என் மலர்
இஸ்லாம்
அதிகம் பெற்றவர்கள் அதற்கு பயப்பட வேண்டும். ஏனென்றால் அது சோதனைப் பொருளாகவும் கூட இருக்கலாம். நாளை மறுமையில் கேள்வி கணக்குகளை அது கடினமாகவும் ஆக்கலாம். குறைவாக பெற்றவர்கள் வாழ்வாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக திருப்தி கொள்ள வேண்டும்.
அதிகமாகவோ, குறைவாகவோ எது கொடுக்கப்பட்டாலும் அதனை ‘போதும்’ என்ற திருப்தியோடு மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அதன் மூலம் மற்றவர்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும் என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட மனிதன் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்.
இதனை ஏற்றத்தாழ்வுகள் என்ற கண்ணோட்டத்தில் காணக்கூடாது. வெளிப்படையாக தெரிவதை கொண்டு ஒரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. ஏதாவது சிறப்பு இருந்தால், இன்னும் ஒரு சிறப்பு இல்லாமல் இருக்கலாம். அல்லது குறை தென்படலாம்.
பணம் இருந்தால் உடல் ஆரோக்கியம் குறைவாக இருக்கலாம், உடல் பலம் இருந்தால் வாரிசுகள் இல்லாமல் இருக்கலாம். அறிவு இருந்தால் ஆற்றல் இல்லாமல் இருக்கலாம். இவ்வாறு ஏதோ ஒன்றைக் கொண்டு மற்றதை மிக நேர்த்தியாக அத்தனையையும் சமன் செய்து இருக்கிறான் அல்லாஹ்.
இதற்கெல்லாம் மேலாக, அல்லாஹ் விதித்ததை மட்டுமே மனிதனால் அடைய முடியும். அவன் தருவதை தடுக்கும் சக்தியோ, கிடைக்காததை கொடுக்கும் சக்தியோ இவ்வுலகில் யாருக்கும் கிடையாது. இதை முழுமையாக நம்பும் போது இவ்வுலகில் நடக்கும் அத்தனை பாவங்களும் இல்லாமல் போய்விடும் என்பது நிதர்சனம்.
உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, மனிதன் பொருள் சேர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றான். அந்த பயணத்தில் அவன் அதனை அனுபவிப்பதை கூட மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஒரு காலகட்டத்தில் அவன் திரும்பிப் பார்த்தால் அவன் வாழ்வில் வெறுமையையே உணர்கின்றான். ஏன்? எதற்கு? எப்படி? என்று புரியாது, கேள்விக்கு பதில் தெரியாமல் தவிக்கின்றான். இதைத்தான் அருள்மறை திருக்குர்ஆன் இப்படி கூறுகின்றது:
“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை”. (திருக்குர்ஆன் 3:185)
அடுத்து சொல்கிறது, “(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்”. (திருக்குர்ஆன் 3:186)
மனிதன் முன்பு அல்லாஹ் இரண்டு வழிகளை வைத்துள்ளான். நல்ல வழியில் சென்றால் இம்மையிலும் மறுமையிலும் நன்மை கிடைக்கும். தீயவழியில் சென்றால் இம்மையிலும், மறுமையிலும் அவனை கைசேதப்படும் நிலையில் தள்ளிவிடும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு படம் பிடித்துக் காட்டுகின்றான்:
“அவர்கள் செய்வதை நிச்சயமாக நாம் பதிவு செய்து கொண்டு இருக்கின்றோம். மறுமையில் அவர்களை நோக்கி எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள் என்று நாம் கூறுவோம்”. “அன்றி நீங்கள் உங்கள் கைகளால் தேடிக்கொண்டது தான் இதற்கு காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை”. (திருக்குர்ஆன் 3:181, 182)
“உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்கள் வாதம் பொய்யானது என நீங்கள் அறிந்திருந்தும் இதர மனிதர்களின் பொருட்களில் எதையும் பாவமான வழியில் அநியாயமாக லஞ்சம் கொடுத்து அபகரித்துக் கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்”. (திருக்குர்ஆன் 2:188)
அல்லாஹ் அருளியது நிச்சயமாக நமக்கு கிடைக்கும். அதற்காக நல்ல வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவீர்கள்.
அல்லாஹ் தொடர்ந்து சொல்கிறான்:
“அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம்”. (திருக்குர்ஆன் 2:189)
“நீங்கள் எல்லைகளைக் கடந்து விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறல்களை நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 2:190)
நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். எனவே இந்த கொடிய பாவத்தை தவிர்ந்து அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்.
ஒய். முஹைதீன் காமில், சென்னை.
உலகின் பல பாகங்களில் மனிதர்கள் சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏதோ வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். அந்த வெற்றிக்கு நாம் வழங்கும் வெகுமானமும், சன்மானமும் தான் நாம் எதிர்கொண்டிருக்கும் சோதனைகள்.
இஸ்லாமிய தத்துவம் மனிதர்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறும் போது, “மனிதர்கள் தம்வாழ்வில் ஏற்றஇறக்கங்களை, மேடுபள்ளங்களை, வறுமைசெழுமை இப்படி எல்லா நிலைகளையும் ஒருசேர கருதவேண்டும்” என்று சொல்கிறது. அதுமட்டுமல்ல இந்தநிலைகளில் எல்லாம் இறையச்சம் மேலோங்கி நிற்க வேண்டும் என்றும் போதிக்கிறது.
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை பலர் இந்த ஒரு கருத்தை உள்வாங்கிய நிலையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். “இறைவன் ஒருவனே, அவன் தான் அல்லாஹ், அவனுக்கு இணைதுணை இல்லை, அவனே உலகம் அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்பவன். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்” என்று சொல்லி விட்டால் மட்டும் போதும். அல்லாஹ் வாக்களித்த படி சொர்க்கம் நமக்கு கிடைத்து விடும் என்று சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இஸ்லாமிய வாழ்வு நெறிகளுக்கு முரணாகவும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஈமான் கொண்டோம், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்” என்பது இஸ்லாமிய இல்லத்தின் நுழைவு வாசல் மட்டுமே. அதற்குள் இருப்பதுதான் வாழ்வு நெறி தத்துவங்கள். காலை புலர்ந்ததிலிருந்து, அந்தி சாயும் வரை மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நிலைப்பாட்டையும் செவ்வனே செய்யச் சொல்வது இஸ்லாம்.
வியாபார தர்மங்கள், அளவுநிறுவைகளில் நியாயங்கள், வட்டியில்லா வாழ்வியல், உறவுகளின் அரவணைப்பு, பக்கத்து வீட்டாரோடு பங்களிப்பு, மாற்றுமத சகோதரர்களோடு இணக்கங்கள், கற்பு நெறி காத்தல், பாவங்களை தவிர்த்தல், பார்வைக்கும், கேள்விகளுக்கும், கரங்களுக்கும், எண்ணங்களுக்கும் கற்பு நெறியை நிர்ணயம் செய்தல் என ஒவ்வொரு நிலைகளிலும் தவறுகளைத் தவிர்த்து, குற்றங்கள் நிகழாது காத்துக் கொள்ளும் போது சோதனைகள் நம் வீட்டு வாசல் கதவுகளைத் தட்டுவதற்கு சிறிது யோசனை செய்யும். இந்த நிலைகள் மாறும் போது சோதனைகள் நம்மை சூழ்வதை தவிர்க்க முடியாது.
அருள்மறை குர்ஆன் இதைப்பற்றி பேசும்போது, “மனிதர்கள் ‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. அதனைப் பற்றி அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனரா?” (திருக்குர்ஆன் 29:2) என்று இடித்துரைக்கின்றது.
எனவே, இறைவனை நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமானது என்ற நிலைமை மாற வேண்டும்.
அதுபோல, “பாவங்கள் அற்ற சமூகத்தை நாம் ஒருபோதும் அழிப்பதில்லை” என்றும் அல்லாஹ் கூறுகிறான். “மனிதர்கள் செய்யும் பாவங்களால் மட்டுமே அவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்” என்கிறது திருக்குர்ஆன்.
“அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் செய்து கொண்ட பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம்” (திருக்குர்ஆன் 29:40)
எனவே நாம் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டால், உடனே நம்மை நாம் சுய பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும். நம்மிடம் மிகைத்திருக்கின்ற பாவங்கள் என்ன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதனை அறிந்து தவிர்க்கும் போது சோதனைகள் விலகி விடும்.
சோதனைகள் இரு வகைப்படும். அவை: தனிப்பட்ட சோதனைகள் மற்றும் ஒட்டுமொத்த சோதனைகள். தனிப்பட்ட முறையில் அல்லதுஒரு குடும்பத்திற்கு ஒரு நாட்டிற்கு ஏற்படுகின்ற பேராபத்துகளுக்கு காரண காரியங்கள் வேறு வேறாகத்தான் இருக்கும். தனிப்பட்ட தன் சுயநலத்திற்காக ஒருவன் செய்யும் பாவத்தின் வீரியம், ஒட்டுமொத்த சமூகம் செய்யும் பாவத்திற்கு குறைந்ததாகத் தான் இருக்க முடியும். ஒருவன் திருந்தி பாவத்திலிருந்து வெளியேறுவது எளிது. அதே சமயம் ஒரு சமூகத்தை விடுவிப்பது என்பது கடினமாகத் தான் இருக்கும். சமீபத்திய சமூகத்தில் ஏற்பட்டுள்ள கலாசார சீர்கேடுகள், தான் செய்வது எதுவும் தப்பே இல்லை என்ற நிலைப்பாட்டில் வாழும் சமூகம் சோதிக்கப்படாமல் எப்படி இருக்க முடியும்?
இந்த சமூகத்தினர் நல்வழி பெற இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டு கை ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதைத்தான் திருக்குர்ஆன் இவ்வறு குறிப்பிடுகிறது:
“உண்மை நம்பிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே நம்பி இருப்பார்கள்”. (திருக்குர்ஆன் 29:59)
எனவே, இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட சோதனை நீங்க வேண்டுமானால் நீங்கள் எந்த முயற்சியில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால், அல்லாஹ்விடம் இறைஞ்சுதலை சமர்ப்பிப்பது மட்டுமே நமக்கு வெற்றியைத் தரும்.
பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்” என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் பரவலாக சொல்லப்பட்டுள்ளது. பொறுமை என்ற உன்னத நிலையை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது. அதற்கு அபரிமிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் எனும் போது வேறு யாரால் நமக்கு கெடுதியை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்குமானால் பொறுமையை எளிதாக கையாளலாம்.
“அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு பாதுகாவலுமில்லை. உதவி செய்பவனும் இல்லை” என்று திருக்குர்ஆன் (29:22) ஆணித்தரமாக குறிப்பிடுகிறது. எனவே, நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஒருவனிடமே சமர்ப்பிப்போம். சோதனைகள் நீங்கப்பெற்று வெற்றி அடைவோம். அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக! ஆமீன்!
மு.முகமது யூசுப், உடன்குடி.
“அல்லாஹ் (எவ்வித மகத்துவம் உடையவன் என்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங் கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய “குர்ஸி” (அரியாசனம்) வானம், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்” (திருக்குர்ஆன் 2:255).
இத்தகைய மகத்துவம் மிக்க இறை வன் மீது நாம் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட முறையில் நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். எது நமக்கு விலக்கப்பட்டதோ, அதைவிட்டு நாம் விலகி இருக்க வேண்டும். எது நமக்கு கொடுக்கப்பட்டதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இறையச்சம், இறை நம்பிக்கை தான் நமக்கு வாழ்வில் வெற்றிகளை தேடித்தரும். ஏன் என்றால் இறைவன் நமக்கு அளித்துள்ள அருட்கொடைகள் அளவிட முடியாதவை. இதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 16:18).
“மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” (திருக்குர்ஆன் 35:2).
“அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்”.(திருக்குர்ஆன்42:19)
இத்தனை சிறப்பு மிக்க ஏக இறைவன் அல்லாஹ்வை நாம் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும். அவன் காட்டிய வழியில் வாழ்ந்து அவனது திருப்பொருத்தத்தைப்பெற வேண்டும். அவ்வாறு நாம் செயல்பட்டால் நமது வாழ்வு சிறக்கும். இம்மையிலும், மறுமையிலும் நாம் இறைவனின் அருளைப்பெற முடியும்.
அல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு வசனங்களில் குறிப்பிடும்போது, “என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், நான் நேர்வழி காட்டுகிறேன்” என்று உறுதியாக கூறுகிறான். எனவே நாம் அல்லாஹ் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்வோம். அந்த நம்பிக்கை நமது வாழ்க்கையில் வெற்றிகளைத்தேடித்தரும், அவனது அருட்கொடைகள் நம்மை நாடி வரும்.
வாருங்கள், நாம் அனைவரும் அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்வோம். அவன் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அந்த நம்பிக்கை தரும் வெற்றியின் மூலம் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளைப் பெறுவோம்.
எம். காதர் முகைதீன், நெல்லை.
இறைவன் சிலருக்கு செல்வம் கொடுத்து சோதனை செய்கின்றான், சிலருக்கு வறுமையைக்கொடுத்து சோதிக்கின்றான். சிலருக்கு வாழ்க்கையில் எல்லா இன்பங் களும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறுகிறது. சிலருக்கோ அடுத்தடுத்து துன்பங் கள் தொடருகிறது.
ஏன் இந்த சோதனைகள்?, எதற்காக இந்த வேதனைகள்?.
அல்லாஹ், தனது திருமறையில் கூறும்போது, ‘மனிதர்களை நான் செல்வத்தைக்கொண்டும், சந்ததிகளைக்கொண்டும் சோதனை செய்வேன்’ என்று குறிப்பிடுகின்றான். இந்த சோத னைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம், இறையருளால் அதை எப்படி கடந்து செல்ல முயற்சி செய்கிறோம் என் பதை இறைவன் கண்காணிக்கின்றான்.
இதன் அடிப்படையிலேயே, அந்த சோதனைகளை கடந்து செல்லவும் நமக்கு வழிகாட்டுகிறான். அத்துடன் இறைவனின் விருப்பத்துக்கு ஏற்ப நாம் நடந்துகொண்டால் அதற்கு பரிசாக சொர்க்கத்தையும் தருகின்றான்.
இதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் மூலம் அறிந்துகொள்ளலாம்:
“(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி, மேலும் பொருள்கள், உயிர்கள், கனி வர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங் கள்”. (திருக்குர்ஆன் 2:155).
வாழ்க்கையில் வெற்றி ஏற்படும் போது அது தனது உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று கருதுவது மனித இயல்பு. தோல்விகள் வரும்போது மட்டும், “இறைவா, ஏன் என்னை கைவிட்டு விட்டாய்?” என்று இறைவனிடம் நியாயம் கேட்பவர்களும் உண்டு. ஆனால், சோதனை இல்லாமல் சொர்க்கம் இல்லை என்று இறைவன் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (திருக்குர்ஆன் 2:214)
எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அதை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இறைவனிடமே அந்த சோதனையில் இருந்து பாதுகாப்பும், விடுதலையும் தேடவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு உண்டு என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
“இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் இதுதான் தெளிவான நஷ்டமாகும்” (திருக்குர்ஆன் 22:11).
நமக்கு வரும் சோதனைகளில் இருந்து விடுபடுவது எப்படி? என்ற சிந்தனை ஏற்படுவதுண்டு. இதற்கான வழிகாட்டிகள் திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் உள்ளன.
“(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்’ எனக் கூறுவார்கள்” என்று திருக்குர்ஆன் (2:156) தெரிவிக்கின்றது.
நபி (ஸல்) அவர்களும், ‘இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று பிரார்த்திப்பது வழக்கம். (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி)
எனவே, நமக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் பிரார்த்தனைகள் மூலம் அவற்றை வென்று சாதனைகளாக்க முடியும். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமின்.
பேராசிரியர். முகம்மது அப்துல் காதர், சென்னை.
பின்னர், கோட்டார்-இளங்கடை முஸ்லிம் சமுதாய தலைவர் ஹாஜி பாவலர் சித்திக் பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பொருளாளர் இப்ராகிம், ஆலோசகர் ஹாஜி பாபு, உறுப்பினர்கள் அத்தீக், ஹபீபுதீன் ஆபீம், ஆப்தீன், சங்கம் அப்துல் காதர், பாவா சாகிப் பக்கர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமுதாய அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.
இதையொட்டி தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனம் பூசிய கொடிமர திருவிழா நடந்தது. பின்னர் இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க இந்த கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்து இருப்பிடம் சேர்ந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு வழிகாட்டுதல் படி இந்த விழா நடந்தது.
அலங்காநல்லூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து கலந்து கொண்டனர். முன்னதாக சந்தனகூடு விழாவினையொட்டி பள்ளிவாசல், தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த குற்றம் பார்க்கின்ற குணத்தால்பெற்றோரோடு பேச்சு வார்த்தை வைத்துக்கொள்ளாத எத்தனையோ பிள்ளைகளை இந்த தலைமுறையில் நாம்காண்கிறோம். மனம் திறந்து பேசினால்தீர்ந்து விடுகின்ற சின்னப் பிரச்சினைகள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்ற காரணத்தால்தீர்வே இல்லாத பிரச்சினையாக நீடித்துக்கொண்டிருக்கிறது மாமியார்-மரு மகளிடையே உள்ள பிரச்சினைகள் காரணமாக மகனாகவோ கணவனாகவோ வாழ முடியாத நிலையில், எத்தனையோ ஆண்கள் மன அழுத்தங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
தொழில்நிறுவனங்களைப் பொருத்தவரை சில மேலதிகாரிகள் தன் கீழுள்ள பணியாளர்களை குற்றம் கண்டு பிடிப்பதிலேயே குறியாய் இருப்பதுண்டு. மேலும் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பதையும் அதனால் பலர் வாழ்வு இருண்டு விடுகின்ற அபாயத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் செய்கின்ற தவறுகளைத்தானே குற்றம் கண்டு அதனைத்தவிர்ந்து வாழ அறிவுரை சொல்கிறோம்என்று பலர் தங்கள் செயல்களை நியாயப் படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒருவர் வாழ்வு சிதைந்து போவதற்கு காரணமான ஒரு செயல்அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடியதல்ல.
பங்காளி சண்டைகளில் ஏற்படும் உறவுவிரிசல்கள் பரம்பரையைத் தாண்டி நிலைத்திருப்பதற்கு, ‘குற்றம் சுமத்துகின்ற செயல்’ காரணமாகி உள்ளதை பலர் பொருட்படுத்துவதில்லை. அதனால் தான் தலைமுறைத்தாண்டி பகை உணர்வுகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை சிந்தித்தாலே அதில்பெரும் தவறு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் அருள்மறை திருக்குர்ஆன் இதுபோன்ற செயல்களை பெரும் பாவமாக சித்தரிக்கின்றது.
அதற்காக ஒருவரை குற்றம் காணக்கூடாது என்ற வரையறையையும் அது சொல்லவில்லை. மற்றவன் துரோகத்தால் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்ற நிலையில், அவனுக்கு நியாயம் கிடைக்க அந்த துரோகத்தை சொல்லிக் காட்டுவதை இறைமறை தடை செய்யவில்லை. நீதியின் முன்பு அதனை எடுத்துச் சொல்லிநிவாரணம் தேட அல்லாஹ்வும் அனுமதிஅளித்துள்ளான்.
அதனை அருள்மறை இவ்வாறு விவரிக்கிறது: “அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர மற்றெவரும் யாரைப்பற்றியும் பகிரங்கமாக குற்றம் சுமத்துவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ், செவியுறுபவனும் நன்கு அறிந் தவனாகவும் இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 4:148)
இது ஒருபுறம் இருந்தாலும், தானே அந்த குற்றத்தைச் செய்து விட்டு பிறர்மீது பழியைப்போட்டு, அவர் வாழ்க்கையை சிதைக்கின்ற செயல்பாடுகளும் அதிக அளவில் காணப்படுகின்றது. இது குற்றம் காண்பது என்ற நிலையைத் தாண்டி அவதூறு செய்கின்ற பெரும் பாவத்திற்கு அடிகோலிடுகிறது. இது பெரும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அருள்மறை இவ்வாறு சொல்கிறது:
“எவரேனும் யாதொரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து, அதனை தான் செய்யவில்லை என்று மறைத்து, குற்றமற்ற மற்றொருவர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய் யையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கிறான்”. (திருக்குர்ஆன் 4:112)
இப்படிபட்ட பாவங்களின் வீரியம் தெரியாமல் பலர் அதனை மிக சாதாரணமாக கையாளுகின்ற நிலைமை மிகவும் ஆபத்தானது. ஒருவருக்கு துரோகம் செய்வது சமுதாய கட்டமைப்பில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். இதைப்பற்றி இன்னொரு இடத்திலே இறைவன்குறிப்பிடும் போது;
“எவர்கள்நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும், அவர்கள் செய் யாத குற்றத்தை செய்தார்கள் என்று கூறி துன்புறுத்துகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெரும் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றனர்” (திருக்குர்ஆன் 33:58)
தனிக்குடித்தனங்கள் மிக அதிகமான அளவில் பெருகிவிட்ட இந்த கால சூழ்நிலையில் கணவன்-மனைவி என்ற இருவர் மட்டுமே வாழக்கூடிய நிலைமையில் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களால் மாறுபட்டு குற்றம் சுமத்தி மன அழுத்தங்களால்பாதிக்கப்பட்டு பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து வழக்குகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்று விட வேண்டும்என்பதற்காக கணவனும் மனைவியுமே ஒருவரைஒருவர் குற்றம் சுமத்துவது வாடிக்கையாகியுள்ளது.அதனையும் இவ்வாறு கண்டிக்கின்றான் அல்லாஹ்:
“எவர்கள் கள்ளம் கபடமில்லாத நம்பிக்கையாளரான பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும்மறுமையிலும் இறைவனுடைய சாபத்திற்குள்ளாவார்கள். அன்றியும் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு”(திருக்குர்ஆன் 24:23)
எங்கேயும் எப்போதும் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நல்ல வாழ்க்கை அமைய விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எங்கும் சுபிட்சம் நிறைந்துவிடும். குற்றம் தவிர்ந்து வாழ்வோம்,ஏற்றமிகு வாழ்வு பெறுவோம்.
அஸ்ரா உமர் கத்தாப், சென்னை.
ரியாத், நவ. 2-
இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதிக்கு ஆண்டுதோறும் உலகில் பல நாடுகளில் இருந்து சுமார் 25 லட்சம் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு ஹஜ் பயணிகள் சவுதி அரேபியா வர அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல கொடுத்த அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் இந்திய ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு மெக்கா செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடை இப்போது விலக்கப்பட்டு உள்ளது.
ஹஜ் பயணிகளை புனித பயணத்திற்கு அனு மதிக்க சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. ஏற்கனவே முதல்கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 4-ந்தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த வர்களுக்கு மட்டும் மெக்கா செல்ல அனுமதி வழங்கப் பட்டது.
நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேர் மெக்கா வந்து செல்கிறார்கள். நேற்று முதல் குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மெக்கா செல்லும் பயணிகள் அந்த நாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ள செயலி மூலம் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். மேலும் அரசு அறிவுறுத்தி வரும் சுகாதார வழிகாட்டுதல்களையும் அவர்கள் பின்பற்ற வேண்டும்.
அதன்படி முதல் நாளான நேற்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் உம்ரா எனப்படும் புனித பயணத்திற்கு அனுமதிக் கப்பட்டனர். இனி வரும் நாட்களில் தினமும் 20 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.
கிராண்ட் மசூதி மையத்தில் உள்ள இஸ்லாமிய புனித தலமான காபாவை சுற்றி வர அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் 3 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு அவர்களின் உடல் நிலையை கண்காணித்த பின்னரே மெக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துணை மந்திரி அமர்-அல்-மத்தா உறுதிப்படுத்தி உள்ளார்.
மெக்கா வரும் வெளிநாட்டு பயணிகள் 10 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பரவலுக்கு முன்பு மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள 1,300 தங்கும் விடுதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான உணவு விடுதிகள் மிகவும் பரபரப் பாக இயங்கி வந்தன. ஆனால் கடந்த மார்ச் மாதம் முதலே அவை அனைத்தும் படிப்படியாக முடங்கி விட்டன.
தற்போது மீண்டும் பயணி களுக்கு படிப்படியாக அனுமதி தரப்பட்டு வருவ தால் மீண்டும் ஓட்டல்கள் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கஹ்பா எனப்படும் கருப்பு நிற புனித கட்டிடத்தை தொட சிறிது காலம் பயணிகளுக்கு அனுமதி இல்லை என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கத்தின் நிலைமைக்கு ஏற்ப மேலும் சில தடைகளை சவுதி அரசாங்கம் தளர்த்தும் என்று தெரிகிறது.
அதில் மிக முக்கியமான ஒன்றாக நமது பக்கத்து வீட்டாரோடு நாம் அனுசரிக்க வேண்டிய நடைமுறைகளை அழுத்தமாக கோடிட்டுக்காட்டினார்கள். அவர்களுக்கான உரிமைகளை எந்த அளவிற்குப் பேண வேண்டும் என்றும் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது “எங்கே மனிதன் சம்பாதித்தவற்றில் இருந்து பக்கத்து வீட்டுக்காரருக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டு விடுவானோ என்று நான் எண்ணும் அளவிற்கு அல்லாஹ்வின் கட்டளைகள் இறங்கி கொண்டிருந்தன” என்று சொன்னார்கள்.
“பக்கத்து வீட்டு கனி மரம் உங்கள் வீட்டு எல்லைச் சுவரை தாண்டி வருமேயானால் அதனை வெட்டி விடாதீர்கள், அந்த கனிகள் உங்கள் வீட்டில் விழுமேயானால் அதனைப் புசித்து விடாதீர்கள், அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்று அழுத்தமாக வலியுறுத்தினார்கள் நபிகள் கோமான்.
‘பக்கத்து வீட்டில் பசித்திருக்கும் போது நீங்கள் வயிறாற உண்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அதுமட்டுமல்ல நீங்கள் புசிப்பதில் அவர்களுக்கும் பங்குண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்’ என்று சேர்த்தும் சொன்னார்கள் அண்ணலார்.
ஒரு நாள் மதினத்து நபவியிலே நபிகள் நாயகம் அமர்ந்திருந்த போது ஒரு நபித்தோழர் தன் கைகளில் ஆட்டின் தலையை எடுத்து சென்று கொண்டிருந்தார். உடனே அவரை அழைத்து “தோழரே! நீங்கள் இதனை சமைக்கும் போது பக்கத்து வீட்டாரின் பங்கிற்காக சிறிது குழம்பையும் சேர்த்து சமையுங்கள்” என்று பணித்தார்கள்.
இரு பெண்களைப் பற்றிய விவாதம் பெருமானாரின் அவைக்கு வந்த போது ஒரு நபித்தோழர் சொன்னார் “எனது வீட்டிற்கு அருகாமையில் இரண்டு பெண்கள் வசிக்கிறார்கள். ஒருவர் எல்லாவிதமான இறைக்கட்டளைகளையும் மிக நேர்த்தியாக நிறைவேற்றுகிறார். ஆனால் பக்கத்து வீட்டாரோடு இணக்கமாக வாழ்வதில்லை. மற்றொருவளோ தன் கடமைகளை குறிப்பிட்ட அளவில் செய்தாலும் கூட அண்டை வீட்டாரோடு அன்பும், பண்பும் பாசமுமாய் வாழ்ந்து வருகிறாள். இவர்கள் இருவரின் நிலைமை நாளை மறுமையில் என்னவாய் அமையும்? ரஸூலே விளக்குங்கள்” என்று வினவினார்கள்.
நபிகள் நாதர் விடை பகர்ந்தார்கள்: “முதலாமவள் நரகம் செல்வாள், மற்றவளோ மறுமையில் சுவனம் செல் வாள்” என்றார்கள்.
பக்கத்து வீட்டாரின் உரிமைகள் மறுக்கப்பட்டால் ஒருவனுக்கு சுவர்க்கம் மறுக்கப்படும் என்ற நிலை இருக்குமேயானால் அல்லாஹ் பக்கத்து வீட்டாருக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதை உணர்ந்து நம் செயல்பாடுகளை செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும்.
பக்கத்து வீட்டுக்காரர் எந்த இனத்தவர், எந்தக் குலத்தவர், நம்மைச் சார்ந்தவரா, அல்லாதவரா என்பதை எல்லாம் தாண்டி அவர் ஒரு சக மனிதர் என்ற கோட்பாடோடு நம்முடைய உறவை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய கொள்கையில் வலியுறுத்திச் சொல்லப்பட்ட உண்மைத் தத்துவம்.
ஒரு பள்ளிவாசலின் விரிவாக்கத்திற்காக பக்கத்தில் வசித்து வந்த ஏழை விதவை யூதப்பெண்ணின் வீட்டை இடித்து விரிவாக்கம் செய்து விட்டு, அதை விட பெரிய வீட்டினை பகரமாக அளித்தார் அந்நகரின் கவர்னர். ஆனால் அந்த ஏற்பாடு யூதப் பெண்ணால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே மதினாவின் கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு கடிதம் அனுப்புகிறாள். உண்மையை அறிந்த உமர் (ரலி) அவர்கள் கவர்னரை அழைத்து கடிந்து கொண்டார்கள். நீங்கள் அண்ணலார் அண்டை வீட்டார் பற்றிச் சொன்ன அமுத வாக்குகளை கேள்விப்பட வில்லையா? இடித்த வீட்டை மீண்டும் கட்டிக்கொடுங்கள் என்று கட்டளையிட்டார்கள். அந்த அளவிற்கு நபிகளாரின் கட்டளைகள் சஹாபாக்கள் காலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்தன.
இஸ்லாம் என்பது மனிதநேயம் உலகில் தழைக்க வேண்டும் என்பதற்காக வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்வியல் தத்துவம். அது ஒரு குறிப்பிட்ட வகுப்பார்களுக்காக சொல்லப்பட்டதன்று. மனிதகுலம் முழுவதும் சாந்தியோடும், சமாதானத்தோடும் வாழ வழி சொன்ன ஒரு கொள்கை. அதனைப் புரிந்து கொண்டு நாம் ஒற்றுமையோடு வாழும் போது நமது வெற்றியினை யாராலும் தடுக்க முடியாது.
இறைக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வோம், இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.
மு.முகமது யூசுப், உடன்குடி.






