடல், சிறுநீரகப்பை. மலக்குடல் மூன்றின் அருகில் இருப்பதால் இவை அழுத்தும் போது சிறுநீர் பிரச்சனை உண்டாகிறது.
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் கழிக்கும் உணர்வு இருப்பது, சிறுநீர் கழிக்கும் போது வலி உண்டாவது. வேகமாக சிரிக்கும் போதும், தும்மும் போதும் சிறுநீர் வெளியேறுவது, மலச்சிக்கல் ஏற்படுவது போன்றவை கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக பெண்கள் நினைக்கலாம்.
கர்ப்பப்பை இறங்கும் போது அவை சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை சேர்த்து இழுப்பதால் இடுப்பில் வலி உணர்வு அதிகரிக்கும். இயல்பாக வரும் இடுப்புவலியை போன்று இல்லாமல் இடுப்பில் சற்று அழுத்தமாக கைவைத்து நின்றாலே வலி உணர்வு குறையும். பிறகு மீண்டும் வலி உண்டாகக்கூடும்.
ஒவ்வொரு முறை இடுப்பு வலி உண்டாகும் போதெல்லாம் இடுப்பில் கை வைத்து ஊன்றி இருந்தால் வலி குறைவாக இருக்கும். சாதாரனமாக இடுப்பு வலி இருக்கும் போது இப்படி இருக்காது. தொடர்ந்து வலி இருக்கும் போது உங்கள் கைகளை ஊன்றி வைத்து பாருங்கள். ஒரு வேளை கர்ப்பப்பை இறக்கமாக இருந்தால் வித்தியாசத்தை நன்றாக உணர்வீர்கள்.

வெள்ளைப்படுதல் இயல்பானது. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு முந்தைய நாட்களில் வெள்ளைப்போக்கு இருக்கும். சிலருக்கு அதற்கு பின்பு இருக்கும் இவை சாதாரணமானது தான் ஆனால் எல்லா நேரங்களிலும் எப்போதும் வெள்ளைபோக்கு இருந்தால் அது கர்ப்பப்பை இறக்க அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
வெள்ளைபோக்கு துர்நாற்றத்துடன், வெளிறிய நிறத்தில் இருப்பது கருப்பை பிரச்சனைகளை குறிக்கும்.ஆனால் கர்ப்ப்பை இறக்கத்தால் உண்டாகும் வெள்ளைபோக்கு சாதாரணமாக இருக்கும். தொடர்ந்து இருக்கும் என்பதால் இதை பல பெண்களும் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.
பொதுவாக பெண்கள் குழந்தைபேறுக்கு பிறகு நடுத்தர வயதுக்கு மேல் தான் கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள். ஆனால் பலரும் இது மெனோபாஸ் காலத்தில் பெண் உறுப்பில் உண்டாகும் வறட்சி என்று நினைக்கிறார்கள்.
சிலருக்கு கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறியாக பெண் உறுப்பில் உலர்வுத்தன்மை, அந்த இடத்தில் அரிப்பு, சொரிந்து புண் இவை தொடர்ந்து ஏற்படும்.
35 வயதுக்கு மேல் மெனோபாஸ் வருவது அதிகரித்துள்ளது என்றாலும் கூட உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியும் சீராக இருந்தால் அது கர்ப்பபை இறக்கமாக இருக்க அதிக வாய்ப்புண்டு.
உடலுறவு கொள்ளும் போது யோனி பகுதி அருகில் கர்ப்பப்பை வாய் இறங்கியிருந்தால் அவை அதிக அசெளகரியத்தை உண்டு செய்யும். உடலுறவில் திருப்தியின்மை, உறவு கொள்வதில் சிக்கல், உறவுக்கு பின் ரத்தபோக்கு போன்ற அறிகுறிகள் கூட இதன் காரணமாக இருக்கலாம். இதை தொடர்ந்து தான் படிப்படியாக சிறுநீர்ப்பை, மலச்சிக்கல் பிரச்சனை உருவாகக்கூடும்.

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கும் பெண்கள் எளிதாகவே இதை கண்டறிந்துவிட முடியும். திடீரென வரும் தும்மல், தொடர்ச்சியான இருமல் போன்ற காலகட்டங்களில் வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு போன்று கருப்பை இறங்குவது போன்ற உணர்வு ஏற்படும். சதைப்பகுதி கீழ்ப்பாகத்தில் உரசுவது போன்று இருக்கும். வேகமாக நடக்கும் போது சிரமமாக இருக்கும்.
கர்ப்பப்பை இறக்கத்தை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியும் போது சிகிச்சை பெறுவதும் எளிதாக இருக்கும். மேற்கண்ட இந்த அறிகுறிகள் எல்லாமே கர்ப்பப்பை இறக்கத்துக்கான அறிகுறிகள் என்று அச்சப்பட வேண்டாம். அதே நேரம் அலட்சியப்படுத்தவும் வேண்டாம். ஏனெனில் கர்ப்பப்பை இலேசாக இறக்கம் கொள்ளும் போது இந்த அறிகுறிகளையும் தீவிரமாகவெளிப்படுத்தாது.
40 வயதுக்கு பிறகு மாதம் ஒருமுறை கர்ப்பபை குறித்த முழுபரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.
- கருமுட்டை வளர்ச்சிக்கு சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.
- மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள்.
கருத்தரித்தலில் பெண்களுக்கு முக்கியமானது கருமுட்டை, அதே போன்று ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் முக்கியமானது. இவற்றில் உண்டாகும் குறைபாடுகள் கருத்தரித்தலில் சிக்கலை உண்டு செய்துவிடும்.
ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே மூன்று லட்சம் கருமுட்டைகளை கொண்டு தான் பிறக்கின்றன. குழந்தை வளரும் போது இந்த கருமுட்டையின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.

பெண் குழந்தை வளர்ந்து பூப்படையும் போது ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து கர்ப்பபையை சென்றடையும். பிறகு இவை விந்துவுடன் இணைந்து கருத்தரித்தலை உண்டு செய்யும்.
கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணையாத நிலையில் கர்ப்பப்பை சுவருடன் இணைந்து ரத்தமாக வெளியேறும். இந்த உதிரபோக்கு தான் மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.
அதனால் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருமுட்டை என்பது மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது.
கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியம் என்பது உணவிலும் அடங்கியிருக்கிறது. முழு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் தரமான விந்தணுக்கள் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கும்.
கருவுற விரும்பும் தம்பதியர்கள் மருத்துவரை அணுகும் போது கருமுட்டை வளர்ச்சி மற்றும் விந்தணுக்கள் குறைபாடு பற்றி கூறியிருந்தால் நீங்கள் உங்கள் உணவு திட்டத்தை மாற்றுங்கள்.
அதில் முதலாவதாக புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிருங்கள். இருவரும் மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள். தூக்கம் போதுமான அளவு இருக்கட்டும்.

விந்தணுக்கள் அதிகரிக்க மாத்திரைகள் டாக்டர் கொடுத்திருந்தாலும் வீட்டில் உணவு முறையில் ஆரோக்கியத்தை கொண்டு வரலாம். அதில் முதலாவது பச்சைகாய்கறிகள். குறிப்பாக கீரைகள். கீரையில் முருங்கைக்கீரை கொடுக்கலாம்.
பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் போன்றவை சேர்க்க வேண்டும். பழங்காளில் ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.
அதே போன்று காய்கறிகள், பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள் எடுத்துகொள்ள வேண்டும்.
பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் இந்த உணவுகள் உதவும் என்றாலும் அதோடு பெண்கள் சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.

வாழைப்பழம், ஆரஞ்சு, அவகேடோ என இன்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பழங்களை எடுத்துகொள்ள வேண்டும்.
மேலும் நல்ல ஊட்டச்சத்து என்பது நீங்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்க வேண்டுமென்பது அல்ல. சரியான உணவுகளை எடுத்துகொள்வது. குழந்தையை பெற முயற்சிக்கும் போது புரதம், கார்போஹைட்ரேட், ஆரொக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சீரான உட்கொள்ளலுடன் ஆரோக்கியமான ஊட்டச்சத்து அவசியம்.
- 11 வயதிலேயே பருவமடைவது தற்போது சாதாரண விஷயம்.
- ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.
பெண் குழந்தைகள் பருவ மடைதல் மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம். நாகரீகம் மற்றும் மருத்துவம் முன்னேற்றம் அடைந்துள்ள இப்போதைய காலகட்டத்தில் 92 முதல் 94 சதவீத பெண் குழந்தைகள் 12 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.
மேலும் சில பெண் குழந்தைகள் 11 வயதிலேயே பருவமடைவதும் தற்போது மிகவும் சாதாரண விஷயமாகவே கருதப்படுகிறது.

இதற்கு முந்தைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் 14 வயது மற்றும் 15 வயதில் பருவமடையும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. அதன் விளைவாக 11 முதல் 13 வயதுக்குள் பருவமடைய தொடங்குகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகள் பருவமடைதல் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தனர்.
ஆனால் இப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கூட பருவமடைதல் பற்றி நிறைய விஷயங்கள் தெளிவாகவே தெரிகிறது. அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பெண் குழந்தைகள் பருவமடையாவிட்டால் அதற்கான காரணத்தை தங்கள் பெற்றோரிடம் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
மேலும் இதுபற்றி தங்கள் வகுப்பு தோழிகளிடமும் பேசி ஒருவருக்கொருவர் புரிதலை வளர்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் பருவமடையும் வயதை கடக்கும் போது இதை ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனையாக சில குழந்தைகள் எதிர்நோக்குகிறார்கள்.
உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 ஆயிரம் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை 15 வயதான பிறகும் பருவம டையாமல், மாத விலக்கு வராமல் இருக்கும் நிலை இன்றும் உள்ளது. பெண் குழந்தைகள் பருவமடையாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? இதை மருத்துவத்தில் பிரைமரி அனனோரியா என்று சொல்கிறோம்.
15 வயதான பிறகும் ஒரு பெண் குழந்தை பருவமடைய வில்லை என்றால் அந்த பெண் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாகவே பெண் குழந்தைகள் பருவமடைவதற்கு முன்பு உடல் ரீதியாகவே சில மாற்றங்கள் நடக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு 12 வயது பிறந்ததுமே உடலின் உயரம் அதிகரிக்க தொடங்கும். மார்பக பகுதியில் வளர்ச்சி ஏற்படும். அந்த பெண் குழந்தையை பரிசோதிக்கும் போது பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள் எல்லாமே உருவாகத் தொடங்கி இருக்கும். அதுபோன்ற மாற்றங்களால் அந்த பெண் குழந்தை 13 வயதில் பருவமடைந்து விடும்.
சிலநேரங்களில் அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும், அடி வயிற்றில் வலி இருக்கும். ஆனாலும் அதுபோன்ற குழந்தைகள் சரியான வயதில் பருவமடைந்து விடுவார்கள். 11 வயதில் இருந்து அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மாற்றங்களின் விளைவாக 12 அல்லது 13 வயதில் அவர்களுக்கு மாதவிலக்கு வந்துவிடும்.
இவை அனைத்தும் எதைக் குறிக்கிறது என்று பார்த்தோம் என்றால் சினை முட்டைகள், சினைப்பையில் வளரும் பொழுது அந்த பெண்ணுக்கு உடல் அளவில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக மாதவிலக்கு வருகிறது.
15 வயதாகியும் மாதவிலக்கு வரவில்லை என்று சில குழந்தைகள் சிகிச்சைக்கு வருவார்கள். அந்த குழந்தைகள் உயரம் மிகவும் குறைவாக இருப்பார்கள். உடல் அளவிலும் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாத விலக்கு வராமல் இருக்கும்.
ஆனால் பரிசோதனைகள் மூலமாக இதுபோன்ற குழந்தைகளுக்கு என்ன காரணத்தினால் மாதவிலக்கு வரவில்லை என்று பல நேரங்களில் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும்.
பெண் குழந்தைகளுக்கு சினை முட்டைகள் வளரும் போது அந்த வளர்ச்சிக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் உடலில் எல்லா இடங்களிலும் மாற்றங்களை உண்டாக்கலாம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இல்லாமல் சினை முட்டைகள் சரியாக வளராத பெண் குழந்தைகளுக்கு மார்பகத்தில் வளர்ச்சி இருக்காது. அந்த பெண் குழந்தை ஒல்லியாக இருப்பார்கள். உயரமும் குறைவாக இருப்பார்கள்.
ஒரு பெண் குழந்தை பருவமடைந்ததும் மாதவிலக்கு வருவது எதைக் குறிக்கிறது என்றால் அந்த பெண் குழந்தைக்கு சினை முட்டைகள் வெளியாகத் தொடங்கி விட்டது என்று அர்த்தம். ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும்.
அந்த பெண் குழந்தை வளர்ச்சி அடையும் போது சினைப்பையில் கோடிக்கணக்கில் முட்டைகள் காணப்படும்.
இந்த முட்டைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஹைபோதலாமஸ் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வர ஆரம்பிக்கும். இதனுடைய தூண்டுதலின் காரணமாகத்தான் இந்த முட்டைகள் வளரும். முட்டைகள் வளர வளர அதில் இருந்து வரும் ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.
மேலும் அந்த பெண் குழந்தைக்கு மார்பக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துமே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் தான். இந்த முட்டைகள் வளர்ந்து ஒரு காலகட்டத்தில் அது வெளிவர ஆரம்பிக்கும் போதுதான் கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி அடைந்து மாதவிடாய் வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சரியாக வராததற்கு முதல் முக்கியமான காரணம் முட்டை வளர்ச்சி இல்லாத நிலை தான். முட்டைகள் வளர்ச்சி யாருக்கு இல்லாமல் இருக்கும் என்பதை பார்க்கும்போது சிலருக்கு முட்டைகள் இருக்கும், ஆனால் அது வளர்வதற்கு தேவையான ஹார்மோன் இருக்காது.
அதாவது அதுபோன்ற பெண்களுக்கு மூளையில் இருந்து வரும் ஹார்மோன் தூண்டுதல் இல்லையென்றால் முட்டைகள் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இதனால் பருவமடைதல் விஷயத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது.
இன்னும் சில பெண் குழந்தைகளுக்கு சினை முட்டை இருக்கும். அந்த சினை முட்டை நன்றாகவே வளரும். அதற்கான ஹார்மோன் மாற்றங்களும் இருக்கும். மார்பகமும் வளரும். ஆனால் மாதவிலக்கு மட்டும் வராது. இது போன்ற சூழலுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகளே காரணமாகிறது.
அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கலாம் அல்லது கர்ப்பப்பையே உருவாகாமல் இருக்கலாம். அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் அதெல்லாம் சரியாக இருந்தும் மாதவிலக்கு வரவில்லை என்றால் முட்டைகள் இல்லாமல் இருக்கலாம்.
- கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத் தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- நுண்ணுயிரிகள் எளிதாக நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும்.
சானிட்டரி நாப்கினில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது. சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம் என்றுதான் நாம் நினைத்துகொள்வோம். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது. பெரும்பாலான நாப்கின்கள், வண்ணம் போக்குகின்ற ரசாயனங்களாலும், மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களாலும் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்சின் என்ற ரசாயனம் கலக்கப்படுக்கிறது. இவை கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத் தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சானிட்டரி நாப்கினில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக Hxcdf கலக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் நோய்த் தடுப்பாற்றலையும், கருமுட்டை உற்பத்தித் திறனையும் குறைக்கக்கூடியவை. பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் அசுத்தமான இடங்களில் தான் வைக்கப்படுகின்றன. கழிப்பறை சிங்க் அடியில், கழிப்பறை மேஜை மீது அல்லது பைக்குள், மற்ற பொருட்களின் நடுவில் குப்பை போல் வீசப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட்டும் முறையாக சீல் செய்யப்படுவது அவசியமாகும். பெரும்பாலான நுண்ணுயிரிகள் நேரடியாகக் காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் வாழக்கூடியவை. இதனால் சானிட்டரி நாப்கின் காற்றோட்டமாக இருப்பது அவசியமாகும். பெரும்பாலான கழிவறைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருப்பதால் நுண்ணுயிரிகள் எளிதாக நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும்.
நாப்கின் மாற்றும்போது கைகளைக் கழுவாமல் இருப்பது, புதிய நாப்கினை பயன்படுத்துவதற்குக் கைகளை கழுவாமல் உபயோகிப்பது தவறான பழக்கம். உபயோகித்த நாப்கினை எடுத்துவிட்டுக் கை கழுவாமல் புதிய நாப்கினை பாக்கெட்டில் இருந்து எடுப்பது, நுண்ணுயிரிகளை மேலும் பரவச் செய்யும். உணவுப்பொருட்களில் இருப்பது போல் எல்லா நாப்கின் பாக்கெட்களிலும் காலாவதி தேதி இருப்பதில்லை. ஆனால் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும் நாப்கினை வாங்கிப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. ஒவ்வொரு நாப்கினையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவது, தவறான அணுகுமுறை.

நாப்கின்களைப் பயன்படுத்துவதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதைப் போல், அதை அப்புறபடுத்துவதைப் பற்றித் தெரிந்துகொள்வதும் மிக அவசியம். உபயோகப்படுத்திய நாப்கினை டாய்லெட் பிளஷ்ஷில் போடுவது மிகவும் தவறான ஒன்றாகும். குறிப்பாக ஆண்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகப் பெண்கள் சில தவறுகளை செய்கின்றனர். மாதவிடாய் என்பது பெண் உடலில் ஏற்படும் இயற்கையான ஒரு வளர்சிதை மாற்றம் என்ற எண்ணத்தையும், விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். உபயோகித்த நாப்கினை பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும். மேலும் குப்பைத் தொட்டிகளை நீண்டகாலம் காலிசெய்யாமல் வைத்திருந்தால் கிருமிகள் தொற்றும் வாய்ப்புகள் உள்ளது. பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும். உங்கள் பெண் பிள்ளைகளுக்கு எந்த கூச்சமும் இல்லாமல் நாப்கினை வாங்குவதற்கு கற்று கொடுப்பது நல்லது.
- சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும்.
- ரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள்... இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது
காலங்காலமாக நம்பப்படுகிற பல விஷயங்களில் ஒன்று, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால், கருத்தரிக்காது என்பது. இன்னும் சொல்லப்போனால், பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதைப் பாதுகாப்பாக நினைத்துப் பின்பற்றுவோரும் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது குறித்த சந்தேகங்களும் பலருக்கு இருக்கின்றன.

'பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டா என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன். வாய்ப்புகள் குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும். 21 நாள்கள் சுழற்சியில் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பானது 14 நாள்கள் முன்னதாக நிகழும். அதாவது பீரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள்... இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது என்ற நிலையில், அந்தப் பெண்ணுக்கு 6-வது, 7-வது நாளிலும் ப்ளீடிங் இருக்கும் பட்சத்தில், 'அதான் ப்ளீடிங் ஆயிட்டிருக்கே... கன்சீவ் ஆக வாய்ப்பில்லை' என்ற அலட்சியத்தில் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டாம். முட்டை ரிலீஸ் ஆகிவிட்ட காரணத்தால், அந்த நாளில் வைத்துக்கொள்கிற தாம்பத்திய உறவால், கரு தங்கிவிட வாய்ப்புகள் அதிகம். எனவே, பீரியட்ஸ் நாள்களிலும் கருத்தரிக்கலாம் கவனம்..!
- பெண்களில் பெரும்பாலானோர் முடி உதிர்வதை பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர்.
- மன அழுத்தம் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பெண்களுக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வது அதிகமாக காணப்படுகிறது.
இதுகுறித்து தனியார் நிறுவனம் ஒன்று 2.8 லட்சம் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 71.19 சதவீதம் பேர் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்வது கண்டறியப்பட்டது.
36 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் 51 சதவீதம் பேர் முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளில் வேலை செய்து வருகின்றனர்.
வீட்டு வேலைகள் மற்றும் அலுவலகங்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக திணறும் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். பெண்களில் பெரும்பாலானோர் முடி உதிர்வதை பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர்.

பொடுகு, ரத்தசோகை, ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் பிரசவத்திற்கு பிறகான பிரச்சனைகள், தூக்கம் இன்மை போன்றவையும் பெண்கள் முடி உதிர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தம் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, நொறுக்கு தீனிகள் அதிக அளவில் சாப்பிடுவது, புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம் ஆகியவை முடி உதிர்வை மோசமாக்குகின்றன.
நொறுக்கு தீனி கட்டுப்பாடு மிகவும் அவசியம். தின்பண்ட பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
முடி உதிர்வை தடுக்க உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்துடன் தினமும் 30 நிமிடம் 45 நிமிடங்கள் நடைபயிற்சி, யோகா செய்ய வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். இசையை கேட்க வேண்டும்.
நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி கொள்வதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனையை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.






