search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல 7 மாதங்களுக்கு பிறகு அனுமதி
    X
    ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல 7 மாதங்களுக்கு பிறகு அனுமதி

    ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல 7 மாதங்களுக்கு பிறகு அனுமதி

    வெளிநாடுகளை சேர்ந்த ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல 7 மாதங்களுக்கு பிறகு அனுமதி முதல் நாளில் 10 ஆயிரம் சென்றனர்

    ரியாத், நவ. 2-

    இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதிக்கு ஆண்டுதோறும் உலகில் பல நாடுகளில் இருந்து சுமார் 25 லட்சம் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

    கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு ஹஜ் பயணிகள் சவுதி அரேபியா வர அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்தியாவில் இருந்து ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல கொடுத்த அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் இந்திய ஹஜ் பயணிகள் மெக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு மெக்கா செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடை இப்போது விலக்கப்பட்டு உள்ளது.

    ஹஜ் பயணிகளை புனித பயணத்திற்கு அனு மதிக்க சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. ஏற்கனவே முதல்கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 4-ந்தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த வர்களுக்கு மட்டும் மெக்கா செல்ல அனுமதி வழங்கப் பட்டது.

    நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேர் மெக்கா வந்து செல்கிறார்கள். நேற்று முதல் குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மெக்கா செல்லும் பயணிகள் அந்த நாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ள செயலி மூலம் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். மேலும் அரசு அறிவுறுத்தி வரும் சுகாதார வழிகாட்டுதல்களையும் அவர்கள் பின்பற்ற வேண்டும்.

    அதன்படி முதல் நாளான நேற்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் உம்ரா எனப்படும் புனித பயணத்திற்கு அனுமதிக் கப்பட்டனர். இனி வரும் நாட்களில் தினமும் 20 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.

    கிராண்ட் மசூதி மையத்தில் உள்ள இஸ்லாமிய புனித தலமான காபாவை சுற்றி வர அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் 3 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன் பிறகு அவர்களின் உடல் நிலையை கண்காணித்த பின்னரே மெக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துணை மந்திரி அமர்-அல்-மத்தா உறுதிப்படுத்தி உள்ளார்.

    மெக்கா வரும் வெளிநாட்டு பயணிகள் 10 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    கொரோனா பரவலுக்கு முன்பு மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள 1,300 தங்கும் விடுதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான உணவு விடுதிகள் மிகவும் பரபரப் பாக இயங்கி வந்தன. ஆனால் கடந்த மார்ச் மாதம் முதலே அவை அனைத்தும் படிப்படியாக முடங்கி விட்டன.

    தற்போது மீண்டும் பயணி களுக்கு படிப்படியாக அனுமதி தரப்பட்டு வருவ தால் மீண்டும் ஓட்டல்கள் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே கஹ்பா எனப்படும் கருப்பு நிற புனித கட்டிடத்தை தொட சிறிது காலம் பயணிகளுக்கு அனுமதி இல்லை என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

    கொரோனா தாக்கத்தின் நிலைமைக்கு ஏற்ப மேலும் சில தடைகளை சவுதி அரசாங்கம் தளர்த்தும் என்று தெரிகிறது.

    Next Story
    ×