என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • முகத்திற்கு கிரீம், பேஷியல் அப்ளை செய்து கொஞ்சம் வெள்ளையாக்கி விடுகிறோம்.
    • கொஞ்சம் கவனம் செலுத்தினால் கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்கி விடலாம்.

    சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும்.

    காரணம் நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கருப்பாக தெரிகிறது. ஆனால், முகத்திற்கு கிரீம், பேஷியல் என அப்ளை செய்து கொஞ்சம் வெள்ளையாக்கி விடுகிறோம்.

    அதே, கவனத்தை கொஞ்சம் கைகளிலும் செலுத்தினால் கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்கி விடலாம்.

    என்ன செய்யலாம்?

    1. தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.

    2. தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.

    3. பாதாமை இரவில் படுக்கும் போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.

    4. பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

    5. மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.

    6. கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

    • லாவெண்டர் எண்ணெய் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக்க உதவுகிறது.
    • ஆமணக்கு எண்ணெய் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.

    காபித்தூளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் பாதிக்கப்பட்ட பகுதியைச் சரி செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பாதாம் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. ஆமணக்கு எண்ணெய் கண்களின் கீழ் உள்ள வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.

    தேவையான பொருட்கள்

    காபி தூள் - 1/4 கப்,

    இனிப்பு பாதாம் எண்ணெய் 1/2 கப்,

    ஆமணக்கு எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் காபித்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலக்குங்கள். இந்த கலவையை 5-7 நாட்களுக்கு மூடி வையுங்கள். பின்னர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது எடுத்து கண்களுக்குக் கீழ் தடவி மசாஜ் செய்யுங்கள். நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் கண் கீழ்ப் பகுதியில் கலவையை மெதுவாக மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து முகத்தினை கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.

    சருமத்தில் ஈரப்பதம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதற்கான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ரோஸ்மேரி எண்ணெயில் நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை ஆற்றவும் பாதுகாக்கவும் உதவுகின்றன. இதனால் உங்கள் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை விரைவில் குறைக்க உதவும். எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெயில் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களில் இருந்து பாதுகாக்கின்றன. லாவெண்டர் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    ரோஸ்மேரி - 12 சொட்டு,

    லாவெண்டர் - 6 சொட்டு, எலுமிச்சை சாறு - 6 சொட்டு,

    பாதாம் எண்ணெய் - 5 மில்லி

    ஆகியவற்றைப் பாட்டிலில் ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்து 2 முதல் 3 மணி நேரம் விட்டு பின்னர் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 2 முதல் 3 முறை செய்யலாம்.

    • உருளைக்கிழங்கு சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்கள் நீங்கி மிருதுவாகும்.
    • கருவளையத்தை போக்க உருளைக்கிழங்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

    உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ளது உருளைக்கிழங்கு. ருசியைத் தருவது மட்டுமில்லாமல், இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கும் நன்மை அளிக்கின்றன. குறிப்பாக சரும பராமரிப்பில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

    சூரிய ஒளியால் கருமை அடையும் சருமத்தை பளிச்சென மாற்றுவதற்கும், முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றுவதற்கும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி, சூரிய ஒளியால் சேதமடைந்த செல்களை குணப்படுத்துகிறது. இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்குகிறது. சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கிறது. இதில் உள்ள 'கேடகோலேஸ்' என்ற நொதி கரும்புள்ளிகளை நீக்குகிறது.

    உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறைகள்: உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறினை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்திப் பஞ்சு அல்லது துணியை அந்த சாற்றில் நனைத்து, முகம் முழுவதும் தடவவும். பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் கருமை நீங்கி முகம் பொலிவாகும்.

    உருளைக்கிழங்கைக் கொண்டு பேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவதால் சருமம் பளிச்சிடுவது மட்டுமில்லாமல், அதில் இருக்கும் ஆன்டிஆக்சி டண்டுகள் முகத்தில் முதுமையான தோற்றத்தை மாற்றி, இளமைப் பொலிவைத் தருகின்றன. பாதி அளவு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்கள் நீங்கி மிருதுவாகும்.

    பாதி அளவு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் பால் கலந்து முகத்தில் பூசவும். 10 நிமிடம் கழித்து, முகத்தை மென்மையாக மேல்நோக்கிய வட்டவடிவில் தேய்க்கவும். பின்னர் மிதமான சூடுள்ள நீரில் முகத்தைக் கழுவவும்.

    கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்கள் முகத்தின் அழகைக் குறைக்கும். இதற்கு உருளைக்கிழங்கு சிறந்த தீர்வாக இருக்கும். உருளைக்கிழங்கை இரண்டு வட்டவடிவ வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். அவற்றின் மீது கற்றாழை ஜெல்லைத் தடவவும். இதனை கண்களின் மீது வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கை எடுத்துவிட்டு முகத்தைக் கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கருவளையம் நீங்கி கண்கள் பளிச்சிடும்.

    ½ டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ¼ டீஸ்பூன் தக்காளிச் சாறு, ½ டீஸ்பூன் தேன் இவற்றை நன்றாகக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகப்பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

    • தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கும்போது, அழகு பராமரிப்பு எளிதாகிறது.
    • அழகு பராமரிப்புக்கு உதவும் தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய தொகுப்பு பற்றி பார்க்கலாம்.

    தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கும்போது, அழகு பராமரிப்பு எளிதாகவும், அதிக ஆற்றலுடன் மாற்றமும் பெறுகிறது. அந்த வகையில் அழகு பராமரிப்புக்கு உதவும் சில தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய தொகுப்பு பற்றி பார்க்கலாம். இவை அளவில் சிறியதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் அனைவரும் உபயோகிக்க முடியும்.

    பேசியல் ஸ்டீமர்: முகத்தில் இருக்கும் சருமத் துளைகளை நீராவியின் மூலம் பெரிதாக்கி மாசுக்களை நீக்க ஸ்டீமர் உதவும். இந்த ஸ்டீமரில் இருக்கும் பட்டனை அழுத்துவதன் மூலம், சூடான மெல்லிய நீராவித் துகள்கள் சருமத்தில் ஊடுருவி, ஈரப்பதமாக்கி, சருமத் துளைகளில் இருந்து அழுக்கு மற்றும் பிற அசுத்தங்களை அகற்ற உதவுகிறது.

    எல்.இ.டி நெயில் லாம்ப்: நகங்களை அழகாக வளர்த்து, மெனிக்கியூர் செய்து, விரும்பிய நகப்பூச்சை பூசும்போது, அது சரியாக உலராமல் அழிந்து விடும் சூழலை பலரும் எதிர்கொள்வது உண்டு. இதைத் தடுப்பதற்காகவே வந்துள்ளது எல்.இ.டி நெயில் லாம்ப். இது நகப்பூச்சை சில நொடிகளில் உலர வைக்கும். மேலும் இதில் இருக்கும் டைமர் அமைப்பு, ஒரு தொடுதல் மூலம் தானாகவே அணையும் வசதி கொண்டது.

    எல்.இ.டி பேஸ் மாஸ்க்: இந்த பேஸ் மாஸ்க்கை முகத்தில் பொருத்திக் கொண்டால், அதில் இருந்து வெளிவரும் ஒளி அலைக்கற்றைகள் சருமத்தில் ஊடுருவி, சருமப் பராமரிப்புப் பணிகளை செய்கின்றன. உதாரணத்துக்கு இதில் இருந்து வரும் சிவப்பு ஒளி சருமத்துக்கு தேவையான ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. நீல ஒளி முகப்பரு மற்றும் சரும சிதைவுகளைக் குறைக்கிறது.

    வைப்ரேட்டிங் பேசியல் மசாஜ் டூல்: இந்தக் கருவியை சருமத்தில் பயன்படுத்தும்போது, இதில் இருந்து வரும் அதிர்வுடன் கூடிய மெல்லிய அழுத்தம், சருமத்தில் மசாஜ் செய்வதன் பலனைக் கொடுக்கக்கூடியது. அதன் மூலம் தசைகளில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவை குறைந்து புத்துணர்ச்சி பெறும்.

    ஸ்கின்கேர் பிரிட்ஜ்: லோஷன்கள், கிரீம்கள், வைட்டமின்-சி கொண்ட சீரம்கள், பேசியல் மாஸ்க்குகள் போன்றவற்றை குளிர்ச்சியான நிலையில் வைத்து பத்திரப்படுத்துவது, அவை நீண்ட காலம் நீடிப்பதற்கு உதவும். இதற்கு உங்கள் ஒப்பனை அறையிலேயே வைத்து பராமரிக்கக் கூடிய, சிறிய அளவு குளிர்பதனப் பெட்டி பயன்படும்.

    • மழைக்காலத்தில் ஹீல்ஸ் வகை காலணிகளைத் தவிர்க்க வேண்டும்.
    • மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகளை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    கோடை வெயில் முடிந்து, பருவ மழை ஆரம்பித்திருக்கிறது. வெயில் காலத்தைப் போலவே, மழைக்காலத்திலும் சரும பராமரிப்பு, சரியான உடைகளை தேர்ந்தெடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகளை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும். காலணிகள் தேர்ந்தெடுப்பு மற்றும் பராமரிப்பு குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

     மழைக்காலத்தில் காலணிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். ஈரமான காலணிகளை அப்படியே அணியக் கூடாது. வெளியில் போய் வந்த பிறகு காலணிகளுக்குள் இருக்கும் நீரை வடிய வைத்து, உலர வைக்க வேண்டும். வாய்ப்பில்லாதவர்கள் காலணிகளை உலர வைக்க ஹேர் டிரையரை உபயோகிக்கலாம்.

     ஈரப்பதத்தை உலர வைக்கத் தவறினால் பாதத்திலும், விரல்களின் இடுக்குகளிலும் பூஞ்சைத் தொற்றுகள், சேற்றுப்புண் பாதிப்புகள் வரக்கூடும்.

     ஈரமான காலணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க சிலிக்கா ஜெல், கற்பூரம், நாப்தலின் உருண்டைகள் போன்றவற்றை போட்டு வைக்கலாம். இவை ஈரப்பதத்தை உறிஞ்சுவது மட்டுமில்லாமல், காலணிகளில் இருந்து துர்நாற்றத்தை நீக்கவும் வழி செய்யும்.

     மழைக்காலத்தில், பாதங்களுக்கு சரியான அளவில் பொருந்தும் வகையில் காலணிகளை வாங்க வேண்டும். ஏனெனில் சாக்கடை நீர், மழைநீர் போன்றவை பாதங்களில் படிந்து கிருமித் தொற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க தண்ணீர் புகாத, வாட்டர் புரூப் வகை காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்மூலம் நோய்த்தொற்று, கால்களில் வெடிப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.

     மழைக்காலத்தில் ஹீல்ஸ் வகை காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இவை எதிர்பாராமல் மழை நீரில் மாட்டிக் கொண்டால், நடக்கும்போது சிரமத்தை ஏற்படுத்தும்.

     ஷூ உபயோகிப்பவர்கள், மழை நீர் புகாத ஷூக்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இல்லையெனில் ஷூவுக்குள் தண்ணீர் புகாத வண்ணம் பிளாஸ்டிக் கவர்களை வாங்கி அணிந்து கொள்ளலாம்.  ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 'பிளிப் பிளாப்' வகை காலணிகள், மழைக்காலத்தில் அணிவதற்கு ஏற்றவை. இவை தண்ணீரை உறிஞ்சாமல் கால்களை உலர்வாக வைக்கும்.

     ரப்பர்-சோல்ட் செருப்புகள், மழைக்கால சாலைகளில் நடக்கும்போது நல்ல பிடிமானத்தைக் கொடுக்கும். பாசி, சகதி போன்றவை வழுக்கி விடாமல் தடுக்கும்.

     பட்டையுடன் கூடிய காலணிகள் மழைக்காலத்தில் அணிவதற்கு பொருத்தமானவை. ஈரம்படும்போது கால்களின் பிடியில் இருந்து வழுக்காமல் இருப்பதற்கு இவை உதவும்.

    • உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களின் ஆடைகளை சுடு நீரில் அலசலாம்.
    • காட்டன் துணிகளை வேண்டுமானால் சுடுநீரில் அலசலாம்.

    அழுக்கு துணிகளை நீரில் மூழ்க வைத்து அதில் சோப்பு தூள் கலந்து ஊற வைத்து பின்பு சோப்பு போட்டு துவைத்து நீரில் அலசுவோம். இந்த செயல் முறையை வாஷிங் மெஷின் எளிமைப்படுத்திவிட்டது. ஆனாலும் துணிகளை கைகளால் சோப்பு போட்டு உலர வைப்பதற்குத்தான் பலரும் விரும்புகிறார்கள்.

    துணியில் ஏதேனும் கறைகள் படிந்திருந்தால் சிலர் சுடு நீர் பயன்படுத்தி சோப்பு போட்டு அலசுவதுண்டு. அப்படி அடிக்கடி சுடு நீர் கொண்டு துணிகளை அலசுவது துணியின் தரத்தை பாழ்படுத்தி விடும். அப்படி சுடுநீர் பயன்படுத்தி துவைக்கும்போது கறை நீங்கி பளிச்சென்று காட்சி அளிக்கும். அதே வேளையில் ஆடை சுருங்கிவிடக்கூடும். சுடுநீர் பயன் படுத்துவதால் இந்த பிரச்சினை ஏற்படும். மேலும் சுடு நீர் ஆடையின் நிறத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சுடுநீரில் இருக்கும் வெப்பம் காரணமாக சாயம் மங்கி ஆடை நிறம் மாற்றமடையக்கூடும். சுடு நீரில் அலசும்போது ஆடை சுருங்கும் பிரச்சினை காரணமாக அதில் உள்ள நூல் இழைகள் வலுவிழந்துபோய்விடும்.

    ரெடிமேடு ஆடைகளை வாங்குவதாக இருந்தால் அதில் எப்படி துவைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். காட்டன் துணிகளை வேண்டுமானால் சுடுநீரில் அலசலாம். மற்ற துணிகளாக இருந்தால் சுடுநீர் உபயோகிக்கலாமா? என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. ஒருவேளை சுடு நீர் பயன்படுத்துவதாக இருந்தால் ஆடையின் ஒரு பகுதியை அதில் 5 நிமிடங்கள் முக்கி பரிசோதிக்கலாம். அப்போது ஆடையில் சுருக்கமோ, நிறம் மாறுதலோ தென்பட்டால் சுடுநீர் பயன்படுத்துவதை அறவே தவிர்த்துவிட வேண்டும். சுடு நீரில் துவைக்கும் தன்மை கொண்ட துணியாக இருந்தாலும் 10 நிமிடங்களுக்கு மேல் சுடு நீரில் ஊறவைக்கக்கூடாது.

    ஏனெனில் எந்த துணியாக இருந்தாலும் சுடுநீரில் அதிக நேரம் ஊறவைத்தால் சுருங்கிவிட தொடங்கிவிடும். சுடு நீருக்கு பதில் வெதுவெதுப்பான நீரை உபயோகிக்கலாம். அது துணியின் ஆயுளை பாதுகாக்கும். ஆடைகளில் படியும் கறைகளை போக்குவதற்கு சுடு நீருக்கு மாற்றாக வினிகர் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

    உடல்நல பாதிப்புக்குள்ளானவர்களின் ஆடைகளை துவைப்பதற்கு சுடு நீர் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் கிருமிகளை கொல்வதற்கு சுடு நீர் உதவும். பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றை சுடு நீர் பயன்படுத்தி சுத்தம் செய்வதும் நல்லது.

    • மேக்கப்பை நாம் கவசமாகப் பயன்படுத்தும்போது, நம்மைத் திறமையானவர்களாக வெளிக்காட்ட முடியும்.
    • நாம் போடும் மேக்கப் நமது ஆளுமையை வெளிப்படுத்தும்.

    'ஒப்பனை' என்பது தோற்றத்தை அழகாக எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல. நீங்கள் விரும்பும் விதத்தில் உங்களை உருவாக்குவதும் தான். நாம் போடும் மேக்கப்பை, நமது ஆளுமையை வெளிப்படுத்தும் கருவியாக மாற்றுவது எவ்வாறு என்பதைப் பற்றி பார்ப்போம்

    கண்கள்: கண்கள் மனதின் ஜன்னல்கள். எனவே, கண்களைச் சுற்றி செய்யும் அலங்காரம், நமது மனதின் ஆழத்தில் உள்ள சாயல்களை வெளிப்படுத்தும். பெரும்பாலான இளம்பெண்கள் அணியத் தொடங்கும் முதல் அழகுசாதனப் பொருள் கண் மை (காஜல்). கண்களுக்கு செய்யும் ஒப்பனைக்கு முகத்தை மாற்றும் சக்தி உள்ளது. ஐ லைனர்கள் முதல் ஐ ஷேடோக்கள் வரை, நீங்கள் விரும்பும் அழகான கண் தோற்றத்தை உருவாக்க பல அழகு சாதனங்கள் உள்ளன.

    முகம்: கண்களுக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது முகம்தான். லேசான மேக்கப் மட்டும் இருந்தாலே, முகத்தை அழகாக எடுத்துக் காட்டலாம். குறைவாக ஒப்பனை செய்யும் போது, முகம் பிரகாசமாக மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடனும் வெளிப்படும். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், நம் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்தல். இது முகத்தின் அழகை மெருகூட்டிக் காட்டும்.

    லிப்ஸ்டிக்: முகத்தில், நாம் உதிர்க்கும் புன்னகையை தன்னம்பிக்கையுடன் வெளியே பிரதிபலிக்க உதட்டை அழகாக வைத்திருப்பது அவசியம். வறட்சியுடனோ, வெடிப்புடனோ உதடு இருந்தால், பல பாதிப்புகள் ஏற்படும். உதட்டை எப்போதும் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைக்க 'லிப் பாம்' பயன்படுத்தலாம். ஒப்பனைக்கேற்ப லிப்ஸ்டிக் நிறத்தைத் தேர்வு செய்யலாம். சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாய் பிரதிபலிக்க முடியும்.

    நகப்பூச்சு: நகங்களுக்கு நாம் தேர்ந்தெடுக்கும் நகப்பூச்சு, நம் எண்ணங்களின் பிரதிபலிப்பாக மாறும். சிவப்பு நிறம் பூசும்போது, அது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும். பிறர் மீதான கோபத்தின் வெளிப்பாட்டுக்கு கறுப்பு நிறத்தையும் பயன்படுத்தலாம். மற்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுக்கு வானவில்லின் பிற நிறங்களைப் பயன்படுத்தலாம். இந்த வண்ணக் குறியீடு, உங்கள் ஆற்றலின் அளவை வெளிப்படுத்தும். அழகு, ஒப்பனை, தோல் பராமரிப்பு மற்றும் சுய பாதுகாப்பு போன்றவை பெண்களுக்கு முக்கியமானவை.

    'மேக்கப்' நம் அழகை வெளிக்காட்ட உதவும் ஓர் ஆயுதம். இதனால், பெண்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர முடியும். இது உங்களின் ஆளுமையை மீட்டெடுப்பதற்கான சிறந்த வழியும் ஆகும். மேக்கப்பை நாம் கவசமாகப் பயன்படுத்தும்போது, நம்மைத் திறமையானவர்களாக வெளிக்காட்ட முடியும். கச்சிதமாக ஒப்பனை செய்வதற்கு நாம் செலவழிக்கும் 10 நிமிடம் என்பது நமக்கான தியானம் போன்றது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் ஒருவர் தனக்காக சிறிது நேரம் ஒதுக்க ஒப்பனை சிறந்த வழியாகும்.

    • இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பளபளக்கும் சருமத்தை பெறலாம்.
    • இந்த பொருட்கள் உடனடி பலன் தராது.

    இயந்திரகதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை சூழலில் சருமத்தை பொலிவுடன் பராமரிப்பது எளிதல்ல. விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை கொண்டுதான் சருமத்திற்கு பொலிவும், அழகும் சேர்க்க முடியும் என்றில்லை. இயற்கை பொருட்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் பளபளக்கும் சருமத்தை பெறலாம். இந்த பொருட்கள் உடனடி பலன் தராது. சருமத்தில் மாற்றங்கள் நிகழ்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் நிரந்தரமாக சரும பொலிவை மேம்படுத்திவிடும்.

    தேன்:

    எந்த வகையான சருமமாக இருந்தாலும் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கும், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதற்கும் தேன் சிறந்த பொருள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். சரும நலன் காக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். சிறிதளவு தேனை சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவிவிடலாம். சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு இறந்த சரும செல்களை அகற்றவும் தேன் உதவும்.

    மஞ்சள்:

    மஞ்சளில் உள்ளடங்கி இருக்கும் குர்குமின் இயற்கையான ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது சருமத்திற்கு பளபளப்பை தருவதோடு மட்டுமல்லாமல் வீக்கத்தைப் போக்கவும், சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்யவும் உதவும். இரண்டு டேபிள்ஸ்பூன் உளுந்து மாவுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சில துளிகள் ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும். அதனை முகம் மற்றும் கழுத்தில் பூசிவிட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

    தேங்காய் எண்ணெய்:

    நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதற்கும், தோல் மறுசீரமைப்புக்கும், விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுப்பதற்கும் துணைபுரியும் சிறந்த இயற்கை மூலப்பொருளாக தேங்காய் எண்ணெய் விளங்குகிறது. வறண்ட சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் செயல்படக்கூடியது. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து சருமத்தில் இறந்த செல்களை நீக்க உதவும் ஸ்கிரப்பராக பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி சருமத்தில் வட்ட வடிவத்தில் மசாஜ் செய்துவிட்டு இரவில் அப்படியே தூங்கிவிடலாம். காலையில் எழுந்ததும் முகத்தை குளிந்த நீரில் கழுவி விடலாம்.

    கற்றாழை:

    எங்கும் எளிதாக வளரக்கூடிய கற்றாழை, பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இது, சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் பண்புகளையும் கொண்டது. புதிய சரும செல்களின் வளர்ச்சியை தூண்டக்கூடியது. சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை கொடுக்க வல்லது. மஞ்சள், தேன், பால் மற்றும் தண்ணீர் ஆகியவற்றுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம். சுமார் 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் சருமம் பொலிவடையும்.

    பேக்கிங் சோடா:

    இதுவும் இறந்த சரும செல்களை அகற்ற உதவும். சருமத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஆன்டிபாக்டீரியாக்கள் இதில் உள்ளன. வெதுவெதுப்பான நீர், தேன், ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் பேக்கிங் சோடாவை கலந்து பசை போல் குழைத்து முகத்தில் மென்மையாக தடவி மசாஜ் செய்யலாம். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

    பப்பாளி:

    பப்பாளியில் காணப்படும் பப்பெய்ன் என்ற நொதி, சரும பொலிவை மீட்டெடுக்க உதவும். கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும். பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ, பாப்பைன் போன்றவை சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதத்தை தக்கவைக்க துணைபுரியும். முதலில் பாலை கொண்டு முகத்தை நன்றாக கழுவவும். பின்பு அரை பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம். சருமம் பொலிவுடன் மின்னுவதை காணலாம்.

    வெள்ளரிக்காய்:

    உணர்திறன் மற்றும் முகப்பரு பாதிப்புள்ள சருமம் உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் மிகவும் உதவியாக இருக்கும். வெள்ளரிக்காய் சாறை `மாஸ்க்'ஆக பயன்படுத்தலாம். வீக்கத்தைத் தவிர்ப்பதற்காக துண்டுகளை கண்களில் வைக்கலாம். உங்கள் சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க சருமத்தில் தேய்க்கலாம். வெள்ளரிக்காயை துருவி அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தில் தடவி 5 நிமிடம் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

    ஆலிவ் எண்ணெய்:

    ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. பொதுவாகவே ஆலிவ் எண்ணெய் மாய்ஸ்சுரைசராக செயல்பட்டு சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்க உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. ஆலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து சருமத்தில் வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்யலாம். ஐந்து நிமிடங்கள் கழித்து துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவுடன் மிளிர தொடங்கும்.

    சர்க்கரை:

    இறந்த சரும செல்களை நீக்குவதற்கு சர்க்கரை சிறந்த பொருளாக கருதப்படுகிறது. இறந்த செல்களை நீக்குவதோடு சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் அசுத்தங்களை நீக்கி இழந்த பொலிவை மீட்டெடுக்கவும் உதவும். பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட கிரீமுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்தில் மென்மையாக தடவி மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

    எலுமிச்சை:

    எலுமிச்சையில் இயற்கையாகவே வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் படர்ந்துள்ள எண்ணெய் பசைத்தன்மையை குறைக்க உதவும். சருமத்தை மேலும் பளபளப்பாக்கும் தன்மையும் கொண்டது. எலுமிச்சையை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்து சருமத்தில் தடவ வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வரலாம்.

    • வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும்.
    • கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையத்திற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும்.

    மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்டது வால்நட். காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. பல்வேறு நன்மைகளை தரும் வால்நட், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.

    சுருக்கம் மற்றும் வறட்சி: வால்நட் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி, கீழிருந்து மேல் நோக்கியவாறு வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் எண்ணெய் ஊடுருவி, சுருக்கங்களை நீக்கி, இளமை தோற்றத்தை மீட்டுத்தரும். இரவில், இந்த எண்ணெய்யை நன்றாகத் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதமாகும்.வால்நட் எண்ணெய்யைக் குளிக்கும் தண்ணீரில் சிறிது சேர்த்துக் குளித்து வந்தால், சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகளுடன் ஏற்படும் அழற்சி பிரச்சினை தீரும்.

    சருமத் தொற்று மற்றும் கருவளையம்: வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை குணப்படுத்த, வால்நட் எண்ணெய்யை ஏதேனும் ஒரு மூலிகை எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரலாம். பெண்கள் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது, கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையம்தான். இதற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும். இதை கண்களைச் சுற்றித் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், சில நாட்களிலேயே கருவளையம் மறையும். இதில், உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தின் இளமையை தக்கவைக்கும் தன்மை கொண்டவை.

    அரிப்பு மற்றும் பொடுகு: குளிப்பதற்கு முன்பு வால்நட் எண்ணெய்யை இளம் சூட்டில் உடலில் தடவிக் குளித்தால், பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் குறையும். வால்நட் எண்ணெய்யை தலைப்பகுதியில் உள்ள சருமத்தில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

    முடி வளர்ச்சி: வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெயை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும். இதுதவிர, புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வால்நட் எண்ணெய்யில் இருக்கும் சத்துக்களுக்கு உண்டு. தினமும் வால்நட்டை சாப்பிடுவதால், புற்றுநோய் பாதிப்பு 15 சதவீதம் குறைவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றலும் வால்நட் எண்ணெய்க்கு உள்ளது.

    • இளமையான தோற்றத்திற்கு சரும அழகு மட்டும் அல்லாது கூந்தலின் நிறமும் பங்கெடுக்கின்றது.
    • வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர்டை தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.

    கூந்தல் உதிர்வு, கூந்தல் மெலிவு, நுனி பிளவு போன்ற பிரச்சனைகளை விட நரைமுடி வந்து விட்டால் உடற் தோற்றத்தில் திடீரென அதிகமான மாற்றம் ஏற்படுகின்றது. கண்ட கண்ட இராசாயனப் பொருட்களாலான ஹேர் டைகளை பயன்படுத்தி இருப்பதையும் கெடுத்துக் கொள்ளாமல் இப்படியான இயற்கை ஹேர் டைகளை பயன்படுத்துக் கொள்வோம்.

    நரைமுடியை போக்க பீட்ரூட்டில் இயற்கை ஹேர் டைஎப்படி செய்வது என பார்ப்போம்.

    தேவைப்படும் பொருட்கள்

    இது ஒரு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஹேர் டை. இதனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும்.

    கறிவேப்பில்லை – ஒரு கப்

    சிவப்பு செம்பருத்தி பூ – 10

    எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

    தண்ணீர் – 200 மில்லி

    பீட்ருட் – ஒன்று

    காபி தூள் – மூன்று ஸ்பூன்

    செய்முறை

    அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைக்கவும். அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். தண்ணீர் நன்றாக சூடாகியதும், அவற்றில் மூன்று ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். காபித்தூள் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது நன்றாக நுரை கிளம்பும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய பீட்ருட், கறிவேப்பிலை, சிகப்பு செம்பருத்தி பூ சேர்த்து தண்ணீர்விடாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த கலவையை காபித்தூள் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு 10 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

    இந்த கலவை ஒரு மணி நேரத்துக்குள் நன்றாக ஆறிவிடும் என்றாலும், குறைந்தது 12 மணி நேரம் வரை வைத்திருந்த பின்பு தான் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.

    எனவே இந்த பீட்ருட் ஹேர் டையை மாலை நேரங்களில் தயாரித்து, மறுநாள் காலையில் பயன்படுத்துவது உகந்தது. கருமையான நிறத்தை பெற பலதடவை பயன்படுத்த வேண்டும்.

    இயற்கை ஹேர் டை தயாரிக்க முடியாதவர்கள், சந்தையில் விற்பனையில் உள்ள இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டைகளை பயன்படுத்தலாம்.

    • கனம் குறைந்த சந்தேரி சில்க் புடவைகள் இன்றைய இளம்பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.
    • ஸ்டிரெயிட் குர்தா(Straight Kurta)க்களை அனைத்து உடல்வாகுடைய பெண்களும் அணியலாம்.

    நம் நாட்டுப் பெண்கள் அணியக்கூடிய பாரம்பரிய உடைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் முக்கிய இடத்தைப் பிடிப்பது புடவைகளாகத்தான் இருக்கும்.

    பெண்களுக்கான சமீபத்திய மற்றும் அழகான இந்திய ஆடை வடிவமைப்புகள் புடவைகள், குர்தா செட், லெஹங்கா சோளி, சல்வார் கமீஸ், சுரிதார் உடைகள் இந்திய ஸ்டைல் ​​கவுன்கள், பாரம்பரிய உடகள், பாவாடைகள், குர்தா பைஜாமா, பலாஸ்ஸோ உடைகள், பாட்டியாலா சூட், ஹரேம் சூட், ஷராரா சூட், டோத்தி சூட்

    சமகாலத்திய புடவைகள்

    * காஞ்சீவரப் பட்டுப்புடவைகள்: கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவை இந்த காஞ்சீவரப் பட்டுப்புடவைகள். காஞ்சீவரப் பட்டுப் புடவைகளிலும் இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றார்போல் பலவிதமான டிசைன்களும், பாணிகளும் வந்துவிட்டன.கதை பேசும் புடவைகள் என்று சொல்லும் அளவுக்கு ஏதாவது ஒரு கருவை புடவையில் கொண்டுவந்து நெய்கிறார்கள்.காஞ்சிவரம் புடவைகள் என்றாலே மிகவும் கனமாக இருக்கும் என்று சொல்வதற்கு மாறாக இப்பொழுது லைட் வெயிட் புடவைகளும் வந்துவிட்டன.

    * பனாரஸ் பட்டு புடவைகள்: புனித நகரமான வாரணாசியை பிறப்பிடமாகக் கொண்டவை பனாரஸ் பட்டு புடவைகள். இந்தப் புடவைகள் ஆடம்பரமான மற்றும் சிக்கலான வடிவமைப்புக்கு பெயர் பெற்றவையாகும்.. பாரம்பரிய பனாரஸ் புடவைகள் மிகவும் கனமானவை மற்றும் விலை உயர்ந்தவை. இப்பொழுது வரும் பனாரஸ் சேலைகள் கண்கவர் டிசைன்களில் கனம் குறைந்தவையாக வருகின்றன.

    * சந்தேரி சில்க் புடவைகள்: கனம் குறைந்த சந்தேரி சில்க் புடவைகள் இன்றைய இளம்பெண்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது.அலுவலகம் மற்றும் வீட்டில் அன்றாடம் உடுத்தக்கூடிய வசதியான புடவைகளாக இவை இருக்கின்றன.

    * சீக்வின் ஷிஃபான் புடவைகள்: மிகவும் கனம் குறைந்த அதே நேரத்தில் ஆடம்பர தோற்றத்தை தரக்கூடிய இந்த புடவைகளின் ரகத்திலேயே பெரும்பாலான பார்ட்டி புடவைகள் வருகின்றன.இந்த புடவைகளில் பலவிதமான எம்பிராய்டரி மற்றும் சம்கி வேலைப்பாடுகளுடன் வரும் புடவைகள் இன்றைய இளம் பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.இந்த புடவைகளிலேயே நீளமான கவுன்களை தைத்து அணிந்து கொள்வதும் இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

    குர்த்தாக்கள்

    * நவீன ஹை-லோ அனார்கலி குர்தா: முகலாய தோற்றம் கொண்ட அனார்கலி குர்த்தாக்கள் மார்பு பகுதியில் இறுக்கிப் பிடித்து இடுப்பிலிருந்து பரந்த ஃப்ளேர்களை கொண்டவையாக இருக்கும்.பாரம்பரிய அனார்கலி குர்திகள் எம்பிராய்டரி மற்றும் மிகவும் கனமான அலங்காரங்களை கொண்டவையாகும்..இப்பொழுது வரும் ஹை- லோ குர்திகள் மிகவும் ட்ரெண்டிங் ஆடையாக இருக்கின்றன. காட்டன், ஷிஃபான்,பட்டு, ஜார்ஜெட் என அனைத்து விதமான துணிகளிலும் கல்லூரி, அலுவலகம் மற்றும் சிறு விழாக்களுக்கு அணிந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.

    * A-லைன் குர்தா: A-லைன் வடிவத்துடன் பரந்த அடிப்பாகத்தை கொண்ட இவ்வகைக் குர்த்தாக்கள் அனார்கலி ஆடைகளுக்கு மாற்று என்று சொல்லலாம்.இந்த பிரபலமான நவீன பாணி ஆடைகள் தினசரி முதல் எப்போதாவது அணிவது வரை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு ஏராளமான மாடல்களில் வருகின்றன.இவை கணுக்கால் வரை இருக்கும் லெகிங்களுடன் அணிய ஏற்றவை..

    * பிரிண்டட் ஸ்டிரெயிட் குர்தா: பல ஆண்டுகளாக பெண்கள் அன்றாடம் அணியும் ஆடைகளில் இவை முதலிடம் பிடித்தவை என்றால் அது மிகையாகாது. லெக்கின்ஸ், பலாஸ்ஸோ, ஜீன்ஸ் என பலவிதமான கால்சட்டைகளுடன் அணிவதற்குப் பொருத்தமானவை இவை.கலம்காரி, இக்கத்,ஃபிளோரல்,ஜியாமெட்ரிகல் மற்றும் டிஜிட்டல் பிரிண்ட்களுடன் வரும் இந்த ஸ்டிரெயிட் குர்தாக்களை அனைத்து உடல் வாகுடைய பெண்களும் அணியலாம்.

    * லேயர்ட் குர்தா: ஒரே குர்த்தாவில் பல லேயர்கள் வருவது போல வடிவமைக்கப்பட்டு வருவது இப்பொழுது மிகவும் பிரபலமான பாணியாக உள்ளது. பெரும்பாலும் உட்புறம் வரும் லேயர்பிளெயின் கலரிலும் வெளிப்புறம் வரும் லேயர்கள் பிரிண்ட்களுடன் வருவது போலவும் வடிவமைக்கிறார்கள்.சில குர்தாக்களில் சுங்கங்கள் தொங்குவது போன்று தைய்த்திருப்பது கூடுதல் அழகைத் தருகின்றது.கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாக இவை இருக்கின்றன.

    * சிக்கன்காரி குர்தா: லக்னோவின் வர்த்தக முத்திரைக்கு பெயர் பெற்றவை என்றால் அவை சிக்கன்காரி குர்தாக்களாகத்தான் இருக்க முடியும். பருத்தி, பட்டு மற்றும் ஷிஃபான் துணிகளில் வரும் இந்த ஆடைகளில் நுட்பமான நூல் வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.இவை பெரும்பாலும் வெள்ளை, வெளிர் நீலம், வெளிர் பச்சை, இளஞ்சிவப்பு, இளம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களிலேயே வருகின்றன.கழுத்து, கைகள் மற்றும் ஹெம்லைன் ஆகியவற்றில் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வரும் இந்த சிக்கன்காரி ஆடைகளுக்கு எப்பொழுதுமே பெண்களிடம் மவுசு அதிகம் என்று சொல்லலாம்.அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு இவை ஏற்றவையாக இருக்கின்றன. பாட்டியாலா, லெகிங் மற்றும் நேரான பேண்ட்களுடன் அணிய ஏற்றவை.

    லெஹங்கா சோளி

    ரஃபிள்டு துப்பட்டாவுடன் வரும் மென்மையான நெட்டட் லெஹங்கா, எம்ப்ராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா கமீஸ்,ஃபாயில் பிரிண்ட்டுடன் கூடிய துடிப்பான வண்ணங்களில் வரும் லெஹங்கா, ஹெவி பிரைடல் எம்ப்ராய்டரி லெஹங்கா,ஸ்டைலான லெஹங்கா சோளி என லெஹங்காக்களில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் மிகவும் டிரெண்டாகவும், அசத்தலாகவும் வந்திருக்கின்றன.

    • பெண்கள் அணியும் துப்பட்டா, அவர்களுக்கு கூடுதல் அழகை தரக்கூடியது.
    • துப்பட்டாவை பலவிதமான முறைகளில் அணிய முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே.

    உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும். ஆடைக்கு ஏற்றவாறு பெண்கள் அணியும் துப்பட்டா, அவர்களுக்கு கூடுதல் அழகையும், பாதுகாப்பையும் தரக்கூடியது. இதை ஒரே மாதிரியாக அணியாமல், பலவிதமான முறைகளில் அணிய முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே.

    பின்னல் அமைப்பு ஸ்டைல்: உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும். அந்த இடைவெளி வழியாக துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் இழுக்க வேண்டும். பின்பு அவற்றை இன்னொரு முறை சுழற்றி அவற்றில் துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் இழுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் 'பின்னல்' போன்ற அமைப்பில் துப்பட்டாவை அணியலாம்.

    டபுள் பந்தனா ஸ்டைல்: இந்த ஸ்டைலில் சதுர அல்லது செவ்வக வடிவில் நான்கு முனைகளுடன் இருக்கும் துப்பட்டாவை, எதிரெதிர் முனையுடன் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது துப்பட்டா முக்கோண வடிவத்திற்கு வரும். பிறகு துப்பட்டா மடிக்கப்பட்ட இடத்தில் உள்ள நேரெதிர் முனைகளை முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். வளையம் போன்ற அமைப்பை கழுத்தில் அணிந்து கொண்டு அதனை சுழற்றி திருப்பி தலையில் அணிந்து கொள்ள வேண்டும். பின்பக்கமாக சென்ற துப்பட்டாவை, முன்புறமாக மாற்றிக் கொண்டால் 'டபுள் பந்தனா' டிசைன் தயார்.

    பிரெஞ்சு வளைவு ஸ்டைல்: பெண்களை மிகவும் கவர்ந்த ஸ்டைலான இதை செய்வதற்கு, துப்பட்டாவை இரண்டாக மடித்து கழுத்தில் அணிய வேண்டும். பிறகு, ஒரு பக்கத்தில் வரும் வளையத்தில், அதாவது ஓட்டையில் மறுபக்கத்தில் உள்ள துப்பட்டாவின் இரண்டு முனைகளில் ஒரு முனையை இழுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வளையத்தில் மற்றொரு முனையையும் உள்ளிழுத்தால், அழகான 'பிரெஞ்சு வளைவு' தயாராகிவிடும்.

    பின்புற முடிச்சு 'கோட்' ஸ்டைல்: நீளமான துப்பட்டாவை, முதுகுக்கு பின்புறமாக தோள்பட்டையில் கைகளைக் கட்டுவது போல நன்றாக முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு முடிச்சு போட்ட இடத்தை மறைய வைக்கும் படி துப்பட்டாவை தோள் வரை இழுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் துப்பட்டா முன்புறமாக பார்க்கையில், கோட் அணிந்ததுபோல அழகான காட்சியை ஏற்படுத்தும்.

    பெல்ட் கேப் ஸ்டைல்: பெரிதாக இருக்கும் துப்பட்டாவை முக்கோண வடிவில் மடித்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இரு பக்கத்திலும் உள்ள துப்பட்டாவை ஒன்றின் மேல் ஒன்று வைத்து துப்பட்டாவின் நிறத்திற்கேற்ற பெல்டை இடுப்பு பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்டைல், பல பெண்களால் விரும்பி அணியப்படுகிறது.

    ×