என் மலர்
நீங்கள் தேடியது "Erwadi"
ஏர்வாடி அருகே தனியார் பஸ் மோதி கூலி தொழிலாளி பலியானார். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம்:
ஏர்வாடி அருகே உள்ள வெட்டமனை பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 44), கூலி தொழிலாளி.
நேற்று காமராஜ் ஏர்வாடி போலீஸ் நிலையம் அருகே உள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் இறந்தார்.
இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ்சை ஓட்டிவந்த ஏர்வாடி ஆலங்குளத்தை சேர்ந்த அய்யப்பன் தினேஷ் என்பவரை கைது செய்தனர்.
பலியான காமராஜூக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். #Tamilnews