என் மலர்
கிறித்தவம்
திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலையிலும் தேர் பவனி நடந்தது. பின்னர் நற்கருணை பவனியும், தொடர்ந்து இரவு புனிதர் தேவசகாயம் வரலாற்று நாடகமும் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டீபன், இணை பங்குதந்தை மரிய ஜோசப்சிபு, பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
கோட்டார் இளைஞர் பணிக்குழு செயலாளர் ஜெனிபர் எடிசன் அருளுரை வழங்கினார். பின்னர் நற்கருணை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இரவில் கத்தோலிக்க சங்கம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு வட்டார பங்கு பேரவை துணை தலைவர் ஜேக்கப் மனோகரன் தலைமை தாங்கினார். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதில் பங்கு தந்தை ஸ்டீபன், இணை பங்கு தந்தை மரிய ஜோசப் சிபு, பங்கு பேரவை துணை தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், பொருளாளர் சேவியர் ராஜ், துணை செயலாளர் சகாய ரூபிலெட் மற்றும் கத்தோலிக்க சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இருநாட்டு மீனவர்களும் வழிபடும் புனித அந்தோணியாருக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவில் சாதி, மத பேதமின்றி இருநாட்டு மக்களும் கலந்து கொள்வார்கள். மேலும் இந்த திருவிழா கலாசார, பண்பாட்டு ஒற்றுமையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் இருந்து திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 3 ஆயிரத்து 4 பேர் பெயர் பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று காலை முதல் பக்தர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் ராமேசுவரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
74 விசைப்படகுகளிலும், 23 நாட்டுப்படகுகளிலும் பெண்கள், குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் உள்பட மொத்தம் 2,881 பேர் சென்று கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை 6 மணி முதல் திருவிழாவில் கலந்து கொள்ள சென்றவர்களை வருவாய்த்துறை, சுங்கத்துறை, புலனாய்வுத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன் பின்னர் ராமேசுவரத்தில் இருந்து காலை 7 மணி முதல் ஒவ்வொரு படகாக கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றது.
தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் பக்தர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. கச்சத்தீவு பயணத்தை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பார்வையிட்டு வழியனுப்பி வைத்தனர்.
நேற்று மாலை 4.30 மணி அளவில் இலங்கையின் நெடுஞ்தீவு பங்குத்தந்தை எமிலிபால் கச்சத்தீவு ஆலயத்தில் திருவிழா கொடியேற்றி, விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிலுவைகளை தோளில் சுமந்து சிலுவை பாதை திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழா திருப்பலி நடைபெற்று, இரவு 8 மணியளவில் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில் அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இலங்கையைச் சேர்ந்த ஏராளமானவர்களும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இதில் இருநாட்டு பங்குத்தந்தையர்களும் கலந்து கொள்கின்றனர்.
கச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இதேபோல இலங்கையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ரோந்து சுற்றி வருகின்றன. கச்சத்தீவு விழா காரணமாக மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகம் உபத்திரவங்களும் போராட்டங்களும் நிறைந்த உலகம், ஒவ்வொரு நாளும் பலவிதமான பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம்.
வேதம் சொல்லுகிறது, ‘மாம்சத்தோடும் ரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு’. (எபேசியர் 6:12)
ஆனால் இந்த போராட்டத்தை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் நம் தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக கோலியாத் எழும்பியபோது ஜனங்கள் அனைவரும் பயந்து கலங்கினர். ஆனால் சிறுவனான தாவீது பயப்படவேயில்லை. அவனுக்குள்ளே, ‘நிச்சயம் கர்த்தர் எனக்காக யுத்தம் பண்ணுவார்’ என்ற நம்பிக்கை தோன்றியது. எனவே தைரியமாக கோலியாத்தை எதிர்கொண்டான். வெற்றியும் பெற்றான்.
அதுபோல உங்களுக்கு விரோதமாக சத்துரு பலவிதமான போராட்டங்களைக் கொண்டு வரலாம். ஆனால் மனம் கலங்காதிருங்கள். உலகத்தையும் பிசாசையும் ஜெயித்த தேவன் நமக்காக யுத்தம் பண்ணி நமக்கு ஜெயத்தைக் கொண்டு வருவார். கர்த்தர் தாவீதின் வாழ்வில் வெற்றியைக் கொடுக்க காரணம் என்ன தெரியுமா?
வைராக்கியம்
‘ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்’. (1.சாமுவேல்17:26)
கோலியாத் ஒவ்வொரு நாளும் இஸ்ரவேல் ஜனங்களையும், இஸ்ரவேலின் தேவனையும் நிந்தித்து வந்தான். இதைக் கேட்ட அனைத்து ஜனங்களும் பயந்தனர். ஆனால் தாவீதுக்குள்ளே ஒரு வைராக்கியம் உண்டானது. ஜீவனுள்ள தேவனையும், அவருடைய பிள்ளைகளையும் நிந்திப்பதற்கு இவன் யார்? என கோபத்துடன், வைராக்கியத்துடன் எழுந்தான்.
தேவன் நமக்காக யுத்தம் பண்ண வேண்டுமானால் நமக்குள்ளே தேவனைக் குறித்த வைராக்கியம் தேவை. நாம் எந்த அளவுக்கு வைராக்கியம் காட்டுகிறோமோ, அந்த அளவுக்கு தேவனும் நமக்காக வைராக்கியம் காட்டி நமக்காக பெரிய காரியம் செய்வார். வறுமை, கடன் பிரச்சினை, வியாதி, போராட்டங்கள் வரும் போது அதைக் கண்டு பயந்து போகாமல், தேவன் பேரில் வைராக்கியம் காட்டுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களை நிச்சயம் செய்வார்.
நம்பிக்கை
‘பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்’. (1.சாமுவேல் 17:37)
தாவீதுக்குள் காணப்பட்ட மற்றொரு குணாதிசயம் என்ன தெரியுமா? தேவன் பேரில் நம்பிக்கையே. தனக்கு முன்பாக பெரிய கோலியாத் நின்றாலும், தேவன் தன்னை தப்புவிக்க வல்லவர் என்று தேவனை உறுதியாய் விசுவாசித்தான். தன்னையோ, தன்னுடைய திறமைகளையோ, தன்னைப் பின் தொடர்கிற மனுஷர்களையோ தாவீது நம்பவில்லை. தன் முழு நம்பிக்கையையும் தேவன் பேரில் வைத்ததால்தான் தேவன் ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
எனக்கன்பானவர்களே, உங்களுக்கு முன்பாக இருக்கிற பெரிய பெரிய பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். உங்களுக்குள் இருக்கிற பெரிய தேவனை நோக்கிப்பாருங்கள். உங்கள் நம்பிக்கை அவர் மேல் இருக்கட்டும். அசைக்க முடியாத உறுதியான விசுவாசத்தைக் கண்டு நம் தேவன் உங்களுக்கு பெரிய வெற்றியைக் கட்டளையிடுவார்.
தேவனின் நாமம்
‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும் கேடயத்தோடும் என்னிடத்தில் வருகிறாய், நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய ராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’. (1.சாமுவேல் 17:45)
மேற்கண்ட வசனத்திலே தாவீது தேவனின் நாமத்தில் உள்ள வல்லமையை அறிந்திருந்தபடியினால் அவருடைய நாமத்தில் கோலியாத்தோடு யுத்தம் பண்ணினான். பட்டயம், ஈட்டி, கேடயம் போன்ற ஆயுதங்களுக்கெல்லாம் மேலானது நம் இயேசுவின் நாமம்.
எவ்வளவு போராட்டங்களையும், உபத்திரவங்களையும் சாத்தான் கொண்டு வந்தாலும் இயேசுவின் நாமத்தினாலே நாம் ஜெபிக்கும்போது நமக்கு வெற்றியைக் கட்டளையிடுவார். இன்றும் கூட அநேக ஊழியர்கள் இயேசுவின் நாமத்தினாலே பிசாசை கடிந்து கொள்ள, அசுத்த ஆவிகள் அலறி ஓடுகிறது. வியாதிகள் குணமாகிறதை நாம் காண முடிகிறது. ஆகவே எல்லா நாமத்துக்கும் மேலான தேவனின் நாமத்தை உபயோகிக்க நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த நாமத்தில் நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் எல்லா போராட்டங்களினின்றும் நமக்கு வெற்றியைக் கட்டளையிடுவார்.
கர்த்தரையே நம்பியிருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து, எல்லா காரியங்களிலேயும் வெற்றியைக் கட்டளையிடுவார்.
சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54
நாளை மாலை 5 மணியளவில் நெடுந்தீவு பங்கு தந்தை எமிழிபால், அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் ஏற்றுகிறார்.தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பெரிய மரத்தால் ஆன சிலுவைகளை தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் சேர்ந்து தூக்கி வர 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலி பூஜை நடைபெற்று திருவிழா திருப்பலி பூஜைகளும் நடைபெறுகின்றன. தொடர்ந்து இரவு 8 மணியளவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேரை இரு நாட்டு மக்களும் மற்றும் இலங்கை கடற்படையினரும் சேர்ந்து தூக்கி ஆலயத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
திருவிழாவின் 2-வது நாளான நாளை மறுநாள் காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் திருவிழா திருப்பலி பூஜைகள் நடைபெறுகின்றன. 10 மணியுடன் திருப்பலி பூஜை முடிந்து கொடியிறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவடைகின்றது.
திருவிழாவிற்கு ராமேசுவரம் மீன் பிடி துறைமுக பகுதியில் இருந்து புறப்பட்டு 75 விசைப்படகு மற்றும் 25 நாட்டுப் படகுகளிலும் சேர்த்து மொத்தம் 3000 பேர் நாளை செல்லவுள்ளனர். இதேபோல் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி கச்சத் தீவில் மரங்களை அகற்றிபாதை அமைப்பது, திருவிழாதிருப்பலி பூஜை நடைபெறும் இடங்களில் பந்தல் அமைப்பது மற்றும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் பணியில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படைவீரர்கள் கடந்த 3 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழாவையொட்டி ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிவேக கப்பல் ஒன்றும் மண்டபம் இந்திய கடலோரகாவல் படை நிலையத்தில் உள்ள 2 ஹோவர் கிராப்ட் கப்பல்களும் மற்றும் மற்றொரு அதிவேக கப்பலும் மண்டபம் முதல் ராமேசுவரம் தனுஷ்கோடி வரையிலான கச்சத்தீவுக்கு இடைப்பட்ட இந்திய கடல் பகுதியில் தீவிரமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இன்று காலை 5.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெறுகிறது. இதில் கர்நாடக மத்திய பேராய செயலர் ஜே.பால் தனசேகரன் தேவ செய்தி அளிக்கிறார். இன்னிசையுடன் கூடிய தெய்வீக பாடல்களுடன் ஆராதனை நடக்கிறது. இந்த ஆராதனையில் சீயோன் ஆலய குடும்பத் தினர் கலந்து கொண்டு இறைவனை ஆராதிக்கிறார்கள்.
அதன்பின்னர் மதியம் 12 மணிக்கு ‘அசன விருந்து’ சிறப்பு ஆராதனையுடன் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் அறுசுவையுடன் விருந்து வழங்கப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை செயலாளர் சாம்ராஜ் தேவசீலன், பொருளாளர் பீட்டர் தங்கதுரை மற்றும் சபை ஆயர் செல்விதாசன், கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஐக்கியம், ஓய்வுபெற்ற பாடசாலை குழு, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்துள்ளனர்.
விழாவில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு சீயோன் ஆலய ஆயர் செல்வி தாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவருடைய இறையியல் சிந்தனைக்கு ஒத்துப்போகாத நூல்களில் இதுவும் ஒன்று என்பது அதன் காரணம். முக்கியமாக, நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அழுத்தம் இந்த நூலில் இல்லை. ‘கிறிஸ்து’ எனும் பதம் இரண்டே இரண்டு முறை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘விசுவாசம் மட்டுமே மனிதனை மீட்க முடியும்’ எனும் அவருடைய அறைகூவலின் அடிப்படைக்கே இந்த நூல் எதிராக இருக்கிறது.
நல்ல வேளை மார்ட்டின் லூத்தர் இந்த நூலை விவிலியத்தில்இருந்து நீக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், கிறிஸ்துவின் தன்மைகளில் ஒரு பாகம் புரியப் படாமலேயே போயிருக்கும்.
அப்படி என்ன தான் இருக்கிறது இந்த நூலில்?
“செயல்படாத விசுவாசம் செத்த விசுவாசம்”, “செயலற்ற நம்பிக்கை பயனற்றது” என்கிறது இந்த நூல்.
இது ஒன்றும் புதிய சிந்தனையல்ல, “என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்பவரெல்லாம் விண்ணரசில் சேர்வதில்லை, தந்தையின் விருப்பப்படி செயல்படுபவரே சேர்வார்” என இயேசு கூறியதன் விளக்கமே.
தனது வாதத்துக்கு வலு சேர்க்க, யாக்கோபு இரண்டு பழைய ஏற்பாட்டு நபர்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்த ஆபிரகாம். இன்னொன்று மோசமான வாழ்க்கை வாழ்ந்து வந்த இராகாபு.
ஆபிரகாம் ஒரு உயிரை எடுக்கத் துணிந்தவர். இராகாபு இரு உயிர்களை காப்பாற்றத் துணிந்தவர். இருவருமே விசுவாசத்தைச் செயல்களில் காட்டினார்கள். அப்படி செயல்களால் காட்டியதால் தான் இருவருமே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள். எனவே “உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே” என்கிறார் அவர்.
வெறும் செயல்கள் கொண்டிருப்பதால் மீட்பு கிடைப்பதில்லை. வெறும் விசுவாசம் கொண்டிருப்பதும் மீட்பைத் தருவதில்லை. விசுவாசத்தின் வெளிப்பாடாய் செயல்கள் அமையும் போது மீட்பு நிச்சயம் கிடைக்கும் என்பதே யாக்கோபு நூலின் அடிப்படைச் செய்தி.
இந்த நூலை எழுதிய யாக்கோபு யார் என்பதிலும் குழப்பங்கள் உண்டு. மரபுச் செய்திகளின் படி யாக்கோபு என்பவர் இறைமகன் இயேசுவின் சகோதரர். எருசலேம் திருச்சபையின் தலைவராக இருந்தவர். பவுலுடன் தொடர்பு கொண்டிருந்தவர். எனினும் இவர் இயேசுவின் சகோதரர் அல்ல, வேறு ஒரு யாக்கோபு என சில இறையியலாளர் கருதுகின்றனர். அதற்கு அவர்கள் தரும் காரணங்களில், இயேசுவுடனான உறவைப் பற்றிய பகிர்தல் இல்லாதது, கடிதத்தின் நடை கிரேக்க எபிரேய கலவையாய் இருப்பது போன்றவை முக்கியமானவை.
இயேசுவுக்கு நேரடிச் சகோதரர்கள் இருந்தார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. அன்னை மரியாள் இறுதி வரை கன்னியாகவே இருந்தார். விவிலியம் குறிப்பிடும் இயேசுவின் சகோதரர்கள் எல்லோருமே அவருடைய உறவினர் தான் என்பது கத்தோலிக்கர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கான இறையியல் ஆய்வுகளையும் அவர்கள் கணிசமாக வைத் திருக்கிறார்கள்.
இது இயேசுவின் சகோதரர் யாக்கோபு சொன்னவற்றை அடிப்படையாய்க் கொண்டு, புலமை வாய்ந்த ஒருவர் எழுதிய நூல் என சிலர் பொத்தாம் பொதுவாக முடிவுக்கு வருகின்றனர். ஒரு வகையில் பழைய ஏற்பாட்டின் நீதி மொழிகள் நூலைப் போன்ற ஒரு கட்டமைப்பு இந்த நூலில் காணக்கிடைக்கிறது. இதன் காலம் கி.பி. 50-க்கும் நூறுக்கும் இடைப்பட்டது என்பது தோராயக் கணக்கு.
யாக்கோபு நூலின் ஆசிரியர் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடு கிறார். செல்வத்தின் மீதான ஆசை தீயது. செல்வர்கள் வெயிலில் அழியும் புல்லைப் போல அழிவார்கள். அவர்களுக்கு இழி நிலை வரும். செல்வத்தைச் சேர்த்து வைக்காமல், ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பது ஒரு சிந்தனை.
உலகத்தோடான ஆசையும், பற்றும் விசுவாச வாழ்வுக்கு எதிரானது. செருக்கு, பேராசை சிற்றின்பத் தேடல் இவற்றையெல்லாம் விட்டு விட்டு தாழ்மையுடன் இறைவனை அணுக வேண்டும் என்பது இன்னொரு சிந்தனை.
நாவடக்கம் மிக முக்கியமானது. நாவி லிருந்து நல்லவையும், அல்லவையும் வரக் கூடாது. ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரப்பதில்லை. நாவு காட்டுத் தீயைப் போன்றது. உடல் முழுவதையும் கறைபடுத்துவது. அதை அடக்குவது எளிதல்ல, ஆனால் அதை வெற்றி கொள்ள வேண்டும் என்பது பிறிதொரு சிந்தனை.
இயேசு இறுதித் தீர்வை நாளில் ‘என் மீது விசுவாசம் கொண்டிருந்தாயா?’ என கேட்கவில்லை. ஏழைகளில் என்னைக் கண்டாயா? என்றே கேட்டார். ஏழை களுக்கு உதவியதன் மூலம் எனக்கு உதவினாயா? என்பதையே கேட்பார். இந்த யாக்கோபு நூல், அந்த நிகழ்வுக்காக நம்மை தயாராக்குகிறது.
சேவியர்
எதிரிகள் உருவாவதில் இறைவனின் செயல்பாடு உள்ளதா? என்பதை பைபிள் கூறும் வரலாற்று சம்பவம் மூலம் அறியலாம்.
இஸ்ரவேலின் 12 கோத்திரங்களின் அரசனாக தாவீது இருந்தான். அவனது அரசாட்சியும், பக்திக்கேற்ற நடத்தையும் இறைவனுக்கு பிரியமாக இருந்தன. தண்டனையாக பல்வேறு பிரச்சினைகளை தாவீது சந்தித்தபோதும், இறைபக்தியில் இருந்து வழிவிலகாதபடி தன்னை காத்துக்கொண்டான். எனவே தாவீதின் மீதும் அவனது அரசாட்சியின் மீதும் இறைவனின் கருணை கடைசிவரை நீடித்தது.
தாவீதுக்குப் பின்பு அவனது மகன் சாலமோன் ஆட்சிக்கு வந்தான். உலகத்திற்கு தத்துவங்களையும், ஞானத்தையும் போதிக்கும் அளவுக்கு அவனை இறைவன் உயர்த்தினார். ஆனால் பெண்கள் மீதிருந்த அதீதமோகத்தின் காரணமாக பிற தெய்வ வழிபாடுள்ள பெண்களையும் தன்னிடம் சேர்த்துக்கொண்டான்.
தன்னை வணங்குவதற்காக பிரித் தெடுக்கப்பட்ட மக்கள், பிற தெய்வங்களை வணங்குவதை இறைவன் ஏற்பதே இல்லை. அந்த பெண்களால் தன்னைவிட்டு வேறு தெய்வ வழிபாட்டுக்கு சாலமோன் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்பதை அவனுக்கு தரிசனம் மூலமாக எச்சரிக்கை செய்தார். ஆனாலும் அதை மீறியதால் இறைகோபத்துக்கு உள்ளானான். எனவே அவனை இறைவன் தண்டனைக்கு உட்படுத்தினார்.
பல்வேறு ஆசை, இச்சையின் காரணமாக இறைப்பாதையில் இருந்து விலகிச் செல்லும் பக்தனுக்கு எச்சரிக்கைகளை முதலில் இறைவன் அளிக்கிறார். இதயத்தை கசக்கச் செய்யும் அளவுக்கு மற்றவர்களின் கடின வார்த்தைகளை கேட்கச் செய்கிறார். அதிலும் மனம் மாறாவிட்டால், மகாகசப்பான சம்பவங்களுக்குள்ளாக நடத்தி, அதன் மூலம் எச்சரிக்கை செய்கிறார்.
ஆனாலும் அதிக உலகஆசை இருப்பதால், கசப்புகளை பக்தன் தனது திராணியைக் கொண்டு சமாளிப்பதோடு, இறைவனின் எச்சரிக்கையை புறக்கணிக்கிறான். அப்போதுதான் தண்டனையை நோக்கி அவன் அழைத்துச் செல்லப்படுகிறான். அவனவன் திராணிக்கு ஏற்ப தண்டனை விதிக்கப்படுகிறது.
பிற தெய்வ வழிபாடுள்ள பெண்களை சந்தோஷப்படுத்துவதற்காக அந்த தெய்வங்களுக்கு வழிபாட்டு மேடைகளை சாலமோன் கட்டினான். தாவீது போல மற்ற விவகாரங்களில் சிறப்பான அரசாட்சியை நடத்தியிருந்தாலும், பிற தெய்வ விவகாரங்களில் இறைகட்டளைகளை சாலமோன் முழுமையாக பின்பற்றவில்லை (1 ராஜா.11:6).
எச்சரிக்கை மீறினால் தண்டனை வரும். தண்டனை என்பதும் அழிப்பதற்கானது அல்ல. அவன் மீண்டும் தன் பாதைக்கு வர இறைவன் பயன்படுத்தும் ஆயுதமே அது. படிப்படியாக எச்சரிக்கை வருவது போல இறைத்தண்டனையும் படிப்படியாக வருகிறது.
தண்டனைகளில் இருந்து மீண்டெழுந்து இறைப்பாதைக்கு வரலாம். ஆனால் ஏகப்பட்ட இழப்புகளோடு அவமானம், வறுமை, வியாதி போன்றவற்றையும் கடந்து செல்ல வேண்டியதிருக்கும். எனவே எச்சரிப்பின் காலகட்டத்திலேயே மீண்டும் பக்திப் பாதைக்கு வருவது மேலானது.
சாலமோனுக்கு இரண்டு வகைகளில் தண்டனை அனுமதிக்கப்பட்டது. அவனுக்கு கீழ் பணியாற்றியவனையே எதிரியாக இறைவன் எழுப்பினார் (1 ராஜா.11:14, 23, 26). அந்த எதிரிக்கு ஆதரவாக பலரையும் இறைவனே சேர்த்தார். இது முதல் வகை.
அடுத்ததாக, சாலமோனின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த 11 கோத்திரங்களில் ஒரு கோத்திரம் தவிர மற்றவற்றை அவனிடம் இருந்து பிடுங்கி எதிரிகளிடம் இறைவனே அளித்தார். இது இரண்டாம் வகை தண்டனை.
எதிரிகளால் சாலமோன் சமாதானம் அற்றவனானான். எதிரிகளின் பலம் அவனுக்கு பயத்தையும் தந்தது. எனவே எதிரி களைக் கொலை செய்ய விரும்பினான். இறைவன் எழுப்பிய எதிரிகளை அவனால் கொலை செய்யவும் முடியவில்லை. மாறாக, எதிரிகளுக்கு ஆட்சிக்கான ஆசீர்வாதத்தையும் இறைவன் அனுப்பினார் (1 ராஜா.11:37,38).
நாம் செய்யும் தவறுகள், எதிரிகளையும் ஆட்சி பீடத்தில் அமரச் செய்துவிடுகிறது. சாலமோனிடம் இருந்த அதீதமோகம் போல, நம்மிடம் இருக்கும் பொருளாசை, அதிகார ஆசை, இச்சை போன்றவை சுயநலம், லஞ்சம், பொய், ஏமாற்றுதல், நியாயத்தை புரட்டுதல், நேர்மையானவர்களை அநியாயமாக குற்றம்சாட்டுதல் என எத்தனையோ பாவங்களுக்குள் இழுத்துச் சென்றுவிடுகின்றன.
இதன் விளைவாக, நமக்கு எதிராக நம்மிடம் இருந்தே எதிரிகளை இறைவன் உருவாக்குகிறார். இந்த எதிரிகளை அழிப்பதற்கு நாம் செய்யும் மூர்க்கமான முயற்சிகள் மேலும் பல பாவங்களை செய்ய வைக்கின்றன. இதனால் சம்பந்தமில்லாமல் பலரும் பல்வேறு பாதிப்படைகின்றனர்.
சாலமோனின் பாவநடவடிக்கைகளால்தான், அவனுக்கு எதிரிகள் உருவாகியதோடு, அவர்களுடன் சண்டை, மூர்க்கம், சமாதானக் குறைவு, கட்டுக்கடங்காத பகை என பல்வேறு இழப்புகள் அவனது நாட்டு மக்களுக்கும் உபரியாக சேர்ந்துகொண்டன.
ராஜாவாக இருந்தாலுமே சாலமோனுக்கு சமாதானமில்லை. இறைவனுக்காக தேவாலயம் கட்டுவது உட்பட பல நற்காரியங்களைச் செய்தாலும், பாவி என்றே அழைக்கப்பட்டான் (நெகே.13:26). பாவத்தினால் அடுத்த மோட்ச வாழ்க்கைக்கான ஆசீர்வாதங்களையும் அவன் இழந்தான். காணிக்கை கொடுப்பது போன்ற நற்காரியங்களால் பாவம் விலகிவிடாது.
எனவே எச்சரிக்கை செய்யப்படுவதை உணர்கிறவர்களும், தண்டனைக்குள் தள்ளப்பட்டதாக உணர்கிறவர்களும் வாய்ப்பு உணர்ந்து உடனடியாக மனந்திரும்பி இறைவழிகளுக்குள் வந்து மீட்படையுங்கள். அப்படி வந்தால், இனி உங்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வைக்கப்பட்டு இருக்கும் வேறுபல ஆசீர்வாதங்களை பயமற்ற சமாதானம், திருப்தி, அமைதியுடன் அனுபவிக்கலாம்.
இல்லாவிட்டால், இப்போது இருக்கும் செல்வத்தாலும் திருப்தியும் சந்தோஷமும் கிடைக்காது. அடுத்த வாழ்க்கையிலும், மீட்பே இல்லாத வகையில் அநியாய தீமை களுக்கு ஆட்பட்டு அழுதுகொண்டே இருக்க வேண்டியதாகிவிடும். சிந்திப்போம்.
ஜெனட், காட்டாங்குளத்தூர்.
மாலையில் திருவிழா வரவேற்பு மேளம் முழங்கப் பட்டது. அதனை தொடர்ந்து கொடி மேள, தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது பட்டாசு வெடிக்கப்பட்டது. வெண்புறாக்கள் பறக்க விடபட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை செயலாளர் இம்மானுவேல்ராஜ் தலைமை தாங்கினார். தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை ஸ்டீபன், இணை பங்கு தந்தை மரியஜோசப் சிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை துணைத் தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள், பொருளாளர் சேவியர், துணை செயலாளர் சகாயரூபி லெட், வட்டார பங்கு பேரவை துணை தலைவர் ஜேக்கப் மனோகரன், முன்னாள் தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை துணை தலைவர் பயஸ்ராய், பங்கு பேரவை உறுப்பினர் பவுல், முன்னாள் கவுன்சிலர் சதீஸ்குமார், பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் திரளான பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் திருப்பலி நடக்கிறது. 8-ம் திருவிழாவன்று இரவு நற்கருணை பவனி, 9-ம் திருவிழா இரவு, 10-ம் திருவிழா பிற்பகலில் தேர் பவனி நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஸ்டீபன், இணை பங்கு தந்தை மரியஜோசப் சிபு, பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
இன்று காலை திருப்பலி, தொடர்ந்து சிலுவை பாதை, 11 மணிக்கு மறைசாட்சி நவ நாள் சிறப்பு திருப்பலி, இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்குகிறார்.
மார்ச் 1-ந்தேதி முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட முதன்மை செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்க, மேலராமன் புதூர் இணைபங்கு தந்தை ஞான சேகரன் அருளுரையாற்றுகிறார்.
6-ந்தேதி காலை திருப்பலி, தொடர்ந்து சிலுவை பாதை, மறைசாட்சி நவ நாள் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணி திருப்பலிக்கு கோட்டாறு மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்க, ஜெனிபர் எடிசன் அருளுரையாற்றுகிறார். இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனி, பொது கூட்டம் நடக்கிறது.
7-ந்தேதி காலை திருப்பலிக்கு கூத்தங்குழி பங்குத்தந்தை ராஜன் தலைமை தாங்கி, அருளுரையாற்றுகிறார். இரவு 7.15 மணிக்கு மாலை ஆராதனை கோட்டாறு மறை மாவட்ட முதன்மை செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்க, புதூர் பங்கு தந்தை சாம் மேத்யூ அருளுரையாற்றுகிறார். 9.30 மணிக்கு வாணவேடிக்கையும் 10.30 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.
8-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டாறு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்க, மரியவின் சென்ட் எட்வின் அருளுரையாற்றுகிறார்.
பிற்பகல் 3.30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு மறைசாட்சி தேவசாயம் வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாட்டை தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை ஸ்டீபன், இணைபங்கு தந்தை மரிய ஜோசப்சிபு, பங்குஅருட்பணி பேரவை, அருட்சகோதரிகள், மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
பழைய ஏற்பாட்டுக் காலத்திலே நியாயப்பிரமாணம் பாவம் செய்தவர்களிடத்தில் அன்பையோ, இரக்கத்தையோ காண்பிக்கவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. பாவம் செய்த மனுக்குலத்திற்கு எவ்வித இரக்கமும் பாராட்டாமல் கடுமையான தண்டனையும், தேவ கோபாக்கினையும் மட்டுமே அந்நாட்களில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களைப்பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார். கிருபையுள்ள வார்த்தைகளை ஜனங்கள் மத்தியிலும், தேவாலயத்திலும் பிரசங்கித்தார். பாவத்திலே வாழ்ந்து தங்களுக்கு மீட்பே இல்லையா என ஏங்கித் தவித்த முழு மனுக்குலத்துக்காகவும் தம் அன்பை வெளிப்படுத்த கல்வாரி சிலுவையிலே ஜீவனையும் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
முழு உலகமும் கிறிஸ்துவானவர் தம் அன்பால் சிந்தின ரத்தத்தினாலே மீட்பைப் பெற்றது. பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (எபே:2:8) நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்(1 யோ:3:16) என்று வேதம் கூறுகிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் அன்பை உலகிலே வெளிப்படுத்துவோம். நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் என்று வேதம் அனைவருக்கும் இந்தக் கிருபையைப்பெற்றுக்கொள்ள அழைப்புக்கொடுக்கிறது. நாமும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம். தேவனுக்குரியவர்களாய் வாழ்வோம்.
போதகர்.அமல்ராஜ்,பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை, மண்ணரை,திருப்பூர்.
இயேசு கிறிஸ்து 40 நாட்கள் தனிமையில் சென்று உபவாசம் இருந்த காலத்தை தவக்காலம் என்று கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள்.
இந்த காலத்தை ‘லெந்து’ நாட்கள் என்று கூறுவதும் உண்டு. தவக்காலம் தொடங்கும் நாள் தான் சாம்பல் புதன்கிழமையாகும். அந்த வகையில் சாம்பல் புதனையொட்டி இன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் காலை ஆராதனையின் போது கடந்த ஆண்டு பயன்படுத்திய குருத்தோலையை எரித்து அதன் சாம்பலை மக்கள் நெற்றியில் பங்கு தந்தை சிலுவை அடையாளம் இடும் நிகழ்ச்சி நடந்தது.
கிறிஸ்தவர்கள் அனை வரும் சாம்பலால் ஆன சிலுவை அடையாளத்தை நெற்றியில் பூசிக் கொண்டனர். சென்னையில் சாந்தோம் தேவாலயம், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, பெசன்ட்நகர், மாதவரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய திருச்சபை என்னும் சி.எஸ்.ஐ. ஆலயங்கள் இ.சி.ஐ. ஆலயங்கள், பெந்தே கோஸ்து ஆலயங்களில் சாம்பல் புதன்கிழமை சிறப்பு வழிபாடு மாலையில் நடைபெறுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கதீட்ரல் பேராலயம், உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் ஆராதனை நடக்கிறது. கிறிஸ்தவர்கள் இந்த தவக்காலத்தில் மாமிச உணவுகளை தவிர்த்து உபவாசம் இருப்பது வழக்கம்.
இந்த காலங்களில் வரும் அனைத்து வெள்ளிக் கிழமையும் மாலையில் சிறப்பு வழிபாடு ஆலயங்களில் நடைபெறும் அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் கன்லென்ஷன் கூட்டமும் நடத்தப்படும்.






