என் மலர்
உலக கோப்பை கால்பந்து-2022
- முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியிலும் போர்ச்சுக்கல் 4 ஒரு கோல் அடித்து அசத்தியது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் போர்ச்சுக்கலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கல் கோல் மழை பொழிந்தது. போர்ச்சுக்கலின் ராமோஸ் 51-வது நிமிடத்திலும், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், ராமோஸ் 67-வது நிமிடத்திலும், 92-வது நிமிடத்தில் ரபேல் லியோ தலா ஒரு கோல் அடித்தனர்.
சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
- ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இரு அணியும் 0 - 0 என சமனிலை வகித்தது.
இதையடுத்து, கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இறுதியில், மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
- அதிகாரிகள் ரோந்து பணியில் சிக்கினார்
- வேலூர் ெஜயிலில் அடைப்பு
அணைக்கட்டு:
ஒடுக்கத்தூர் பரவமலை காப்பு காட்டில் நேற்று வனச்சர அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கீழ்கொத்தூர் கிராமத்தில் மான் கறியை வேட்டையாடி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது மான் கறியை பாத்திரத்தில் வைத்து சமைத்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மான் கறியை பாத்திரத்துடன் பறிமுதல் செய்து வினோத் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
- முதல் பாதியில் பிரேசில் அணி 4 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியில் தென் கொரியா அணி ஒரு கோல் அடித்தது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.
- முதல் பாதியில் ஜப்பான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- இரண்டாம் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் ஜப்பான், குரோசியா அணிகள் மோதின.
தொடக்கத்தில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என சமனிலை வகித்தன.
கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.
இறுதியில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
- இந்த ஆட்டத்தில் 44-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்காக ஆலிவர் ஜிரவுட் முதல் கோலை அடித்தார்.
- அவர் 116 போட்டியில் விளையாடி 52 கோல்கள் அடித்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 44-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்காக ஆலிவர் ஜிரவுட் முதல் கோலை அடித்தார். இதன்மூலம் அவர் புதிய சாதனை படைத்தார். பிரான்ஸ் நாட்டுக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை ஜிரவுட் பெற்றார்.
அவர் 116 போட்டியில் விளையாடி 52 கோல்கள் அடித்துள்ளார். சராசரி 0.45 ஆகும். முன்கள வீரரான ஜிரவுட் 2011 முதல் பிரான்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஹென்றி 51 கோல்கள் (123 ஆட்டம்) அடித்து முதல் இடத்தில் இருந்தார். இந்த உலக கோப்பை போட்டி மூலம் ஜிரவுட் அவரை முந்தி சாதனை புரிந்தார்.
தற்போது ஜிரவுட் 59 கோல்களுடன் முதல் இடத்திலும், ஹென்றி 51 கோலுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
கிரிஸ்மேன் (42 கோல்) பிளாட்டினி (41), பென்சிமா (37) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். 36 வயதான ஜிரவுட் இந்த உலக கோப்பையில் 3 கோல்கள் அடித்துள்ளார்.
- ஜப்பான் அணி முதல் முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த உலக கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்த குரோஷியா தோல்வி அடையவில்லை.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் "இ" பிரிவில் முதல் இடத்தை பிடித்த ஜப்பான்-"எப் " பிரிவில் 2-வது இடத்தை பிடித்த குரோஷியா அணிகள் மோதுகின்றன. அல்வக்ராவில் உள்ள அல் ஜனோபா ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.
ஜப்பான் அணி முதல் முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி 3 தடவை 2-வது சுற்றில் தோற்று இருந்தது. ஜப்பான் லீக் சுற்றில் ஜெர்மனி (2-1), ஸ்பெயின் (2-1) ஆகிய வற்றை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. இதனால் நம்பிக்கையுடன் ஆடும். கோஸ்டாரிகாவிடம் (0-1) மட்டும் தோற்றது.
கடந்த உலக கோப்பையில் 2-வது இடத்தைப் பிடித்த குரோஷியா தோல்வி அடையவில்லை. கனடாவை (4-1 ) வென்றது. மொராக்கோ, பெல்ஜியத்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. இரு அணிகளும் மோதிய போட்டிகளில் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்டேடியம் 974-ல் நடைபெறும் போட்டியில் 'ஜி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த பிரேசில்-'எச்' பிரிவில் -வது இடத்தை பிடித்த தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான பிரேசில் அணி ஆசிய கண்டத்தில் உள்ள தென்கொரியாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி கடைசி 'லீக்' ஆட்டத்தில் கேமரூனி டம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது.
தென் அமெரிக்க கண்டத்தின் வலுவான பிரேசில் அணி 'லீக்' சுற்றின் மற்ற ஆட்டங்களில் செர்பியா (2-0) சுவிட்சர்லாந்து (1-0) ஆகியவற்றை தோற்கடித்தது.
தென்கொரியா அணி எல்லா வகையிலும் பிரேசிலுக்கு சவாலாக திகழும். அந்த அணி போர்ச்சுக்கலை 2-1 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. கானாவிடம் 2-3 என்ற கணக்கில் தோற்றது. உருகுவேயுடன் தோல்வி எதுவுமின்றி 'டிரா' செய்தது.
இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. இதில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரேசில் 6 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. தென்கொரியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. தென்கொரியாவுக்கு எதிராக பிரேசில் 16 கோல்கள் போட்டுள்ளன. 5 கோல்கள் வாங்கியுள்ளன.
- முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது.
செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.
- முதல் பாதியில் பிரான்ஸ் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ், போலந்து அணிகள் மோதின.
தொடக்கம் முதல் பிரான்ஸ் அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 44 -வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் ஒலிவியர் கிரவுட் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 74-வது நிமிடத்திலும், 91வது நிமிடத்திலும் பிரான்சின் கைலியன் மபாபே தலா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி கட்டமான 99-வது நிமிடத்தில் போலந்தின் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.
- முதல் பாதியில் அர்ஜென்டினா அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
- ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
- முதல் பாதி ஆட்ட முடிவில் 2-0 கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை.
- வெற்றி மூலம் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் 2வது சுற்று ஆட்டங்கள் தொடங்கி உள்ளன. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 10 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டிபே முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து 46வது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த டேலி பிளைன்ட் 2வது கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.
2வது பாதி ஆட்டத்தில் 76 வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஹாஜி ரைட் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்சில் டம்ப்ரைஸ் தமது அணிக்காக 3வது கோலை அடித்தார். ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.
- ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் புகார் அளித்துள்ளார்.
- இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் நிலையில் ரவுண்ட் ஆன் 16 எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போர்ச்சுக்கல் அணி ரவுண்ட் ஆன் 16-க்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் நேற்று தென் கொரிய அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தி தென்கொரியா வென்றது. எனினும் தரவரிசையில் போர்ச்சுக்கல் முதலிடத்தையும், தென்கொரிய அடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த போட்டியின்போது 45 நிமிடங்களுக்கு பிறகு அளிக்கப்பட்ட ஓய்வு சமயத்தில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோவை தென்கொரிய வீரர் திட்டியதாக போர்ச்சுக்கல் அணி பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டஸ் புகார் அளித்துள்ளார். ரொனால்டோவை பார்த்து அந்த வீரர் 'சீக்கிரம் போ' என கத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொனால்டோ "நான் அவரை அமைதியாக இருக்க சொன்னேன். எனக்கு கட்டளையிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை' என கூறியுள்ளார்.






