என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 2 சிறியது
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - மிகச் சிறிய துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க :
தேங்காய்த் துருவல் - கால் கப்
முந்திரிபருப்பு - 10
செய்முறை :
* மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி அதில் மஞ்சள் தூள் கால்டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரைடீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் அதில் ஊற வைத்த மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக்கி வைக்கவும்.
* மிக்சியில் தேங்காய் துருவல், முந்திரியை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
* அடுத்து நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும்.
* தக்காளி நன்கு வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அப்போது தான் மசாலா வாடை போகும்.
* இப்போது நறுக்கி வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்க விடவும்.
* அடுதது அரைத்த தேங்காய் விழுது, தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க வைக்கவும்.
* நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்க்கவும்.
* ரெடியான குருமாவில் பொரித்த மீனை போடவும். உப்பு சரி பார்க்கவும். சிம்மில் இரண்டு நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
* சுவையான மீன் - உருளைக்கிழங்கு குருமா ரெடி.
* ரைஸ், சப்பாத்தி, ஆப்பத்துடன் பரிமாற சூப்பராக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

மாலையில் சூடாக சாப்பிட சுவையான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவா - 1 கப்
மைதா - 1 கப்
சர்க்கரை - 1.5 கப்
வாழைப்பழம் - 2
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
* ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* பின் ரவையுடன், வாழைப்பழம், மைதா, சர்க்கரை சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரவை மைதா கலவையை ஒரு குழியான ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பரிமாறவும்.
* சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம் ரெடி.
* வாழைப்பழத்தை மிகவும் நைசாக பிசைந்து கொள்ள கூடாது. சற்று ஒன்றும் பாதியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* இதை குழிப்பணியார சட்டியிலும் செய்யலாம்.

எளிய முறையில் செட்டிநாடு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
வறுத்து அரைப்பதற்கு :
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2-4
குழம்பிற்கு :
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அத்துடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
* பின் அதில் இறாலை சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!

உங்களின் சிறு வயதில் கமர்கட்டு சாப்பிட்ட நினைவிருக்கும். இங்கே கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - ஒரு கப்,
வெல்லம் - முக்கால் கப்,
நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன்
செய்முறை :
* துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து நீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
* வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரையவிட்டு, அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து நுரைத்து வரும் வரை கொதிக்க விடவும்.
* நுரைத்து வந்ததும் அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி நல்லெண்ணெய் சேர்க்கவும்.
* கலவை நன்கு முற்றிய நிலையில் வரும் போது இறக்கி, ஆறி இறுகுவதற்குள் வேகமாக சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். கை சூடு பொறுக்கவில்லை என்றால், முதலில் கைக்கு வருவது போல் உருட்டிப் போட்டு விட்டு, பிறகு நன்கு அழுத்தி உருண்டை வடிவமாக உருட்டிப் போடவும்.
* கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
துருவிய தேங்காய் - ஒரு கப்,
வெல்லம் - முக்கால் கப்,
நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன்
செய்முறை :
* துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து நீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
* வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரையவிட்டு, அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து நுரைத்து வரும் வரை கொதிக்க விடவும்.
* நுரைத்து வந்ததும் அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி நல்லெண்ணெய் சேர்க்கவும்.
* கலவை நன்கு முற்றிய நிலையில் வரும் போது இறக்கி, ஆறி இறுகுவதற்குள் வேகமாக சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். கை சூடு பொறுக்கவில்லை என்றால், முதலில் கைக்கு வருவது போல் உருட்டிப் போட்டு விட்டு, பிறகு நன்கு அழுத்தி உருண்டை வடிவமாக உருட்டிப் போடவும்.
* கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவையுடன், தேங்காய் சேர்த்து உருண்டை செய்தால் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - ஒரு கப்,
வறுத்த தேங்காய் துருவல் - அரை கப்,
சர்க்கரை - ஒரு கப்,
வறுத்த முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 50 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் ரவையை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
* வறுத்த ரவையை ஒரு அகலமான தட்டில் கொட்டி அவற்றுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்குபோது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
* காய்ச்சிய சர்க்கரை பாகை ரவை கலலையில் சேர்த்து சற்று சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும்.
* சுவையான ரவை - தேங்காய் உருண்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவை - ஒரு கப்,
வறுத்த தேங்காய் துருவல் - அரை கப்,
சர்க்கரை - ஒரு கப்,
வறுத்த முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 50 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் ரவையை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
* வறுத்த ரவையை ஒரு அகலமான தட்டில் கொட்டி அவற்றுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்குபோது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
* காய்ச்சிய சர்க்கரை பாகை ரவை கலலையில் சேர்த்து சற்று சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும்.
* சுவையான ரவை - தேங்காய் உருண்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாளை சன்டே(ஞாயிற்று கிழமை) ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - 3 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
மைதா மாவு - 3 மேஜைக்கரண்டி
பிரட் தூள் - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
* எலும்பில்லாத சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
* பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும்.
* அடுத்து அதில் சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.
* பின்னர் கொத்தமல்லித் தழை, எலுமிச்சை சாறு, மசித்த வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
* ஆறியதும் அதிலிருந்து சிறிய பகுதி எடுத்து அதனை பந்து போன்று உருட்டி வேண்டிய வடிவில் தட்டி வைக்கவும்.
* மைதா மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* பின்பு செய்து வைத்திருக்கும் கட்லெட்டை மைதா மாவில் முக்கி எடுத்து புரட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும். அனைத்து கட்லெட்டுகளையும் மாவில் முக்கி எடுத்து அவற்றை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
* பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கட்லெட்டை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
* நாளை சன்டே(ஞாயிற்று கிழமை) ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

குழந்தைகளுக்கு கேரமல் பிரை பனானா மிகவும் பிடிக்கும். இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
மிகவும் பழுக்காத வாழைப்பழம் - 2
மைதா மாவு - அரை கப்
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - அரை கப்
எள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
* மைதாவுடன், சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
* வாழைப்பழங்களை தோல் நீக்கி விருப்பம் போல துண்டுகளாக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் நறுக்கிய பழத்துண்டுகளை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நுரைத்து நிறம் மாறும் பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். இவ்வாறு கேரமல் தயார் செய்து கொள்ளவும்.
* பொரித்தெடுத்த பழத்துண்டுகளை கேரமல் கலவையில் போட்டெடுத்து, பரிமாறவும்.
* விருப்பப்பட்டால் வறுத்த எள்ளை இதன் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

மாலை நேரத்தில் இந்த தேங்காய் பால் பணியாரம் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - அரை கப்
உளுந்து - அரை கப்
தேங்காய் - ஒன்று
பால் - ஒரு டம்ளர்
ஏலக்காய் - 1 சிட்டிகை
சர்க்கரை - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
* உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும்.
* அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
* தேங்காயை துருவி தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..
* பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து ஒரு கப்பில் போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.
* தித்திப்பான தேங்காய் பால் பணியாரம் ரெடி."

வீட்டிலேயே எளிய முறையில் சூப்பரான பரோட்டா செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 1 கிலோ
எண்ணெய் - 250 ml
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் மைதாவில் தேவையான அளவு உப்பு போட்டு, ஐந்து மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மாவும் உப்பும் எண்ணெயும் நன்கு கலக்குமாறு பிசைந்து கொள்ளவும்.
* பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கொஞ்சம் தளதளவென்று பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
* மாவு மிருதுவாக வர சுடு நீரில் மாவு பிசையலாம். சில கடைகளில் பரோட்டா மாவுடன் சிறிது சர்க்கரை மற்றும் முட்டை சேர்த்து பிசைவார்கள். இன்னும் சில இடங்களில் மென்மையாக இருக்க மாவுடன் சிறிது சமையல் சோடா சேர்த்து பிசைவார்கள்.
* பிசைந்த மாவை பின் சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து உருட்டிக் கொள்ளவும். ஒரு கிலோ மாவுக்கு பத்து முதல் பதினைந்து உருண்டைகள் பிரிக்கலாம். எல்லா உருண்டைகள் மீதும் பரவலாக எண்ணெய் தடவி, ஒரு வெள்ளைத்துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்துவிட்டு அதன் மீது போட்டு கால் மணி நேரம் மூடிவைக்கவும்.
* பின் அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து அகலமாக கண்ணாடி போல் மெலிதாக சப்பாத்தி பரத்துவது போல் பரத்தவும். எவ்வளவு மெலிதாக மற்றும் பெரிதாக பரத்துகிறீர்களோ அவ்வளவு சுவையுடன் வரும். பரத்திய சப்பாத்தியை இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்துக்கொண்டு வட்டமாக சுருட்டிக்கொள்ளவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்து வைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும்.
* பின் கால்மணி நேரம் கழித்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் விசிறி மடிப்புகள் கலையாமல் கைவிரல்களால் தட்டியோ அல்லது சப்பாத்தி கட்டையால் பரத்தியோ சூடான தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் பொன் நிறமாக சிவக்க சுட்டு எடுக்கவும்.
* சுடும் போது நெய் அல்லது எண்ணெய் தாராளமாக ஊற்றி சுட்டு எடுத்தால் பரோட்டா கடைகளில் வருவது போல் முறுகலாக மென்மையாக வரும்.
* பரோட்டாக்களை சுட்டெடுத்த பின் அவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக தட்டில் அடுக்கி இரு கைகளால் நன்கு அடித்து தட்டி பரிமாறினால் மென்மையாக இருக்கும்.
* சூப்பரான பரோட்டா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

வெங்காய சமோசா மிகவும் ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 3 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
உள்ளே வைப்பதற்கு...
வெங்காயம் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 கப்
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பாதியளவு வரை வதக்கி, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வேண்டும்.
* பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இப்போது சூப்பரான வெங்காய சமோசா ரெடி!!!

மட்டன் உருளைக்கிழங்கு சால்னா சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பரோட்டா அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1 கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 8
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - அரை கட்டு
புதினா - கால் கட்டு
தேங்காய் - கால் கப்
முந்திரி - 25 கிராம்
கசகசா - 2 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - 1 (சிறியது)
பட்டை - இரண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
செய்முறை :
* மட்டனை நன்றாக சுத்தம் செய்து 5 அல்லது 6 முறை தண்ணீரில் கழுவி தண்ணீரை வடிகட்டவும்.
* வெங்கயாம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* கொத்தமல்லி, புதினாவை ஆய்ந்து, கழுவி தண்ணீரை வடிக்கவும்.
* முந்திரி, தேங்காய், கசகசா சேர்த்து மையாக அரைத்து வைக்கவும்.
* உருளைக்கிழங்கை தோலை உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயத்தை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும்.
* அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு, இஞ்சி பூண்டின் வாசனை அடங்கி நிறம் மாறும் வரை சிம்மில் வைக்கவும்.
* கொத்தமல்லி, புதினாவில் முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும்.
* பிறகு மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து மசாலா நன்கு தக்காளியோடு சேரும் வரை கிளறி அதில் மட்டன் மற்றும் தயிர் சேர்க்கவும். தீயை குறைத்து வைத்து கிளறி எல்லா மசாலா வகைகளும் கறியில் சேரும்படி ஐந்து நிமிடம் விடவும்.
* கறி மசாலா கலவையில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.
* நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு முறை கிளறி இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி தீயை மிதமாக வைத்து 8 விசில் விட்டு இறக்கவும்.
* குக்கர் ஆவி அடங்கியதும் திறந்து வெந்த சால்னாவை வேறு ஒரு வாயகன்ற பாத்திரத்திற்கு மாற்றி அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரி கலவையை ஊற்றவும். நன்கு தேங்காய் வாசனை அடங்கும் வரை கொதிக்க விட்டு கடைசியாக மீதி உள்ள கொத்தமல்லி, புதினாவை சேர்த்து இறக்கவும்.
* சுவையான மட்டன் உருளைக்கிழங்கு சால்னா ரெடி.

குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் மிகவும் பிடிக்கும். ஐஸ்க்ரீமில் பழங்களை சேர்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
கிவி பழம் - ஒரு கப் (நறுக்கியது)
பைனாப்பிள் ஜூஸ் - 2 கப்,
பைனாப்பிள் - சிறிது துண்டு
சர்க்கரை அரை கப்.
செய்முறை :
* பைனாப்பிள் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்சியில் அரை கப் கிவி பழத்தை போட்டு கூழாக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கூழாக்கிய கிவி போட்டு அத்துடன் பைனாப்பிள் ஜூஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சி கூழ்பதத்துக்கு வந்தவுடன் இறக்கவும் ஆற விடவும்.
* ஆறியதும் மீதமுள்ள கிவி, பைனாப்பிள் பழத்துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து, சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் (ஃப்ரீசரில்) வைத்து எடுத்துச் சாப்பிடவும்.
* கிவி - பைனாப்பிள் ஐஸ்க்ரீம் ரெடி.