search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் பட்டாசு வெடித்து திருவிழா அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. பின்னர் சிலுவை பாதையும், அதன் பின்னர் மறைசாட்சி நவ நாள் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

    மாலையில் திருவிழா வரவேற்பு மேளம் முழங்கப் பட்டது. அதனை தொடர்ந்து கொடி மேள, தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது பட்டாசு வெடிக்கப்பட்டது. வெண்புறாக்கள் பறக்க விடபட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை செயலாளர் இம்மானுவேல்ராஜ் தலைமை தாங்கினார். தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை ஸ்டீபன், இணை பங்கு தந்தை மரியஜோசப் சிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை துணைத் தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள், பொருளாளர் சேவியர், துணை செயலாளர் சகாயரூபி லெட், வட்டார பங்கு பேரவை துணை தலைவர் ஜேக்கப் மனோகரன், முன்னாள் தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை துணை தலைவர் பயஸ்ராய், பங்கு பேரவை உறுப்பினர் பவுல், முன்னாள் கவுன்சிலர் சதீஸ்குமார், பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் திரளான பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் திருப்பலி நடக்கிறது. 8-ம் திருவிழாவன்று இரவு நற்கருணை பவனி, 9-ம் திருவிழா இரவு, 10-ம் திருவிழா பிற்பகலில் தேர் பவனி நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஸ்டீபன், இணை பங்கு தந்தை மரியஜோசப் சிபு, பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×