என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம்
    X

    துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம்

    வாரம் ஒருமுறை எலும்பு ரசம் உடலுக்கு நல்லது. எலும்பு ரசம் செய்யும் போது துவரம் பருப்பு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
    தேவையான பொருள்கள் :

    மட்டன் எலும்பு - 1/2 கிலோ
    துவரம் பருப்பு - 100 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 10
    வத்தல் மிளகாய் - 10
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    பட்டை - 4
    பிரியாணி இலை - 1
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மட்டன் எலும்பு, துவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    * பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, பச்சைமிளகாய், வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்,

    * அனைத்தும் நன்றாக வதங்கியதும் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    *  இப்போது சுவையான துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×