search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கல்லூரிக்கு அனுப்பி உங்களை படிக்க வைப்பதற்காக உங்கள் பெற்றோர் எத்தகைய தியாகங்களை செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள்.
    குழந்தாய் இளமை முதல் நற்பயிற்சியை தேர்ந்து கொள். முதுமையிலும் ஞானம் பெறுவாய்(சீராக் 6:18)

    கல்லூரிதான் ஒரு மனிதன் மரியாதை உணர்வோடும், உண்மையோடும் வாழ்வதற்கான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கும் இடம். கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் நாள் முதல் நீங்கள் ஒரு குழந்தை அல்ல. மாறாக நீங்கள் ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதர். ஏராளமான நல்லவற்றை நீங்களும் கற்று கொண்டு பரந்து பட்ட இவ்வுலகில் சவால்களை எதிர்கொள்ள பயிற்சி எடுக்கும் மாபெரும் தளம். உங்கள் பொறுப்பு மிகப்பெரியது என்பதை உங்களுக்கு உணர்த்துகின்ற இடம். உங்கள் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் உங்களை பொறுத்து அமைந்திருக்கிறது என்று எடுத்து சொல்லுகின்ற இடம்.

    பள்ளியில் பயின்ற காலத்தை காட்டிலும், கல்லூரியில் உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் உங்களை தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள். மக்கள் பலரும் உங்களை நம்பி இருக்கின்றனர். உங்கள் பெற்றோர் உங்களை முழுமையாக நம்பி இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பற்றி எத்தனையோ கனவுகளை வளர்த்து கொண்டிருக்கூடும். அவை அனைத்தையுமே நனவாக்க மன உறுதியையும் கல்லூரியிலிருந்து நீங்கள் பெற்று கொள்கிறீர்கள்.

    கல்லூரிக்கு அனுப்பி உங்களை படிக்க வைப்பதற்காக உங்கள் பெற்றோர் எத்தகைய தியாகங்களை செய்து வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து பாருங்கள். வீணாக பொழுது போக்காதீர்கள். உங்கள் வாழ்வில் நெருக்கடியான பருவம் இது என்பதை உணர்ந்திருங்கள். உள்ளத்தில் உறுதியான தீர்மானமும், விழிப்புணர்வும் கொண்டு தொடர்ந்து வாழ்வில் முதிர்ச்சி பெற்றவர்களாக உருமாறுங்கள்.

    கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி அலைய வேண்டியது இருக்கும். எனவே முடிந்த அளவுக்கு அறிவு கூர்மை உடையவர்களாக உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை உருவாக்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை தொடர்ந்து உங்கள் உள்ளத்தில் கொண்டிருங்கள்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு பூண்டி மாதா பேராலயத்தில் உள்ள அவரது கல்லறை முன்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    பூண்டி மாதா பேராலயத்தில் 1955-ம் ஆண்டு முதல் 1972 ஆண்டு வரை பங்கு தந்தையாக பணியாற்றியவர் லூர்து சேவியர் அடிகளார். பூண்டி மாதாவின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டு இருந்த லூர்து சேவியர் அடிகளார் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    லூர்து சேவியர் உடல் பூண்டி மாதா பேராலயத்தின் உள்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு பேராலயத்திற்கு வரும் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. பல்வேறு அற்புதங்கள் செய்ததால் லூர்து சேவியர் அடிகளார் புனிதர் பட்டம் பெறும் நிலை உள்ளது.

    அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு பூண்டி மாதா பேராலயத்தில் உள்ள அவரது கல்லறை முன்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் மற்றும் பொருளாளர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குத்தந்தை யர்கள் ஜான்சன், இனிகோ, ஆன்மிக தந்தை அருளாநந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கிறிஸ்துவர்கள் கடைப்பிடிக்கின்றனர். அவர் 3-வது நாள் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.

    அதன்படி இந்த ஆண்டு கடந்த மார்ச் 2-ந் தேதி தவக்காலம் தொடங்கியது. இதனை முன்னிட்டு உலகம் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மார்ச் 2-ந் தேதி சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது. நெற்றியில் சாம்பல்பூசி கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடர்ந்தனர்.

    அன்றில் இருந்து தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கடந்த 10-ந் தேதி குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று வழிப்பட்டனர்.

    இதையடுத்து கடந்த 14-ந் தேதி புனித வியாழன், 15-ந் தேதி புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது. தவக்காலத்தின் இறுதி நாளாகவும், இயேசு சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்ததையும் குறிக்கும் வகையில் இன்று ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது.

    இதனை முன்னிட்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இயேசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

    இதையடுத்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கத்தில் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகள் தொடங்கின.

    தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ‘‘பாஸ்கா ஒளி’ ’ஏற்றப்பட்டது. கலையரங்க வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் இருதயராஜ் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார்.

    இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனை செய்தனர்.

    இரவு 12 மணிஅளவில் வாணவேடிக்கை, மின் னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இதேப்போல் புகழ்பெற்ற தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்திலும் நள்ளிரவில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பலியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது தொற்று குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஈஸ்டர் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
    ‘ஒருவன் தன் சிநேகிதருக்காக கொடுக்கப்படும் ஜீவனைக் காட்டிலும் பெரிய அன்பு வேறொன்றுமில்லை’. இதன் மூலம் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் அவர் வைத்த அன்பு சிலுவையில் வெளிப்பட்டது.
    இறைமகன் இயேசு மனிதனாக பிறந்து, சிலுவையிலே அறையப்பட்டு மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் பண்டிகையே ஈஸ்டர். ஒரேயொரு தரம் மனிதனாக பிறப்பதும், பின்னர் இறப்பதும் பூமியில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று, அதற்கு பிறகு நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.

    இதற்கு நிழலாகத்தான் இறைமகன் இயேசு இவ்வுலகில் மனிதனாக பிறந்து, குற்றமில்லாத பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். வேத வாக்கியங்கள், தீர்க்க தரிசனங்கள் மூலம் மனிதர்களுக்கு நித்திய வாழ்வை அளிக்கும்படியாக சிலுவையிலே பல சித்திரவதைகளை அனுபவித்து, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு, மூன்றாம் நாளிலே சர்வ வல்லமையுடன் உயிர்த்தெழுந்தார். இதன் மூலம் இறப்புக்குப் பின் உள்ள நித்திய வாழ்க்கையை மனிதர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

    இயேசு சிலுவையில் அறையப்பட்ட கி.பி 33-ம் ஆண்டில் இருந்து உயிர்த்தெழுந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் கி.பி.325-ல் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட கான்ஸ்டான்டைன் மன்னர் காலத்தில் இருந்து தான் ஈஸ்டர் பண்டிகை பிரபலம் ஆனது. ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காகவே அப்போது தனிச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

    ‘ஈஸ்டர்’ என்ற வார்த்தைக்கு ‘வசந்த காலம்’ என்ற அர்த்தம் உண்டு. ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய அதிசய பூ ‘ஈஸ்டர் லில்லி’. இந்தப்பூ இயேசு உயிர்த்தெழுந்த காலத்தில் அதிகமாக பூப்பதால் உயிர்த்தெழுந்த திருநாளிற்கு ‘ஈஸ்டர்’ எனப்பெயர் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மற்றும் இது இஸ்ரவேல் மக்களின் ‘பாஸ்கா’ என்னும் ‘கடந்து போதல்’ பண்டிகையை நினைவு படுத்துகிறது.

    இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது அனைவரிடத்திலும் அன்புள்ளவராகவும், நன்மை செய்கிறவராகவும் வாழ்ந்தார். சிலுவையிலே தன்னை அடித்து துன்புறுத்தி யவர்களையும், தனக்கு தண்டனை அளித்தவர்களையும், மனப்பூர்வமாக மன்னித்தார். அவர்களிடத்திலும் அன்பு செலுத்தினார்.

    இவ்வாறு, மன்னித்து அன்பு செலுத்தும் இறை குணம் மனிதனுக்கும் வர வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். அதே போன்று இயேசு மனிதர்கள் மீதுள்ள பேரன்பால் தான் முழு மனுக்குலமும் நிலையான நித்திய வாழ்வை பெறும் பொருட்டு சிலுவையிலே தன்னுடைய உயிரையே கொடுத்தார்.

    ‘ஒருவன் தன் சிநேகிதருக்காக கொடுக்கப்படும் ஜீவனைக் காட்டிலும் பெரிய அன்பு வேறொன்றுமில்லை’. இதன் மூலம் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் அவர் வைத்த அன்பு சிலுவையில் வெளிப்பட்டது.

    ‘நாமும் இன்று சக மனிதர்களிடத்தில் எந்த ஏற்ற தாழ்வுகளும், எதிர்பார்ப்புகளும் இன்றி அன்பு செலுத்துகின்றோமா?’ என்பதை ஒவ்வொருவரும் இந்த உயிர்த்தெழுந்த நாளில் நினைத்துப்பார்க்க வேண்டும். சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துபவராக, பிறருக்கு உதவும் குணமுள்ளவராக, பிறருடைய குற்றங்களை மன்னிப்பவராக வாழ்ந்து, இயேசுவின் அன்பை பிரதிபலிப்பவர்களாக மாறி, இந்த உயிர்த்தெழுந்த நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து கொண்டாடுவோம்.

    நெல்லை மானேக்சா.
    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி எளிய முறையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது குறிப்பிடத்தக்கது.
    உலக மக்களின் பாவங்களுக்காக 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த ஏசுவின் பாடுகளை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். ஏசு சிலுவையில்  உயிர் விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. ஏசு உயிர்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில்  கடந்த மாதம்  (மார்ச்)  2-ந் தேதி  தவக்காலம் தொடங்கியது. கடந்த 10-ந்தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.  அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும்  நிகழ்ச்சி நடந்தது.

    வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் நேற்று மாலை புனித வெள்ளி சிறப்பு திருப்பலி  பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில்  நடைபெற்றது. இதை தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    இதையடுத்து  பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குதந்தை, உதவி பங்குத்தந்தையர்கள் கலையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த  சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சொரூபத்தை முத்தமிட்டனர். இதையடுத்து சிறிய அளவிலான ஏசு சொரூபத்தை பவனியாக எடுத்து சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் ஏசு சொரூபத்தை முத்தமிட்டனர்.

    பின்னர் கலையரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான ஏசு சொரூபத்தை  சிலுவையில் இருந்து இறக்கி பவனியாக கீழ்கோவிலுக்கு எடுத்து சென்றனர். இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் , பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி  எளிய முறையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது குறிப்பிடத்தக்கது.
    ஏசு சிலுவையில் அறையப்பட்ட இந்த நாளை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் துயரத்துடன் அணுசரித்தனர். நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    சென்னையில் புனித வெள்ளி வழிபாடு எழுச்சியுடன் நடைபெற்றது. கொரோனா தொற்று பாதிப்பால் 2 வருடத்திற்கு பிறகு ஆலயங்களில் வழிபாடு நடந்ததால் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    புனித வெள்ளி ஆராதனை ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் வெவ்வேறான நேரங்களில் தொடங்கி நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபைகளில் பிற்பகல் 3 மணிக்கு பிறகு சிறப்பு வழிபாடு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    சாந்தோம், பாரிமுனை அந்தோணியார், பெரம்பூர் லூர்து, பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி, பரங்கிமலை தோமையார், எழும்பூர் திரு இருதய திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு கத்தோலிக்க திருச்சபைகளில் சிலுவையை சுமந்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள்.

    திரளான மக்கள் கண்ணீருடன் பின் தொடர்ந்து செல்வர். பின்னர் திருப்பலி நடைபெறும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியில் கூறிய வார்த்தைகள் குறித்து தியானிக்கப்படும். கடைசியாக சிலுவையை முத்தமிட்ட செல்வார்கள். இந்த நிகழ்வு அனைத்து கத்தோலிக்க ஆலயங்களில் நடக்கிறது.

    தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தில் உள்ள ஆலயங்களில் காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்கி நடந்தது.

    மும்மணி தியானம் என்று இதனை அழைப்பதால் 3 மணி நேரம் ஏசு சிலுவையில் கூறிய 7 வார்த்தைகள் குறித்து தியானித்தனர்.

    “பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” இன்றைக்கு நீ என்னுடனே பரதேசலிருப்பாய், ஸ்திரியே அதோ உன் மகள்-அதோ உன் தாய்...

    “ஏலி ஏலிலாமா ஜெபக்தானி” “தாகமாக இருக்கிறேன்...”, “முடிந்தது”, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்...” ஆகிய வார்த்தைகள் குறித்து தியானம் செய்தனர்.

    சென்னை சி.எஸ்.ஐ. பேராயர் ஜார்ஜ் ஸ்டீன் தலைமையின் கீழ் அனைத்து ஆலயங்களிலும் புனித வெள்ளி ஆராதனை நடந்தது.

    கதீட்ரல் பேராலயம், பிராட்வே, சூளை, வேப்பேரி, எழும்பூர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், சேலையூர், மயிலாப்பூர் உள்ளிட்ட சி.எஸ்.ஐ. ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது. இவ்வாராதனையில் வெள்ளை நிற உடை அணிந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    இதே போல லூத்தரன், மெத்தடிஸ்ட், இ.சி.ஐ. பெந்தே கோஸ்து உள்ளிட்ட பிற கிறிஸ்தவ அமைப்பு ஆலயங்களில் காலையில் வழிபாடு தொடங்கி மதியம் முடிந்தது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட இந்த நாளை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் துயரத்துடன் அணுசரித்தனர். நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவு முதல் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி விடும். சி.எஸ்.ஐ. உள்ளிட்ட பிற கிறிஸ்தவ திருச்சபைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆராதனை நடைபெறும்.
    உயிரை விடுவதற்கு முன்பாக சிலுவையில் ரத்தம் சிந்தியவாறு அவர் கூறும் வார்த்தைகள் பற்றி இன்று சிறப்பு வழிபாடாக நடைபெறுவது வழக்கம்.
    இயேசு 40 நாட்கள் வனாந்தரத்தில் உபவாசம் இருந்து ஜெபித்த நாட்களைதான் தபசு காலம், வசந்தகாலம் என்று திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது.

    இயேசு தனது சீடர்களுடன் இந்த நாளில் இரவு விருந்து அருந்துவார். இதுவே அவரது கடைசி இரவு உணவாகும். சிலுவையில் அடித்து கொல்லப்படுவதற்கு முந்தைய நாளான இன்று 12 சீடர்களின் கால்களை கழுவுவார். நான் கழுவுவது போல ஏழைகளின் கால்களை கழுவ வேண்டும் என்று கூறினார். அந்த நாளை நினைவு கூறும் வகையில் பெரிய வியாழன் நேற்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    இந்த ஆராதனையில் கிறிஸ்தவர்கள் மிகுந்த பய பக்தியுடன் இவ்வாராதனையில் பங்கேற்று சாக்கிரமந்தை (அப்பம், திராட்சை ரசம்) பெற்றார்கள்.

    இதனைத் தொடர்ந்து இன்று பெரிய வெள்ளி எனப்படும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. ஏசுவை கொல்கொதா மலைக்கு இழுத்து சென்று அங்கு சிலுவையில் அவரை ஆணிகளால் அடித்தும், தலையில் முள் கிரீடம் சூட்டியும் பிதாவின் சித்தத்தின்படி உயிரை மாய்க்கும் முன் 7 வார்த்தைகளை சிலுவையில் ஏசு கூறுவார். அந்த 7 வார்த்தைகள் பற்றி ஆலயங்களில் போதனை நடைபெறும்.

    உயிரை விடுவதற்கு முன்பாக சிலுவையில் ரத்தம் சிந்தியவாறு அவர் கூறும் வார்த்தைகள் பற்றி இன்று சிறப்பு வழிபாடாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆராதனை 3 மணி நேரம் தியாணிக்க கூடிய வகையில் நடைபெறுவதால் இதற்கு மும்மணி தியான ஆராதனை என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள்.

    கத்தோலிக்க திருச்சபைகளிலும், தென்னிந்திய திருச்சபைகளிலும், லுத்தரன், மெத்தடிஸ்ட், பெந்தே கோஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரிவு கிறிஸ்தவ அமைப்புகளிலும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

    அந்த நாளில் உபவாசம் இருந்து வழிபாடுகளில் பலர் பங்கேற்பார்கள். அதனை தொடர்ந்து பெரிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
    17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.
    ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் என்றார். இந்த நாளே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெரிய வியாழனையொட்டி நேற்று வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து சீடர்கள் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பங்குத்தந்தை அற்புதராஜ், சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். முன்னதாக பாதிரியார்கள் பவனி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இன்று(வெள்ளிக்கிழமை) பேராலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப்பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்டவை நடக்கிறது.

    17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.
    எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மரித்த ஏசுவின் சிலையை வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொதுமக்கள் பார்க்கலாம்.
    சென்னை எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு மரித்த இயேசுவின் சொரூபம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து திருத்தல அதிபர் மற்றும் பங்குத் தந்தை பாதிரியார் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    174 ஆண்டு பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தின் அருளை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களும் பெற்று செல்கிறார்கள். இங்கு இயேசுவின் 5 காயங்களை கொண்ட பாடுபட்ட சொரூபம் ஒன்று உள்ளது.

    இந்த சொரூபம் 1932-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு 1935-ம் ஆண்டு முதல் இங்கு சிறப்பு பிரார்த்தனைகளும், ஜெபங்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் ஏறெடுக்கப்படுகிறது.

    கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக வழிபாடுகள் முழுமையாக நடத்த முடியவில்லை. புனித வெள்ளிக்கிழமை அன்று இந்த திருத்தலத்தில் மரித்த இயேசு உடலை சந்திப்பதும், வழிபடுவதும், பொருத்தனைகள் செய்து வேண்டிக்கொள்வதும் வழக்கமாக நடைபெறும்.

    2 வருடத்துக்கு பிறகு இந்த ஆண்டு இந்த வழிபாடனது புனித வியாழன் நள்ளிரவு 12 மணி முதல் புனித வெள்ளி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

    ஆலய வளாகத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதில் மரித்த இயேசுவின் சொரூபம் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்காக வைக்கப்படும். சுமார் 1 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    சிகப்பு நிற போர்வையை பொதுமக்கள் சொரூபத்தின் மீது போட்டு வணங்குவதும், மரிக்கொழுந்து, வெட்டி வேர் போன்றவற்றை காணிக்கையாக கொண்டு வந்து படைப்பதும் வழக்கமான நடைமுறையாகும். பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் சென்று வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 400 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு-பகலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களுக்கு உணவு, பழச்சாறு, தண்ணீர், மோர் போன்றவை வழங்கப்படும்.

    எனவே கொரோனாவுக்கு முந்தைய காலம் போல வழிபாட்டுக்கு அனைவரையும் வருமாறு அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாக தந்தை பிரேம், பிலிப் இருதயராஜ் உடன் இருந்தனர்.

    இதையும் படிக்கலாம்...ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்று இருப்பதும், வங்க கடலோரம் அமைந்து இருப்பதும் வேளாங்கண்ணி பேராலயத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

    .ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

    தவக்காலம் தொடங்கும் நாள் ‘சாம்பல் புதன்' ஆகும். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். வருகிற 17- ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி வேளாங்கண்ணிக்கு மாதா பேராலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    கர்த்தர் உங்கள் பிதாவாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கலாம். கைரேகைப்படியோ அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ ஒன்றும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை.
    “வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக் குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக் குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்” (ஏசாயா 45:11).

    வரும் காலம் எப்படி இருக்குமோ? என் குடும்பம் எப்படி செல்லுமோ? என் பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வரும்காலம் ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது.

    வேதம் சொல்லுகிறது “அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்’’ (தானி. 2:22).

    கர்த்தர் உங்கள் பிதாவாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கலாம். கைரேகைப்படியோ அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ ஒன்றும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை.

    பாபிலோன் ராஜாவுக்கு முன்பு தானியேல் சொன்னார்: “தேவன் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத்தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்’’ (தானி. 2:21).

    அந்த அருமை ஆண்டவர் உங்களைப் பார்த்து, நீங்கள் எனக்கு கட்டளையிடுங்கள் என்று சொல்லுகிறார். சற்று சிந்தித்துப் பாருங்கள். அண்டசராசரங்களையும் ஜீவராசிகளையும் படைத்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் இயங்க வைத்திருக்கும் ஆண்டவருக்கு நீங்கள் எப்படி கட்டளையிடுவது. அது தான் நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்ற உரிமை. அவர் உங்களுக்கு பிதா என்கிற பாசம். உங்களுக்கும், ஆண்டவருக்கும் இடையிலுள்ள ஐக்கியமே அந்த சிலாக்கியத்தை ஏற்படுத்துகிறது.

    கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, அவருடைய குடும்பத்தில் வந்து சேரும்போது கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறவராக இருக்கிறார்.

    கர்த்தருக்கு நீங்கள் கட்டளையிடும்படிதான் அவர் உங்களுக்கு அதிகாரங்களையும் ஆளுகையையும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். நோய்களுக்கு நீங்கள் கட்டளையிடும் போது அவைகள் நீங்குகிறது. அசுத்த ஆவிகளுக்கு கட்டளையிடும் போது அவைகள் ஓடி மறைகிறது. பொல்லாத மனுஷருக்கு கட்டளையிடும் போது அவர்கள் மறைந்து போகிறார்கள். திமிர்வாதக்காரனை நோக்கி நீ உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னால் அவன் நடந்து போவான்.

    பிரியமானவர்களே, ஆண்டவர் உங்களுக்குப் பாராட்டின அவருடைய கிருபைகளை எல்லாம் எண்ணிப்பாருங்கள். அவருடைய குடும்பத்தில் என்றென்றும் நிலைத்திருப்பீர்களாக. நீங்கள் அவரிடத்தில் ஜெபிப்பதும், அவர் உங்களுக்குப் பதிலளிப்பதும், உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை எல்லாம் அவர் உங்களுக்கு நிறைவேற்றித் தருவதும் எத்தனை பாக்கியமான காரியம்!

    “நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்’’ (1 சாமு.12:24).

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்று இருப்பதும், வங்க கடலோரம் அமைந்து இருப்பதும் வேளாங்கண்ணி பேராலயத்தின் சிறப்பு அம்சங்களாகும். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி முதல் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டது.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது. தவக்காலம் தொடங்கும் நாள் ‘சாம்பல் புதன்' ஆகும். தவக்காலத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிளில் பேரணியாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வாழ்த்து பாடல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த குருத்தோலை பவனியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    அப்போது அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர். இந்த பவனி பேராலயத்தின் பின் பகுதியில் நிறைவடைந்தது. குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நாள் முழுவதும் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது.

    இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நாகை ஊசி மாதா கோவில் எனப்படும் லூர்து மாதா பேராலயம், மாதரசி மாதா பேராலயம், காடம்பாடி புனித சவேரியார் கோவில் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த பவனியில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, கீர்த்தனைகள் பாடியவாறு பவனி வந்தனர்.
    ×