என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    மாலையில் குழந்தைகளுக்கு டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, இன்று சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 2 கப்
    சாக்லேட் க்ரீம் பிஸ்கட் - 3
    க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் - 1
    சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன்

    செய்முறை :


    * முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்த பின் குளிர வைக்கவும்.

    * மிக்சியில் பாலை ஊற்றி, அத்துடன் க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    * அதன் பின் அதில் க்ரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ளவும்.

    * பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பருகவும்.

    * சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பன்னீர் பீட்சாவை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்சா பேஸ் - ஒன்று
    பன்னீர் - ஒரு பாக்கெட்
    சீஸ் - 50 கிராம்
    வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று
    தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத் தூள் - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - 4

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சீஸை நன்கு துருவிக் கொள்ளவும்.

    * பன்னீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    * காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக எடுத்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும்.

    * பீட்சா பேஸில் முதலில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

    * அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும்.

    * பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.

    * வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.

    * அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, கொரகொரப்பாக பொடித்த மிளகாயைத் தூவவும்.

    * கடைசியாக அதன் மீது சீஸைத் தூவவும்.

    * இப்போது இதை மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்..

    * சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.

    * மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் தோசை தவாவை அடுப்பில் மிதமான தீயில் வைத்து செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாரம் ஒருமுறை எலும்பு ரசம் உடலுக்கு நல்லது. எலும்பு ரசம் செய்யும் போது துவரம் பருப்பு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
    தேவையான பொருள்கள் :

    மட்டன் எலும்பு - 1/2 கிலோ
    துவரம் பருப்பு - 100 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 10
    வத்தல் மிளகாய் - 10
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    பட்டை - 4
    பிரியாணி இலை - 1
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மட்டன் எலும்பு, துவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    * பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, பச்சைமிளகாய், வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,

    * அனைத்தும் நன்றாக வதங்கியதும் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    *  இப்போது சுவையான துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நெல்லை மாவட்டங்களில் இந்த மீன் குழம்பு மிக பிரபலம். இந்த மீன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாளை மீன் - 20
    புளி - எலுமிச்சை அளவு
    பச்சை மிளகாய் -1
    பூண்டு - 4 பல்

    வறுத்து அரைக்க :

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் -  கால் கப்
    சின்ன வெங்காயம் - 15
    மிளகு - 10
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    தாளிக்க :

    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 5
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை :

    * மீனை செதில் நீக்கி தலை வயிறு, பகுதி கழிவை நீக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டவும்.

    * புளியை கரைத்து வைக்கவும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், மிளகு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * வறுத்து அரைத்த விழுதுடன் தேவைக்கு தண்ணீர், புளித்தண்ணீர், உப்பு, கீறிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து மண் சட்டியில் கொதிக்க வைக்கவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.

    * பச்சை வாடை போனவுடன் அதில் சாளை மீனை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.  

    * ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் காயவிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி தயாரான மீன் குழம்பில் சேர்த்து கலந்து அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கி பரிமாறவும்.

    * சுவையான வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு ரெடி.

    * இந்த மீன் குழம்பை மண் சட்டியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பூ வடை சாப்பிட்டு இருப்பீர்கள். இப்போது வாழைப்பூ போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்து - கால் கிலோ
    வாழைப் பூ - ஒன்று (நடுத்தரமான அளவு)
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
    கறிவேப்பிலை - ஓரு கொத்து
    தேங்காய் - அரை கப்
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை :

    * உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

    * தேங்காயுடன் மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    * வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து மாவை போட்டு அதனுடன் அரைத்த தேங்காய், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான வாழைப்பூ போண்டா தயார். தேங்காய் சட்னிடன் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை சன்டே ஸ்பெஷல் நண்டு குழம்பு செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ
    வெங்காயம் - 1 (பெரியது)
    தக்காளி - 3 (நடுத்தரஅளவு)
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லித் தழை - 1 மேஜைக்கரண்டி
    கரம்மசாலாதூள் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையானஅளவு
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    சோம்பு - தாளிக்க

    அரைக்க :

    தேங்காய் துருவல் - 1/2 கப்
    கசகசா - 1 மேஜைக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி

    செய்முறை :

    * நண்டினை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் சேர்த்து மிக்சியில் அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    * அடுத்து தேஙகாய் துருவல், கசகசா, சோம்பு, மிளகு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் அரைத்த வெங்காயம் தக்காளி விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதிலுள்ள எண்ணெய் முழுவதும் வெளியேறும் வரை வதக்கவும்.

    * அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * பின்பு சுத்தம் செய்த நண்டை சேர்த்து நன்றாக கிளறவும். நண்டில் தண்ணீர் இருக்கும்.

    * அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, தண்ணீர் சேர்த்து மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    * ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சூப்பரான நண்டு குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் மிளகு கிரேவியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - கால் கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று
    புதினா - 2 கொத்து
    இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    சோம்பு - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை - பாதி
    மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - அரை மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கல் உப்பு - சுவைக்கு
    தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புதினாவை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.

    * மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் அம்மியில் வைத்து ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    * மட்டனை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு 8 விசில் போட்டு வேக வைக்கவும்.  

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையை போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். வெங்காயத்தின் நிறம் சற்று மாறும் வரை வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கியதும் அதில் புதினா மற்றும் நறுக்கின தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விடவும்.

    * பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அதன் பிறகு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கறியை போட்டு கிளறி விடவும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்திருக்கும் விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு மிளகாய் வாசனை போகும் வரை பிரட்டவும்.

    * அடுத்து அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடலாம்.

    * 10 நிமிடம் கழித்து மட்டன் திக்காக ஆனதும் ஒரு முறை கிளறி விட்டு மேலே கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

    * சன்டே ஸ்பெஷர் மட்டன் மிளகு கிரேவி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மட்டன் கீமா தோசை. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - 1 கப்
    உளுத்தம் பருப்பு - 1/2 கப்
    மட்டன் கீமா - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பட்டை - 1
    கிராம்பு - 2
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் தோசை மாவு பதத்திற்கு அரைத்து, உப்பு சேர்த்து கரைத்து 5 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டன் கீமாவை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    * பின்பு மட்டன் கீமா, மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். வேண்டுமெனில், அதில் சிறிது எண்ணெயை சேர்த்து மட்டனை வேக வைக்கலாம். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    * தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    * சுவையான மட்டன் கீமா தோசை ரெடி!!!

    * இந்த தோசைக்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பரோட்டாவிற்கு மஷ்ரூம், சிக்கன் சேர்த்து குருமா செய்வதால் சூப்பராக இருக்கும். இப்போது அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பட்டன் காளான் - 200 கிராம்
    சிக்கன் - 250 கிராம் (எலும்பு இல்லாதது)
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - கால்டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி, புதினா - சிறிது
    தேங்காய் - 3 பத்தை
    முந்திரி - 10
    மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
    சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
    மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை :

    * ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மற்றொரு வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.

    * காளானை கொதிக்கும் நீரில் போட்டு அலசி, நறுக்கி வைக்கவும்.

    * சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

    * அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

    * அத்துடன் சிக்கன், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    * சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் காளான் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * நன்கு கொதி வந்தவுடன் அரைத்த வைத்துள்ள விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

    * அடுப்பை சிம்மில் வைத்து குருமா நன்றாக கொதித்து கிரேவி பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    * சுவையான சிக்கன் - காளான் குருமா ரெடி.

    * சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் வகைகளுடனும் பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் மழை பெய்யும் போது சூடாக போண்டா செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இன்று மைதா மாவு போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 1 கப்
    இட்லி மாவு - 1 /2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லித்தழை - சிறிது
    ஆப்ப சோடா - சிறிது
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, இட்லி மாவு, உப்பு, ஆப்ப சோடா, வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலக்கவும்.

    * இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தை விட சற்று குழைவாகப் பிசைந்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் சூடானதும் அதில் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்..

    * சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா மாவு போண்டா ரெடி.

    * தக்காளி சாஸ், தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மீன் - அரை கிலோ
    உருளைக்கிழங்கு - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - 200 கிராம்
    பூண்டு - 10 பல்
    தக்காளி - 4
    பச்சைமிளகாய் - 8
    மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
    மல்லித்தூள் - 3 ஸ்பூன்
    புளி - எலுமிச்சைபழம் அளவு
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்
    சீரகம் - 1/2 ஸ்பூன்
    சோம்பு - 1/2 ஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

    செய்முறை :

    * மீனை சுத்தம் செய்து அதில் மஞ்சள்தூள் தடவி வைக்கவும்.

    * உருளைக்கிழங்கை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து உருளைக்கிழங்கை போட்டு வதக்கி அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

    * பிறகு புளிக் கரைசலை (குழம்புக்கு தேவையான தண்ணீரை புளித்தண்ணீருடன் சேர்த்து ஊற்றவும் ) ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    * உருளைக்கிழங்கு வெந்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் மீனை போட்டு ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

    * சூப்பரான உருளைக்கிழங்கு மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் டிக்காவை விட கிரீன் சிக்கன் டிக்கா சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ
    பச்சை மிளகாய்  - 4
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
    புதினா - 2 கைப்பிடி
    கொத்தமல்லி - 1 கைப்பிடி
    எலுமிச்சை சாறு - பாதி
    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
    நெய் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கொத்தமல்லி அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.

    * சிக்கனுடன் அரைத்த விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊற வைக்கவும்.

    * ஊறிய சிக்கனை மைக்ரோவேவ் ஓவனில் க்ரில் செய்து எடுக்கவும்.

    * மைக்ரோவேவ் ஓவன் இல்லையெனில், பேனில் நெய் விட்டு, மிதமான சூட்டில் சிக்கனை போட்டு வேக விட்டு எடுக்கவும்.

    * சுவையான கிரீன் சிக்கன் டிக்கா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×