search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
    X
    கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

    சென்னையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட இந்த நாளை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் துயரத்துடன் அணுசரித்தனர். நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    சென்னையில் புனித வெள்ளி வழிபாடு எழுச்சியுடன் நடைபெற்றது. கொரோனா தொற்று பாதிப்பால் 2 வருடத்திற்கு பிறகு ஆலயங்களில் வழிபாடு நடந்ததால் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    புனித வெள்ளி ஆராதனை ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் வெவ்வேறான நேரங்களில் தொடங்கி நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபைகளில் பிற்பகல் 3 மணிக்கு பிறகு சிறப்பு வழிபாடு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    சாந்தோம், பாரிமுனை அந்தோணியார், பெரம்பூர் லூர்து, பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி, பரங்கிமலை தோமையார், எழும்பூர் திரு இருதய திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு கத்தோலிக்க திருச்சபைகளில் சிலுவையை சுமந்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள்.

    திரளான மக்கள் கண்ணீருடன் பின் தொடர்ந்து செல்வர். பின்னர் திருப்பலி நடைபெறும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியில் கூறிய வார்த்தைகள் குறித்து தியானிக்கப்படும். கடைசியாக சிலுவையை முத்தமிட்ட செல்வார்கள். இந்த நிகழ்வு அனைத்து கத்தோலிக்க ஆலயங்களில் நடக்கிறது.

    தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தில் உள்ள ஆலயங்களில் காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்கி நடந்தது.

    மும்மணி தியானம் என்று இதனை அழைப்பதால் 3 மணி நேரம் ஏசு சிலுவையில் கூறிய 7 வார்த்தைகள் குறித்து தியானித்தனர்.

    “பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” இன்றைக்கு நீ என்னுடனே பரதேசலிருப்பாய், ஸ்திரியே அதோ உன் மகள்-அதோ உன் தாய்...

    “ஏலி ஏலிலாமா ஜெபக்தானி” “தாகமாக இருக்கிறேன்...”, “முடிந்தது”, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்...” ஆகிய வார்த்தைகள் குறித்து தியானம் செய்தனர்.

    சென்னை சி.எஸ்.ஐ. பேராயர் ஜார்ஜ் ஸ்டீன் தலைமையின் கீழ் அனைத்து ஆலயங்களிலும் புனித வெள்ளி ஆராதனை நடந்தது.

    கதீட்ரல் பேராலயம், பிராட்வே, சூளை, வேப்பேரி, எழும்பூர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், சேலையூர், மயிலாப்பூர் உள்ளிட்ட சி.எஸ்.ஐ. ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது. இவ்வாராதனையில் வெள்ளை நிற உடை அணிந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    இதே போல லூத்தரன், மெத்தடிஸ்ட், இ.சி.ஐ. பெந்தே கோஸ்து உள்ளிட்ட பிற கிறிஸ்தவ அமைப்பு ஆலயங்களில் காலையில் வழிபாடு தொடங்கி மதியம் முடிந்தது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட இந்த நாளை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் துயரத்துடன் அணுசரித்தனர். நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவு முதல் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி விடும். சி.எஸ்.ஐ. உள்ளிட்ட பிற கிறிஸ்தவ திருச்சபைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆராதனை நடைபெறும்.
    Next Story
    ×