என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கருப்பு மிளகு எண்ணெய் மிகவும் வலுவானது. எனவே உங்கள் சருமத்தில் இதனை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. இதை உங்கள் முகத்தில் தடவுவதற்கு முன்பு பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒரு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளுங்கள்.
    உங்கள் சருமத்தை சுத்தமாகவும் தெளிவாகவும் உருவாக்குவதிலிருந்து அதை புத்துணர்ச்சியுற செய்வதற்கும், க்ளோவ்யிங் சருமத்திற்கும் என கருப்பு மிளகு எண்ணெய் அனைத்தையும் செய்கிறது. இந்த அத்தியாவசிய எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

    இந்த எண்ணெயில் ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. மேலும், இந்த எண்ணெய் சருமத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளை கொல்வதால் லேசான தோல் நோய்கள் மற்றும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் மூலப்பொருளாக பார்க்கப்படுகின்றன.

    கருப்பு மிளகு எண்ணெய் ஒரு சிறந்த தோல் சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. இது அடைபட்ட துளைகளை திறப்பதோடு சருமத்தில் குவிந்திருக்கும் கூடுதல் எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. இந்த எண்ணெயை கொண்டு வழக்கமாக மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் எஞ்சியிருக்கும் இறந்த சரும செல்கள் நீங்கிவிடும்.

    உங்கள் சருமம் வயதான தோற்றத்தை பெற்றால் அதிலிருந்து மீளவும், நிரந்தர தீர்வுக் காணவும் கருப்பு மிளகு எண்ணெய்யை அவசியம் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் கறைகள், சுருக்கங்கள் மற்றும் வயதான தோல் போன்ற பிற அறிகுறிகளைக் மட்டுப்படுத்த உதவும். மேலும் இது உங்களுக்கு மென்மையான, மிருதுவான மற்றும் இளமையான சரும பிரகாசத்தைத் தரும்.

    கருப்பு மிளகு எண்ணெய் முகத்தைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்வதற்கு இந்த எண்ணெய் உதவும். இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் சருமத்திலிருந்து நச்சுகளை எளிதில் வெளியேற்ற முடியும். இதன் மூலம் நீங்கள் உங்கள் சருமத்தை பொலிவுறச் செய்யலாம்.
    உஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க அதன் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது மிக அவசியம். அதற்கு, சருமத்திற்கு பொருத்தமான கிளன்சரை பயன்படுத்தவேண்டும்.
    உஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க அதன் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது மிக அவசியம். அதற்கு, சருமத்திற்கு பொருத்தமான கிளன்சரை பயன்படுத்தவேண்டும். அதனை பயன்படுத்தி சருமத்தை சுத்தமாக வைத்திருந்தால் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், முகப்பரு போன்ற அடிப்படை சரும பிரச்சினைகள் தோன்றாது.

    ஆல்கஹால் இல்லாத டோனர்களை பயன்படுத்த வேண்டும். அவை அதிகப்படியான அழுக்கு, எண்ணெய் பசை போன்றவற்றை நீக்கும். ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் (ஏ.ஏ.ஏ), சாலிசிலிக் அமிலம், ஹையலூரோனிக் அமிலம் ஆகியவை உள்ளடங்கி இருக்கும் டோனர்களை பயன்படுத்துவது நல்லது. அவரவர் சரும வகைக்கு ஏற்ற சிறந்த டோனரை தேர்வு செய்வது அவசியம். இதற்கு சரும நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    சருமம் வறட்சி கொண்டதாக இருந்தாலோ, ஏதாவதொரு பகுதியில் உலர்வாக காணப்பட்டாலோ அதற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுக்கவேண்டும். தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சரும வறட்சியில் இருந்தும் காக்கும்.

    தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. எல்லா சீதோஷ்ணநிலைக்கும் சன்ஸ்கிரீன் ஏற்றது என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வெளியே செலவிடும் நேரத்தை பொறுத்து 6 மணிநேரத்திற்கு ஒருமுறை அதனை பூசிக்கொள்ளவேண்டும்.
    முகத்தில் புள்ளிகள் போல் அடுக்கடுக்காக சரும துளைகள் தென்படும். அவை சரும பொலிவை குறைப்பதுடன் வயதான தோற்றத்தையும் உண்டாக்கிவிடும்.
    முகத்தில் புள்ளிகள் போல் அடுக்கடுக்காக சரும துளைகள் தென்படும். சிலருக்கு துளைகள் சற்று பெரிதாக காணப்படும். அவை சரும பொலிவை குறைப்பதுடன் வயதான தோற்றத்தையும் உண்டாக்கிவிடும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் எளிதாக இந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    அவர்களுக்கு முகப்பரு பிரச்சினையும் தீராத தொந்தரவைத்தரும். மன அழுத்தம், மரபியல் சார்ந்த குறைபாடு, மோசமான சரும பராமரிப்பு போன்றவையும் சரும துளைகள் பெரிதாக தென்படுவதற்கு காரணமாக அமையலாம். இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி சரும துளைகளை குறைக்கலாம்.

    முட்டை: முட்டையின் வெள்ளைக்கரு சருமத்தில் உள்ள துளைகளை குறைக்க உதவும். இது தோல் இறுக்கமடைவதற்கு வழிவகுக்கும். சருமத்தில் எண்ணெய் சுரப்பு தன்மை அதிகரிப்பதை கட்டுப்படுத்தி சரும துளைகளை இறுக்கமடைய செய்ய உதவும். அகன்ற கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி வெள்ளைக்கருவை மட்டும் தரம்பிரித்து முகத்தில் தடவ வேண்டும். நன்கு உலர்ந்ததும் டிஸ்யூ பேப்பரை கொண்டு மெதுவாக துடைத்தெடுக்க வேண்டும். பின்பு முகத்தை நன்றாக கழுவி விடலாம். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகளை போக்குவதற்கும் இதனை பயன்படுத்தலாம்.

    முல்தானி மெட்டி: இது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது. இது வலுவாக உறிஞ்சும் தன்மை கொண்டது. அதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் தன்மையை உறிஞ்சி எடுத்துவிடும். மேலும் சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இறந்த செல்களையும் அகற்ற உதவும். முகத்தில் உள்ள துளைகளை குறைக்கும் தன்மையும் கொண்டது. ரசாயனம் கலந்த அழகு பொருட்களை விட முல்தானி மெட்டியை உபயோகிப்பது சிறப்பானது.

    ஐஸ் கட்டிகள்: இது பல சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரவல்லது. சருமத்தில் துளைகள் பெரிதாக இருந்தால் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. காட்டன் துணியில் ஐஸ்கட்டிகளை பொதிந்து சருமத்தில் மென்மையாக தடவ வேண்டும். இதற்கு சரும துளைகளை சுருக்கும் தன்மை உண்டு.

    கடலை மாவு: சருமத்தில் உள்ள துளைகளை சரி செய்யும் சிறந்த சமையல் பொருட்களில் இது முக்கியமானது. இயற்கையாகவே சருமத்திற்கு அழகு சேர்க்கக்கூடியது. இறந்த செல்களை நீக்கவும் உதவும். சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இது காரத்தன்மை கொண்டது என்பதால் அப்படியே உபயோகிக்கக்கூடாது. பால், தயிர் அல்லது எலுமிச்சை சாறு போன்ற ஏதாவது ஒன்றுடன் கடலை மாவை கலந்து சருமத்திற்கு உபயோகிக்கலாம். இதனுடன் பப்பாளி மற்றும் அரைத்த மஞ்சளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    தயிர்: உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகு பராமரிப்புக்கும் தயிரை உபயோகிக்கலாம். கெட்டி தயிரை முகத்தில் தடவிவிட்டு அரை மணி நேரம் உலரவிட வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சரும துளைகள் குறையும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் துளைகள் இறுகுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கவும் உதவுகிறது.

    சர்க்கரை: இது, சரும துளைகளில் படிந்திருக்கும் எண்ணெய் தன்மையையும், அழுக்கையும் நீக்கக்கூடியது. சிறுதளவு சர்க்கரையுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை கரைந்ததும் சருமத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

    வெள்ளரி: இதனை துண்டுகளாக நறுக்கி முகத்தில் தடவி வந்தால், திறந்தவெளி துளைகள் நீங்கும். வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்தும் முகத்தில் தடவலாம். இதுவும் சருமத்திற்கு ஊட்டமளிக்கக்கூடியது. முதுமையான தோற்றத்தை தடுக்கவும் உதவும். வெள்ளரிக்காயுடன் தயிரையும் சேர்த்து சரும அழகை மேம்படுத்தலாம்.
    சீரான இடைவெளியில் நகங்களை வெட்டுவது நகங்களின் அடித்தோல் பகுதியை பலப்படுத்த உதவும். நகம் வெட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
    நகங்களை நன்றாக பராமரிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. சீரான இடைவெளியில் நகங்களை வெட்டுவது நகங்களின் அடித்தோல் பகுதியை பலப்படுத்த உதவும். சரியான முறையில் நகங்களை வெட்டாவிட்டால் காயம் ஏற்படும் நிலை உருவாகும். நகம் வெட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

    * நகங்களை மென்மையாக்கிவிட்டு, வெட்டுவதுதான் சிறந்தது. வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் விரல்களை ஊறவைத்துவிட்டு நகங்களை வெட்டுவதுதான் சரியான நடைமுறை. அப்போது நகங்கள் மென்மையாகிவிடும். குளித்து முடித்ததும் நகம் வெட்டலாம்.

    * மனக்குழப்பம், டென்ஷனாக இருக்கும் நேரங்களில் நகங்களை கடிப்பது தவறான பழக்கம். அப்போது நகங்களின் உள் அடுக்கு பகுதியையும் சேர்த்து கடித்துவிடுவார்கள். அதனால் கூடுதலாக வலி, வேதனையை அனுபவிக்க வேண்டி யிருக்கும். நகத்தில் ஏற்படும் காயங்களுக்கு மருந்திடும் நிலையும் ஏற்படலாம்.

    * ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை சீராக நகங்களை வெட்டுவதே சரியானது. சிலர் ஸ்டைலுக்காக வெவ்வேறு வடிவங்களில் நகங்களை வெட்டுவார்கள். அப்படி ஒழுங்கற்ற முறையில் வெட்டுவது நகங்களை பலவீனப்படுத்தி விடும். எளிதாக உடைந்து போய்விடவும் வாய்ப்புண்டு. அதனால் தேவையற்ற காயங்களை எதிர்கொள்ளக்கூடும்.

    * நகமும் சதையும் இணையும் பகுதியை ஒருபோதும் நக வெட்டி கொண்டு வெட்டாதீர்கள். அவைதான் நகங்களின் வேர் பகுதியை பாதுகாக்கின்றன. நோய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கின்றன. அந்த பகுதியில் காயம் ஏற்பட்டால் எண்ணெய் தடவுங்கள்.

    * ஒருவரது நக வெட்டியை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒருவரே பயன்படுத்தினாலும் நகம் வெட்டுவதற்கு முன்பும், பின்பும் நன்றாக கழுவ வேண்டும். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதும் அவசியமானது. அது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும். சோப்பு, சானிடைசர் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
    பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம்.
    உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.

    தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது. சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும். இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கருமை நீங்க தொடங்கிவிடும்.

    ஆப்பிள் சிடேர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும். பேக்கிங் சோடாவையும் உபயோகிக்கலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி வரலாம். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
    கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வை சுரப்பிகள் துரிதமாக செயல்பட்டு தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும்.
    வெயிலில் சில நிமிடங்கள் பயணம் செய்தாலே சிலரது ஆடை வியர்வை மழையில் நனைந்துவிடும். வெயிலின் உக்கிரம் அதிகமாகும்போது வியர்வை வெளியேறுவதும் அதிகமாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வியர்வை பாதிப்புக்கு ஆளாகுவார்கள். உடலின் வெப்பநிலையை சீராக பராமரிப்பதில் வியர்வை சுரப்பிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

    கோடை காலத்தில் உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வை சுரப்பிகள் துரிதமாக செயல்பட்டு தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். அப்போது வியர்வை சுரப்பிகளின் சரும துளைகள் மீது தூசு, அழுக்குகள் படிந்திருந்தால் வியர்க்குரு உண்டாகும். சிறுசிறு கொப்பங்களாகவும், சிவப்பு நிறத்தில் திட்டுக்களாகவும் வெளிப்படும். அதனை கவனிக்காமல் விட்டு விட்டால் சருமம் எரிச்சலுக்குள்ளாகும். படை, தேமல் போன்ற தோல் வியாதிகளும் தோன்றக்கூடும்.

    வியர்க்குரு பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஆடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். காற்று சருமத்திற்குள் ஈடுருவும் விதமான ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும். பருத்தி, கைத்தறி போன்ற ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியலாம். வெயிலில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினால் உடனே குளித்து விடுவது நல்லது. அதன் மூலம் உடலில் படிந்திருக்கும் வியர்வையை நீக்கிவிடலாம்.

    சருமத்தை ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்வதும் நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கோடை கால பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு வரலாம். அவ்வப்போது பழச்சாறும் பருகிவரலாம். தூங்கும் அறை காற்றோட்டம் கொண்டதாக இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் அவசியமானது. அது உடலில் வியர்வை படியாமல் தூங்குவதற்கு வழிவகுக்கும்.

    வியர்வை பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தால் கற்றாழையின் சதைப்பகுதியை உடலில் தேய்த்து குளித்து வரலாம். சந்தனத்தை உடல் முழுவதும் தேய்த்தும் குளிக்கலாம். அதனுடன் மஞ்சள் தூளையும் சேர்த்துக்கொள்ளலாம். அது கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பை போக்க உதவும். குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலில் திரிவதை தவிர்ப்பது நல்லது.
    இறந்த செல்கள் படிந்திருப்பது, மெலனின் சுரப்பு அதிகரிப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வு, மரபணு காரணிகள், உடல்பருமன் போன்றவையும் மூட்டு பகுதிகளின் கருமைக்கு காரணமாக இருக்கின்றன.
    முழங்கை, கால்களின் மூட்டு பகுதிகளில் தோல் பல மடிப்புகளுடன் தடிமனாக இருக்கும். மற்ற பகுதிகளைவிட சருமம் வறண்டும், கடினமானதாகவும் காணப்படும். அந்த பகுதியில் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைந்திருப்பதே அதற்கு காரணம். எண்ணெய் பசைத்தன்மையை தக்க வைத்துக்கொள்வது அவசியம். போதிய கவனம் செலுத்தாவிட்டால் மூட்டு பகுதி கருமையாக மாறிவிடும். இறந்த செல்கள் படிந்திருப்பது, மெலனின் சுரப்பு அதிகரிப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வு, மரபணு காரணிகள், உடல்பருமன் போன்றவையும் மூட்டு பகுதிகளின் கருமைக்கு காரணமாக இருக்கின்றன. மூட்டு பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் வழிமுறைகள்:

    எலுமிச்சை அதிக ஆன்டிஆக்சிடென்டுகளை கொண்ட சிட்ரஸ் பழ வகையை சார்ந்தது. சருமத்தை பிரகாசிக்க செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும். சருமத்தில் உள்ள இருண்ட செல் அடுக்குகளை போக்கவும் உதவும். எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதனை மூட்டு பகுதியில் வைத்து அழுத்தி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு சாதாரண நீரில் மூட்டு பகுதியை கழுவிவிடலாம். உலர்ந்ததும் ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷனை பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து மூட்டு பகுதியில் தடவி மசாஜ் செய்துவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.

    சரும நோய்களை குணப்படுத்து வதற்கு தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் வைட்டமின் ஈ, சேதமடைந்த சருமத்துக்குள் ஊடுருவி விரைவாக குணமாகுவதற்கு துணைபுரியும். தேங்காய் எண்ணெய்யை மூட்டு பகுதியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் அதே அளவு எலுமிச்சை சாறை கலந்து கருப்பு படிந்திருக்கும் பகுதியில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். உலர்ந்ததும் சாதாரண நீரில் கழுவிவிடலாம்.

    தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலமும் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும் தன்மை கொண்டது. சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுவதால் சரும பராமரிப்பு மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இதனை கருமை படிந்த மூட்டுவுக்கும் உபயோகிக்கலாம். தயிருடன் வினிகரை கலந்து நன்றாக குழைத்து மூட்டு பகுதியில் தடவிவிட்டு உலர்ந்ததும் நீரில் கழுவிவிடலாம். அதன் பிறகு ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷனை தடவிவிடலாம். தயிருடன் கடலை மாவை குழைத்தும் தடவி வரலாம்.

    இறந்த செல் அடுக்குகளை நீக்கி புதிய செல் அடுக்குகளை உருவாக்குவதில் சர்க்கரைக்கும் பங்கு இருக்கிறது. சருமத்திற்கு வறட்சி ஏற்படாமல் ஈரப்பதத்தன்மையை தக்கவைப்பதற்கும் உதவுகிறது. சர்க்கரையுடன் சம அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து மூட்டு பகுதியில் தடவிட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். இறந்த செல் அடுக்குகளை மெதுவாக துடைத்து அகற்றவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் மூட்டு பகுதியில் இருக்கும் கருமை மறைந்துவிடும்.
    செல்போனை அதிகப்படியான நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றி முகத்தின் அழகு பாதித்து விடுகிறது. பவுர்ணமி நிலா போல முகம் பிரகாசமாக ஜொலிக்க சில எளிய வழிகள் இருக்கின்றன.
    எவ்வளவுதான் சுத்தமாக பராமரித்தாலும், முகப்பருவும், கரும்புள்ளியும் தோன்றி முகத்தின் அழகை கெடுத்து விடுவதாக நினைக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம். பவுர்ணமி நிலா போல முகம் பிரகாசமாக ஜொலிக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

    செல்போனை ஒரு நாளில் அதிகப்படியான நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றி முகத்தின் அழகு பாதித்து விடுகிறது. இந்த சிக்கலை நிவர்த்தி செய்ய பேரீச்சம்பழத்துடன் சிறிது வெண்ணெய் மற்றும் கசகசா கலந்து அரைத்து சில நாட்கள் கண்களின் கீழ் தடவி வர வேண்டும். அதன் மூலம் படிப்படியாக கருவளையம் மறையும்.

    கறிவேப்பிலையை நன்கு காயவைத்து அதனுடன் கசகசா கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியை தினமும் குளிப்பதற்கு முன்னதாக முகத்தில் தடவி ஐந்து நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

    இந்த பொடியை குளியல் பவுடராகவும் உபயோகப்படுத்தலாம். தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம் சருமத்தில் உள்ள கருவளையம், கடினத்தன்மை ஆகியவை நீங்குவதுடன், முகம் பளபளப்பாகவும். பட்டுப்போல மிருதுவாகவும் இருக்கும்.

    கோடை காலத்தில் தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு உதிர்வதும் உடைவதும், நுனி பிளவுபடுவதும் மற்ற நாட்களை விட அதிகமாக இருக்கும். இந்த சிக்கலுக்கு முட்டையின் வெள்ளைக்கரு, ஆலிவ் எண்ணெய் மற்றும் சோற்று கற்றாழை ஜெல் ஆகியவற்றை பசைபோல் கலந்து தலையில் தடவி ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிகைக்காய் அல்லது வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு ஆகியவற்றை உபயோகித்து நன்றாக அலச வேண்டும். அதன் மூலமாக முடி உதிர்வது வறண்டு போவது ஆகியவற்றை தவிர்க்க முடியும். இயற்கையான இந்த முறைகளால் தலைமுடி மிருதுவாக மாறும்.

    ஒரு சிலருக்கு வாயிலிருந்து துர்நாற்றம் வருவதுண்டு. இந்த பிரச்சனையை அகற்ற சுலபமான வழி உள்ளது. பன்னீர் ரோஜா இதழ்களை நன்றாக கழுவி, வெற்றிலையுடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்வதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.

    சிலருக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு கருமை நிறத்தில் இருப்பதுடன் தோல் உரிந்து ரத்தமும் வரும். இந்த பிரச்சனை அகல அடிக்கடி பாலாடை அல்லது வெண்ணெய் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தடவி வரலாம். அதன் உதடு வெடிப்பு குணமாகி விடும்.
    மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
    ஆரஞ்சு:

    தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

    பருப்புகள்:

    பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய அனைத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. அவை ஆரோக்கியமான கொழுப்புகளாகும். எனவே அது தோல் அடுக்குகளில் தேங்கியுள்ள ஆரோக்கியமற்ற எண்ணெய்களை அகற்றுவத்தால் உங்களை சூடாக வைத்திருக்கும்.

    பச்சை காய்கறிகள்:

    கீரை, முட்டைக்கோஸ், வெந்தயம், கடுகு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துகொள்ளுங்கள். பின்பு உங்கள் சருமத்தில் ஏற்படும் அதீத மாற்றங்கள் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும்.

    பீன்ஸ்:

    துத்தநாகம் பெரும்பாலும் முகப்பருவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு இயற்கையாகவே இது பயனளிக்கிறது.

    உருளைக்கிழங்கு மற்றும் கேரட்:

    இவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் வியர்வை சுரப்பிகளை சுருக்கவும், துளை அளவைக் குறைக்கவும், பாக்டீரியா தொற்றுகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

    கொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள் , எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

    கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.
     
    இரவு படுக்கைக்குப் போகும் போது,வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.
     
    காரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.  மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம்.
    ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம். அவற்றை பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி அகற்ற பல தீர்வுகள் உள்ளன. அவை பற்றிய தொகுப்பு..

    தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து நீராவியை முகத்தில் சிறிது நேரம் படிய விடலாம். நாளடைவில் முகத்தில் உள்ள துளைகளும், தழும்புகளும் மறையத்தொடங்கும்.

    சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு  மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.

    பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊறவைத்து அதன் தோலை அகற்றி விட்டு ரோஸ்வாட்டர் விட்டு அரைத்து தழும்புகளின் மீது தடவி வரலாம்

    எலுமிச்சை சாற்றில் பஞ்சை நன்றாக ஊறவைத்து மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். தோலில் மேற்பரப்பில் சாறு நன்றாக படியும் வகையில் சிறிது நேரம் உலர வைத்து விட்டு பின்னர் முகத்தை கழுவிக்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறைய செய்வதுடன் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கவும் உதவும்.

    தீக்காயம் நன்றாக ஆறிய பிறகு இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். எலுமிசை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில் இவற்றுள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தியும் தினமும் இருமுறை தடவி மசாஜ் செய்து வரலாம். அதனால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

    கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து காயம் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் மீது தேய்த்து குளித்து வரலாம். நாளடைவில் தழும்புகள் மறையும்.

    தக்காளியை தோல் உரித்து மிக்சியில் இட்டு அரைத்து எடுத்து தினமும் இரவு நேரத்தில் பிரசவ தழும்புகள் உள்ள பகுதியில் தடவ வேண்டும். காலையில் குளிர்ந்த நீரில் கழுவ விடலாம். மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

    சோற்று கற்றாழையின் மேல் தோலை நீக்கி அதில் உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து அறுவை சிகிச்சை தழும்புக்கு மேல் நன்றாக தடவவும். தினமும் இரவில் தடவி காலை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் தழும்பு மறைந்து விடும்.
    கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகவும் ஆக்குகின்றன. இதை சரி செய்ய சில வழிகள் இதோ...
    சிலருக்கு அடிக்கடி தலைக்கு குளிப்பதாலும், வெளிப்புறத்தில் உள்ள மாசுக்களின் பாதிப்பாலும், கூந்தல் வறண்டு காணப்படும். மேலும் கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகவும் ஆக்குகின்றன. இதை சரி செய்ய சில வழிகள் இதோ...

    வாரம் ஒருமுறை கூந்தலில் ஆலிவ் எண்ணெய் தடவி நன்றாக ஊறவைத்து தலைக்கு குளிக்கலாம். இது கூந்தலை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். தலைமுடி உலர்ந்த பின் 3 சொட்டுகள் ஆலிவ் எண்ணெய் பூசினால் கூந்தல் பட்டுப்போல் மென்மையாகும்.

    2 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 3 சொட்டு தேங்காய் எண்ணெய், 1 கப் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை ஸ்பிரே போன்று பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ள வைட்டமின் சி, அமினோ அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை வறண்ட கூந்தலை மென்மையாக்கும். தேங்காய் எண்ணெய் வறண்ட மற்றும் சேதமடைந்த முடியை சரி செய்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

    இரவில் ஊறவைத்த ஒரு கப் வெந்தயத்தை மைபோல் அரைத்து 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் ஒரு கப் தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும், பொலிவானதாகவும் மாற்றும். தயிர் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும். வெந்தயம் கூந்தலுக்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

    ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அத்துடன் கால் கப் கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் மற்றும் 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். தலைமுடியின் வேர்ப்பகுதியில்படும்படி அக்கலவையை தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது.

    எலுமிச்சை பழச்சாறு கரிசலாங்கண்ணி சாறு அரை லிட்டர் பால் ஆகியவற்றை ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெய்யில் சேர்த்து கலக்க வேண்டும். அந்த கலவையை காய்ச்சி வடிகட்டி தலை முடியில் தடவினால் வறண்ட முடி மென்மையாகும். இளநரை வராது. முடி நீண்டு, அடர்த்தியாக வளரும்.

    முட்டையின் வெள்ளைக்கருவை  சிறிதளவு, ஆலிவ் எண்ணெயில் கலந்து கூந்தலின் வேர்ப்பகுதி முதல் நுனி வரை தடவவும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். இதனால் கூந்தல் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
    ஏராளமாக சத்துக்கள் நிறைந்த சிவப்பு சந்தனத்தை கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.
    சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

    • உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும். எனவே 2 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.

    • உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

    • பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 4 தேக்கரண்டி தேங்காய் பாலில், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 4 தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.

    • சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 தேக்கரண்டிசிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.

    • வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தனம் உதவும். அதற்கு தினமும் 2 தேக்கரண்டி சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    • சிலர் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

    ×