என் மலர்
உடற்பயிற்சி
- மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.
- மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.
செய்முறை :
நடுவிரல், மோதிர விரல் ஆகிய இரு விரல்களின் மேல்பகுதியில் உள்ள முதல் குறுக்குக் கோட்டை கட்டைவிரலின் நுனியால் சிறிது அழுத்தத்துடன் தொடவும்.
நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்த நிலையில், கால்களைத் தரையில் ஊன்றிச் செய்யலாம். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டும் செய்யலாம்.
காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும்.
பலன்கள் :
பெருங்குடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் பெருங்குடலின் கடைமடைப் பகுதியில் இசைவுத்தன்மையை உண்டாக்கி, இலகுவாக மலம் வெளியேற உதவும். மனஅழுத்தத்தால் உண்டாகும் தற்காலிக மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.
நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். நீர்க்கோவைப் பிரச்சனையால் வரும் தலைவலி சரியாகும்.
அதீத இயக்கம் (Hyperactivity) கொண்ட குழந்தைகளை, கட்டுப்படுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு காலை, மாலை 20 நிமிடங்கள் மான் முத்திரை செய்யச் சொன்னால், அவர்கள் இயல்புநிலைக்குத் திரும்புவர்.
அளவுக்கு மீறிய குறும்புத்தனம், ஓர் இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருப்பது, எந்த வேலையையும் முழுமையாக முடிக்காமல் அடுத்தடுத்த வேலைகளுக்குச் சென்றுவிடுவது, கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷத்தனம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு இந்த முத்திரையைச் செய்ய பலன் கிடைக்கும்.
மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். வளர் இளம் பருவத்தில் வரும் முரட்டுத்தனத்தைக் கட்டுப்படுத்தும். சாந்தமான மனநிலை மற்றும் குணங்கள் பெற முடியும்.
வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும்.
பல்வலி, ஈறுகள் சார்ந்த வலி, வீக்கம் குறைய உதவும்.(பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது அவசியம்).
காது வலி, தலைக்குள் ஏற்படும் வலி, மதமதப்பு ஆகியவை குறையும்.
- தலைசுற்றல், படபடப்பு குறையும்.
- அதிக படபடப்பு வரும் சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்.
செய்முறை : நடுவிரல், மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்தாலே போதும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.
பயன்கள் : இரத்த அழுத்தம் உடனடியாக கட்டுக்குள் வந்து விடும். தலைசுற்றல், படபடப்பு குறையும். வெயிலில் அலையும் போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப்படபடப்பு பி.பி.அதிகரிக்கும். அந்த சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்.
விரிப்பில் மீது நேராக சப்பணம் இட்டு அமர்ந்து நாற்காலியில் பாதங்கள் தரையில் பதிய அமர்ந்தபடி செய்யலாம். வெறும் வயிறு அல்லது சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து செய்யலாம்.
- இடுப்பு வலி குறைய மற்றும் வராமல் தடுக்க இந்த முத்திரையை செய்யலாம்.
- இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
செய்முறை:
இடது கை: கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும்.
வலது கை: சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். நாற்காலியில் அமர்ந்தும் இந்த முத்திரையை செய்யலாம். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். இதே முறையில் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
பலன்கள்:
முதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும். ஈரத்தில் வேலை செய்வோர், உட்கார்ந்தே வேலை செய்வோர், இடுப்பு வலி குறைய மற்றும் வராமல் தடுக்க இந்த முத்திரையை செய்யலாம். எலும்புகளின் சவ்வு விலகுதல், முதுகில் ஏற்படும் தசைப்பிடிப்பு, இடுப்பு வலி, உச்சந்தலையில் பிடிப்பது போன்ற வலி சரியாகும். அடிமுதுகு, தொடை, மூட்டு வலி, ஆகியவை சரியாக , இடுப்பு எலும்புத்தசை பலப்பட, பிரசவத்திற்கு பின்னர், இடுப்பு எலும்புகள் நல்ல நிலைக்கு திரும்பும்.
- பரந்து விரிந்த தோள்பட்டைகள் அழகிய மற்றும் கம்பீரத் தோற்றத்தை தருபவை.
- அழகிய தோள்பட்டைக்கு செய்ய வேண்டிய பயிற்சிகளை பார்க்கலாம்.
ஆண், பெண் இருவருக்குமே பரந்து விரிந்த தோள்பட்டைகள் அழகிய மற்றும் கம்பீரத் தோற்றத்தை தருபவை. உடற்பயிற்சியாளர்கள் பரிந்துரைக்கும் பின்வரும் தோள் பட்டை பயிற்சிகளை டம்பிள்ஸ் வைத்து செய்வதன் மூலம் தோள்களில் இருக்கும் 14 வகை தசைகளையும் நெகிழ்வுத்தன்மையோடு வைத்துக் கொள்ள முடிவதோடு, கம்பீர தோற்றத்தையும் பெற முடியும்.
Elbow Squeeze Press
உங்கள் கால்களை தோள்பட்டை அகலத்திற்கு வைத்து நிற்கவும். இரண்டு கைகளிலும் டம்பிள்ஸை பிடித்துக் கொண்டு, முன்கைகள் தோள்பட்டைக்கு நேர்க் கோட்டில் இருக்குமாறு கைமுட்டியை பக்கவாட்டில் மடக்கி வைக்க வேண்டும். மெதுவாக கைகளை முட்டி மடக்கிய நிலையிலேயே மார்பிற்கு நேராக கொண்டு வரவேண்டும்.
இப்போது கைகளை தலைக்கு மேல் தூக்கி டம்பிள்ஸை பிடித்து நிற்க வேண்டும். 1 நிமிடம் கழித்து, மெதுவாக கைகளை கீழே இறக்கவும். இப்பயிற்சியை செய்யும்போது வளையாமல் முதுகு நேராகவும், மார்பு விரிந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். முழங்கை 90 டிகிரிக்கு மடங்கி தோள்பட்டை, கைகள் நேர்க் கோட்டில் இருக்க வேண்டும்.
பலன்கள்
இப்பயிற்சியின்போது மார்பு விரிவடைந்து கொடுப்பதால் நல்ல வலுகிடைக்கிறது. மேல் முதுகு தசைகளும் விரிவடைகிறது. முன்கை தசைகள், தசைநார்கள் நெகிழ்ச்சி அடைகின்றன. தோள், முதுகு, மார்பு, பின்புறம் என அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து செய்வதால், ஒரு முழுமையான தோற்றத்தை பெற முடியும்.
Shoulder to Shoulder
ஒரு டம்பிள்ஸை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு கால்களை அகட்டி நிற்கவும். வலது கை முட்டியை மடக்கி டம்பிள்ஸை வலது தோளில் வைக்க வேண்டும். இப்போது இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தலைக்கு மேல் கொண்டு வந்து நிற்கவும். 1 நிமிடம் வரை அதே நிலையில் வைத்திருந்து இடது பக்கமாக டம்பிள்ஸை கொண்டு வந்து வலப்பக்கம் செய்தது போலவே இடப்பக்க தோள்பட்டையில் வைக்கவும். இதேபோல் இருபக்கமும் மாற்றி செய்யலாம். இப்பயிற்சியை செய்யும்போது மார்பு நன்றாக விரிவடைந்த நிலையிலும், பின்பக்கம் வளையாமல் நேர்க்கோட்டிலும் இருக்க வேண்டும். கழுத்தை இறுக்காமல் நெகிழ்வாக வைத்துக் கொள்ளவும். தோளில் வைக்கும்போது முட்டியை மடக்கி நன்றாக உடலோடு ஒட்டியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
பலன்கள்
தோள்களில் அழுத்தம் கொடுத்து செய்யும் இப்பயிற்சியால் தோள்பட்டை எலும்புகள், தசைகள் இரண்டும் நன்கு வலிமை அடைகின்றன. மேலும், தோள் தசை நார்களுக்கு நல்ல நெகிழ்ச்சி கிடைப்பதால், இலகுவாக தோளை அசைத்து வேலை செய்ய முடிவதோடு, தோளில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. நீண்ட நேரம் இருசக்கர வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தோள்பட்டை வலிக்கு நல்ல தீர்வாகிறது.
- விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
- நம்மை அறியாமல் நமக்குள் ஒரு ஆனந்தம் ஏற்படும்.
பொதுவாக தியானத்தை இரண்டு வழிகளின் செய்யலாம். ஒன்று கண்களை மூடிக்கொண்டு செய்வது இன்னொன்று கண்களை திறந்து கொண்டு செய்வது. கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதென்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல. அனால் கண்களை திறந்துகொண்டு எளிதாக தியானம் செய்யலாம். வாருங்கள் கண்களை திறந்து தியானம் செய்யும் முறை பற்றி விரிவாக பாப்போம்.
வீட்டில் சத்தம் இல்லாத ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, அந்த அறையில், நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கை வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு விளக்கோ வைத்து. அதில் திரி போட்டு பின் நல்லெண்ணெயோ அல்லது தேங்காய் நல்லெண்ணெயோ ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நம்மால் எவ்வளவு நேரம் தொடந்து அந்த ஒளியை பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். விளக்கில் இருந்து வரும் ஒளியானது நமது கண்கள் வழியாக ஊடுருவி ஆன்மாவை தொடும். இதனால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு ஆனந்தம் ஏற்படும். இதை நாம் தொடர்ந்து செய்தால் நமக்குள் ஒரு பேராற்றல் வெளிப்படும். நம்முடைய மனது நம் கட்டுப்பாட்டிற்குள் எளிதில் வரும்.
இந்த வகையான தியானத்தை செய்வதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க தேவை இல்லை. நமக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். இதை தொடர்ந்து ஒரு ஐந்து நாட்கள் செய்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையை புரிந்து நாமே இதை தொடர்ந்து செய்ய ஆரமித்துவிடுவோம்.
- தரையில் உடற்பயிற்சி செய்வதைவிட தண்ணீரில் நீச்சல் பயிற்சி செய்வது உடம்புக்கு மிகவும் நல்லது.
- நீச்சல் பயிற்சி செய்யும் செய்யும் போது சில விஷயங்களை மறக்கக்கூடாது.
நீச்சல் என்பது வெள்ளம் நேரத்தில் உயிரை காக்கும் ஒரு பயிற்சி மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரும் பயிற்சி என்பதால் அனைவரும் நீச்சலை பயின்று கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
ஆனால் அதே நேரங்களில் ஒருசில நேரங்களில் நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக காலி வயிற்றுடன் இருக்கும் போது நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது. அதேபோல் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது
நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் மீட்பு நபர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். நீச்சல் குளத்தில் தண்ணீர் சுழற்சி முறையில் மாற்றம் இருக்கிறதா என்பதையும் கவனித்து நீச்சலடித்து செய்ய வேண்டும்
தரையில் உடற்பயிற்சி செய்வதைவிட தண்ணீரில் நீச்சல் பயிற்சி செய்வது உடம்புக்கு மிகவும் நல்லது. குறிப்பாக நரம்பு மண்டலம் சீராகும் என்றும் நன்கு பசியெடுக்கும் தூக்கம் வரும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
எனவே இதுவரை நீச்சல் தெரியாதவர்கள் உடனடியாக நீச்சல் பயிற்சியை செய்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால் 200 கலோரிகளை எரிக்கும், அரை மணிநேரம் சைக்கிள் பயிற்சி செய்தால் 150 கலோரிகள் இருக்கும். ஆனால் அரை மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் 350 கலோரிகளை எரிக்கும் என்பதால் நீச்சல் பயிற்சி மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் பருமனை குறைக்க உதவும் பயிற்சிகளில் நீச்சல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சராசரியாக ஒரு மணி நேரம் பெண்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது, அவர்களது உடலில் 400 கிலோ கலோரி எரிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. தினமும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கு, வயிற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினை படிப்படியாக குறையும்.
தினமும், அரைமணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் மனம் லேசாகிறது. நீந்தும்போது மனச்சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைந்து, அமைதி ஏற்படும். அதன் மூலம் இரவில் ஆழ்ந்த உறக்கம் கண்களை தழுவும்.
- மனம் எவ்வளவு குழப்பத்தில் அலை பாய்ந்து கொண்டு இருந்தாலும் ஒருமைப்படும்.
- இந்த முத்திரை பயிற்சி நமது உடலுக்கும் மனதிற்கும் நல்ல சக்தியை தரும்.
செய்முறை
நாம் இந்த முத்திரை பயிற்சியின்போது நமது இரு கை விரல்களையும் இருதயத்திற்கு நேராக வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நமது வலது கை இடது கைக்கு சிறிது மேலாக இருக்கவேண்டும். இரு கைகளிலும் பெருவிரல் நுனியையும் ஆள்காட்டி விரல் நுனியையும் ஒன்று சேர்த்துக்கொள்ளவேண்டும். இது ஒரு வட்டமாக காட்ச்சியளிக்கும். நமது இடது உள்ளங்கை நமது இருதயத்தை நோக்கி பார்க்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். வலது கையின் பின்புறம் இருதயத்தை நோக்கி இருக்கவேண்டும். நமது இடது கையின் நடுவிரலை வலது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனியுடன் தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிய நிலையில் தளர்வாக இருக்கவேண்டும்.
இந்த முத்திரை பயிற்சியின்போது நாம் நல்ல மூச்சுப்பயிற்சியில் அதாவது சுவாசம் மெதுவாகவும் சீராகவும் இருக்கவேண்டும். இந்த மூன்று விரல் நுனியும் தொட்டுக்கொள்வதை பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் எந்த இடத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை நின்றநிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.
குறைந்தது 15 நிமிடங்கள் வீதம் தினமும் 2-3 முறைகள் செய்வது மிக நல்லது.
பயன்கள்
• இந்த முத்திரை பயிற்சி நமது உடலுக்கும் மனதிற்கும் நல்ல சக்தியை தரும்.
• மனக்குழப்பம், மனசஞ்சலம் நீங்கி மன அமைதி கிடைக்கும்.
• மனதில் தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உருவாகும்.
• நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்பு பாசம் அதிகரிக்கும்.
• நமது செயல்பாடுகள் நம்பிக்கையுடன் இருக்கும்.
• நமக்கு ஒரு பேரின்ப நிலை உண்டாகும்.
• மனதில் எப்பொழுதும் மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கும்.
• மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
• உடலுக்கும் உள்ளத்திற்கும் அண்டவெளியில் இருக்கும் நல்ல சக்தி அதிகமாக கிடைக்கும்.
தர்ம சக்கர முத்திரையை தொடர்ந்து செய்துவந்தால் நமது செயல்பாடுகள் மற்றும் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவது உறுதி. இதை அனுபவ பூர்வமாக செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்.
- மனதைக் கட்டுப்படுத்த நம் முன்னோர்கள் காட்டிய வழி தியானம்.
- தியானம் செய்யும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.
நன்மை தீமையை பிரித்து செயல்படும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உள்ளது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது நல்லது என்று உணர்ந்தால் மட்டுமே மனிதனால் அதை செய்ய முடிகிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை நம்முடைய மனது தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட மனதை கட்டுப்படுத்தி நல்ல வழிப்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தவறும் போது பிரச்னைகள் எழுகின்றன. மனித மனம் குரங்கு போன்றது. ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. தாவிக் கொண்டே இருக்கும். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் மனிதனுக்கும் விலங்குக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.
மனதைக் கட்டுப்படுத்த நம் முன்னோர்கள் காட்டிய வழி தியானம். தியானம் மனதை மட்டுமல்ல உடலையும் காக்கும் தன்மை கொண்டது. ஒருவர் தன் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவருக்கு நல்ல எண்ணங்கள் மேலோங்கும். உடலும் மனமும் ஆரோக்கியமடையும்.
எல்லோராலும் தியானம் செய்ய முடியும். அதற்கு சில வழிகாட்டுதல்கள் உள்ளன. சுயமாக முயல்வதில் தவறு இல்லை. இருப்பினும் ஒரு வழிகாட்டியை அணுகி தியானப் பயிற்சி பெறுவது நல்லது.
தினம் செய்ய சலனமற்ற, அமைதியான, எழில் மிக்க, இனிய சூழல் அவசியம். இதற்கு அதிகாலை நேரம் சரியானதாக இருக்கும். பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும் நேரத்தில் தியானம் செய்யலாம். இது போன்ற அமைதியான சூழல் இருந்தால் மாலை நேரத்திலும் கூட தியானம் செய்யலாம்.
குறைந்த ஒளி, இதமான சூழல், அமைதியான இடம், நறுமணம் வீசும் காற்று போன்றவை தியானத்தில் மனம் ஈடுபடுவதை மேலும் உறுதி செய்யும்.
மெல்லிய, இனிய இசையைக் கேட்ட படி தியானம் செய்யும்போது மூளை நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, மன இறுக்கம் குறையும்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு அல்லது கை, கால், முகத்தை கழுவிவிட்டு, தளர்வான ஆடை அணிந்து பத்மாசம் அல்லது சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் சௌகரியமாக நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம்.
தொடையின் மீது உள்ளங்கை மேற்புறம் இருப்பது போல வைக்க வேண்டும். சின்முத்திரை எனப்படும் கட்டை விரல் நுனியையும் ஆட்காட்டி விரல் நுனியையும் தொட்டபடி அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும்.
மூச்சை ஆழமாக உள் இழுத்து சில விநாடிகள் நிறுத்தி நிதானமாக வெளியே விட வேண்டும். இப்படிச் செய்யும்போது ஒருவித சக்தி நம் உடலுக்குள் பாய்வதை உணரலாம்.
தொடக்கத்தில் நீண்ட நேரம் தியானம் செய்வது இயலாத காரியம் போலத் தெரியும். எனவே, 5 – 10 நிமிடங்களுக்கு தியானம் செய்ய இலக்கு நிர்ணயித்து செய்ய வேண்டும். தொடர்ந்து செய்யும்போது தியானம் செய்யும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.
- முதுகுத்தண்டு கோளாறு, தோள் வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயில்வதை தவிர்க்கவும்.
- மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.
'பர்வதம்' என்றால் 'மலை'. இந்த ஆசனத்தில் உடல் மலை போன்ற அமைப்பில் உள்ளதால் இது பர்வதாசனம் என்று பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது. அதோ முக ஸ்வானாசனம் என்கிற ஆசனமும் பர்வதாசனம் என்று அழைக்கப்படுவதுண்டு. அமர்ந்த நிலை பர்வதாசனத்தில் முதுகுத்தண்டு வலுப்பெறுவதோடு, ஸ்திரத்தன்மையும் தேக உறுதியும் ஏற்படுகிறது.
பலன்கள்
நுரையீரலை பலப்படுத்துகிறது. சீரண மண்டலத்தின் இயக்கத்தை செம்மையாக்குகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியை உறுதியாக்குகிறது.
கால்களை பலப்படுத்துகிறது. மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. மன அமைதியை உருவாக்குகிறது.
செய்முறை
பத்மாசனத்தில் அமரவும். மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளை பக்கவாட்டில் உயர்த்தவும். மெதுவாக மூச்சை வெளியேற்றியபடி கைகளை தலைக்கு மேல் உயரத் தூக்கவும். கை முட்டியை வளைக்காமல் இரண்டு உள்ளங்கைகளையும் வணக்கம் சொல்லுவது போல் ஒன்றாக வைக்கவும். உங்கள் மேல் கைகள் காதுகளை ஒட்டியபடி இருக்க வேண்டும்.
நேராக பார்க்கவும்.20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் கைகளை கீழே இறக்கவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும்.
பத்மாசனத்தில் அமர முடியாதவர்கள் அர்த்த பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து இந்த ஆசனத்தை பயிலலாம். கைகளை நன்றாகத் தூக்க முடியாவிட்டால் முடிந்த வரை தூக்கிப் பழகவும். தீவிர முதுகுத்தண்டு கோளாறு, அதிக தோள் வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயில்வதை தவிர்க்கவும்.
- நுரையீரலை பலப்படுத்துகிறது.
- உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
அர்த்த பூர்வோத்தானாசனம் என்னும் இந்த ஆசனத்தின் வடமொழி பெயரில் 'அர்த்த' என்றால் 'பாதி', 'பூர்வ' என்றால் 'கிழக்கு', 'உத்' என்றால் 'தீவிரம்' (intense), 'தான்' என்றால் 'நீட்டுவது' (to stretch), 'ஆசனம்' என்றால் 'நிலை'; அதாவது, பாதி கிழக்கு பகுதியை தீவிரமாக நீட்டும் நிலை. இந்த நிலையில் பார்ப்பதற்கு, ஒரு மேசை போலத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் Reverse Table என்பது சரியான பொருத்தமாகத் தெரியவில்லை.
இந்த ஆசனத்தில் நிற்பது மணிக்கட்டு, கை, தோள், கால், தொடை என நான்கு கால்களும் பலமாகும். ஆனாலும், இதன் பலன் என்பது இடுப்பும், முதுகுத்தண்டு புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கி தள்ளப்பட்டு அதிலேயே நிற்பதனால் முதுகுத்தண்டு, முதுகு தசைகள், இடுப்பு மட்டுமல்ல, உடலின் முன் பகுதி (கிழக்கு பகுதி) உந்தப்படுகிறது. இதனால் அனைத்து உள் உறுப்புகளும் நன்றாக இயங்குகிறது. மேலும் இரத்த ஓட்டம் தலைக்கு நன்றாகப் பாய்ச்சப்படுகிறது. இந்த பலனுக்காகத்தான் நான்கு கால்களில் நிற்பது. கை, கால்களுக்கு கிடைக்கக் கூடிய
நுரையீரலை பலப்படுத்துகிறது. உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.
செய்முறை
விரிப்பில் கால்களை நீட்டி தண்டாசனம் நிலையில் அமரவும். கால் முட்டியை மடக்கி பாதங்களை தரையில் வைக்கவும். கைகளை புட்டத்திற்கு சில அங்குலம் பின்னால் தரையில் வைக்கவும். கை விரல்கள் உங்களை நோக்கியவாறு இருக்க வேண்டும்.
பாதங்களையும் கைகளையும் தரையில் அழுத்தி மூச்சை உள்ளிழுத்தவாறே இடுப்பை மேலே உயர்த்தவும். மார்பிலிருந்து கால் முட்டி வரை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். கைகள் நேராக இருக்க வேண்டும். மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கணுக்கால்கள் கால் முட்டிக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும். தலையை பின்னால் சாய்க்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், உடலை தளர்த்தி தரையில் அமர்ந்து கால்களை நீட்டி தண்டாசனம் நிலையில் அமரவும்.இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு
முதுகு, இடுப்பு, தோள், மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தலையை பின்னால் சாய்க்காமல் நேராக வைக்கவும்; அல்லது மார்பில் முகவாய் படுமாறு வைக்கவும்.
இடுப்பை முடிந்த அளவு மேலே உயர்த்தவும். பழகப் பழக நன்றாக உயர்த்த வரும்.
- ஆக்ஞை சக்கரம் சீராக இயங்கினால் உயர்ந்த எண்ணங்கள் வளர்கிறது.
- மூட்டு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
வடமொழியில் 'கருட' என்றால் 'கருடன்' அல்லது 'கழுகு' என்று பொருள். கருடாசனம் ஆங்கிலத்தில் Eagle Pose என்று அழைக்கப்படுகிறது. கருடாசனம் என்ற ஆசனத்தின் பெயருக்குப் பின்னால் இருப்பது வெறும் கழுகு அல்ல; அதன் குணாம்சங்களே. கழுகு பயமில்லாதது; எதையும் எதிர் கொள்ளும் துணிவு கொண்டது.
கருடாசனம் ஆக்ஞை சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. Third Eye Chakra என்றும் Ajna Chakra என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆக்ஞை சக்கரம் மிகவும் வலிமை வாய்ந்ததாகும்.
ஆக்ஞை சக்கரம் சீராக இயங்கினால் உயர்ந்த எண்ணங்கள் வளர்கிறது. உள்ளுணரும் ஆற்றல் வளர்கிறது. இது ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்ப்பதோடு, எதிர்மறை எண்ணங்களைப் போக்கவும் செய்கிறது.
பலன்கள் :
மூச்சுக் கோளாறுகளைப் போக்குகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. கால் தசைகளை உறுதியாக்குகிறது. மூட்டுக்களை வலுவாக்குகிறது. உடம்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது. இடுப்பை பலப்படுத்துகிறது. அடி முதுகு வலியைப் போக்குகிறது. சையாடிக் வலியைப் போக்குகிறது.
செய்முறை :
விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். வலது கையை நெஞ்சுக்கு நேராக உயர்த்தி கை முட்டியை மடக்கவும். இடது கையை வலது கைக்கு அடியில் கொண்டு வந்து அதனை வளைத்து, இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும். இடது கால் முட்டியைச் சற்று வளைக்கவும்.
வலது காலை உயர்த்தி இடது காலின் மேல் வைக்கவும். அதாவது, வலது தொடை இடது தொடையின் மீது இருக்க வேண்டும். வலது பாதத்தை இடது காலைச் சுற்றி கொண்டு வரவும். 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும். கால் மற்றும் கை மாற்றி மீண்டும் செய்யவும்.
இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்ய வேண்டும்.
தீவிர முட்டி அல்லது மூட்டுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
ஒற்றைக் காலில் நிற்பது கடினமாக இருந்தால் சுவரை ஒட்டி நின்று பயிலவும்.
- தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
பலன்கள்: கண் சிவந்துபோதல், கண் எரிச்சல், வெப்பமான மூச்சுக்காற்று, உதடு, நாக்கு, தொண்டை, வாயின் உட்பகுதியில் எரிச்சல், புண்கள், கொப்பளங்கள் வராமல் தடுக்கப்படும்.
வறட்டு இருமல் பிரச்சனை குணமாகும். தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வைரஸ் கிருமி தொற்று வராமல் தடுக்கும்.
செய்முறை
விரிப்பில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு ஆள்காட்டி விரல், நடு விரலை மடக்கி உள்ளங்கையில் தொடும்மாறு வைக்கவும். மோதிர விரல், சுண்டு விரல் கட்டை விரலை தொட்டு கொண்டு இருக்குமாறு செய்யவும்.
இந்த முத்திரையை காலை, மாலை இருவேளையும் 5 முதல் 10 நிமிடங்கள் அமர்ந்தோ, படுத்த நிலையிலோ செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் தான் இந்த முத்திரையை செய்ய வேண்டும்.






