search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வியாகுல அன்னை
    X
    வியாகுல அன்னை

    வியாகுல அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடிமலையில் புனித வியாகுல அன்னை, மறைசாட்சி தேவசகாயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று காலை திருப்பலி, தொடர்ந்து சிலுவை பாதை, 11 மணிக்கு மறைசாட்சி நவ நாள் சிறப்பு திருப்பலி, இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்குகிறார்.

    மார்ச் 1-ந்தேதி முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட முதன்மை செயலாளர் ரசல்ராஜ் தலைமை தாங்க, மேலராமன் புதூர் இணைபங்கு தந்தை ஞான சேகரன் அருளுரையாற்றுகிறார்.

    6-ந்தேதி காலை திருப்பலி, தொடர்ந்து சிலுவை பாதை, மறைசாட்சி நவ நாள் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணி திருப்பலிக்கு கோட்டாறு மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்க, ஜெனிபர் எடிசன் அருளுரையாற்றுகிறார். இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனி, பொது கூட்டம் நடக்கிறது.

    7-ந்தேதி காலை திருப்பலிக்கு கூத்தங்குழி பங்குத்தந்தை ராஜன் தலைமை தாங்கி, அருளுரையாற்றுகிறார். இரவு 7.15 மணிக்கு மாலை ஆராதனை கோட்டாறு மறை மாவட்ட முதன்மை செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்க, புதூர் பங்கு தந்தை சாம் மேத்யூ அருளுரையாற்றுகிறார். 9.30 மணிக்கு வாணவேடிக்கையும் 10.30 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது.

    8-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டாறு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்க, மரியவின் சென்ட் எட்வின் அருளுரையாற்றுகிறார்.

    பிற்பகல் 3.30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு மறைசாட்சி தேவசாயம் வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாட்டை தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை ஸ்டீபன், இணைபங்கு தந்தை மரிய ஜோசப்சிபு, பங்குஅருட்பணி பேரவை, அருட்சகோதரிகள், மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×