என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • பிரிதிவி முத்திரை ஒரு நாளில் இரண்டு நிமிடம் ஐந்து முறைகள் செய்யவும்.
    • காலை / மதியம் / மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

    மனித உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானதுதான். அதில் பற்கள் மிக முக்கியமானது. பற்களுக்கும் தலை நரம்பு மண்டல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பற்கள் வலி வருவதற்கும், ஈறுகளில் ரத்தம் வருவதற்கும் காரணம், நமது உணவு முறை, பழக்க வழக்கம். முடிந்த வரை பழம், கீரை, காய்கறிகள் மட்டும் உணவில் உண்ணுங்கள். மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காலை / இரவு வேப்பங்குச்சி வைத்து பல் துலக்குங்கள்.

    பல் கூச்சம், ஈறு வீக்கம், பற்களில் ரத்தம் வருவது, பல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு யோகா முத்திரையில் தீர்வு உள்ளது.

    பிரிதிவி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமருங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும் பத்து வினாடிகள். பின் மோதிர விரலால் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.

    இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

    பின் எல்லா கைவிரல் நுனிகளில் ஒரு அழுத்தம் கொடுக்கவும். ஒவ்வொரு கைவிரல் நுனியிலும் ஐந்து முறை (பெருவிரல் ஆள்காட்டி விரலை குவித்து அதன் மையத்தில் கைவிரலை வைத்து அழுத்தம் கொடுக்கவும்)

    பிரிதிவி முத்திரை ஒரு நாளில் இரண்டு நிமிடம் ஐந்து முறைகள் செய்யவும்.

    15 நாட்களுக்கு ஒரு முறை வேப்ப இலை கொழுந்து காலையில் சாப்பிடவும். வெந்நீர் அதில் உப்பு போட்டு சுடவைத்து ஆறியவுடன், இளஞ் சூட்டில் வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். இரவு படுக்குமுன் இதனை செய்யவும்.

    கிராம்பு ஒன்று வாயில் ஒதுக்கி அதன் சாறு பற்களில் படும்படி செய்யவும்.

    கரும்பு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு அரை துண்டு பற்களில் மென்று சாப்பிடவும்.

    சுத்தமான நல்ல எண்ணெய் வாரம் ஒருமுறை வாயில் ஒரு கரண்டி ஊற்றி நன்கு கொப்பளிக்கவும். இதனை கடைபிடியுங்கள் பற்கள் ஈறுகள் சிறப்பாக இயங்கும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • பத்மாசனத்தில் அடி வயிறு அமுக்கப்படுவதால் அதிக வயிற்று தசை குறையும், இடை பெருக்காது.
    • பெண்கள் திருமணத்திற்கு முன்பே இந்த ஆசனம் செய்தால் திருமணமானவுடன் சுகப்பிரசவம் உண்டாகும்.

    செய்முறை

    விரிப்பில் முதலில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதலில் பத்மாசனம் போடவும். (இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடையிலும் போட்டு அமரவும்.)

    இப்பொழுது பத்மாசனத்திலேயே இருந்து மெதுவாக அவசரப்படாமல் குப்புறபடுக்கவும். (படத்தை பார்க்கவும். ஸ்டெப் 1 , ஸ்டெப் 2)

    இரு கைகளையும் இருதய பக்கத்தில் வைத்து மூச்சை இழுத்துக்கொண்டே மெதுவாக தலையையும், கைகளையும் உயர்த்தி மேலே பார்க்கவும். அந்நிலையில் மூச்சடக்கி ஒரு பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையில் நெற்றியை வைக்கவும்.

    பின் மெதுவாக கைகளை ஊன்றி எழுந்து பத்மாசனத்திலேயே அமரவும். பின் பத்மாசனத்திலிருந்து சாதாரணமாக அமரவும்.

    பலன்கள்

    தோள்கள், மார்பு, வயிறு, இடை முதலியவற்றில் தசைகளும் கட்டுக் கோப்பாக இருக்கும். அதனைச் சார்ந்த உள் உறுப்புகளும் வளமாக இயங்கச் செய்யும், இந்த ஆசனம் செய்தால் மார்பக புற்று நோய் நிச்சயம் வராது.

    தாய்மார்கள் தயவு செய்து உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை இளம் வயதிலியேயே இந்த ஆசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி தினமும் காலை, மாலையில செய்ய சொல்லுங்கள். வளர்ந்து வரும் காலங்களில் அவர்களுக்கு மார்பக புற்று நோய் வராது. திருமணம் ஆன பிறகும், குழந்தை பிறந்த பிறகும், மார்பக கட்டிகள் வராது. மேலும் இளமையாகவே இருப்பார்கள்.

    பத்மாசனத்தில் அடி வயிறு அமுக்கப்படுவதால் அதிக வயிற்று தசை குறையும், இடை பெருக்காது. மாதவிடாய் பிரச்சினைகள் வராது. செரிமானம் நன்கு நடக்கும். குடல் சுத்தமாகின்றது. சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சினைகள் வராது.

    தொடை தசைகள் பெரிதாக இருப்பது பெண்களின் அழகு தோற்றத்தை பாதிக்கும். இந்த ஆசனம் செய்வதால் தொடைப் பகுதியில் உள்ள அதிக தசைகள் எளிதாக எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் குறைந்து அழகான தோற்றத்துடனும், இளமையுடனும் திகழலாம்.

    மூட்டுக்கள் பலம் பெரும். மூட்டு வலி வராது. பெண்கள் திருமணத்திற்கு முன்பே இந்த ஆசனம் செய்தால் திருமணமானவுடன் சுகப்பிரசவம் உண்டாகும்.

    முகம், கன்னம் தசைகள் பளபளப்பாகவும், சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.

    சிலருக்கு தோள்பட்டை சமமாக இல்லாமல் சற்று இறங்கியிருக்கும். அதனை இவ்வாசனம் செய்தால் சரி செய்துவிடும். நுரையீரல் நன்கு இயங்கும். சளி பிடித்தல், ஜலதோஷம் நீங்கும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • சூரியனை பார்த்து இந்த முத்திரையை செய்யுங்கள்.
    • மைதாவினால் ஆன உணவுகள், துரித உணவுகள், எண்ணெய் பண்டங்களை தவிர்த்துவிடுங்கள்.

    சிலருக்கு சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் நிலை ஏற்படுகின்றது. ஒரு நாளில் 5 முறை 8 முறை மலம் வெளியேறும். இதனால் ஆசன வாயில் வலி ஏற்படும். இதற்கு யோகா முத்திரை சிகிச்சை மூலம் தீர்வு கிடைக்கும்.

    முதலில் பசிக்கும் பொழுது நன்கு மென்று கூழாக்கி சாப்பிடுங்கள். மைதாவினால் ஆன உணவு பரோட்டா போன்ற உணவை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    அபான முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சோட்டதை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடு விரல், மோதிரவிரல் மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை தொடவும். இரு கைகளிலும் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    பிருதிவி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பத்து வினாடிகள். பின் மோதிரவிரல் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். இந்த முத்திரை நில மூலகம் சார்ந்தது. ஜீரண மண்டலத்தில் உள்ள குறைபாடுகளை மாற்றியமைக்கும் சக்தி பெற்றது. மண்ணீரலை நன்கு இயங்கச் செய்கின்றது.

    சூன்ய முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடு விரலை மடித்து உள்ளங்கையில் படும்படி வைக்கவும். அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    சூரிய ஒளி உடலில் படும்படி காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள்ளும், மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரியனை பார்த்து இந்த முத்திரையை செய்யுங்கள்.

    அதிக காரம், உப்பு, புளிப்பு குறைத்துக் கொள்ளுங்கள். மைதாவினால் ஆன உணவுகள், துரித உணவுகள், எண்ணெய் பண்டங்களை தவிர்த்துவிடுங்கள்.

    மணத்தக்காளி கீரை, பசலை கீரை, தண்டங் கீரை, முருங்கை கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள், வாழைத்தண்டு மாதம் ஒரு முறை சாப்பிடுங்கள். மாதுளம் பழம் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும், சளி, ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும்.
    • மலச்சிக்கல் வராமல் வாழலாம். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.

    எந்த ஒரு தொற்றுக் கிருமியும் நம்மை தாக்காமல் வாழ வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதனும் ராஜ உறுப்புகளில் ஒன்றான நுரையீரலை நன்றாக வைத்திருந்தால் நலமாக வாழலாம்.

    உடல் வளையும் தன்மை உள்ளவர்கள், மாணவச் செல்வங்கள், எந்த ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்யாதவர்கள் கீழ்குறிப்பிட்ட யோகாசனங்களை தினமும் பயிலுங்கள். நுரையீரல் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். உடலில் பல பிரச்சினைகள் உள்ளவர்கள், சற்று வயதானவர்கள், யோகாசனத்திற்கு பதிலாக அடுத்து வரும் முத்திரை, தியானம், மூச்சுப்பயிற்சிகளை செய்யுங்கள்.

    புஜங்காசனம்

    விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து வைக்கவும். கைகளை பக்கவாட்டில் இதயம் பக்கத்தில் வைக்கவும். மெதுவாக மூச்சை இழுத்து கொண்டு இடுப்பிற்கு மேல் உடலை படத்தில் உள்ள படி பின் புறமாக வளைக்கவும். பத்து வினாடிகள் மூச்சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையை நோக்கி வரவும். இது போல் மூன்று முறைகள் காலை / மதியம் / மாலை பயிற்சி செய்யவும்.

    நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கும். நல்ல காற்றை உள் வாங்கும். அசுத்தக் காற்றை வெளியேற்றும். நுரையீரலில் உள்ள காற்று முடிச்சுகளில் அசுத்தக் காற்றுகள், கிருமிகள் தங்காது. முதுகுத்தண்டு திடப்படும்.

    உசட்டாசனம்

    முதலில் வஜ்ராசனமிடவும். முட்டியில் நிற்கவும். ஒவ்வொரு கையினால் கணுக்காலை படத்தில் உள்ளது போல் பிடிக்கவும். கழுத்தை பின்னால் வளைத்து மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் மெதுவாக கைகளை எடுத்து நேராக வரவும். இரண்டு முறைகள் செய்யவும்.

    நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும், சளி, ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும். காய்ச்சல் வராது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இந்த யோகாசனத்தை பொறுமையாக பயிற்சி செய்ய வேண்டும். சற்று உயர்நிலை ஆசனம். ரத்த அழுத்தம், இதய வலி, முதுகு வலி, உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்ய வேண்டாம். தகுந்த யோகா வல்லுனரின் மேற்பார்வையில் பயிலுங்கள். பொதுவாக ஆரோக்கியமாக உள்ளவர்கள். உடல் வளையும் தன்மையுள்ளவர்கள் நிதானமாக இதனை பயிற்சி செய்யுங்கள். முதலில் ஒரு கையால் ஒரு காலை பிடியுங்கள், பின் மாற்றி அடுத்த கையால் காலை பிடியுங்கள்.

    சஸங்காசனம்

    முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். ஒவ்வொரு காலாக மடித்து இரு கால் முட்டியையும் சேர்த்து வைக்கவும். பின் மூச்சை வெளியில் விட்டு குனியவும். இரு கைகளையும் படத்தில் உள்ளது போல் பக்கவாட்டில் வைக்கவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக எழுந்து வஜ்ராசன நிலைக்கு வந்து சாதாரணமாக அமரவும்.

    இதயம், நுரையீரல் நன்கு அமுக்கப்படுகின்றது. அதில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறுகின்றது. நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். ஜீரண மண்டலம் நன்கு சக்தி பெற்று இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இதயம், இதய வால்வுகள் நன்கு சக்தி பெற்று இயங்கும். மன அழுத்தம் நீங்கும். பய உணர்வு நீங்கும்.

    மகாசிரசு முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் மோதிர விரலை மடித்து உள்ள ங்கையில் வைக்கவும். ஆள்காட்டி விரல் நடு விரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம்/ மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும். சளி, சைனஸ் நீங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    அபான வாயு முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி பத்து வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் நடுவிரல் மோதிர விரலை மடித்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரல் அடியில் வைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    இதயம், இதய வால்வுகள் நன்றாக சக்தி பெற்று இயங்கும். சளி, சைனஸ் நீங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். வாயு, அஜீரணக் கோளாறுகள் நீங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். உடலில் எல்லா அவயங்களுக்கும் பிராண ஆற்றல் கிடைக்கும். உடலில் நீரின் தன்மை சரியாக இருக்கும். கால் பாத வீக்கம், எரிச்சல் வராது. உடல் முழுக்க தச வாயுக்களும் நன்றாக இயங்கும். தசைப் பிடிப்புகள் வராமல் வாழலாம். மலச்சிக்கல் வராமல் வாழலாம். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • ரத்த அழுத்தம், இதய வலி, முதுகு வலி, உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்ய வேண்டாம்.
    • முதுகெலும்பு பலப்படும், முதுகுவலி, இடுப்பு வலி குணமாகும்.

    செய்முறை:

    விரிப்பில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு முழங்கால் 90 பாகையில் இருக்க படத்தில் காட்டிய படிமுறைகளில், உடல் படத்தில் உள்ளவாறு வளைந்திருக்க இரு கைகளாலும் இரு கணுக்கால்களையும் பிடிக்க வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.

    இதனுடன் செய்யவேண்டிய மாற்று ஆசனம் சர்வாங்காசனம் அல்லது ஹலாசனம்.

    பலன்கள்:

    நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும், சளி, ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும். காய்ச்சல் வராது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். இந்த யோகாசனத்தை பொறுமையாக பயிற்சி செய்ய வேண்டும். சற்று உயர்நிலை ஆசனம். ரத்த அழுத்தம், இதய வலி, முதுகு வலி, உடலில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்ய வேண்டாம்.

    தகுந்த யோகா வல்லுனரின் மேற்பார்வையில் பயிலுங்கள். பொதுவாக ஆரோக்கியமாக உள்ளவர்கள். உடல் வளையும் தன்மையுள்ளவர்கள் நிதானமாக இதனை பயிற்சி செய்யுங்கள். முதலில் ஒரு கையால் ஒரு காலை பிடியுங்கள், பின் மாற்றி அடுத்த கையால் காலை பிடியுங்கள்.

    முதுகெலும்பு பலப்படும், முதுகுவலி, இடுப்பு வலி குணமாகும். மார்பு விரிவடையும், சுவாச உறுப்புகள் நன்கு வேலை செய்யும். மூக்கடைப்பு, ஆஸ்துமா நீங்கும், கால்கள், கைகள், புஜங்கள், உடல் பலம் பெறும்.

    போலீஸ், மிலிட்டரிக்கு வேலைக்குப் போகிறவர்கள் மார்பு அகலம் வேண்டும் என்றால் 15 நாள் இப்பயிற்சியைச் செய்தால் 2 முதல் 3 அங்குலம் மார்பு விரியும்.

    • காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.
    • லிங்க முத்திரை, பின் பிராங்கியல் முத்திரை, பின் ஆஸ்துமா முத்திரை என்று 2 நிமிடங்கள் ஒவ்வொரு முத்திரையும் பயிலுங்கள்.

    நமது உடலில் வாத, பித்தம், சிலேத்துமத்தில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக சிலேத்துமம் (நீர்) அதிகமானால் அதிக சளி இருந்து கொண்டேயிருக்கும். எப்பொழுதும் மார்பில் சளி இருக்கும். அதனால் இருமல், வறட்டு இருமல் இருக்கும். இதற்கு கீழ் குறிப்பிட்ட முத்திரைகளை தினமும் பயிற்சி செய்யுங்கள். நலன் பலன் கிடைக்கும்.

    லிங்க முத்திரை

    எல்லா கை விரல்களையும் கோர்த்துக் கொள்ளுங்கள். இடது கை கட்டை விரலை நேராக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யுங்கள்.

    பிராங்கியல் முத்திரை

    சுண்டு விரல், மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பாகத்தில் வையுங்கள். நடு விரலும் கட்டை விரல் நுனியையும் தொடவும். ஆள்காட்டி விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யுங்கள். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    ஆஸ்துமா முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனியுங்கள் பத்து வினாடி கள். பின் இரு கை நடு விரல்களை மடக்கி படத்தில் உள்ளது போல் வைக்கவும். கட்டை விரலை சேர்த்து இதயம் பார்க்க வைக்கவும். மற்ற விரல்களை நேராக படத்தில் உள்ளதுபோல் நீட்டி வைக்கவும் இரண்டு நிமிடங்கள், காலை, மதியம் , மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட முத்திரைகளை வரிசையாக முதலில் லிங்க முத்திரை, பின் பிராங்கியல் முத்திரை, பின் ஆஸ்துமா முத்திரை இரண்டு நிமிடங்கள் ஒவ்வொரு முத்திரையும் பயிலுங்கள்.

    நாடி சுத்தி

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையில் இருக்கட்டும். வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து உடன் இடது நாசியை மோதிரவிரலால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சை வெளி விடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை வெளி விடவும். பத்து முறை செய்யவும்.

    பின் இதனையே மாற்றி செய்ய வேண்டும். இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மூச்சை இழுத்து வலது நாசியை கட்டைவிரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை வெளிவிடவும். மீண்டும் வலதில் இழுத்து இடதில் வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    • முத்திரை செய்யும் பொழுது கவனம், சிந்தனை வேறெங்கும் செல்லக் கூடாது.
    • முத்திரையில் இருக்கும் பொழுது உங்கள் மூச்சோட்டத்தை தியானிக்கலாம்.

    காது வலி, கழுத்துவலி, தைராய்டு பிரச்சனைகளை நீக்கும் சூன்ய முத்திரை பொதுவாக நிறைய மனிதர்கள் காதுவலியினால் அவதிப்படுகின்றனர். சிலருக்கு காதில் அதிக அழுக்கு சேர்வதால் காதுவலி வரும். சிலருக்கு குளிக்கும் பொழுது காதில் நீர் சென்றுவிடும், அதனால் வலி வருகின்றது. மேலும் உடலில் சளி அதிகமானால் காதுவலி வரும். உடல் சூடு அதிகமானால் காது வலி வரும்.

    காதுவலி பற்றி கவலைப்பட்டவர்கள் இங்கே கொடுத்துள்ள முத்திரையை அதாவது சூன்ய முத்திரையை செய்தால் காது வலி பறந்து விடும். காதுவலி இல்லாதவர்களும் இதனைப் பயிலுங்கள். காதில் உள்ள நரம்புகள் பலப்படும். எவ்வளவு வயதானாலும் காதுவலி வராமல் தடுக்கப்படும். இன்றைய நவீன உலகில் மன அழுத்தம், டென்ஷன், படபடப்பினால் கழுத்து நரம்புகளுக்கு இரத்தம் சரியாகச் செல்லாமல் கழுத்து வலி வரும்.

    மூளையிலிருந்து பிரியும் சிந்தனையைத் தூண்டும் நரம்புகள் அதிக சிந்தனையினால் இரத்த ஓட்டம் சரியாகச் செல்லாமல் பாதிக்கப்பட்டு அதனால் கழுத்துவலி வரும். இருசக்கர வாகனம் அதிகம் ஓட்டினால் கழுத்துவலி வரும். கம்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அதிகமான எடையை சுமந்தால் கழுத்து வலி வரும்.

    இந்த கழுத்துவலிக்கு பல மருந்துகள் சாப்பிட்டும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் கழுத்து வலியுடன் மனதில் கவலை என்ற வலியும் வந்துவிடுகின்றது. அவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். நம்பிக்கையுடன் தினமும் பதினைந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளைகள் பயிற்சி செய்யுங்கள். கழுத்துப் பகுதி நரம்புகள் பலப்படும். கழுத்துவலி நீங்கும். கவலை வேண்டாம். இவ்வளவு அற்புத பலன்களைத் தரும் சூன்ய முத்திரையை எப்படி செய்வது என்பதை இப்பொழுது பார்ப்போம்.

    செய்முறை

    முதலில் நல்ல சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தரையில் ஒரு மேட் விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மிக மெதுவாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும். பின் நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும் (படத்தை பார்க்க) இந்த நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் இருக்கவும். செய்து முடித்தவுடன் கை விரல்களை சாதாரணமாக வைத்து ஓரு நிமிடம் கண்களை மூடி மூச்சை மட்டும் கவனிக்கவும். பின் எழுந்து விடலாம்.

    இந்த முத்திரை செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை

    முத்திரை செய்யும் பொழுது கவனம், சிந்தனை வேறெங்கும் செல்லக் கூடாது. அதற்கு உங்கள் கவனத்தை விரலில் கொடுக்கும் அழுத்தத்தில் நிலை நிறுத்தவும். நம்பிக்கையுடன் செய்யுங்கள். முத்திரையில் இருக்கும் பொழுது உங்கள் மூச்சோட்டத்தை தியானிக்கலாம். முத்திரையை தனிமையில் அமர்ந்து செய்யுங்கள். பயிற்சியின் பொழுது பேசக்கூடாது.

    குறிப்பாக செல்போனை அணைத்துவிடுங்கள். இது ஒரு தெய்வீகக் கலை. நம் உடம்பில் உள்ள அற்புத ஆற்றலை வளர்க்கும் கலை. நம் சித்தர்கள் பல வருடங்கள் தவம் செய்து உடலை ஆராய்ச்சி செய்து நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கச் செய்ய அருளிய அருமையான கலை என்பதை உள்ளத்தில் நிறுத்தி நிதானமாக, பொறுமையாக, அன்புடன் பயிற்சி செய்யுங்கள். முதலில் மனிதன் தன்னை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தன் உடலை, உடல் உறுப்புக்களை நேசிக்கும் அற்புதக்கலைதான் இந்த முத்திரையாகும். சூன்ய முத்திரையை செய்து அனைவரும் இளமையுடன் அழகுடன், அழகாக வாழுங்கள்.

    பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.
    ஆதி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும்போது சிசு தன் கையில் இந்த முத்திரையை வைத்திருக்கும். நவீன ஸ்கேன் படத்தில் இதைக் காண முடியும். இந்த முத்திரை நமக்குப் புதிதானது அல்ல. பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.

    செய்முறை :

    கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.

    விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.

    தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள் :

    நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

    தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது. மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

    வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
    பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.
    செய்முறை :

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற விரல்களை குவித்து படத்தில் உள்ளதுபோல் மேல்நோக்கி வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    பலன்கள் :

    நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

    பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.
    உடலில் கழிவுகள் தேக்கத்தினால் தலைசுற்றல் ஏற்படும். இப்பொழுது தலைசுற்றல், மயக்கம், நடுக்கம் வராமல் வாழ்வதற்குரிய முத்திரைகளைக் காண்போம்.
    பிரிதிவி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனி க்கவும். பின் மோதிரவிரல், பெருவிரல் நுனியை இணை க்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
    இதனால் மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். தலைசுற்றல், மயக்கம் வருவது தடுக்கப்படுகின்றது. மண்ணீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும்.

    சூன்ய முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். பெண்கள் மாத விடாய் காலத்தில் நான்கு நாட்கள் பயிற்சி செய்ய வேண்டாம். இதயம், இதய வால்வுகள் நல்ல சக்தி ஓட்டம் பெற்று இயங்கும். இதயத்துடிப்பு சீராகும். அதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக இயங்கும். தலை சுற்றல், உடல் நடுக்கம், மயக்கம் வராமல் வாழலாம்.

    பிராண முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரல் சுண்டு விரல் மடக்கி அதன் மையத்தில் கட்டை விரல் நுனியை படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    சிறுநீரகம் நன்றாக இயங்கும். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். பய உணர்வு இருக்காது. சுறுசுறுப்பாக இருக்கலாம். உடலில் பிராண சக்தி எல்லா இடங்களிலும் நன்றாக பரவும். அதனால் சுறுசுறுப்பாக இருக்க வழிவகை செய்கின்றது.

    முகுள முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற விரல்களை குவித்து படத்தில் உள்ளதுபோல் மேல்நோக்கி வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை மூன்று வேளைகள் செய்யவும்.

    ஆதி முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.

    மேற்குறிப்பிட்ட முத்திரைகளை வரிசையாக தினமும் மூன்று வேளை பயிற்சி செய்யுங்கள். நிச்சயமாக ராஜ உறுப்புக்கள் நன்றாக சக்தி பெற்று இயங்கும். அதனால் உடல், மன சோர்வு நீங்கி, மயக்கம், தலைசுற்றல் வராமல் வளமாக வாழலாம்.

    உணவு

    பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை, அன்னாசி பழம், அத்தி பழம், மாதுளம்பழம், கருப்பு திராட்சை இதை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
    புதினா கீரை, கொத்தமல்லி, அரைக்கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, அரைக்கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். இளநீர், தேங்காய், வாழைப்பழம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    கருப்பு உளுந்து கஞ்சி, உளுந்து தோசை, கருப்பு உளுந்து களி, வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளுங்கள்.முளைகட்டிய பயிறு அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். சாதம் குறைத்து பழச்சாறு, பழம் சாலட், வெஜிடபுள் சாலட் உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

    வாரம் ஒரு முறை அருகம்புல், துளசி, வில்வம் ஒரு கைப்பிடி எடுத்து கழுவி தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றியவுடன் வடிகட்டி அரை டம்ளர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். வாரம் ஒரு முறை அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை குடிக்கவும்.

    வேப்ப இலை கொழுந்து மாதம் ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு பறித்து தண்ணீரில் கழுவி காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடவும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று முத்திரைகளையும் ஒரு சிகிச்சையாக ஒன்றன்பின் ஒன்றாக பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்யுங்கள்.
    நமது உடலில் வாதம் (காற்று) சரியான விகிதத்தில் இல்லாததால் தச வாயுக்களும் அதன் தன்மையில் இயங்காததால் முக வாத பிரச்சனை வருகின்றது. இதற்கு முத்திரையில் வாயு முத்திரை, அபான முத்திரை, அபான வாயு முத்திரை மூன்றையும் ஒரு சிகிச்சையாக இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

    வாயு முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் ஆள்காட்டி விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் இருக்கவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    அபான முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடு விரல் மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    அபான வாயு முத்திரை

    நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் நடு விரல், மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். உடன் ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும், சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கியிருக்கும் . இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளைகளும் பயிற்சி செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட மூன்று முத்திரைகளையும் ஒரு சிகிச்சையாக ஒன்றன்பின் ஒன்றாக பயிற்சி செய்யுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்கள் விடாமல் பயிற்சி செய்யுங்கள். வாதம், முக வாதம், வாயு பிரச்சனை பசியின்மை, வயிறு உப்பிசம் நீங்கும்.

    இத்துடன் உணவிலும் ஒரு ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். கிழங்கு வகைகள் குறைத்து பழவகைகள் கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். முடக்கத்தான் கீரை, பசலை கீரை, தண்டங்கீரை, அரைக்கீரை,உணவில் எடுங்கள். மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை மாதம் ஒரு முறை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். கொய்யாபழம், மாதுளம்பழம், உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)
    63699 40440
    pathanjaliyogam@gmail.com
    ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.
    செய்முறை

    தரையில் கம்பளம் விரித்து, அமர்ந்து வலது காலை இடது தொடையின் மேல் போட்டு பிறகு இடது காலை வலது தொடையில் வைக்கவும். உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும், மேலும் இரண்டு குதிகால்களும் இரண்டு பக்கங்களிலும் அடிவயிற்றை தொடும்படி இருக்க வேண்டும்.

    இரண்டு தொடைகளும், கால் முட்டுகளும் தரை விரிப்பில் நன்றாக படும்படி அமர்ந்திருக்க வேண்டும். முதுகை நிமிர்த்தி மலர்ந்த கால்களின்மேல் இரு கைகளும் சின்முத்திரை நிலையில் இருக்க வேண்டும்.

    நேர் முகமாக நோக்குதல் வேண்டும், இடை, வயிறு, கண்டம், தலை ஆகியவைகள் சமனாய் ஸ்தம்பத்தைப் போல் நிமிர்த்திருக்க வேண்டும். இதுவே பத்மாசனம் ஆகும்.

    பத்மாசனத்தில் அமர்ந்ததும் சுவாசத்தை நிதானமாகவும், முழுமையாகவும் இழுத்து நிதனமாக விட வேண்டும்.

    சுவாசத்தை இழுக்கும் நேரத்தை விட அதனை வெளிவடும் நேரம் சற்று அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது பழகினால் சுவாசம் தானாகவே நிதானமடையும்.

    யோகாசனம் தினமும் செய்து வர, சுவாசத்தை மனதால் கவனித்து வந்தோமானல் எண்ண அலைகளை மனமானது இழந்து அமைதியடையும்.

    ஆரம்பத்தில் பத்மாசனத்தில் அமர்வது சிறிது சிரமமானலும், படிப்படியாக பழக்கத்துக்கு வந்துவிடும், அதேபோல் செய்யும் நேரத்தையும் சற்று அதிகப்படுத்தி கொள்ள வேண்டும்.

    பலன்கள்

    வலது கால், இடது தொடையிலும், இடது கால் வலது தொடையிலும் அமுக்கப்படுவதால் வலது பக்க மூளை, இடது பக்க மூளைக்கு நல்ல இரத்த ஓட்டம் செல்லும், மூளை நரம்புகள் சிறப்பாக இயங்கும். மூளை செல்கள் நன்கு பிராண சக்தி பெற்று இயங்கும். வலது மூளை, இடது மூளை மிகச் சிறப்பாக இயங்கும். எதிர்மறை எண்ணங்கள் வராது. நேர்முகமான எண்ணங்கள் அதிகரிக்கும். எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் பயன்படுகிறது.

    சுவாச சம்பந்தமான நோய்கள் வராது. முதுகெலும்பை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நுரையீரல் மீக அதிக நன்மைப் பெறும். வாதம், மூலம், நரம்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் அருகில் வராது.

    ×