என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    ஸ்பெஷல் மட்டன் மிளகு கிரேவி
    X

    ஸ்பெஷல் மட்டன் மிளகு கிரேவி

    நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் மிளகு கிரேவியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - கால் கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று
    புதினா - 2 கொத்து
    இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    சோம்பு - அரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை - பாதி
    மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - அரை மேசைக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கல் உப்பு - சுவைக்கு
    தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புதினாவை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.

    * மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் அம்மியில் வைத்து ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    * மட்டனை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு 8 விசில் போட்டு வேக வைக்கவும்.  

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையை போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். வெங்காயத்தின் நிறம் சற்று மாறும் வரை வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கியதும் அதில் புதினா மற்றும் நறுக்கின தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விடவும்.

    * பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அதன் பிறகு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கறியை போட்டு கிளறி விடவும்.

    * அடுத்து அதில் அரைத்து வைத்திருக்கும் விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு மிளகாய் வாசனை போகும் வரை பிரட்டவும்.

    * அடுத்து அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடலாம்.

    * 10 நிமிடம் கழித்து மட்டன் திக்காக ஆனதும் ஒரு முறை கிளறி விட்டு மேலே கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

    * சன்டே ஸ்பெஷர் மட்டன் மிளகு கிரேவி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×