என் மலர்
குழந்தை பராமரிப்பு
டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும்.
டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும். மேலும் இது பசியை குறைக்கும்.
டீயில் 2 சதவீத கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் பொருள் ஆகும். நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும். கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலைவலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படலாம்.

டீ ஒரு டைரெடிக் அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும். மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலைப்பளுவை அளிக்கிறது. சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும். டீ நேரடியாகவும், மறைமுகமாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது.
டீயில் உள்ள அல்கலாய்டு பொருட்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச் சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் இரும்புச் சத்து பற்றாக்குறை என்ற வகை ரத்தச் சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலே சொன்ன விளைவுகள் இருமடங்கு ஏற்படும். மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது. 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ தரவும். இடையில் விடுமுறை நாட்களில் இதற்கும் விடுமுறை தரவும்.

முதுகுவலியும், கழுத்து வலியும் தற்போது பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளிடம் அதிகரித்து வருகின்றன. இதற்கான காரணத்தையும் தீர்வையும் பார்க்கலாம்.
முதுகுவலியும், கழுத்து வலியும் தற்போது பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளிடம் அதிகரித்து வருகின்றன. காரணம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சரியான பாஸ்ச்சர் எது என்பதை யாரும் கற்றுத் தருவதில்லை. குழந்தைகளின் முதுகெலும்பானது மிகவும் மென்மையானது. அது அந்த வயதில் முழுமையாக வளர்ச்சியடைந்திருப்பதில்லை. 14 முதல் 16 சதவிகிதம் பள்ளிக் குழந்தைகளுக்கு முதுகு வலி இருப்பதாகச் சொல்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
பள்ளிக்கூடத்தில்
* நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது.
* தவறான முறையில் வடிவமைக்கப்பட்ட பெஞ்சுகள் மற்றும் இருக்கைகள். அவை பிள்ளைகளின் உயரத்துக்கேற்றபடி சரிசெய்துகொள்ள ஏதுவாக
இல்லாமலிருப்பது.
* பொதி சுமப்பது போன்ற அதிக கனமான புத்தகப்பைகள்.
இந்த எல்லாம் சேர்ந்து குழந்தைகளின் முதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தம் சேர்க்கின்றன. அதனால் வளர்ச்சி நிலையில் உள்ள முதுகெலும்பானது வளைகிறது. உயரத்தைக் குறைத்து உருவத்தையே மாற்றுகிறது. முகுதுவலியை அதிகப்படுத்துகிறது.

தீர்வுகள் என்ன?
* குழந்தைகளின் பள்ளி டைம் டேபிளை மாற்றி அமைக்க வேண்டும். பாடங்களை குறைத்து, டைம் டேபிள் நேரத்தை அதற்கேற்ப குறைத்து
குழந்தைகளின் சுமை யை அகற்றலாம்.
* இன்டர்வெல் என்கிற பெயரில் 10 நிமிடங்களையும், மதிய உணவுக்கு அரை மணி நேரத்தையும் ஒதுக்குவது போக, அவற்றைத் தாண்டியும் நடுவில்
சின்னச் சின்ன பிரேக் கொடுத்து குழந்தைகளை எழுந்து நடமாட செய்யலாம்.
* இன்று பல பள்ளிக்கூடங்களிலும் பிளே கிரவுண்ட் கிடையாது. அப்படியே இருந்தாலும் விளையாட்டுக்கான பீரியடையும் பாட ஆசிரியர்கள் பறித்துக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறு. பள்ளிக்கூடங்களில் மைதானங்களில் வெயில் மேலே படும்படி பிள்ளைகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.
* பெரும்பாலான பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான மேஜைகளும், நாற்காலிகளும் சரியாக வடிவமைக்கப் பட்டவையாக இருப்பதில்லை. குழந்தைகளின் உயரத்துக்கும், கைகளையும், கால்களையும் வைத்துக்கொள்ள ஏற்றபடியும், முதுகுப் பகுதி இருக்கையின் பின்னால் பதியும் படியும் இருக்கும்படியான மேஜைகளும், நாற்காலிகளும் அவசியம்.

வீட்டில் என்ன செய்யவேண்டும்?
* படிக்கிற குழந்தைகள் அடிக்கடி எழுந்து நடக்கவும், நிற்கவும் அறிவுறுத்துங்கள். ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்தபடி படிப்பதை
ஊக்குவிக்காதீர்கள்.
* அவர்களுக்கான ஸ்டடி டேபிள் மற்றும் கம்ப்யூட்டர் டேபிள்களை அவர்களது உயரத்துக்கேற்றபடி அமைத்துக்கொடுங்கள்.
* தினமும் ஒன்று முதல் 2 மணி நேரம் தொடர்ந்து டிவி பார்க்கும் குழந்தைகளில் 60 சதவீதம் பேருக்கு சீக்கிரமே முதுகு வலி வருவதாக சொல்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.
* கொழுகொழு குழந்தைதான் ஆரோக்கியமானது என நினைக்காதீர்கள். குழந்தைகளின் எடையில் எப்போதும் பெற்றோருக்கு ஒரு கண் இருக்க வேண்டும். சராசரியைவிட அதிக எடையுடன் காணப்படுகிற குழந்தைகளைக் கவனித்து எடை அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டறியவும், அதைக் குறைக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டும். அதிகப்படியான உடல் எடை என்பது முதுகின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

குழந்தைகளின் அழுகை பசியை மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் உணர்த்தும். எதற்காக அழுகின்றன என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே, அவைகளின் அழுகையை நிறுத்தமுடியும்!

விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுதால், அதற்கு தூக்கம் தேவையாக இருக்கும். தோளில்கிடத்தி தட்டிக்கொடுத்தால் சில நிமிடங்களிலேயே தூங்கிவிடும்.
இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை திடீரென்று அழுவதற்கு துணிகள் ஈரப்பதமாக இருப்பதும் காரணமாக இருக்கும். சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடைகள் ஈரமாகிவிடும்போது அதை தெரியப்படுத்துவதற்காக அழும்.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்றால் அதன் வாயில் விரலை வைத்தவுடன் சப்ப தொடங்கிவிடும். அதை வைத்தே கண்டு பிடித்துவிடலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு திரவ உணவுகளையே கொடுக்க வேண்டும். திட உணவுகளை கொடுப்பதாக இருந்தால் அதனை நன்கு மசித்து தர வேண்டும். திட உணவுகள் கொடுக்கும்போது தண்ணீர் கொடுக்கவேண்டியது மிக அவசியம். அப்போதுதான் உணவு நன்றாக ஜீரணமாகும்.
வெளி இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி செல்லும்போது அந்த சூழல் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பீறிட்டு அழும். வழக்கத்தைவிட அதிகமான சத்தத்தையோ, இரைச்சலையோ கேட்டாலும் குழந்தை அழுதுவிடும்.
குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக பால் அல்லது திட உணவுகளை கொடுத்தால் வயிறு உப்பி, அந்த அவஸ்தையாலும் அழும். சாப்பிடும்போது வயிற்றுக்குள் காற்று அதிகமாக உட்புகுந்துவிடுவதும் அழுகைக்கு காரணமாக இருக்கும். ஆதலால் திட, திரவ ஆகாரங்களை சாப்பிட்டதும் தோளில் போட்டு ஏப்பம் வெளியேறும் வரை முதுகை தட்டிக்கொடுக்க வேண்டும்.

பருவகாலநிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும். அழகாக இருக்கிறது என்பதற்காக அதிக எடைகொண்ட செயற்கை ஆடைகளை அணிவிக்கக்கூடாது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் குழந்தைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். கூடுமானவரை காட்டன் துணிகளையே உடுத்த வேண்டும். ஆடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இருக்கவேண்டும்.
உடல்நிலை சரியில்லாதபோது குழந்தைகள் சரிவர பால் குடிக்காது. அடிக்கடி அழுதுகொண்டிருக்கும். வழக்கமான அழுகை சத்தத்தில் இருந்து அது வேறுபடும்.
குழந்தை அழுதுகொண்டிருக்கும் சமயத்தில் தொட்டிலில் போட்டு ஆட்டுவதை தவிர்க்கவேண்டும். அது குழந்தைக்கு களைப்பையும், சோர்வையும் உண்டாக்கும். அரவணைத்து தோளில் கிடத்தி தட்டிக் கொடுத்து தூங்கவைக்க வேண்டும்.
குழந்தையின் சருமத்தில் அரிப்போ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அதனை அழுது வெளிப்படுத்தும். பெரும்பாலும் குழந்தைகள் அழுகை மூலம்தான் தங்கள் தொந்தரவுகளை வெளிப்படுத்தும். அதனை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வேண்டும்.
சளி, இருமல், வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் குழந்தையின் அழுகுரலில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
வயிற்றுப்போக்கால் அவதிப்படும் குழந்தைகள் வலியால் அழுது துடிக்கும். உடலில் நீர்ச்சத்து வெளியேறுவதால் நாக்கு வறண்டு தாகத்திற்காகவும் அழும். அப்போது குழந்தையை டாக்டரிடம் கொண்டுசென்றுவிடவேண்டும்.
சில மருந்துகள் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. வாந்தியோ, குமட்டலோ வருவது போலிருக்கும். அதனாலும் குழந்தை மருந்து சாப்பிட மறுத்து அழுது அடம்பிடிக்கும். அந்த சமயங்களில் டாக்டர்களிடம் ஆலோசித்து மாற்று மருந்து கொடுக்கலாம்.
குழந்தைகள் எப்போதும் தாயின் அருகாமையையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கும். தங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அழுகையின் மூலம் வெளிப்படுத்தும்.

எட்டு முதல் பன்னிரெண்டு வயதுள்ள பெண் குழந்தைகளுக்குதான் அதிகளவு இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்றைய தலைமுறைக் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதே குறைந்துவிட்டது. வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடினால்தான் அவர்களால் எந்த அளவுக்கு, எவ்வளவு மணி நேரம் விளையாட முடிகிறது என்பதைக் கண்காணிக்க முடியும்.
அல்லது விளையாடி கொண்டிருக்கும்போதே குழந்தைகள் சோர்வாகி விடுகிறார்களா என்பதையும் கண்டறிய முடியும். ஆனால், இப்போதுள்ள குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு வீடியோ கேம், கைபேசிகளுடன் பொழுதைக் கழிக்கிறார்கள். இதனால் இன்றைய குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதே கஷ்டமாக உள்ளது.
ரத்த சோகைக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கவனச் சிதறல், ஞாபக ஆற்றல் குறைவாக இருக்கும். வீட்டு பாடம், ஓவியம் வரைதல் போன்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கவனம் செலுத்தி செய்யும் விஷயங்களை, அவர்களால் செய்ய முடியாது. குறிப்பாக எட்டு முதல் பன்னிரெண்டு வயதுள்ள பெண் குழந்தைகளுக்குதான் அதிகளவு ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த வயதில் பொதுவாக பெண் குழந்தை பருவம் அடைவதால், இந்த பாதிப்பு உள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிக இரும்புச் சத்துள்ள கீரை, பழங்கள், பேரீச்சை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்” என்கிறார் உமா ராகவன்.
தமிழகத்தை பொறுத்தவரை 55 சதவீதமான பெண்கள் ரத்த சோகைக் குறைபாட்டுடன் உள்ளனர். அதேபோல் 14 சதவீதமான பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வார்கள். அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வார்கள். அதற்கு காரணம் குழந்தைகளின் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதோடு நிற்காமல், அவர்களின் கண், காது, மூக்கு ஆகியவற்றிலும் எண்ணெய் விடுவார்கள். இது முற்றிலும் தவறானதும், ஆபத்தானதும்கூட என்பதை பெற்றோர் மறந்து விடக்கூடாது.
ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளம் குழந்தைகளுக்கு கட்டாயமாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்ட வேண்டாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம்.
அதுவும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் ஒன்றினை அப்படியோ அல்லது லேசாக சூடுபடுத்தியோ பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய் போன்ற அதிக அடர்த்தியுடைய எண்ணெய்கள் பயன்படுத்தும்போது அவற்றின் எண்ணெய் பசை போக அதிக நேரமாகும் என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம்.
குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துவிட்ட 15-20 நிமிடங்களுக்குள் குளிக்க அழைத்துச் சென்றுவிட வேண்டும். எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பாட்டும் சமயத்தில் அதிக சூடான, அதிக குளிர்ச்சியான நீரினைத் தவிர்த்து மிதமான சூடுள்ள நீரைக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும்.
குறிப்பாக எண்ணெய் பசை நன்றாக போகும் அளவிற்கு சிகைக்காய், அரப்பு, மைல்டு ஷாம்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி 10-15 நிமிடங்களுக்குள் குளிப்பாட்டிவிட வேண்டும். பின்னர் தலைமுடியில் ஈரப்பதம் போகும் வரை நன்றாகத் துடைத்துவிட்டு சராசரியாக ஐந்து நிமிடங்கள் மிதமான வெயிலில் தலைமுடியை உலர்த்தச் செய்யலாம். இதனால் தலையில் நீர் தங்காது. குழந்தைகளின் தலைமுடியை உலர்த்த டிரையரைப் பயன்படுத்தக்கூடாது.
மசாஜ் செய்வதைப் பொறுத்தவரையில் 1-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித மசாஜ் முறைகளையும் செய்யாமல் குழந்தையின் உடலில் எண்ணெய் தடவி பெரியவர்கள் தங்கள் கைகளால் மட்டும் லேசாக தேய்த்துவிட்டாலே போதும்.
குறைப் பிரசவத்தில், எடைக் குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உடலில் எண்ணெய் தேய்த்தோ அல்லது லைட் மசாஜ் செய்தோ குளிப்பாட்டலாம். இவ்வாறு செய்வதால் நரம்பு மண்டலம், தசைப்பகுதிகளும் நன்றாக செயல்பட தூண்டிவிடும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் சொன்னால், அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.
பெற்றோர் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.
நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.
குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.

அசைவ உணவுகள் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும். எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென சில வழிமுறைகள் உண்டு.
உங்கள் வீட்டில் உங்கள் குழந்தையோ அல்லது அண்ணன், அக்கா ஆகியோருடைய குழந்தையோ நிச்சயம் இருக்கும். அப்படி இந்தகுழந்தைகள் கைக்குழந்தையாக இருக்கும் பட்சத்தில் பால் மட்டும் தான் உணவாக வழங்கப்படும்.
ஆனால் ஆறு மாதக் குழந்தைக்கு மேல் இருந்தால் பாலைத் தவிர மற்ற ஏதேனும் சில உணவுகளையும் கொடுக்கப் பழக்குவோம். அதிலும் அசைவ உணவுகள் குழந்தைகளுக்கு எப்போது கொடுக்க வேண்டும். எப்படி படிப்படியாக அதைத் தொடங்க வேண்டுமென சில வழிமுறைகள் உண்டு. அதைப் பினபற்றினாலே போதும் அசைவம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் உண்டாகாது.
அசைவ உணவுகளில் முதன்மையான ஊட்டச்சத்தாக ஏராளமான புரதம் நிறைந்திருக்கிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
அசைவத்தில் முதலில் குழந்தைக்கு முட்டையிலிருந்து ஆரம்பியுங்கள். குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்பே அசைவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

முட்டை கொடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீன் உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக சிக்கன் உணவுகளைக் கொடுக்கலாம். அதிலும் சூப் வகைகளைக் கொடுப்பது நல்லது. சில சமயம் திடீரென குழந்தைகள் அசைவம் சாப்பிடும் போது வயிற்றுப் பொருமல், வலி உண்டாகும்.
சில குழந்தைகள் புதிய வித்தியாசமான சுவையாக இருப்பதால் சாப்பிட மறுக்கும். அதனால் சூப் வகைகள் கொடுத்துப் பழகிய பின், சிக்கன் போன்ற திட உணவுகளைக் கொடுக்கப் பழகலாம்.
ஆட்டிறைச்சி இரண்டு வயது ஆன பிறகு கொடுப்பது நல்லது. ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே சில ஹெல்த்தி விஷயங்கள், உணவு மற்றும் பொது சுகாதாரம் குறித்துச் சொல்லிக்கொடுக்க வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே சில ஹெல்த்தி விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு மற்றும் பொது சுகாதாரம் குறித்துச் சொல்லிக்கொடுக்க வேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.
பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.
அதேபோல், பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும். எவர்சில்வரில் செய்யப்பட்ட டிஃபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்ட டிஃபன்பாக்ஸ்களும் கிடைக்கின்றன.

பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே. உங்கள் குழந்தைகளுக்கு வானவில் உணவுகளைச் சாப்பிட பழக்குங்கள். அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு காலை உணவுவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தவேண்டும். குழந்தைகளுக்கு நொறுக்குதீனிற்க்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும். காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாட அனுமதியுங்கள். இது அவர்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும், உடல் வளர்ச்சியடைவும் உதவும். குழந்தைகளுக்கு நீச்சல், வில்வித்தை, மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளை சொல்லிகொடுங்கள்.

குழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் அவர்களுக்கு தண்ணீர் முதல் ஆடை, உணவு, மருந்து என சின்னச் சின்னதாக அத்தனை விஷயங்களிலும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதனால் குழந்தை கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் அவர்களுக்கு எது தேவையோ அதை அவர்களாகவே புரிந்து கொண்டு, செய்து கொள்ள முயற்சி செய்யும் அளவுக்கு பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும்.
அதேசமயம் அவற்றை ஆரோக்கியமான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பது அவசியம். குறிப்பாக, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது மிக அவசியம்...

குழந்தைகள் தங்களுக்குப் பிடித்ததையோ ஏதாவது விளையாட்டுப் பொருட்களையோ தொட்டு, எடுப்பதுண்டு. அதனால் எப்போது சாப்பிடுகிற பொருட்களைத் தொட நேர்ந்தாலும் அதற்கு முன்பாக கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று சொல்லிப் பழக்க வேண்டும்.
அதைவிட வீட்டில் குழந்தைகள் உள்ள வீடாக இருந்தால் எனாமல் போர்டு கொண்ட வெஜிடபிள் கட்டர்களைத் தவிர்க்க வேண்டும். அவை காய்கறியோடு கலந்து குழந்தைகளின் வயிற்றுக்குள் போய்விடும்.
வண்ணத்தாள்களில் சுற்றப்படுகிற, அல்லது வண்ணங்கள் சேர்க்கப்படுகிற உணவுகளை முற்றிலும் தவிர்க்கக வேண்டும். அவற்றில் உள்ள குறைபாடுகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது மிக அவசியம்.
சாப்பிடும்பொழுது வேறு விடியோ கேம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

பிரச்சினைகளை கண்டு எந்த நிலையிலும் மன உறுதியை இழந்துவிடக்கூடாது என்பதை மாணவ-மாணவிகள் இளம்வயதிலேயே கற்றுக் கொள்ள வேண்டும்.
பிரச்சினைகள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலைகளிலும் பல்வேறு போராட்டங்களை கடந்து தான் வெற்றி என்பது கிடைக்கும். எனவே பிரச்சினைகளை கண்டு எந்த நிலையிலும் மன உறுதியை இழந்துவிடக்கூடாது. மனதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும். வெற்றி, தோல்விகளின் தாக்கம் ஒருவனை நிலைக்குலைய செய்துவிடக்கூடாது.
இதை மாணவ-மாணவிகள் இளம்வயதிலேயே கற்றுக் கொள்ள வேண்டும். நெருக்கடி ஏற்படுகிறபோது அதை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். நம்மை பற்றிய குறைகள் கேட்கும் போது அதில் உண்மை இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும். தவறான கருத்துகள் சொல்லப்படுமானால் அதை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட வேண்டும்.
மாணவர்கள் தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது தொடர்பாக யார் அறிவுறுத்தினாலும் கேட்டு நடக்க முன்வர வேண்டும். மேலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும். பள்ளி சூழலில் மாணவர்கள் நண்பர்களிடம் நல்லமுறையில் பேசிப்பழக வேண்டும். கோபம், விரோதம் போன்றவற்றுக்கு இடம் அளித்துவிடக்கூடாது. அது மனரீதியாக தவறான பாதைக்கு மாணவர்களை அழைத்து சென்றுவிடும். மன அழுத்தம் ஏற்படுத்தும் சம்பவம் ஏதுவும் நடந்தால் நல்ல முறையில் விவாதித்து தீர்வுகாண வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது.

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது உண்டு. தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது. எனவே மாணவர்கள் நேர்மறை சிந்தனையோடு பிரச்சினைகளை அணுக வேண்டும். பிரச்சினைகளை கடந்து போகும் போது தான் வெற்றி கிடைக்கும். நம்முடைய நடவடிக்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அணுகி விமர்சனம் செய்வார்கள். அதை எதிர் கொள்ளத்தான் வேண்டும். எப்போது விமர்சனம் எழத்தொடங்குகிறதோ அப்போது தான் ஒருவருக்கு வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படும்.
பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் மாணவர்களுடன் இயல்பாக பழக வேண்டும். அவர்களின் கருத்துக்கும் எண்ணத்துக்கும் ஆசிரியர்கள் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும். எதையும் காரணம் காட்டி மாணவர்களின் சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது. அது அவர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இளைய தலைமுறையினர் தான் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய பங்காளர்கள். அவர்கள் எந்த நிலையிலும் மனஉறுதியை இழந்துவிடக்கூடாது. அதுதான் எல்லாவற்றையும் சாதிக்க கூடிய சக்தி என்ற நம்பிக்கையுடன் களம் இறங்க வேண்டும்.
அப்போது, தான் வெற்றியாளனாக அல்ல சராசரி மனிதனாக நடமாட முடியும். அந்த அளவிற்கு பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகளால் மனிதன் அழிவது இல்லை. பிரச்சினைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகத்தான் அழிந்து விடுகிறான் என்று கூறுவார்கள். எனவே எதையும் தைரியத் தோடும், நேர்மறையான சிந்தனையோடும் எதிர்கொள்ளும் போது எந்த இடத்திலும் இருந்து மீண்டு வர முடியும். இதை ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் உணர வேண்டும்.

தலைவலி அல்லது வயிற்றுவலியால் அவதிப்படுகிற குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான பதிலை இப்போது பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல் பாதம் வரை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன்மூலம் குழந்தையின் நோய்க்கான காரணம் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், எஃப்.டி.ஏ. ஒப்புதல் அளித்த வலிநிவாரணி மாத்திரைகள் குறித்த முழுத் தகவல்கள், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்த பதிவுபெற்ற மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஏற்ற அளவு கொடுக்கலாம்.
சரியான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வலிநிவாரணி மாத்திரைகள், டாக்டர் பரிந்துரைக்காத மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, சைனஸ் பிரச்சனை, மன அழுத்தம் காரணமாக தலைவலி உண்டாகலாம்.
அதற்கு பாராசிட்டமால் கொடுக்கலாம். வயிற்றுவலி மட்டும் இருந்தால் எந்த இடத்தில் வலி உள்ளது, வலியின் தன்மை ஆகியவற்றை பொறுத்து மாத்திரை கொடுக்கலாம்.
குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர் கவனம் செலுத்துவதுடன் குழந்தைகள் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்து, அதற்கு அவர்களை மாற்றுவது எல்லாப் பெற்றோருக்குமே பெரும் போராட்டமாக இருக்கிறது. பரபரப்பான வாழ்க்கை முறை, கூட்டுக்குடும்பம் இல்லாமல் போனது, தாய்மார்கள் வேலைக்கு செல்வது இன்னும் பல காரணங்களால் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது.
நொறுக்குத்தீனிகள் கலோரிகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளை உடலுக்கு அளிக்கிறது. சரிவிகித உணவோ உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் அளிக்கிறது.
நொறுக்குத்தீனியில் அதிக சர்க்கரை இருப்பதால், குழந்தைகளின் வலிமை குறையும், இதனால் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். இதனால், அவர்கள் எதிலும் மனதைச் செலுத்த முடியாமல் சிரமப்படலாம், படிப்பிலும் பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இவற்றில் உள்ள அதிக கொழுப்பால், உடலில் கொலஸ்டிராலும் ட்ரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளில் உடல் பருமன் ஏற்படலாம்.

தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடும் பழக்கம் நெடுநாள் நீடித்தால், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.
ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளைக் கவரும் விதத்தில் காட்சிப்படுத்துங்கள், அவை வண்ணமயமாக இருக்கட்டும், உதாரணமாக, காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு அலங்காரமான சேலட் செய்யலாம். உணவில், மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்ற எல்லா சத்துகளும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும். குழந்தைகள் பெரும்பாலும் விளம்பரங்களைப் பார்த்தே, இதுபோன்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடும் பழக்கத்தில் விழுகிறார்கள் என்று கருதப்படுகிறது. ஆகவே, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்து, தொடர்ந்து நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது ஏன் கெடுதல், எப்படி கெடுதல் என்று அவர்களுக்கு விளக்கிப் புரிய வைக்கவும். எல்லாவற்றுக்கும் மேல், நாம் தான் அவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்ட வேண்டும். ஆகவே முதலில் நாம் திருந்த வேண்டும்!