என் மலர்
கிறித்தவம்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 18-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி நடந்தது. மாலை 5.30 மணிக்கு திருக்கொடி பவனியும், ஜெபமாலையும் நடந்தது. 6 மணிக்கு கொடியேற்றமும், பின்னர் திருப்பலியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு மறை மாவட்ட செயலாளர் பெலிக்ஸ் தலைமை தாங்கினார். சரல் பங்குத் தந்தை உபால்டு மறையுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பங்குத்தந்தை நசேரன், பங்கு பேரவை துணைத்தலைவர் லியோன், செயலாளர் சேவியர் அமலதாஸ், பொருளாளர் மரிய ஜாண் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் ‘அலங்கார அன்னையே‘ என்ற தலைப்பில் குறுந்தகடு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தூய உபகார மாதா சொரூபம் அறிமுகம் நடந்தது.
17-ந் தேதி இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவான 18-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர்் திருப்பலி நடக்கிறது.

துறையூர் அருகே புனித சவேரியார் ஆலய பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர்பாளையம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலய பெருவிழா 9 நாட்களாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு குடந்தை மறைமாவட்ட ஆயர்அந்தோணிசாமி ஆலயத்தை புனிதப்படுத்தி, ஆலய வளாகத்திலுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பெரு விழாவினை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் ஆயர் தலைமையில் கூட்டுபாடல் திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி மறையுரையினை பங்குத்தந்தையர்கள் புள்ளம்பாடி ஹென்றிபுஷ்பராஜ், கல்கத்தா உயர் மறைமாவட்டம் எ.சேசுராஜ், கொன்னைக்குடி ஜெயராஜ், குடந்தை ஜெயா, மேலவாளாடி ஏனோக்ராஜன், ஜெயங்கொண்டம் கோஸ்மான் ஆரோக்கியராஜ், பெரம்பலூர் சமூக சேவை சங்க இயக்குனர் டி.திவ்யநாதன் ஆகியோர் நடத்தினார்கள். 8-வது நாள் மாலை 6.30 மணிக்கு திருப்பலி மறையுரையினை தாத்தையங்கார்பேட்டை பங்குத்தந்தை செபஸ்தியான் நடத்தினார்.
அன்று இரவு 9 மணிக்கு மலர்அலங்காரம், மின்விளக்கு அலங்காரத்துடன் வாணவேடிக்கை இன்னிசை கச்சேரியுடன் தேர் பவனி நடைபெற்றது. 9-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 8.30 மணிஅளவில் பெருவிழா கூட்டு பாடற்திருப்பலியினை பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு அடைக்கலசாமி நடத்தி மறையுரை வழங்கினார்.
அன்று மாலை 4 மணிக்கு தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ப.ஆரோக்கியராஜா, கிராம நிர்வாகக்குழுவினர், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

கோவை பெரியகடை வீதியில் தூய மிக்கேல் அதிதூதர் புதிய ஆலய அபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) பேராயர்கள் தலைமையில் நடக்கிறது.
கோவை பெரியகடை வீதியில் கடந்த 1867-ம் ஆண்டில் கட்டப்பட்ட (149 ஆண்டுகள் பழமையான) தூய மிக்கேல் அதிதூதர் பேராலயம் இருந்தது. கோவை கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்ட பேராலயமான இந்த ஆலயம் மிகவும் பழமையானதால் அதை புதுப்பித்து, புதுமையாக வடிவமைத்து கட்டும் பணி கடந்த 3½ ஆண்டுகளாக நடைபெற்றது.
புதிய ஆலயம் ரோம்நகரில் உள்ள புனிதபீட்டர் தேவாலய தோற்றத்தில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆலயப்பணிகள் முழுமையாக முடிவடைந்து, அழகிய முகப்பு வாயிலுடன் அனைவரையும் வரவேற்கிறது. இந்த புதிய ஆலயத்தின் அபிஷேக விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடந்து வந்தது. இந்த ஆலய அபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பவனி, 5 மணிக்கு பேராலய முகப்பு வாயில் வளைவு மற்றும் கொடிக்கம்பம் புனிதப்படுத்துதல் ஆகிய நிகழ்ச்சிக்கு பிறகு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மறைமாவட்ட பேராயர் பிரகாஷ் மல்லவரம்பு கொடியேற்றி வைக்கிறார். மாலை 5.30 மணிக்கு புதிய பேராலயம் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி, பாண்டிச்சேரி -கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி அனந்தராயர் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் முன்னிலை வகிக் கிறார். நிகழ்ச்சியில் ஊட்டி மறை மாவட்ட ஆயர் பால்ராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ், கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெனிஜியஸ் உள்ளிட்ட பல்வேறு மறை மாவட்ட ஆயர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை மறை மாவட்ட ஆயர் தலைமையில் புதுநன்மை, உறுதி பூசுதல் ஆகிய அருட்சாதனங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஜெப வழிபாடு, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடக்கிறது.மாலை 6 மணிக்கு பேராலய மகிமை என்ற தலைப்பில் சமய, சமூக, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு விழா நடக்கிறது. விழாவில் பேராலய அபிஷேக விழா சிறப்பு அஞ்சலுறை, தபால் தலை, பேராலய அபிஷேக விழா நினைவுமலர் வெளிடப்படுகிறது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
11-ந் தேதி காலை 8 மணிக்கு ஆயர் தலைமையில் ஆடம்பர கூட்டு பாடற்திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஆடம்பர ஆட்டுப்பாடற்பலி, மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. பின்னர் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெறும்.
18-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 10 மணிக்கு சிறப்பு திருப்பலி, கொடியிறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது. முன்னதாக புதிய ஆலய அபிஷேக விழாவில் கோவைமறை மாவட்டத்தில் உள்ள ஆலய குருக்கள், பங்குமக்கள், கன்னியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவர்களும், பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். விழாவில் கலந்து கொள்ளும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 5.30 மணிக்கு திருக்கொடி பவனியும், ஜெபமாலையும் நடக்கிறது. 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மறை மாவட்ட செயலாளர் அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்குகிறார். சரல் பங்கு தந்தை அருட்பணியாளர் உபால்டு மறையுரை ஆற்றுகிறார். பின்னர் அலங்கார அன்னையே என்ற தலைப்பில் குறுந்தகடு வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து தூய உபகார மாதா சொரூபம் அறிமுகம் நடக்கிறது.
10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் அதிகாலை பழைய கோவிலில் திருப்பலியும், அதன்பிறகு காலை திருப்பலி, நற்கருணை ஆராதனை, மாலை செபமாலையும், திருப்பலியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
15-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலையும் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு தாழையங்கோணம் பங்குதந்தை சூசை தலைமை தாங்குகிறார். அசிசி பங்குதந்தை ரொனால்டுரெக்ஸ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு திருசப்பர பவனி நடக்கிறது.
16-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலையும் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆலஞ்சி வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜேசுதாசன் தலைமை தாங்குகிறார். கோட்டாறு வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல்ஏஞ்சல் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு திருசப்பர பவனி நடக்கிறது.
17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மேலமணக்குடி இணை பங்குதந்தை ஜாண்பெனிட்டோ தலைமை தாங்குகிறார். மாலை 6.30 மணிக்கு செபமாலையும் மாலை ஆராதனையும்் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மதுரை உயர்் மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர்பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். அமராவதிவிளை பங்குத் தந்தை ஜோசப்ரொமால்டு மறையுரை ஆற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும் 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவான 18-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர்் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர்ரெம்ஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெரோமியஸ் தலைமை தாங்குகிறார், ஆற்றுப்படுத்துதல் பணிக்குழு இயக்குனர் நெல்சன் மறையுரை ஆற்றுகிறார். 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு அருட்பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

கி.பி. 1542 முதல் கி.பி. 1552 வரையுள்ள காலகட்டத்தில் புனித சவேரியார் கோட்டாரில் மறைபணியாற்றினார். அப்போது அவர் கோட்டாரில் தூய ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பினார்.
கி.பி. 1542 முதல் கி.பி. 1552 வரையுள்ள காலகட்டத்தில் புனித சவேரியார் கோட்டாரில் மறைபணியாற்றினார். அப்போது அவர் கோட்டாரில் தூய ஆரோபண மாதா ஆலயம் ஒன்றை எழுப்பினார். அந்த ஆலயத்தில் அவர் தனது புனிதம் மிக்க கரங்களால் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.
கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் ஒரு பகுதியில் தூய ஆரோபண மாதா ஆலயம் இன்றும் இருக்கிறது. மக்கள் அந்த ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தின் முன் அமர்ந்து வேண்டுதல் செய்தும், வணக்கம் செலுத்தியும் வருகிறார்கள். புனித சவேரியார் இந்தியாவுக்கு வந்ததின் 450-வது ஆண்டு நினைவாக அவர் கட்டியெழுப்பிய தூய ஆரோபண அன்னை ஆலயத்தில் முழுநேர நற்கருணை ஆராதனை 1-5-1994 அன்று தொடங்கப்பட்டது.
புனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற பேராலயம் :
கோட்டார் புனித சவேரியார் பேராலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. 1605-ம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று மக்களால் போற்றப்படும் புனித சவேரியாரின் வாழ்க்கைப் பயணம் திசைமாற காரணமாக இருந்தவர் புனித இஞ்ஞாசியார்.
எனவே புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தங்கமுலாம் பூசப்பட்ட பீடப்பகுதி :
கி.பி. 1865-ம் ஆண்டில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் ஆலயம் சிலுவை அடையாளத் தோற்றத்தைப் பெற்றது. கி.பி. 1876-ம் ஆண்டில் ஆலய பீடம் அழகிய மரத்தால் வடிவமைக்கப் பட்டது. மரத்தால் செய்யப்பட்ட புனித சவேரியார் சொரூபம் கோவாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.
கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து 30-5-1930-ல் கோட்டார் தனி மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது கோட்டார் ஆலயம் மறைமாவட்ட பேராலயமாக உயர்த்தப்பட்டது. புனித சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்ததின் 400-வது ஆண்டு நினைவாக கி.பி.1956-ல் கோபுரம் கட்டப்பட்டு அதன்மேல் புனித சவேரியாரின் சொரூபம் நிறுவப்பட்டது. 29-10-2009 அன்று கோவில் முன் வெண்கலத்தால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது. ஆலய திருப்பீடம் 29-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் மரத்தாலான பீடப்பகுதி தங்கமுலாம் பூசப்பட்டதாகும்.
தூய லூர்து அன்னை கெபி :
புனித சவேரியார் பேராலயம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டபோது தூய ஆரோபண அன்னை ஆலயம் பேராலயத்தோடு இணைக்கப்பட்டது. பேராலய வடக்குப்பகுதியில் தூய லூர்து அன்னை கெபி அழகுற கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் 2-வது சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு லூர்து அன்னை கெபியின் முன் செபமாலை, சிறப்பு நற்கருணை ஆசீர் வழிபாடு நடைபெறுகிறது.
8-9-2014 அன்று புதுப்பிக்கப்பட்ட தூய லூர்து அன்னை கெபி மந்திரிக்கப்பட்டது.
திருவிழா தேர்ப்பவனியில் 4 தேர்கள் :
கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடையும். இதில் 10-வது நாள் திருவிழா அன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 8-ம் நாள் திருவிழா அன்றும், 9 மற்றும் 10-ம் நாள் திருவிழா அன்றும் தேர்ப்பவனி நடைபெறும்.
8-ம் நாள் திருவிழா அன்று காவல் தூதர் தேர், புனித செபஸ்தியார் தேர், புனித சவேரியார் தேர் ஆகிய 3 தேர்கள் மட்டும் செல்லும். 9-ம் நாள் திருவிழா மற்றும் 10-ம் நாள் திருவிழா நாட்களில் காவல் தூதர் தேர், புனித செபஸ்தியார் தேர், புனித சவேரியார் தேர், தூய மாதா தேர் ஆகிய 4 தேர்கள் இடம்பெறும். இந்த தேர்ப்பவனியின்போது பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தும், தரையில் உருண்டு வேண்டுதல் செய்து நேர்ச்சை நிறைவேற்றுவது இத்திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
அழியாத உடல் :
அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை சவேரியார்பாளையத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
கோவை சவேரியார்பாளையத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த ஆலயத்துக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் திருப்பூர், நீலகிரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த ஆலய தேர்த்திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி, தியான மறையுரை, நற்கருணை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளான அளவில் கலந்துகொண்டனர். இறந்தோர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும, பங்கு மக்கள் மற்றும் குடும்பங்கள், மறை பணியாளர்களுக்காக பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. தேர்பவனியை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தொடங்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சவேரியாரின் சொரூபம் வைக்கப்பட்டு கல்லறை வீதி, மாதாகோவில் வீதி, தேர்வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வீதியெங்கும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் திரண்டு நின்று புனித சவேரியாரை தரிசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குகுரு ஜெகன்ஆண்டனி, உதவி பங்கு குரு ரோச் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் திருவிழாவில் பக்தர்கள் குவிந்தனர்.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாள் பெருவிழா, நவம்பர் மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பெருவிழா நடைபெற்றது. பெருவிழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் திருப்பலிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாள் விழாவையும் ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினார்கள்.
விழாவில் 3 நாட்கள் தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி 8-ம் நாள் மற்றும் 9-ம் நாள் விழாவன்று இரவில் தேர்ப்பவனி நடந்தது. 10-ம் நாள் விழாவையொட்டி தேர்ப்பவனி நேற்று பகலில் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார். பின்னர் மலையாள திருப்பலி நடந்தது.
அதைத்தொடர்ந்து 11 மணிக்கு தேர்ப்பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பக்தர்கள் வெள்ளத்தில் அணி வகுத்து சென்றன. அப்போது பக்தர்கள் மாலைகளையும், உப்பு-நல்ல மிளகு பாக்கெட்டுகளையும் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டனர். மேலும் பல பக்தர்கள் தேர்களுக்கு பின்னாள் தரையில் விழுந்து எழுந்து கும்பிடு நமஸ்காரம் செய்து சென்றனர். இந்த தேர்கள் ஆலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் பவனி வந்தன.
ஆலய வளாகத்தைவிட்டு தேர்கள் தெருக்களுக்கு சென்றன. அப்போது அந்தந்த தெருக்களில் உள்ளவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் மாலையில் தேர்கள் நிலைக்கு வந்தன. அதைத்தொடர்ந்து தேரில் திருப்பலி நடந்தது.
10-ம் நாள் பெருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம்- குடும்பமாக புனித சவேரியார் பேராலயத்தில் குவிந்தனர்.
மேலும் பேராலயம் அமைந்துள்ள கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடுகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த ரோடுகளிலும், கணேசபுரம் ரோட்டிலும் சவேரியார் பேராலய பெருவிழா பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது. மக்களின் வருகையை கணக்கிட்டு ரோட்டோரங்களில் கடைகள் ஏராளமாக இருந்தன.
விழாவை முன்னிட்டு நேற்றும், நேற்று முன்தினமும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் பேராலயத்துக்கு சென்று வரவும், தேர்ப்பவனியை தரிசிக்கவும் வசதியாக இருந்தது. பேராலய நிர்வாகம் சார்பிலும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர சப்பர பவனி நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, பங்கு தந்தையர்கள் தலைமையில் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர சப்பர பவனி நேற்று நடைபெற்றது.
இதில் சப்பரத்தை பூண்டி பேராலய அதிபர் பாக்கியசாமி புனிதபடுத்தியதும், டால்மியா செயல் இயக்குனர் கிருஷ்ணகுமார் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் சவேரியார், மிக்கேல் சம்மனசு, ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய 3 சப்பரங்கள் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து ஆலயத்தை அடைந்தது.
விழாவில் புள்ளம்பாடி சகாயமாதா ஆலய பங்குத்தந்தை கஸ்பர், டால்மியா சிமெண்டு ஆலை அதிகாரிகள் மேத்யூ, ஆன்சிகுரியன் மற்றும் கல்லக்குடி, மேலரசூர், வடுகர்பேட்டை, முதுவத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இன்று(சனிக்கிழமை) காலை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா திருப்பலியும், உலக அமைதி வேண்டி மாரத்தான் ஓட்ட பந்தயமும், அன்னதானமும், பின்னர் திவ்ய நற்கருணையும் நடைபெற உள்ளது. திரு விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அடைக்கலராஜ், அருட்சகோதரிகள் கிராம பட்டையதார்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

கோட்டார் புனித சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவையொட்டி ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நற்கருணை ஆசீர் நடந்தது. 2-வது நாளாக தேர்ப்பவனியும் நடைபெற்றது.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி மற்றும் ஆடம்பரத்திருப்பலி ஆகியவையும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
8-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு தேர்ப்பவனி நடந்தது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்று இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்கவும், பேண்டு வாத்தியங்கள் இசைக்கவும் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் வலம் வந்தது. முதலில் மிக்கேல் ஆண்டவர், அதையடுத்து செபஸ்தியார், அதன்பிறகு புனித சவேரியார், மாதா சொரூபங்கள் தாங்கிய தேர் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் உப்பு, நல்லமிளகு, மெழுகுவர்த்தி, மலர் மாலைகள் போன்றவற்றை காணிக்கையாக வழங்கி தேர்களில் இருந்த புனிதர்களை வணங்கி வழிபட்டனர். தேர்களுக்கு பின்னால் ஏராளமான சிறுவர்- சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என வரிசையாக நின்று தரையில் விழுந்து, எழுந்து கும்பிடு நமஸ்காரமும், தரையில் உருண்டு வேண்டியும் தங்களது நேர்ச்சையை நிறைவேற்றினர்.
10-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு புனித சவேரியார் பேராலய பெருவிழா திருப்பலி ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 10 மணிக்கு தமிழில் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலியும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி சவேரியார் பேராலயம் வண்ண வண்ண மின்விளக்குகள் மற்றும் சீரியல் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 10-ம் நாள் திருவிழாவான இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி சப்பர பவனி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தின் 249-வது ஆண்டு திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
நேற்று மாலை நவநாள் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. லூர்துராஜ் அடிகளார் திருப்பலியை நடத்தினார். லெரின் டி ரோஸ் மறையுரை வழங்கினார்.
இதை தொடர்ந்து ஆலயம் முன்பிருந்து சவேரியார் திருஉருவப் பவனி நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்ட சப்பரத்தில் சவேரியார் எழுந்தருளி பவனி வந்தார். தெற்கு பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை சப்பர பவனி வந்தடைந்தது.
முடிவில் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை சேவியர், உதவி பங்குத்தந்தைகள் அருள்லூர்து எட்வின், மைக்கேல் ஜார்ஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாதுகாவலரின் பெருவிழா இன்று (சனிக் கிழமை) காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் ஜூடு பால்ராஜ் திருப்பலியை நடத்துகிறார்.
சிறுவர்-சிறுமியருக்கு நற்கருணை வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அல்லித்துறையில் புனித சவேரியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அல்லித்துறையில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழறிஞர் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலியும், பக்தர்களின் வேண்டுதல் சப்பர சுற்றுப்பிரகாரம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவு 8 மணியளவில் மலர்களாலும், மின் அலங்காரத்தாலும் அலங்கரிப்பட்ட தேரில் புனித சவேரியார் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாக பவனி வருகிறார்.
திருவிழாவின் நிறைவு விழாவான 4-ந்தேதி காலை ஆடம்பர கூட்டுப்பாடலும், திருப்பலியும், இரவு நற்கருணை ஆசீருடன், கொடியிறக்கமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் மற்றும் ஆலய விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 8-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று இரவு தேர்ப்பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சையை நிறைவேற்றினர்.
நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி மற்றும் ஆடம்பரத்திருப்பலி ஆகியவையும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
8-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 5.30 மணி, 6.30 மணி, 8 மணி, 9 மணி, 10 மணி, 11.30 மணி ஆகிய நேரங்களில் திருப்பலிகள் நடைபெற்றன. 8 மணி மற்றும் 10 மணி திருப்பலிகளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில் கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை குருசு கார்மல் உள்பட 25 பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி தொடங்கியது. மேளதாளங்கள் முழங்கவும், பேண்டு வாத்தியங்கள் இசைக்கவும் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் முதலில் காவல் சம்மனசானவர், அதையடுத்து செபஸ்தியார், அதன்பிறகு புனித சவேரியார் சொரூபங்கள் தாங்கிய தேர் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் உப்பு, நல்லமிளகு, மெழுகுவர்த்தி, மலர் மாலைகள் போன்றவற்றை காணிக்கையாக வழங்கி தேர்களில் இருந்த புனிதர்களை வணங்கி வழிபட்டனர். தேர்களுக்கு பின்னால் ஏராளமான சிறுவர்- சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என வரிசையாக நின்று தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, எழுந்து கும்பிடு நமஸ்காரமும், தரையில் உருண்டு வேண்டியும் தங்களது நேர்ச்சையை நிறைவேற்றினர்.
இன்று (வெள்ளிக்கிழமை) 9-ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற உள்ளது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது.
10-ம் நாள் திருவிழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு புனித சவேரியார் பேராலய பெருவிழா திருப்பலி ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 10 மணிக்கு தமிழில் திருப்பலியும், 11 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலியும் நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி சவேரியார் பேராலயம் வண்ண வண்ண மின்விளக்குகள் மற்றும் சீரியல் விளக்குளால் ஜொலிக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான நாளை குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.