என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    கொரோனா வைரஸ் காரணமாக கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது.
    ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21) கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் காரணமாகி விட்டது. அதுவே, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது. இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது.

    கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே மாணவ மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.

    எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும் இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

    ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது. வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்து வது என்பது நடைமுறையில் இயலாத ஒன்று தான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகி விட்டது.

    பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும். 
    ஊரடங்கு காரணமாக, குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஒன்றாக இருக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. இது அவர்களின் உறவு மேம்பட வழி வகுத்துள்ளது.
    கொரோனா வைரஸ் பாதிப்பு, மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, கலாசாரம், சமூக, பொருளாதார நிலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என்று யாரையும் சந்திக்க, எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக, பெற்றோர்களும் வீட்டில் அதிக நேரம் இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஒன்றாக இருக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. இது அவர்களின் உறவு மேம்பட வழி வகுத்துள்ளது.

    கொரோனாவுக்கு முன்பு, குழந்தைகள் வீட்டை விட பள்ளிக்கூடத்தில் தான் அதிக நேரம் ஆசிரியர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால் தற்போது முழுக்க, முழுக்க வீட்டிலேயே இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளை பெற்றோரும், பெற்றோரை குழந்தைகளும் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் குடும்பத்தின் பின்னணி, உறவுகள், பொருளாதார பின்புலம் போன்றவற்றை அறிந்து கொள்ள இயல்பான சூழல் கனிந்து இருக்கிறது.

    குழந்தைகளுக்காக, பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. அதை சமாளித்து, உழைத்து குழந்தைகளின் நலனை பேணுகிறார்கள். ஆனால் அதை குழந்தைகளுக்கு உணர்த்தவோ, நாசூக்காக புரிய வைக்கவோ பெற்றோரால் முடிவது இல்லை. ஆனால் அதற்கான வாசல்களை கொரோனா பாதிப்பு திறந்து விட்டுள்ளது. மேலும் விட்டுப்போன உறவுகளின் தொடர்பை புதுப்பிக்கும் காலமாகவும் இது மாறி இருக்கிறது. இந்த இணைப்பை வலுவானதாக மாற்றிக் கொள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோரும் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. மேலும் வீட்டில் அனைவரும் ஒன்றாக இருப்பதால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், ஒருவரின் திறமையை மற்றவர்கள் அறிந்து ஊக்குவிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில், ஊரில் தனிமையில் தவிக்கும் தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகள் செல்போனில் பேசி மகிழ்வதை காண முடிகிறது. இதனால் அவர்கள் மனரீதியாக புதிய எழுச்சி பெறுகிறார்கள். மேலும், இதுவரை பேசாத உறவினர்களிடமும் குழந்தைகள் பெற்றோர் மூலம் பேசி தங்களின் உறவு வட்டத்தை தெரிந்து கொள்கிறார்கள்.

    பொருளாதாரம் மட்டுமே என்பதை தாண்டி, கண்ணுக்குத் தெரியாத பண்புகளால் நிரம்பியது வாழ்க்கை. அந்த பண்புகள் ஒவ்வொருவரின் வாழ்வியல் நடத்தையிலும் வெளிப்பட ஊரடங்கு காலம் வழிகாட்டுகிறது. எல்லாவற்றையும் விட உயர்ந்தது உயிர் என்பதே கொரோனா மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியதும், அதை எதிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டியதும் மிகவும் அவசியம். அதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியமானது.

    தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் உள்ளனர். எனவே இந்த காலகட்டத்தில் மாணவ-மாணவிகள் படிப்பில் போதிய நாட்டம் இன்றி இருப்பது போல் தென்படும். ஆனாலும் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள், தங்களை மீண்டும் எளிதாக தயார்படுத்திக்கொள்வார்கள். என்றாலும், மாணவர்களை தொடர்ந்து கற்றிடும் மன நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்குரிய வகையில் படிப்பது, எழுதுவது மற்றும் எதையாவது கற்றுக்கொள்வது என்பதை விளையாட்டு முறையில் அளிக்க வேண்டும். அது அவர்களின் மனநிலையை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும்.
    சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு பரவுகின்றன.
    இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்குதலில் இருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்துகிறது. கொரோனா காலம் மட்டுமல்ல எந்த காலத்திலேயும் கை சுத்தம் என்பது ஆரோக்கியத்தின் மிகப்பெரிய அடையாளம்.

    சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு பரவுகின்றன.

    உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆண்டில் 170 கோடி பேரை பாதிக்கும் இந்த நோய்க்கு, 6 லட்சம் குழந்தைகள் பலியாகி விடுகிறார்கள்.

    தூய்மையின்மை காரணமாகவும், கை அசுத்தமாக இருப்பதும் நோய் தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி வெளியில் சென்று வந்த பிறகு, கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவதுதான். பல குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம்.

    எனவே கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகள், சிறுநீர், மலம் பட்ட துணிகளை கையாளும்போது கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படி செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.

    கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலக கை கழுவும் நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. ‘தூய்மையான கைகள்; பாதுகாப்பான வாழ்க்கை’ என்பதே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்.
    குழந்தைகளுக்கு 6 மாதத்திற்குப் பிறகு பல் முளைக்கத் துவங்கும். அப்போது அவர்களின் ஈறுகளை உறுதியாக்கும், பல் வளர்ச்சியை ஆரோக்கியமாக்கும் உணவுகளைக் கொடுத்தல் நல்லது.
    குழந்தைகளுக்கு 6 மாதத்திற்குப் பிறகு பல் முளைக்கத் துவங்கும். அப்படி முளைக்கும் நேரத்தில் அவர்கள் கண்டதையும் வாயில் வைத்துக் கடிப்பார்கள். சில நேரங்களில் நம்மையே கடிக்கச் செய்வார்கள். அதற்குக் அவர்களின் பல் ஊறும் என்பார்கள். ஈறுகள் ஊறுவதாலும், ஒருவித வலி உண்டாவதாலும் எதையாவது கடித்து பற்களுக்கு அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    சில நேரங்களில் அந்த வலியால் ஓயாமல் அழுது கொண்டும் இருப்பார்கள். சிலர் இதற்காக ரப்பர் போன்ற பொருட்களை கடிக்க வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு பதிலாக அவர்களின் ஈறுகளை உறுதியாக்கும், பல் வளர்ச்சியை ஆரோக்கியமாக்கும் உணவுகளைக் கொடுத்தல் நல்லது.

    கேரட்டை மென்று சாப்பிட அவர்களின் பல் ஊறுவதற்கு இதமாக இருக்கும். அதோடு கேரட்டின் இனிப்பு சுவையும் ஆரோக்கியமும் குழந்தைகளுக்கு கூடுதல் நன்மை.

    பீட்ரூட்டையும் மெல்லிய துண்டாக நறுக்கிக் கொடுங்கள். அதை மென்று சாப்பிடுவதாலும் அவர்களின் ஈறுகளின் உறுதிக்கு நல்லது.

    துண்டு சீஸைக் கொடுங்கள். அது அவர்களின் ஈறுகளில் உள்ள வலியைக் குறைக்க உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். மென்று சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

    பயறு வகைகளை வேக வைத்துக் கொடுங்கள். இது அவர்களின் பற்கள் சீக்கிரம் முளைக்க உதவுமாம். ஈறுகளில் உண்டாகும் ஊறும் உணர்வு , வீக்கம் இருந்தாலும் சரியாகிவிடும்.

    வாழைப்பழம் கால்சியம் சத்து கொண்டது. அதன் இனிப்பு சுவையில் ஒளிந்திருக்கும் சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் க்ளுக்டோஸ் போன்றவை பல் வளர்ச்சியை உறுதியாக்குகின்றன.

    அவகேடோவும் கால்சியம் சத்து நிறைந்தது. மேலும் அதில் உள்ள வைட்டமின் ஏ பற்களுக்கு நல்லது. அதுமட்டுமன்றி அதைக் மென்று சாப்பிடுவதால் பற்களின் ஈறுகளுக்கு நல்லது.

    ஆப்பிள் பல வகையான சத்துக்களை உள்ளடக்கியது. குறிப்பாக பற்களின் ஈறுகளுக்கு நல்லது. இதனால் பல் வலி, ஊறுதல் போன்றவை இருக்காது.

    மாதுளை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. அதோடு உங்கள் குழந்தையின் பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நல்லது.

    பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் சத்து நிறைந்த பால், பால் சார்ந்த உணவுகள், முட்டை போன்ற உணவுகளைக் கொடுங்கள்.
    பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
    பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தடுப்பதற்கு என்ன வழி பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

    உலக அளவில் 80 முதல் 90 சதவீதம் இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவன புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.

    குழந்தைகளை பெற்றோர்கள் புகையிலைப் பொருட்களை கடைக்கு சென்று வாங்கி வர சொல்வதால் அவர்களும் புகையிலை பழக்கத்திற்கு தூண்டப்படுகின்றனர்.

    தமிழகத்தில் பொறுத்தவரை புகை பிடிக்கும் பழக்கம் 10 சதவீதம் குறைந்துள்ளது, உண்மையிலே குழந்தைகள் மீது அன்பு செலுத்தும் பெற்றோர்கள் புகையிலை பழக்கத்தை அறவே விடவேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி அறிவுறுத்துகிறார்.

    உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழந்து வருகின்றனர், இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள்.

    ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வரும் 2035ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு 12 லட்சமாக அதிகரித்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

    தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என மற்றப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

    உலக அளவில் ஆண்கள் 47 சதவீதமும் பெண்கள் 12 சதவீதமும் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாகவும் புகையிலைப் பொருட்களால் 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 53 சதவீத ஆண்களும் 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்துக்கு ஆளாகி உள்ளதாகும் புகை பிடிப்பதால் நமக்கு மட்டுமில்லாமல் நம் அருகில் இருக்கும் ரத்த உறவுகள், நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது.

    புகை பழக்கம் நமக்கு மட்டுமன்றி நமது சந்ததியின் உயிருக்கும் பகை என்பதை அறிய வேண்டிய தருணம் இது….
    குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரையை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.
    தற்போது நிறைய மாணவர்கள் அதிக உடல் எடையுடனும் ரத்த அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள், மருத்துவர்கள். பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் எய்தி விடுகிறார்கள். சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சிக்கல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களை விடாமல் துரத்துகிறது.

    குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாகத் தவிர்த்துவிடுவது, இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாகத் தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரையை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதை தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும். முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.
    மழையில் குழந்தைகள் ஆட்டம் போடாதபடி பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறார்கள். குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
    சென்னை :

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா புரையோடிக் கிடக்கும் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கையே தொலைந்து விட்டது. கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    பட்டாம் பூச்சிகள் போல துள்ளி திரிந்து விளையாடக்கூடிய குழந்தைகளும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ்க்கு பயந்து வீடுகளிலேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள். தற்போது சென்னையில் அவ்வப்போது மழை பெய்து பூமியை குளிர்வித்து வந்தாலும், விரும்பியபடி மழையில் நனைந்து விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் குழந்தைகள் மனதில் எழாமல் இல்லை.

    ஏற்கனவே குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என்பதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள். இதனால் தற்போது பெய்து வரும் மழையில் குழந்தைகள் நனைந்துவிடாதபடி பெற்றோர் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிறார்கள்.

    சமையல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது, குழந்தைகள் தங்களை ஏமாற்றிவிட்டு நழுவி வெளியே ஓடிவிடுகிறார்கள் என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பூட்டு போட்டு கதவை மூடி விடுகிறார்கள்.

    தேங்கி இருக்கும் மழை நீரிலும் குழந்தைகள் சென்று விளையாடாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் வீடுகளில் இருந்தபடியே மழையை ரசிக்க வேண்டிய நிலைமைக்கு குழந்தைகள் வந்துவிட்டார்கள்.

    இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், “கொரோனா பீதி காரணமாக காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் இருந்தால் வராதீர்கள் என்று சில ஆஸ்பத்திரிகள் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார்கள். இதனால் குழந்தைகளை கோழி அடைகாக்கும் முட்டைகளை போல மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் லேசாக இருமினாலும் மனம் பதறுகிறது. குழந்தைகள் வீட்டிலேயே அடைந்து கிடப்பது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் கொரோனாவுக்கு பயந்து குழந்தைகளிடம் நாங்கள் கண்டிப்பாக நடந்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை“, என்றனர்.
    குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.
    பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரம், சமூக சூழல் உள்ளிட்ட அம்சங்கள் வேறுபட்டதாக இருக்கும். அது போல் குழந்தைகள் பழக்க, வழக்கங்களும் வேறுபட்டதாகவே இருக்கும். ஆனாலும் குழந்தைகள் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஒன்று போல் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. அப்போது அவர்களிடம் வேறுபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை வழங்கப்படுகிறது.

    ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மாணவர்களை கையாளுவதில் ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் மாணவர்களின் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், பெற விரும்பும் பதில், கேட்கும் கேள்விகள் போன்றவை மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. எனவே வீட்டில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்று வருகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்வது அவசியம். அதற்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்.

    பள்ளியில் நடந்த நிகழ்வுகள், நடத்தப்பட்ட பாடம், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட உணர்வுகள், தேர்வு, பாடம் ஆகியவை தொடர்பாக பெற்றோர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதையும் தாண்டி பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெறும் பொதுவான நிகழ்வுகள், அதை குழந்தைகள் எதிர்கொண்ட விதம் குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சமூகம் குறித்து அவர்களின் பார்வையும் மாறிக்கொண்ட இருக்கிறது. அவர்களுக்கு பெற்றோர் கற்றுக்கொடுப்பது, அதை குழந்தைகள் புரிந்து கொண்டு செயல்படுவது போன்றவற்றில் வேறுபாடு இருக்கும்.

    அதை புரிந்து கொண்டு சரி செய்ய வேண்டியது பெற்றோரின் பெரிய கடமையாக இருக்கிறது. குழந்தைகளுடன் தொடர்ந்து பேசும் போது தான் அவர்கள் எதை நோக்கி பயணிக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள்?. எப்படிப்பட்ட சிந்தனை அவர்களிடம் மேலாங்கி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். அதில் உள்ள தவறுகளை திருத்தவும் வாய்ப்பு ஏற்படும். பணிச்சுமை, வேலை என்று ஏதாவது காரணங்களை கூறிக்கொண்டு பெற்றோர், குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி விடக் கூடாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றங்களை எதிர் கொண்டு, நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு புதிய சமூகசூழலின் நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பாடப் புத்தகத்தை தாண்டி பள்ளியில் கிடைக்கும் பாடம் என்பது குழந்தைகளுக்கு எந்தநாளும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் தொடக்க கல்வி முக்கிய இடம் பெறுகிறது. அந்த பருவத்தில் குழந்தைகளை நற்பண்புகள் மிகுந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அது அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

    குழந்தைகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல யாருக்கும் எதையும் எளிதாக கற்றுக்கொடுக்கும் திறன் பெற்றவர்கள் ஆவர். அவர்களின் அணுகுமுறை யாரையும் எளிதில் ஈர்த்து விடும். அதன் மூலம் அவர்கள் சொல்லாத விஷயங்களின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. எனவே அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். நல்ல வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதை அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் நல்ல மனிதர்களாக மாற்ற அவர்களுடன் நேரம் செலவிடுவதே நல்ல அணுகுமுறை ஆகும்.
    முட்டை ஊட்டச்சத்து மிக்க உணவு என்பது அனைத்து அம்மாக்களுக்கும் தெரிந்ததே. ஆனால் அதை எப்போது , எப்படி தர வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
    முட்டை ஊட்டச்சத்து மிக்க உணவு என்பது அனைத்து அம்மாக்களுக்கும் தெரிந்ததே. ஆனால் அதை எப்போது , எப்படி தர வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தவறான நேரத்தில் தவறான முறையில் கொடுத்தால் அது உங்கள் குழந்தைக்கு அலர்ஜி , வயிறு வலியை உண்டாக்கலாம்.

    குழந்தைகளுக்கான உணவு வழிகாட்டுதல்கள் படி உங்கள் குழந்தை திடமான உணவை சாப்பிடும் பக்குவத்தை எட்டவில்லை எனில் முட்டையைக் கொடுக்க வேண்டாம். அதாவது 4 முதல் 6 மாதம் வரை குழந்தைகள் திட உணவுகளை சாப்பிடாது. போல் அலர்ஜியை உண்டாக்கும் உணவுகளை கொடுப்பதில் காலம் தாழ்த்தக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறது.

    பழைய ஆய்வுகளின் படி முட்டையை 2 வயதுக்கு மேல் கொடுக்கலாம் என்கிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் திட உணவுகளை உங்கள் குழந்தைகள் சாப்பிட தயாரானால் கொடுக்கலாம் என்கிறது. உங்கள் குழந்தை நடக்கிறது, தானாக உட்காருகிறது, நாற்காலிகளில் தானாக ஏறி அமர்கிறது என்றால் அந்தக் குழந்தைகளுக்கு முட்டைக் கொடுக்கலாம்.

    முட்டை ஆரோக்கியம்தானே என ஒருநாளைக்கு இரண்டு மூன்று எனக் கொடுக்கக் கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டுமே தர வேண்டும். முட்டையை வேக வைத்து நன்கு மசித்துக்கொடுங்கள். முட்டை செரிமாணிக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும்.

    அதேபோல் நீங்கள் புதிய உணவுகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள் எனில் ஒரு உணவை முதல் முறைக் கொடுத்தபின் இரண்டாவது புதிய உணவை அறிமுகப்படுத்த 2-3 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் உங்கள் குழந்தைக்கு ஏதேனும் அலர்ஜி, உபாதைகள் உண்டாகிறதா என்பதைக் கண்கானிக்க வேண்டும்.

    அதாவது அரிப்பு, தடிப்புகள், தோல் சிவத்தல், கண்களின் தண்ணீர் வடிதல், கண்கள் சிவத்தல், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, மூச்சு வாங்குதல் இப்படி அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை தொடர்புகொள்ளுங்கள்.
    வீட்டிலேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள்.. வீட்டு சுவர் முழுக்க பென்சிலால் எழுதி கிறுக்கி தள்ளிவிட்டார்களா... கவலையை விடுங்க.. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றி தீர்வு காணலாம்.
    வீட்டிலேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள்.. வீட்டு சுவர் முழுக்க பென்சிலால் எழுதி கிறுக்கி தள்ளிவிட்டார்களா... கவலையை விடுங்க.. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றி தீர்வு காணலாம்.

    பேக்கிங் சோடா வீட்டை சுத்தம் செய்ய உதவும் நண்பன் எனலாம். அந்தவகையில் சுவர் கறைகளை அகற்ற பேக்கிங் சோடாவைத் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கரைக்கவும். பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி பேக்கிங் சோடா பேஸ்ட் தொட்டு கறை உள்ள பகுதிகளைத் தேய்த்தால் கறைகள் முற்றிலுமாக அகலும்.

    ஒரு மூடி வினிகரை ஒரு பவுல் வெதுவெதுப்பான நீரில் கலந்து அந்த தண்ணீரை பஞ்சு தொட்டு கறை படிந்துள்ள பகுதிகளில் துடைத்தால் கறைகள் நீங்கும். தெளிவாக கறைகள் நீங்கவில்லை எனில் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வினிகரை நேரடியாகத் தொட்டு தேய்த்தால் நீங்கும். காற்று புகும் வசதி இருப்பின் ஜன்னல்களை திறந்து வைத்தால் வெயில் பட்டு கறை நீங்கும்.

    போரக்ஸ் பவுடர் ஆற்றல் அதிகம் என்பதால் கவனமாகக் கையாளவும். போரக்ஸ் பவுடரை தண்ணீர்ல் கெட்டியான பேஸ்டாக கலந்துகொள்ளவும். பின் கறை படிந்துள்ள இடத்தில் தேய்த்து கழுவவும்.

    சுற்றி உள்ள க்ரயான்ஸ், பென்சில் கறைகளுக்கு டூத்பேஸ்ட் பெஸ்ட் தீர்வு. பேஸ்டை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து பிரெஷ் கொண்டு கறை படிந்த இடத்தில் தேய்க்க கறைகள் நீங்கும்.

    பேக்கிங் சோடாவைக் காட்டிலும் வாஷிங் சோடா கூடுதல் ஆற்றல் நிறைந்தது. இதையும் கெட்டிப் பதத்தில் தண்ணீரில் கரைத்து அழுக்கு படிந்துள்ள இடங்களில் தேயுங்கள். பின் 10 நிமிடங்கள் ஊற வைத்து பிரெஷ் கொண்டு தேய்த்தால் கறை முற்றிலும் போய்விடும்.
    அப்பாக்களிடம் மகன்கள் எதிபார்க்கும் சின்ன சின்ன விஷயங்களை தந்தை பூர்த்தி செய்தாலே அவர்களுக்கு மகிழ்ச்சி. அப்படி பொதுவாக என்னென்ன எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர் என்பதைக் காணலாம்.
    அப்பாக்களிடம் மகன்கள் எதிபார்க்கும் சின்ன சின்ன விஷயங்களை தந்தை பூர்த்தி செய்தாலே அவர்களுக்கு மகிழ்ச்சி. அப்படி பொதுவாக என்னென்ன எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர் என்பதைக் காணலாம்.

    அப்பா குடும்பம், குழந்தை, உறவினர்கள் என்று இருப்பார்கள். ஆனால் அவரை நினைத்து வருந்தும் ஒருவர் அம்மாதான். ஆனால் அவருக்கோ அம்மாவைக் கவனித்துக்கொள்ளவும், அன்பு செலுத்தவும் நேரம் இருக்காது. இதை அம்மாவும் அப்பாவிடம் காட்டவில்லை என்றாலும் அம்மாவை நேசிக்கும் மகன்களுக்குத் தெரியும்.எனவேதான் ஒவ்வொரு மகன்களும் அப்பா அம்மா மீதும் அன்பு செலுத்த வேண்டும். அம்மாவின் ஆசைகளுக்குச் செவி கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

    தோல்விகள் பல சந்தித்தவர்கள்தான் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். அப்பாவை ரோல் மாடலாக நினைக்கும் மகன்கள் தன்னுடைய தோல்வியை எப்படி பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உங்களிடமிருந்து நன்கு கற்றுக்கொண்டிருப்பார்கள். எனவே அவர்களின் வெற்றியை மட்டும் எதிர்பார்க்காதீர்கள். தோல்விகள் எதார்த்தம் அதை எதிர்கொள்ள மகனுக்கு உறுதுணையாக இருங்கள் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

    உங்கள் மகனின் கல்வி , சமூக வாழ்க்கை , புதிய தொழில் தொடங்குகிறார் , புது முயற்சிகள் என எதுவாக இருந்தாலும் உடன் இருந்து சிறந்த ஆலோசகராக இருங்கள். ஆலோசகராக இல்லாவிட்டாலும் உடன் இருப்பதே அவர்களுக்குப் பக்க பலம்தான். இது மகன்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. ஏனெனில் அவர்களின் முதல் நண்பன் நீங்கள்தான்.

    அவர் ஏதேனும் குறிப்பிட்ட விஷயத்தில் தீவிரமாக இருக்கிறார் எனில் அதற்குத் தடுப்பணையாக இருக்காதீர்கள். உதாரணமாக விளையாட்டு, பாட்டு, சினிமா, நடனம் இப்படி மற்ற விஷயங்களில் அதிக தீவிரமாக இருந்தால் ஊக்குவித்து அவரை உற்சாகப்படுத்தும் முதல் நபராக இருங்கள். அதைவிடச் சிறந்த உந்துதல் சக்தி அவர்களுக்கு வேறெதுவும் இல்லை.

    உங்கள் மகன் படிப்பில் , விளையாட்டில் , தொழிலில் சிறந்து விளங்குகிறார் எனில் அவரை பாராட்ட வேண்டும் என்பது அவர்களின் ஆழ் மன எதிர்பார்ப்பு. உன்னால் முடியும் எனத் தெரியும். நீ சிறந்த உழைப்பாளி உனக்கு இந்த வெற்றி பொருத்தமானதே என இப்படி வாய் நிறைய மனதாரப் பாராட்டுங்கள். அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

    நேரம் கிடைக்கும்போது நண்பனைப் போல் அவருடன் பேசி மகிழுங்கள். டெக்னாலஜி குறித்த அப்டேட்டுகளை மகனிடம் தெரிந்துகொள்ளுங்கள். இருவரும் சேர்த்து வெளியே செல்லுங்கள். படத்திற்குச் சென்று வாருங்கள். இப்படி எல்லாவற்றையும் பேசுங்கள். இது உங்கள் உறவு முறையை மேலும் சிறப்பாக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்.
    குழந்தைகளைச் சாலைகளில் செல்லும்போது நம்முடைய இடதுகையால் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச்செல்வது வழக்கம். குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.
    குழந்தைகளைச் சாலைகளில் செல்லும்போது நம்முடைய இடதுகையால் குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச்செல்வது வழக்கம். குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

    பொதுவாக குழந்தையின் ஒரு கையைப் பிடித்து ஒருபோதும் தூக்கக்கூடாது. இரு கைகளின் அக்குளில் கெட்டியாகப் பிடித்துத் தூக்குவதே சரி. அடுத்து நாம் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லும்போது அதன் கைகளைப் பிடித்துக்கொண்டு செல்வோம். அப்போது திடீரென்று குழந்தை திரும்பும்போதோ விளையாட்டுத்தனமாகத் துள்ளிக்குதிக்கையில் கீழே விழும்போதோ கையில் எல்போ பகுதியில் பிரஷர் அதிகமாகி ஜாயின்ட் விலகியிடும். இது ரொம்பவே பயப்படக்கூடியது அல்ல. ஒரு நிமிடத்தில் சரி செய்துவிடலாம். அதனால் பெற்றோர்கள் பயப்படக்கூடாது.

    "பெரியவர்களே அதைச் சரியாகப் பொருத்திவிட முடியும். அப்படிச் செய்ய தயங்குபவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் ஓரிரு நிமிடத்தில் சரி செய்துவிடுவார்கள். இன்னும் சிலர் குழந்தைகளின் கையை நாம் பிடித்து அழைத்துச் சென்றால்தானே இந்தச் சிக்கல் வரும். அதற்குப் பதிலாக குழந்தை நம் கையைப் பிடித்துக்கொண்டு வரச் செய்யலாமே என்று யோசனை சொல்கிறார்கள். கை எலும்பு தொடர்பாக வேண்டுமானால் இது சரியான ஆலோசனையாக இருக்கலாம் ஆனால் குழந்தை ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டு கையை விட்டுவிட்டுச் செல்லக்கூடும். அப்படிச் சென்றுவிட்டால் வாகனத்தில் மோதவோ கீழே விழுந்துவிடவோ வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் கை நம் பிடியில் இருப்பதே நல்லது.

    குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் விட்டமின் டி ஆகியவை அவசியம். பச்சைக் காய்கறிகள் பால் முட்டைகளில் அந்தச் சத்துகள் அதிகம் இருக்கின்றன. அதனால் அவற்றைத் தொடர்ந்துகொடுத்துவர வேண்டும். மேலும் போதுமான அளவு உடற்பயிற்சியும் தேவை. 
    ×