என் மலர்
இஸ்லாம்
தெற்கு விஜயநாராயணம் மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி அருகே தெற்கு விஜயநாராயணத்தில் மேத்தபிள்ளையப்பா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் மதநல்லிணக்கம், மனிதநேயத்துக்கும் எடுத்துக்காட்டும் விழாவாக நடைபெறுகிறது. தர்கா அமைந்துள்ள தெற்கு விஜயநாராயணத்தில் ஒரு முஸ்லிம்கள் வீடு கூட கிடையாது.
அங்கு இந்து தேவர் சமூகத்து மக்கள் தான் வசித்து வருகிறார்கள். கந்தூரி விழாவுக்கு தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு தங்கள் வீடுகளில் தங்குவதற்கு இடம் கொடுக்கிறார்கள். மேலும் கந்தூரி விழாவை முன்னின்று நடத்தி, கந்தூரி விழாவில் கலந்துகொள்ளும் முஸ்லிம் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பும் வழங்குகிறார்கள்.
தெற்கு விஜயநாராயணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 16-ந் தேதி தான் கந்தூரி விழா நடத்துகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று நடந்தது. காலையில் மேத்தபிள்ளையப்பா வாழ்ந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல, திரளான முஸ்லிம்கள் பிறை கொடிகளை ஏந்திக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலம் தர்காவை வந்தடைந்தது. காலை 9.45 மணி அளவில் தர்காவில் கொடி ஏற்றப்பட்டு, துவா நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் மேத்தபிள்ளையப்பாவுக்கு பிடித்தமான மல்லிகை பூ, வாழைப்பழம், அரிசி, கோழி, ஆடுகளை நேர்ச்சையாக படைத்தனர். பின்னர் மாலையில் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. இரவில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது.

நாம் கற்றுக்கொடுக்கும் கல்வி எவ்வாறு வாழையடி வாழையாக நன்மை பயக்குமோ அவ்வாறே நமது ஒவ்வொரு செயலும் சமூகத்தில் உயிருள்ளதாக மாறி உருப்பெற்று நிற்கும்.
சமூகப் பொறுப்புணர்வு என்றால் என்ன..?
பல பரிணாமங்களில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உண்மையில் மனிதனை அல்லாஹ் தனித்து இயங்கும் ஒரு உயிரினமாகப் படைக்கவில்லை. மாறாக அவன் ஒரு சமூகப் பிராணி. எனவே தம்முடைய அனைத்து தேவைகளுக்காகவும் அவன் பிற மனிதனைச் சார்ந்தே வாழவேண்டியுள்ளது.
இந்த அடிப்படையில் அவனுடைய எண்ணங்கள், செயல்கள், சொற்கள், ஏனைய விவகாரங்கள் அனைத்தும் பிற மனிதரிடம் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டே தீரவேண்டும்.
அதாவது, அவனது செயல்கள் சமூகத்திற்கு நன்மை பயக்குமா? அல்லது தீமை பயக்குமா? என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். சமூகத்தில் அதன்மூலம் ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தே அச்செயல் சமூகப் பொறுப்புணர்வு மிக்க செயலா? அல்லது பொறுப்புணர்வற்ற செயலா? என்று பாகுபடுத்த முடியும்.
இஸ்லாம் மூன்று விஷயங்களை பெரும் பாவச்செயல்களாகக் கருதுகிறது.
ஒன்று ‘இக்னரன்ஸ்’ எனும் பொடுபோக்கு. இதன் பொருள் அறியாமை அல்ல. ‘நடப்பது நடக்கட்டும் நமக்கு என்ன?’ என்ற அலட்சிய மனோபாவம் தான் பொடுபோக்கு ஆகும்.
உலகிலேயே அதிக அறிவு கொடுக்கப்பட்டவன் இப்லீஸ். அவனது செயல்கள் அனைத்தும் அறியாமையில் வெளிப்பட்ட செயல்கள் அல்ல. மாறாக அலட்சியத்துடன் வெளிப்பட்டவை. ஆகவேதான் அவன் சபிக்கப்பட்டவனாக மாறினான்.
அவ்வாறே அபூஜஹ்ல் என்பவனும். அவன் ‘அபுல்ஹிகம்’ என்று அழைக்கப்பட்டவன். அதாவது ‘அறிவின் தந்தை’ என்று பொருள். ஆனால் அவனது செயல்கள் அனைத்தும் சமூகத்திற்கு எவ்விதத்திலும் நன்மை தரவில்லை. ஆகவேதான் அவன் அபூஜஹ்ல் - ‘மடமையின் தந்தை’ என்று சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டான்.
இரண்டாவது ‘அரொகன்ஸ்’ எனும் அகம்பாவம். ஏனைய மனிதர்களைத் தன்னைவிட கேவலமாகக் கருதுவது.
மூன்றாவது ‘அக்ரெஷன்ஸ்’ எனும் ஆதிக்கம். தன்னுடைய சுய லாபத்திற்காக மற்றவர் மீது வலுத்தாக்குதல் நடத்துவது.
எனவே இந்த மூன்றும் பெரும்பாவங்கள் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறது. திருக்குர்ஆனின் இந்தப் பார்வை சமூகப் பொறுப்புணர்வு சம்பந்தப்பட்டது எனலாம்.
இந்த மூன்று பண்புகளும் சமூகப் பொறுப்புணர்வு அற்றவர்களிடமிருந்தே வெளிப்படும்.
எல்லா விவகாரங்களிலும் மனிதன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் கற்றுத்தருகிறது. வீதியில் நடக் கிறீர்கள். அங்கே ஒரு கல் கிடக்கிறது. அதை உடனே அப்புறப் படுத்துகிறீர்கள். அதுதான் சமூகப் பொறுப்புணர்வு. ‘அதேசமயம்... வீதியில் செல்வோரைக் கவனிக்காமல் அந்தக் கல்லைத் தூக்கி எறிந்துவிடுகின்றீர்கள். அது பின்னால் வந்துகொண்டிருக்கும் ஒருவரின் மண்டையை உடைக்கிறது என்றால் அதுதான் அக்ரெஷன்ஸ்.
ஆகவே செயல் மட்டுமல்ல.. அதன் விளைவும் சமூகப் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறது.
மனிதனைப் பொறுத்தவரை பொதுவாகவும், முஸ்லிமைப் பொறுத்தவரை குறிப்பாகவும், எந்த நேரத்திலும் அவனது சொல், செயல், எண்ணங்களால் மற்றவர்களுக்கு துன்பம் வரும் அளவுக்கு ஒருபோதும் நடந்துகொள்ளக் கூடாது. தன்னைக் குறித்து மட்டும் சிந்திக்காமல் பொதுநலனுடன் சிந்திப்பவனாகவே ஒரு முஸ்லிம் இருப்பான்.
நான் பேசும் பேச்சால் எவருடைய உள்ளமாவது புண்படுமா..? எனது நடத்தையால் எவராவது காயப்படுவார்களா..? தொந்தரவாக அமையுமா..? என்றெல்லாம் யோசித்து சிந்தித்து செயல்படும் ஒரு மனிதனையே நாம் சமூகப்பொறுப்பு மிக்க பண்பாளன் என்று கூறுகின்றோம்.
‘யாரெல்லாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்கள் தங்களது அண்டை வீட்டாருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது சமூகப் பொறுப்புணர்வின் ஓர் அங்கமாகும். அதாவது ஒருவரிடம் இறைநம்பிக்கை இருப்பதற்கான அடையாளம் மற்றவருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதாகும் என்று பொருள்.
எனவே ஒருவன் அடுத்தவனைத் தொந்தரவு செய்கிறான் என்றால் அவன் ‘சமூகப் பொறுப்புணர்வு அற்றவன்’ என்பதுடன் ‘இறைநம்பிக்கை அற்றவன்’ என்றும் பொருள்.
ஆகவே ஒரு முஸ்லிம் எப்போதும் தமது பேச்சால் தமது செயலால் யாருக்காவது தொந்தரவு ஏற்படுகிறதா என்பது குறித்து யோசித்தவண்ணம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
இந்த சமூகப் பொறுப்புணர்வு யார் மீது கடமை?
இந்த சமூகப் பொறுப்புணர்வு எவ்வாறு பார்க்கப்படவேண்டும் என்றால்.. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உயிர் உள்ளது. அந்தச் செயல் வளரும். சிலபோது அது மறுமை வரை வளர்ந்துகொண்டே இருக்கும். அதாவது நாம் செய்யும் ஒரு சின்ன செயலும், ஒரு குளத்தில் கல்லெறியும்போது உருவாகும் அலைகளைப் போன்று சமூகத்தில் பெரிய அதிர்வுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதுதான் நமது செயலின் உயிர். சிலபோது அந்த செயல் வளர்ந்துகொண்டே இருக்கும். நல்லதோ கெட்டதோ அது மறுமை வரை நீண்டு செல்லும்.
இதனை இவ்வாறு எளிமையாக கூறலாம். நீங்கள் ஒரு வீதியில் நடக்கின்றீர்கள். கண்களுக்கு முன்னால் ஒரு ஆணி கிடக்கிறது. அந்த ஆணியை கவனமாக நீங்கள் அப்புறப்படுத்துகின்றீர்கள். இது சமூகப் பொறுப்பு மிக்க செயல்.
அதேவேளை அந்த ஆணியைக் கண்ணால் கண்டபின்னரும் அப்புறப்படுத்தவில்லை என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்குப் பின்னால் ஒரு மனிதர் நடந்து வருகிறார். அவரது காலில் அந்த ஆணி குத்திவிடுகிறது. அவர் சர்க்கரை நோயாளி. அவருடைய கால் புண்ணாகி அழுகி காலை வெட்டும் சூழல் ஏற்படுகிறது. அதனால் அவர் இறந்து போகிறார்.
இதன் காரணமாக அவரது பிள்ளைகள் அநாதைகள் ஆகின்றனர். கவனிக்க ஆட்கள் இல்லாமல் அந்த பிள்ளைகள் மோசமான பிள்ளையாக வளருகின்றனர். அந்த பிள்ளைகளின் காரணத்தால் சமூகத்தில் பெரிய தீமைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு நடக்கிறது என்றால் இதன் வேரைத் தேடிக்கொண்டே வந்தால் எங்கு சென்று முடியும்..? அந்த சமயத்தில் வீதியில் கிடந்த அந்த ஆணியை நீங்கள் எடுத்துவிட்டிருந்தால் இவ்வளவும் நடக்காமல் இருந்திருக்கலாம்.
ஒரு செயலை செய்யாமல் விட்டதால் அது எவ்வாறு மாறுகிறது. செய்திருந்தால் எவ்வாறு மாறி நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இதையே இஸ்லாம் ‘சதகத்துல் ஜாரியா’ என்று (நிரந்தர தர்மம்) கூறுகிறது.
ஒரு விளக்கைக் கொண்டு எத்தனையோ ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றமுடியும் என்பதைப் போல்தான் இதுவும். நாம் கற்றுக்கொடுக்கும் கல்வி எவ்வாறு வாழையடி வாழையாக நன்மை பயக்குமோ அவ்வாறே நமது ஒவ்வொரு செயலும் சமூகத்தில் உயிருள்ளதாக மாறி உருப்பெற்று நிற்கும். இதுதான் சமூகப் பொறுப்பு.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

ஸஃப்வானுடன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) வந்தடைந்த காட்சியைப் பார்த்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பண்பிற்கேற்பப் பேசினார்கள்.
'பனூ முஸ்தலிக்' என்ற ஒரு புனிதப் போரின்போது முஹம்மது நபி(ஸல்) பயணத்தில் தன்னுடன் எந்த மனைவியை அழைத்துச் செல்வது எனத் தீர்மானிக்கச் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். ஆயிஷா(ரலி) அவர்களின் பெயர் வரவே, அவர்களை அழைத்துச் சென்றார்கள்.
போர் முடிந்து திரும்பும்போது படைகளுடன் மதீனாவிற்கு அருகில் ஓர் இடத்தில் தங்கினர். அங்கு ஆயிஷா(ரலி) அவர்களுடைய சுய தேவைக்காக அவர்கள் அமர்ந்து வந்த ஒட்டகச் சிவிகையை விட்டு வெளியே சென்றார்கள். பயணத்தில் வரும்போது தனது சகோதரியிடமிருந்து ஒரு கழுத்து முத்துமாலை இரவல் வாங்கி அணிந்திருந்தார்கள்.
அவர்கள் சென்ற மறைவான இடத்தில் அது விழுந்துவிட்டது. தனது கூடாரத்திற்குத் திரும்பி வந்ததும் அதனைக் கவனித்தவர்கள், அதைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் கூடாரத்தைவிட்டு மறுபடியும் வெளியேறியதை யாரும் கவனிக்கவில்லை. இது தெரியாமல் நபிகளார் பயணத்தைத் தொடர கட்டளையிட்டபோது, ஆயிஷா(ரலி) உட்கார்ந்து வந்த சிவிகையை ஒட்டகத்தின் மீது ஏற்றிவிட்டார்கள். இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் தூக்கியதால் தொட்டியின் எடை குறைந்திருந்ததை அவர்கள் உணரவில்லை, ஆயிஷா(ரலி) சிவிகைக்குள் இருப்பதாகவே நினைத்தனர். அங்கிருந்து அனைவரும் புறப்பட்டுவிட்டனர்.
தொலைந்து போன மாலையை ஆயிஷா(ரலி) கண்டெடுத்துத் தாம் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பியபோது அங்கு யாரும் இருக்கவில்லை. தன்னைக் காணவில்லையென்று கண்டிப்பாகத் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த இடத்தைவிட்டு நகராமல் அங்கேயே உட்கார்ந்தபடி கண்ணயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போர்ப்படையின் பிற்பகுதியில் வந்து கொண்டிருந்த ஸஃப்வான் இப்னு முஅத்தல் (ரலி) என்பவர் மறுநாள் காலையில் ஆயிஷா(ரலி) அவர்களைப் பார்த்து, “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ்வின் தூதரின் மனைவியாயிற்றே!” என்று உரக்கக் கூறினார். இதைக் கேட்ட ஆயிஷா (ரலி) விழித்தெழுந்தார்கள்.
ஸஃப்வான தனது ஒட்டகத்தை மண்டியிடச் செய்தபோது அதன்மீது ஆயிஷா(ரலி) ஏறிக் கொண்டார்கள். அவர் ஆயிஷா(ரலி) அவர்களின் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இதற்கிடையில் அவர் ஒரு வார்த்தையும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் பேசவில்லை. நபிகளாரின் படையினர் மதிய ஓய்வுக்காக நடுப்பகல் நேரத்தில் ஓரிடத்தில் தங்கிவிட்டிருந்ததால் நபிகளாரின் படையினரை அவர்களால் வந்தடைய முடிந்தது.
ஸஃப்வானுடன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) வந்தடைந்த காட்சியைப் பார்த்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பண்பிற்கேற்பப் பேசினார்கள். அப்போது எதிரியான தீயவன் அப்துல்லாஹ் இப்னு உபை தனது நயவஞ்சகத்தையும், வெறுப்பையும் இதுதான் சந்தர்ப்பமென்று வெளிப்படுத்தினான். ஓர் அவதூறான கதையைப் புனைந்து, அதை மக்களுக்கு மத்தியில் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பரப்பினான். அவனது நண்பர்களும் அவனுடன் இக்காரியத்தில் ஈடுபட்டனர். (தொடரும்)
ஸஹீஹ் புகாரி 3:52:2661, 4:64:4141
- ஜெஸிலா பானு.

கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்ற வசனத்தின் மூலம் ஸைது இப்னு அர்கம் சொன்னதை உண்மை என்று இறைவன் தெளிவுபடுத்தினான்.
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் என்பவனுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது விரோதம் இருந்தது. காரணம் மதீனாவின் மக்கள் அவனைத் தங்களின் தலைவராக ஏற்க இருந்த நிலையில்தான் நபிகள் நாயகம்(ஸல்) மதீனாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். சூழல் மாறியது. மக்கள் அவனைத் தலைவராக ஏற்கவில்லை.
இதனை மனதில் வைத்திருந்த அப்துல்லாஹ் இப்னு உபை சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தான். மதீனாவாசிகளிடம், “நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள். நாயை நல்ல கொழுக்க வளர்த்தால், அது இறுதியில் நம்மையே தின்றுவிடும். இழிவானவர்களை மதீனாவிலிருந்து வெளியேற்ற வேண்டும். நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்” என்று நபிகளாரைப் பற்றி அவதூறு கூறினான் அப்துல்லாஹ் இப்னு உபை.
அக்கூட்டத்தில் இருந்த ஜைது இப்னு அர்கம் இதைக் கேட்டு நபிகள் நாயகத்திடம் அதைச் சொல்லிவிட்டார். உஸைது(ரலி) என்பவர், அப்துல்லாஹ் இப்னு உபை ஏன் நபிகளார் மீது வெறுப்புக் கொண்டார் என்று விளக்கி நபிகளாரைச் சாந்தப்படுத்தினார். இருப்பினும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஆளனுப்பினார்கள்.
அவனிடம் அது குறித்துக் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை நபியவர்களைச் சந்தித்து, தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று சத்தியம் செய்து கூறினான். “ஜைது இப்னு அர்கம் பொய்யர், சரியாக விளங்கி இருக்கமாட்டார் அல்லது சரியாக நினைவில் வைக்கத் தெரியாதவர்” என்றெல்லாம் அப்துல்லாஹ் இப்னு உபைக்குச் சாதகமாகச் சிலரும் பேசினர்.
நபிகளாரும் அப்துல்லாஹ் இப்னு உபையை நம்பினார்கள், ஜைது இப்னு அர்கம் பொய் சொல்வதாக எண்ணினார்கள். அப்போது அல்லாஹ் இறை வசனங்களை அனுப்பினான். அதில், “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்' என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்ற வசனத்தின் மூலம் ஸைது இப்னு அர்கம் சொன்னதை உண்மை என்று இறைவன் தெளிவுபடுத்தினான். அதனை நபி முஹம்மது(ஸல்) ஸைது இப்னு அர்கத்தை அழைத்து ஓதிக் காட்டினார்கள்.
வஞ்சகத்தை மனதில் வைத்துப் பகைமை வளர்த்த அப்துல்லாஹ் இப்னு உபை நபிகளாரின் குடும்பத்திலேயே குழப்பத்தை ஏற்படுத்தினான்.
ஸஹீஹ் புகாரி 5:65:4900, 4901, 4903, 4904, திருக்குர்ஆன் 63:1-8.

புண்ணியம் தேடி புனிதம் அடைய நினைப்பவர்கள், மண்ணில் மனிதனை நாடி கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டாலே போதும் புண்ணியம் கோடி கிடைக்கும்.
மனிதம் என்பது மனிதநேயத்தை குறிக்கும் ஒரு வளமான சொல். மனிதநேயம் என்பது புனிதம் நிறைந்த செயல். புண்ணியம் தேடி புனிதம் அடைய நினைப்பவர்கள், மண்ணில் மனிதனை நாடி கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டாலே போதும் புண்ணியம் கோடி கிடைக்கும்.
அன்பு என்பது இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் அன்னியோன்யம், ஆறுதல், நேர்மறை உணர்வு, இரக்க சிந்தனை, கருணை உள்ளம், சமூக அக்கறை, என்றும் அன்புடன் நடந்து கொள்ளும் முறை. இவற்றுக்கு மனிதம் என்றும், மனிதநேயம் என்றும் போற்றப்படுகிறது.
இவற்றிலுள்ள அம்சங்கள் சக மனிதர்களிடையே பரிபூரணமாக பரிமாறப்பட்டால் மனித நேயம் என்றும் பசுமையாக இருக்கும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் மனிதநேயத்தில் விரிசல் ஏற்பட்டுவிடும்.
அனைத்து மதங்களும், சமயங்களும், கோட்பாடுகளும் மனிதநேய சிந்தனைகளை விதைத்திருக்கின்றன. விதைகளும், வேர்களும் என்றும் மறைந்துதான் இருக்கும். அதன்மேல் வளரும் கிளைகளும், பூக்களும், கனி வகைகளும் காட்சி தருகின்றன. அனைத்து மதத்தவர்களும் கிளைகள், பூக்கள், கனி வகைகள் போன்று பார்ப்பவர்களுக்கு என்றும் பசுமை மாறாமல் கண்கவர் காட்சியையும், கண்குளிர்ச்சியையும் தருவது அவர் களின் தார்மீக பொறுப்பாகும்.
இஸ்லாத்தில் மனிதநேயம் என்பது உயர்வானது. மேலும் மற்ற கோட்பாடுகளை விடவும் வித்தியாசமானது. ஒரு மனிதனை வாழவைப்பதும், அவனது வாழ்க்கைக்கு முடிந்தளவுக்கு உதவி புரிவதும், அவனுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து அவனை விடுவிப்பதும்தான் இஸ்லாமிய மனித நேய கோட்பாடுகளாக கருதப்படுகின்றன.
‘ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ (திருக்குர்ஆன் 5:32)
‘ஒரு பெண் போர்க்களம் ஒன்றில் கொல்லப்பட்டு கிடந்தாள். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்வதை தடை செய்தார்கள்’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி : 3015)
‘எவரொருவர் தமது சகோதரருக்கு ஏற்படும் உலக துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்கிறாரோ, அவரை இறைவன் அவருக்கு ஏற்படப்போகும் மறுஉலக துன்பங்களிலிருந்து விடுவிக்கின்றான்; மேலும், தமது சகோதரருக்கு உதவிபுரியும் காலமெல்லாம், அவருக்கு இறைவன் உதவி புரிந்து கொண்டேயிருப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா, நூல் - அஹ்மது).
‘கருணையாளர்களின் மீது இறைவன் கருணை செலுத்துகின்றான். எனவே, நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது கருணை காட்டுவார்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அமர் (ரலி), நூல்: அபூதாவூத், திர்மிதி)
‘மக்கள் மீது கருணை காட்டாதவன் மீது, அவன் மீது இறைவன் கருணை காட்டமாட்டான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் தமக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்து சத்தியத்தை உரக்கச் சொன்னார்கள்; ஆன்மிகத்தை அழகாக எடுத்துக் கூறினார்கள். ஆனாலும், அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனினும் மதீனாவிற்குச் சென்று முதன்முதலாக மதத்தைப் பற்றி குறிப்பிடாமல் மனிதத்தைப் பற்றி, மனித நேய கோட்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். அதில் மகத்தான வெற்றியை அடைந்தார்கள்.
மக்களை நபி (ஸல்) அவர்கள் மதத்தால் அதிகம் கவர்ந்ததை விட மனிதத்தால், மனித நேயத்தால் தான் அதிகம் கவர்ந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை. நபி (ஸல்) அவர்கள் அப்படி என்ன மனிதநேயத்தை போதித்தார்கள்?
‘மக்களே! அமைதியை பரப்புங்கள், பசித்தவருக்கு உணவளியுங்கள், உறவுகளுடன் உறவாடுங்கள். பிறகு, மக்கள் துயில் கொண்டிருக்கும் வேளையில் இறைவனை தொழுங்கள். சாந்தமான முறையில் சொர்க்கத்தில் நுழைவீர்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் ஸலாம் (ரலி) நூல்: அஹ்மது, திர்மிதி)
அமைதிக்கும், பசிக்கும் சாதி, மதம் தெரியாது. உறவாடுவதற்கும் சாதி, மதம், பேதம் காணக்கூடாது. இம்மூன்று அம்சங்களிலும் முதன்மையாக கவனிக்க வேண்டியவை மனிதநேயம் மட்டுமே.
இதைத்தான் நபி (ஸல்) அவர்களும் பேணி, மதத்தைவிட மனிதத் தன்மைக்கும், மனித நேயத் தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். மனிதநேயம் தான் நபியின் வாழ்விலும், திருக்குர்ஆனிலும் நிறைவாக காணப்படுகின்றன. திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தகைய மனிதநேய சிந்தனைகள் சிலவற்றை பார்ப்போம்.
‘எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமல் இருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே பயபக்திக்கு மிகவும் நெருக்கமானது’. (5:8)
‘இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தை களைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக. பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக, அவர்கள் அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்’. (9:6)
‘இணை கற்பிப்போரில் நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்து, அவர்கள் (அவ்வுடன்படிக்கையில்) உங்களுக்கு எந்தக்குறைவும் செய்யாமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர, அவர்களிடம் அவர்களின் உடன்படிக்கையை அதற்குரிய காலக்கெடு வரை முழுமைப்படுத்துங்கள். இறைவன் (தன்னை) அஞ்சுவோரை நேசிக்கிறான்’. (9:4)
‘நன்மையும், தீமையும் சமமாகாது, நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உங்களுக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்’. (திருக்குர்ஆன் 41:34)
மேற்கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தும் திருக்குர்ஆனில் இடம்பெற்ற மனிதநேய சிந்தனைகளாகும். இன்னும் இதுபோன்ற எண்ணற்ற மனிதநேய கருத்துகள் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. மதங்கள் வெற்றிபெறாத இடங்களில் மனிதமும், மனிதநேயங்களும் வெற்றிவாகை சூடியுள்ளன. மண்ணில் மனிதாபிமானங்கள் இருக்கும் வரைக்கும் மனித நேயங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
எங்கிருந்து மனிதநேயம் வெளிப்பட்டாலும் அதை வரவேற்க வேண்டும். அன்பும், கருணையும், இரக்கமும் மனித உள்ளங்களில் இருக்கும் வரைக்கும் மனிதநேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாபாதகம் மறைந்து கொண்டு தான் இருக்கும். உலக முடிவு நாள் வரைக்கும் மனித நேயத்தை இஸ்லாம் ஆதரிக்கும், மாபாதகத்தை எதிர்க்கும்.
மனிதம் வெல்லட்டும், மனிதநேயம் சிறக்கட்டும், மாபாதகம் மண்ணோடு புதையட்டும்.
மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு வேண்டிய உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; யாவரையும் மிகைத்தவன்.
நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்கள் முந்நூறு பேர் கொண்ட குதிரைப்படையை அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) தலைமையில் ஒரு புனிதப் போருக்காக அனுப்பினார்கள். அந்தக் குழு குறைஷிகளின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அக்குழு அந்த இடத்திலேயே அரை மாதம் தங்க வேண்டியிருந்ததால் சாப்பாடு பற்றாக்குறை ஏற்பட்டது. பாதி வழியிலேயே அவர்கள் கையிருப்பில் இருந்த பயண உணவு தீர்ந்து போய்விட்டது.
அபூ உபைதா(ரலி) அந்தப் படையின் கைவசமிருந்த கட்டுச் சாதங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டும் படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டன. இரண்டு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்கள் சேர்ந்தன. அபூ உபைதா(ரலி) அவற்றைப் படை வீரர்கள் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கொடுத்து வந்தார்கள். இறுதியில், அவையும் தீர்ந்து போய்விட்டன. கடுமையான பசியில் இருந்ததாலும், வேறு உணவு ஏதும் இல்லாததாலும், கருவேல மரத்தின் இலையைச் சாப்பிட்டு வந்தனர். எனவே அந்தப் படைப்பிரிவுக்கு ‘கருவேல இலைப்படைப் பிரிவு' (‘ஜைஷுல் கபத்') என்று பெயர் சூட்டப்பட்டது.
அப்போது 'அம்பர்' என்றழைக்கப்படும் பெரிய திமிங்கல வகை மீன் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியது. அதிலிருந்து அக்குழு அரை மாதம் வரை சாப்பிட்டனர். அந்த மீனின் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்தனர். அவர்களின் மேனிகள் செழுமையடையும் அளவிற்கு அதன் கொழுப்பை எடுத்துப் பூசிக்கொண்டனர்.
அப்போது அபூ உபைதா(ரலி) அந்தப் பெரிய மீனின் விலா எலும்புகளில் ஒன்றையெடுத்து அதைப் பூமியில் நட்டு வைத்து, அதன் கீழே தம்முடனிருந்த மிக உயரமான மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு அந்த எலும்புக் கூட்டுக்குக் கீழே நடந்து சென்றார்கள். ஆனால், அவற்றை அது தொடவில்லை, அந்த மீனின் எலும்பு அந்த அளவுக்குப் பெரியதாக இருந்தது.
அதனுடைய இறைச்சியிலிருந்து பெருமளவை அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டனர். மதீனா திரும்பியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறிய போது “இது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும். உங்களிடம் ஏதாவது அதில் மீதமிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்கள்” என்றார்கள். அதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு வேண்டிய உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; யாவரையும் மிகைத்தவன்.
ஸஹீஹ் புகாரி 4:64:4361, 6:72:5494, 2:47:2483

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 843-வது ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.

ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
நேற்று தொடக்க நிகழ்ச்சியாக தர்கா மண்டபத்தில் மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் உலக மக்களின் நல்லிணக்கத்திற்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சந்தனக்கூடு திருவிழா தொடங்கி 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
வருகிற 2-ந் தேதி மாலை 5 மணியளவில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டு, 3-ந்தேதி மாலை 3 மணியளவில் ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெப்வை மாகாலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்படும். முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படும்.
ஆகஸ்டு 15-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் சந்தனக் கூடு தர்கா எதிரில் இறக்கி வைக்கப்படும். இதை தொடர்ந்து மகானின் மக்பிராவில் (சமாதியில்) சந்தனம் பூசப்படும். ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 6.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு ஆயிரக்கணக் கானவர்களுக்கு நெய்சோறு நேர்ச்சையாக வழங்கப்பட்டு விழா நிறைவுபெறும்.

திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தவறுகள் செய்யாமல் இருக்கவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.
இரு மனங்கள் இணைவதே திருமணம். ஒவ்வொருவரையும் ஒழுக்கக்கேட்டில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக திருமணம் திகழ்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் அன்பையும் பாசத்தையும் அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் ஏற்ற வழி திருமணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
“நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களிடையே அன்பையும் கிருபையையும் உண்டாக்கி இருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்திக்கக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன” (திருக்குர்ஆன்-30:21) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகிறது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தவறுகள் செய்யாமல் இருக்கவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.
இதனால்தான் நபிகளார், “திருமணம் எனது வழிமுறை. இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள்.
“நான்கு விஷயங்களுக்காகப் பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்திற்காக, அவளது குலச்சிறப்புக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கப்பற்றுக்காக. நீங்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்களையே மணந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நலம் உண்டாகட்டும்” என்று நபிகளார் நவின்றார்கள்.
மார்க்கப்பற்றுள்ள பெண்களிடம் இறையச்சம், அன்பு, நற்பண்பு, நாணம் ஆகிய குணங்கள் குடிகொண்டிருக்கும் என்பது நபிகளாரின் நம்பிக்கையாகும்.
திருமணத்திற்கு முன்பே மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை நபிகளார் வற்புறுத்தியுள்ளார்கள்.
“நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னிடம், ‘அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள்ளும். ஏனெனில் அது உங்கள் இருவரிடையே நட்பையும் இணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும்’ என்று கூறினார்கள்”. (அறிவிப்பவர்: முகீரா (ரலி), ஆதாரம்: திர்மிதீ, நஸாயீ).
இஸ்லாமியத் திருமணம் என்பது ஆண்-பெண் ஆகிய இருவருக்கு இடையே செய்யப்படும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும். இதைத்தான் திருக்குர்ஆனில், “சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே; மேலும் அந்த மனைவியர் உங்களிடம் இருந்து உறுதியான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்களே” (4:21) என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.
திருமணத்தை வெளிப்படையாகவும் எளிமையாகவும் நடத்த வேண்டும்.
“திருமணத்தைப் பலர் அறிய வெளிப்படையாகச் செய்யுங்கள். மேலும் அதைப் பள்ளிவாசல்களில் நடத்துங்கள்” என்பது நபிமொழியாகும்.
“குறைந்த செலவில் குறைந்த சிரமங்களுடன் செய்யப்படும் திருமணமே சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திரு மணத்தின்போது பெண் வீட்டாருக்கு எந்தவிதத்திலும் சிரமத்தைக் கொடுக்கக் கூடாது. இதற்காக திருமண விருந்தை மணமகனே ஏற்க வேண்டும். இதற்கு ‘வலிமா’ என்று பெயர்.
“எந்த வலிமாவில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களோ, அந்த வலிமாவின் உணவே மிக மோசமான உணவாகும். எவர் வலிமா விருந்திற்கான அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்” என்று நபிகளார் நவின்றார்கள்.
மணம் புரிந்து கொண்ட ஆணும், பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
கணவன்-மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் அழகிய உவமை மூலம் எடுத்துக் கூறுகிறது.
“அவர்கள் (பெண்கள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் (ஆண்கள்) அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (2:187).
இந்த வசனத்தில் பல பொருட்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆடை, மனிதனுக்கு அழகைக்கொடுக்கிறது. ஆடை, மனிதனின் மானத்தைப் பாதுகாக்கிறது. ஆடை மனிதனுக்கு மரியாதையை அளிக்கிறது. அதனால்தான் அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், “பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். ஒரு பெண், விலா எலும்பில் இருந்தே படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பில் மிகவும் கோணலானது அதன் மேற்புறத்தில் உள்ளதுதான். அதை நிமிர்த்த நாடினால் அதை உடைத்திடுவாய். அதை விட்டு விட்டால் கோணலாகவே இருக்கும். எனவே பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்” என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “உங்கள் அழகிய குணமிக்கவர்தான் இறைவிசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர். உங்களில் சிறந்தவர், மனைவியிடம் சிறப்பாக நடந்து கொள்பவரே” என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மீதி)
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உலகம் சுகமளிக்கும் ஒன்றாகும். இந்த சுகப்பொருட்களில் சிறந்தது நல்ல மனைவியே ஆவாள்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
மேற்காணும் நபி மொழியின் மூலம் நல்ல மனைவி கிடைக்கப் பெற்றவர் உலகில் எல்லாம் கிடைக்கப் பெற்றவர் ஆவார்.
-எஸ். அமீர் ஜவ்ஹர், காரைக்கால்.

மனிதனின் வாழ்வியல் சார்ந்த சிறந்த பண்பு ஹலால். இதை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு இறைவன் வகுத்த ஹலாலான வழியில் நமது வாழ்வை நடத்தி இறையருளைப்பெறுவோம்.
இன்றைய கால சூழ்நிலையில் மக்களிடையே குறிப்பாக முஸ்லிம்களிடையே ‘ஹலால்’, ‘ஹராம்’ என்ற இரண்டு குறிப்பிட்ட வார்த்தைகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ‘ஹலால்’-அனுமதிக்கப்பட்ட உணவு, ‘ஹராம்’-அனுமதிக்கப்படாத உணவு என்ற அளவில் உணவில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறிவதில் ஆர்வம் காட்டி வருகிறார் கள்.
ஆனால் ஹலால், ஹராம் என்ற இரு சொற்கள் சிலர் நினைப்பது போன்று உணவை மட்டும் சுற்றி வரும் குறுகிய எல்லை கொண்டதல்ல. அதையும் தாண்டி மிக விரிவானது. ஒட்டு மொத்த வாழ்வியலையே கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது இந்த இரண்டு வார்த்தைகளும்.
ஒருவரது உணவு, உடை, உறைவிடம், வருமானம், வாழ்வியல், செயல்பாடுகள், குணநலன்கள் இவை எல்லாம் ‘ஹலால்’ ஆக உள்ளதா? (அதாவது, இவை அனைத்தும் இறைவன் வகுத்த வழியில் உள்ளதா?) என்பதில் மனிதன் கவனம் செலுத்த வேண்டும் என்று இஸ்லாமிய தத்துவங்கள் சொல்லுகின்றன.
இறைவனால் ருசிக்க கூடாது என்ற பழத்தை சைத்தானின் கூட்டு சதியால் மீறி உண்டதன் காரணமான ஆதிபிதா அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள். இதில் இருந்து இறைவனால் தடுக்கப்பட்ட (ஹராமான) உணவு எந்த அளவிற்கு நம்மை உயர்ந்த அந்தஸ்திலிருந்து படு பாதாளத்தில் கொண்டு சேர்த்து விடும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
உணவைத் தாண்டி வாழ்வியல் தத்துவத்தில் ஹலால் என்பதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பல வரலாற்று நிகழ்வுகள் அத்தாட்சியாய் அமைந்திருக்கின்றன.
ஒருமுறை இறைபக்தி கொண்ட ஒருவர் இன்னொருவரிடம் இருந்து நிலம் ஒன்றை வாங்கினார். பலகாலங்கள் பயன்பாட்டில் இல்லாத அந்த நிலத்தில் பயிர்செய்ய உழுது சமன் செய்த போது, நிலத்தின் அடியில் இருந்து புதையல் ஒன்றை கண்டெடுத்தார். அதிலுள்ள தங்க நாணயங்கள் அதிக மதிப்புள்ளதாக கண்ட அவர் நிலம் விற்றவரிடம் சென்று தங்கப் புதையலை ஒப்படைத்து, ‘நான் உங்களிடம் நிலத்தை மட்டும் தான் விலை கொடுத்து வாங்கினேன். ஆனால் இந்த புதையலை நிலத்தின் அடியில் கண்டெடுத்தேன். எனவே இது எனக்கு (ஹலால்) ஆகுமானது அல்ல. உங்களுக்கு உரிமையுள்ள பொருள். எனவே இதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்.
ஆனால் அவரோ ‘நான் தங்களுக்கு எப்போது நிலத்தை விற்றேனோ அன்றிலிருந்தே நிலம் அதில் அடங்கிய பொருட்கள் அனைத்தும் உங்களை சார்ந்ததே. எனவே இந்தப் புதையல் எனக்கு ஹலால் அல்ல’ என்று மறுத்து விட்டார்.
இது இறையச்சத்தின் உச்சம். மதிப்பு மிகுந்த புதையலைக் கூட மறுக்க கூடிய மனப்பக்குவம் தான் ஹலாலைப் பற்றிய விளக்கத்தை அழகாக எடுத்தியம்ப கூடியது.
ஒருமுறை இறைநேசர் ஒருவர் பேரீத்தம் பழம் வாங்கிச் சென்றார். அதை சாப்பிடும் போது அந்த பழத்தோடு ஒட்டிக் கொண்டு வந்த ஓர் அரிசியையும் சேர்த்து உட்கொண்டு விட்டார். உண்ணும் போது தான் அரிசியையும் சேர்த்து உண்கிறோம் என்று உணர்ந்து கொண்டார். ‘நாம் வாங்கியது பேரீத்தம் பழத்தை தான். ஆனால் அதனோடு ஒட்டி வந்த அரிசி நாம் விலைகொடுத்து வாங்கவும் இல்லை. அதனால் அது நமக்கு ஹலாலும் அல்ல’ என்று எண்ணியவராக கடைக்காரரிடம் சென்று இதுபற்றி எடுத்துச் சொன்னார்.
கடைக்காரரோ, ‘நான் உங்களுக்கு பேரீத்தம் பழத்தை தான் விற்றேன். அதோடு ஒட்டிக் கொண்டு அரிசியும் வந்தால் அது என் பொருள் அல்ல. எனக்கு விற்றவரின் பொருள். எனக்கு உரிமையில்லாத ஒரு பொருளை உங்களுக்கு நான் எப்படி ஹலால் சொல்ல முடியும்? என்று பதிலளித்தார்கள். அந்த இருவரின் இறையச்சத்தை எண்ணிப் பார்க்கும் போது அவர்கள் எந்த அளவிற்கு ஹலாலைப் பேணுவதில் அச்சம் கொண்டிருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஒருமுறை இறையச்சம் கொண்ட வியாபாரி ஒருவர், ஜவுளி தொகுப்பில் நூல்கள் பிரிந்த குறையோடிருந்த ஒரு பகுதியை தனியே எடுத்து வைத்திருந்தார். அதனை வாங்க யாராவது விரும்பினால் அதன் குறையை எடுத்துச் சொல்லி குறைந்த விலைக்கே விற்க வேண்டும் என்று தங்கள் பணியாளர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். ஆனால் அவர் கடையில் இல்லாத சமயம் பணியாளர் கவனக்குறைவாய் அதனை அதிக விலைக்கே விற்று விட்டார். திரும்பி வந்த வணிகர் தன் பணியாளர் செயல் குறித்து கடிந்து கொண்டார். குறையுள்ள பொருளை வாங்கிச் சென்றவரை எங்கு தேடியும் காணக்கிடைக்கவில்லை. அவர் மனம் பதைபதைத்தது. ஹலால் இல்லாத பொருளின் பகுதி தன் வியாபாரத்தில் ஊடுருவி விட்டதை எண்ணி மிக அதிகமாக வருத்தப்பட்டார். முடிவாக அன்று வியாபாரம் ஆன அத்தனை தொகையையும் உடனே தான, தர்மம் செய்து விட்டார். அதன் பிறகுதான் அவர் மனம் நிம்மதியுற்றது.
வெறும் உணவகங்களில் ‘ஹலால் உணவு இருக்கின்றதா?’ என்று கேட்டு உண்பது மட்டுமல்ல ஹலால். அதையும் தாண்டி வாழ்வு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான பண்புதான் ஹலால். மனிதனின் வாழ்வியல் சார்ந்த சிறந்த பண்பு ஹலால். இதை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு இறைவன் வகுத்த ஹலாலான வழியில் நமது வாழ்வை நடத்தி இறையருளைப்பெறுவோம்.
எம்.முஹம்மது யூசுப், உடன்குடி.

ஒரு மனிதனின் கோபம் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, நிச்சயம் கோபம் கொண்ட மனிதனின் உயிரையும் போக்கும் வல்லமை படைத்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும். இது அவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதை விட பாதகத்தையே ஏற்படுத்தும். இது குறைந்த பட்சம் சிடுமூஞ்சி என்ற கெட்ட பெயரையாவது அவருக்குப் பெற்றுத் தரும். அதனால் கோபத்தை விட்டொழிக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது.
ஒரு மனிதர் இறைத்தூதர் நபி நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘எனக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்றார். அதற்கு நபிகளார், ‘நீங்கள் கோபப்படாதீர்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் நபிகளாரிடம், ‘எனக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘நீங்கள் கோபப்படாதீர்கள்’ என்றார்கள். இப்படி பலமுறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா( ரலி) நூல்: புகாரி-6116)
கோபம் கொள்வது மிகவும் தீய பண்பாகும். இதனால் மோசமான விளைவுகள் ஏற்படும். உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும். தேவையற்ற முறையில் ஒரு மனிதர் கோபப்பட்டால் அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு மாரடைப்புக்கு வழி வகுக்கும். அதனால் ஒரு மனிதனின் கோபம் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, நிச்சயம் கோபம் கொண்ட மனிதனின் உயிரையும் போக்கும் வல்லமை படைத்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தேவையற்ற கோபத்தை தவிர்க்க வேண்டும்.
கோபத்தை அடக்கும் மனிதனை இறைவன் நேசிக்கிறான். ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ (42:37) என்றும், “அவர்கள் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண் பினரை அல்லாஹ் நேசிக்கிறான்.’’ (3:134) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “மல்யுத்தம் செய்பவர் உண்மையான வீரர் அல்ல. கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரர்” என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி-6114)
ஒரு மனிதருக்கு கோபம் வந்தால் அதைத் தணித்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு அழகிய வழி சொல்கிறார்கள். ‘‘கோபம் ஷைத்தானின் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். எனவே உங்களில் ஒருவருக்கு கோபம் வந்து விட்டால், அவர் ‘ஒளு’ (தொழுகையின்போது செய்யப்படும் அங்கசுத்தி) செய்து கொள்ளட்டும்’’ என்று நபிகளார் நவின்றார்கள். மேலும் நபிகளார், ‘‘உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்து விட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்’’ என்று ஆலோசனை கூறினார்கள்.
ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக யூனுஸ் என்ற இறைத்தூதரை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அந்த மக்கள் யூனுஸ் நபி பிரசாரம் செய்த ஒற்றைக் கொள்கையை ஏற்கவில்லை. அவர்களுக்கு எதிராக யூனுஸ் நபி சபித்து விட்டு வெளியேறி விட்டார். அவர்கள் மீது இறைவனின் வேதனை இறங்க ஆரம்பித்தபோது அவர்கள் திருந்தி விட்டனர்.
இறைவன் அவர்களை காப்பாற்றி விட்டான். இப்படி அவருக்கே தெரியாமல் அவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இறைவனிடம் கோபித்துக் கொண்டு யூனுஸ் சென்றார். அப்படிச் சென்ற அவரை மீன் விழுங்கியது. இது குறித்து திருக்குர்ஆனில், ‘இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கி விட்டது.
அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்வரை அவற்றின் வயிற்றிலேயே தங்கி இருப்பார்’ (37:142) இறைவன் கூறுகின்றான். யூனுஸ் நபி, இறைவன் மீது கொண்ட கோபம், அவரை மீன் வயிற்றில் சிக்க வைத்தது என்பதை எண்ணிப் பார்த்து நாம் கோபத்தை விட்டு தவிர்க்க வேண்டும். இறைத்தூதர் களின் வாழ்வு நமக்கு ஒரு முன்மாதிரியாகும். இதை மக்கள் உணர்ந்து பின்பற்றும்போது சுவனபதியை அடையலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சமயம் மக்சூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள். இது குரைஷி குல மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. (மக்சூமி குலம் என்பது குரைஷி கோத்திரத்தின் ஒரு கிளையாகும்) ஆகவே அவர்கள் ஒன்று கூடி, களவாடிய பெண் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பரிந்து செய்ய உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களை அனுப்புகிறார்கள்.
இதைத் தொடர்ந்து நபிகளாரிடம் அந்தப் பெண்ணுக்காக உஸாமா பரிந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் குற்றவியல் சட்டங்களில் ஒன்றில் நீ பரிந்துரை செய் கிறாயா?’ எனக் கோபமாகக் கேட்டு விட்டு, ‘உங்களுக்கு முன் இருந்தோர் அழிந்து போனதற்கு காரணம் - அவர் களில் வசதியானவர் திருடினால் அவரை அவர்கள் விட்டு விடுவார்கள். ஏழை திருடினால் அவரை தண்டிக்க முயலுவார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மதின் மகள் பாத்திமா திருடி இருந்தாலும் அவளுடைய கையையும் நான் துண்டிப்பேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி: 6788) அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் ஒருவர் பரிந்துரை செய்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு கோபம் வந்ததை மேற்காணும் நபிமொழி அறிவிக்கிறது. இதன் மூலம் நீதிக்கு புறம்பான செயல்களை காணும்போது அமைதியாக இருக்கக் கூடாது என்பது புலனாகிறது.
தேவையற்ற கோபத்தை நீக்கி, நீதியை நிலை நாட்டுவதற்காக கோபப்படும் மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள்வானாக!
-எஸ்.அமீர் ஜவ்ஹர், காரைக்கால்.

மனோ இச்சையின்படி நடக்காமல் இஸ்லாம் காட்டும் அறவழியில் செயல்பட்டு, நிறைவான வாழ்வை நாம் அனைவரும் பெற இறைவன் அருள்புரிவானாக, ஆமீன்.
ஒரு செயலை எந்த எண்ணத்துடன் எந்த வழிமுறையை பின்பற்றி செய்ய வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அதன்படி நடக்கும்போது தான் அது அவனிடம் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்.
தன் மனம் போன போக்கில் செயல்பட்டுக்கொண்டு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பது என்பது முட்டாள்தனமானது என்பதை அண்ணலார் இவ்வாறு கூறுகிறார்கள்:
'எவர் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மரணத்திற்கு பின்னால் வரவிருக்கும் வாழ்க்கையை அழகுபடுத்துவதில் (தன்னை) ஈடுபடுத்துவாரோ, அவரே அறிவாளி ஆவார். தன்னை தன்னுடைய மனதின் மனோ இச்சைகளின் பின்னால் அலைய விட்டு விட்டு அல்லாஹ்வின் மீது தவறான நம்பிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பவன் முட்டாள் ஆவான்' (நூல்: திர்மிதீ).
'நப்ஸ்' என்று அழைக்கப்படும் மனோஇச்சையின் ஆசைகளை கட்டுப்படுத்தி, இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்கு இணக்கமாக நடக்க வேண்டும். அப்படி செய்யாமல், மனதை அதன் போக்கில் செயல்படவிட்டால், அது பாவச்செயல்களை ருசிக்கப்பழகி அதன் இன்பத்தில் மூழ்கிவிடும். பிறகு பாவம் செய்வது அதற்கு சர்வ சாதாரணமாகிவிடும்.
சுவையான உணவு, பணம், புகழ், கேளிக்கை மற்றும் வீண் விளையாட்டு, அடுத்தவரின் உடைமைகளை அபகரித்து அனுபவிப்பது, மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுவது, காண்பதை எல்லாம் அடைய துடிப்பது போன்றவற்றில் சிலரது மனம் விருப்பம் கொள்கிறது. அதனை நிறைவேற்றிட முயற்சிக்கும்போது, அது அல்லாஹ்வுக்கு மாறாக நடக்க வைத்து விடுகின்றது.
உலக ஆசையின் வேட்கையால் தயக்கமின்றி பாவங்கள் செய்யப்படுவதால்தான் துன்ப துயரங்களை மனிதன் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.
'மனம்' என்பது அல்லாஹ்வுக்கும், அவனது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கும் எப்போது கட்டுப்படாமல் போகின்றதோ, அப்போது பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பொதுச்சொத்துக்கள் கையாடல் செய்யப்பட்டு சூறையாடப்படுகிறது. பெரியோர்கள் இழிவு படுத்தப்படுகிறார்கள். வேத வசனங்களில் குறை காணப்படுகின்றது. விபசாரமும், மது அருந்துவதும் அதிகமாகி விடுகின்றது.
இப்படி பாவங்களை எல்லாம் பயமின்றி செய்து விட்டு, உண்மைகளை எல்லாம் இருட்டறையில் பூட்டி வைக்க முயற்சிப்பது தவறல்லவா?
உலகில் துணிந்து பாவம் செய்கின்றோம், அதனைக் கண்டு பயப்படுவதுமில்லை. இறைவன் தண்டிப்பானே என்று அஞ்சுவதுமில்லை, தவறுக்காக வருந்தி பாவமன்னிப்பு தேடுவதுமில்லை.
இறைவனின் ஒரு கட்டளையை நிறைவேற்றிட அவனது பல கட்டளைகளை காற்றிலே பறக்க விட்டு விடுகின்றோம்.
மறுமையில் விசாரணை இலகுவாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே சுய விசாரணை செய்து, நடுநிலையோடு நமது தவறை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இறைவனின் விசாரணை மிகக் கடுமையாக இருக்கும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித்தந்த சன்மார்க்க நெறியில் தான் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். பொது அமைதிக்கும், நலனுக்கும் கேடு விளைவிக்கும் செயல்கள் யாவையும் கைவிடுவதுதான் சிறந்ததாகும்.
சுனாமியின் சீற்றம், மழை வெள்ளத்தின் கோர தாண்டவம், நிலநடுக்கம், புயல், காட்டுத்தீ, நிலச்சரிவு... போன்ற மறுமை நாளின் அடையாளங்கள் நம் கண்முன்னால் நடைபெறுகின்றன. ஆனால் அதிலிருந்து நாம் பாடம் படித்து திருந்தியதாக தெரியவில்லை.
இறைவனின் கருணை எப்படி விசாலமானதோ, அதுபோல அவனது தண்டனையும் மிகக்கடுமையானது என்பதை உணர்ந்தால்தான் மனம் திருந்த முடியும். தேவையற்ற இச்சைகளில் இருந்து விலகி இருப்பவர் களுக்கு 'சொர்க்கம்' தான் கூலி என்பதை அருள்மறை திருக்குர்ஆன் (79:40-41) இவ்வாறு கூறுகிறது:
'எவர் தம்முடைய ரப்பின் (இறைவனின்) சந்நிதானத்தை பயந்து, மனோ இச்சையை விட்டும் தன் ஆன்மாவை தடுத்துக்கொண்டாரோ, (அவருக்கு) நிச்சயமாக 'சொர்க்கம்' அது தான் (அவருடைய) தங்குமிடமாகும்'.
எனவே, மனோ இச்சையின்படி நடக்காமல் இஸ்லாம் காட்டும் அறவழியில் செயல்பட்டு, நிறைவான வாழ்வை நாம் அனைவரும் பெற இறைவன் அருள்புரிவானாக, ஆமீன்.
உலகப் பற்றின்மை
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் சென்று, "இறைத்தூதரே! இறைவன் என்னை நேசிக்கிற வகையிலும், மக்களும் என்னை நேசிக்கிற வகையிலும் (நான்செய்வதற்கேற்ற) நல்லறம் ஒன்றை சொல்லுங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபிகளார், "உலகத்தின் மீது பற்று வைக்காதீர். இறைவன் உம்மை நேசிக்கத் தொடங்கி விடுவான். மக்களிடம் இருக்கின்ற செல்வம், செழிப்பு, வளங்கள் ஆகியவற்றின் மீதும் எந்தப் பற்றும் வைக்காதீர். (அவற்றில் இருந்து உம் முகத்தைத் திருப்பிக் கொள்வீராக) மக்கள் உம்மை நேசிக்கத் தொடங்கி விடுவார்கள்'' என்று பதில் அளித்தார்கள்.
உலகின் மீது பற்று வைக்காமல் அதில் இருந்து முகத்தைத் திருப்பிக் கொள்கின்றவர் இறைவனிடம் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொள்கின்றார். இறைவனுக்காகத் தம்முடைய நேரம், ஆற்றல், திறமை அனைத்தையும் அர்ப்பணிக்கத் தொடங்கி விடுகின்றார். இறைவனை மையமாகக் கொண்டே அவரது வாழ்வு நகர்கிறது. இறைவன் மீதான அன்பும், மறுமை இன்பங்கள் மீதான ஆசையும் கொண்ட அடியானை இறைவன் நேசிப்பான் என்பது வெளிப்படை.
மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.

இஸ்லாம் கூறும் ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகளும் சமத்துவத்தை இந்த உலகில் நிச்சயம் உலவ விட முடியும் என்பதை உணர்த்துகின்றன.
இஸ்லாம் கட்டிக் காத்து வரும் சமத்துவ நெறி மணக்கும் சமுதாய அமைப்புக்கு மகுடமாகத் திகழ்கிறது, ஐந்தாம் கடமையான ‘ஹஜ்’.
நாடு, இனம், மொழி, நிறம், குலம், கோத்திரம், அந்தஸ்து போன்ற எல்லாவிதமான வேற்றுமைகளையும் களைந்து விட்டு, உலக மக்கள் ஒரே நிறமாம் வெள்ளுடையை அணிந்து கொள்கிறார்கள்.
நாடுகளாலும், மொழிகளாலும், நிறத்தாலும் வேறுபட்ட லட்சக்கணக்கான மக்கள், ஒரே உடையில், ஒரே சிந்தனையில், ஒரே குரலில், ‘‘லப்பைக்க அல்லாஹும்ம, லப்பைக்க’’ (இதோ வந்து விட்டேன் இறைவா; நான் வந்து விட்டேன்) என்று முழக்கமிடுகிறார்கள்.
ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய மாநாடு இது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
‘‘இறைவன் முன்பு எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லை; இறைவன் எந்த ஏற்றத் தாழ்வுகளையும் ஏற்றுக் கொள்வ தில்லை’’ என்பதைப் பறை சாற்றும் சமத்துவ மாநாடு இது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
இறைக் கட்டளையை ஏற்று மக்கா நகரில் கூடியுள்ள மக்கள் அனைவரும் ஒரே நோக்கத்தோடு, ஒரே லட்சியத்தோடு, ஒரே முழக்கத்தோடு, ஒரேவிதமான உடை களோடு, ஒரே செயலைப் பின்பற்றி ஏக இறைவன் முன்பு நிற்கும் அரிய காட்சியை வேறெங்கும் காண முடியாது.
‘‘இம்மாதங்களில் எவரேனும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால், ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை, சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது’’ (2:197) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
இதன் அடிப்படையில் ஹஜ் கடமையின்போது ஒழுக்கமும், ஒழுங்கும் மட்டுமின்றி அமைதியும் மிக முக்கியமானதாகும்.
இறைவனோடு அமைதிப்படுதல், தனது ஆன்மாவோடு அமைதிப்படுதல், பிற மக்களோடு அமைதியாக இருத்தல், பிற உயிர்களிடத்தில் அமைதியாக இருத்தல் என்பதாக அமையும்.
அந்த வகையில் ஹஜ் என்பது மனித வரலாற்றில் எங்கும் காண முடியாத மிகப்பெரிய அமைதி மாநாடாகும்.
இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் முன்பு இப்படித்தான் மனிதர்கள் அனைவரும் எந்தப் பாகுபாடுமின்றி, ஏற்றத் தாழ்வுகளின்றி தங்களது தீர்ப்புகளுக்காகக் காத்திருப்பார்கள் என்பதை நினைவுறுத்தும் செயலாகவும் விளங்குகின்றது, ஹஜ்.
ஆக மொத்தத்தில், இஸ்லாம் கூறும் ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகளும் சமத்துவத்தை இந்த உலகில் நிச்சயம் உலவ விட முடியும் என்பதை உணர்த்துகின்றன.
இஹ்ராம்
‘இஹ்ராம்’ என்றால் விலக்கிக்கொள்ளல் என்று பொருள். ‘இஹ்ராம்’ என்பது மக்காவுக்கு ‘ஹஜ்’ அல்லது ‘உம்ரா’ செல்லும் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் ஆகும். புனிதப் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருந்து, ஹஜ் கடமையை நிறைவேற்றி முடிப்பது வரை அவர்களின் உடை, நடத்தை, சிந்தனை ஆகியவற்றில் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். இதற்கு ‘இஹ்ராம்’ என்று பெயர்.
‘‘உடல் இச்சையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடக் கூடாது; தலை முடி, நகங்களைக் களையக் கூடாது; நாவாலோ, கரத்தாலோ பிறருக்குத் தொந்தரவு செய்யக் கூடாது.; தரையில் வேட்டை பிராணிகளை வேட்டையாடக் கூடாது’’ என்பன போன்றவை ‘இஹ்ராம்’ கட்டுப்பாடுகளாகும்.
குளித்து தூய்மையாகி இஹ்ராமுடைய ஆடையை அணிந்த பிறகு, ஹஜ் கடமையை நிறைவேற்றுவதாக மனதில் நினைத்து (நிய்யத்) கொள்ள வேண்டும்.
அந்தக் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும், தையலிடப்பட்ட ஆடைகளைக் களைந்து ‘இஹ்ராமின்’ இரு ஆடைகளை மட்டும் ஆண்கள் அணிய வேண்டும். உடலின் மேல் பகுதியை (தலையைத் தவிர) மறைக்கும் துணியும், கீழ்ப் பகுதியை மறைக்கும் துணியும் ‘இஹ்ராம்’ ஆடைகளாகும். இவை இரண்டும் வெள்ளை நிற ஆடைகளாக இருப்பது சிறப்பாகும். மேலும் இஹ்ராமின் போது செருப்பு அணிந்திருப்பதும் விரும்பத்தக்க செயலாகும்.
பெண்கள் தங்கள் வழக்கமான ஆடைகளில் ‘இஹ்ராம்’ தரித்துக் கொள்ளலாம். முகமும், மணிக்கட்டு வரை இரு கைகளும் தெரியும்படி எந்த உடையையும் அணியலாம். ‘‘(ஹஜ் பயணத்தை மேற்கொண்டிருக்கும்) பெண் முகத்தைத் திரையிட்டு மறைக்கக் கூடாது. மேலும் கையுறைகளை அணியக்கூடாது’’ என்பது நபி மொழியாகும்.