என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சூப்பரான மட்டன் கீமா தோசை செய்வது எப்படி
    X

    சூப்பரான மட்டன் கீமா தோசை செய்வது எப்படி

    தோசைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மட்டன் கீமா தோசை. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - 1 கப்
    உளுத்தம் பருப்பு - 1/2 கப்
    மட்டன் கீமா - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பட்டை - 1
    கிராம்பு - 2
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் தோசை மாவு பதத்திற்கு அரைத்து, உப்பு சேர்த்து கரைத்து 5 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டன் கீமாவை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    * பின்பு மட்டன் கீமா, மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். வேண்டுமெனில், அதில் சிறிது எண்ணெயை சேர்த்து மட்டனை வேக வைக்கலாம். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    * தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    * சுவையான மட்டன் கீமா தோசை ரெடி!!!

    * இந்த தோசைக்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×