என் மலர்
கிறித்தவம்
கிறிஸ்துமஸ் ஈவ் என்றவாறு கொண்டாடப்படும் இந்நிகழ்வு உலகெங்கும் கிறிஸ்துவர்களால் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தின் முழுநாள் கொண்டாட்டத்தின் தொடக்கம் எனக்கூட கிறிஸ்துமஸ் ஈவ்-யை குறிப்பிடலாம்.
கிறிஸ்துமஸ் நாளின் முதல் நாள் இரவு கொண்டாட்டம் நிறைந்ததாய் காணப்படும். கிறிஸ்துமஸ் ஈவ் என்றவாறு கொண்டாடப்படும் இந்நிகழ்வு உலகெங்கும் கிறிஸ்துவர்களால் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தின் முழுநாள் கொண்டாட்டத்தின் தொடக்கம் எனக்கூட கிறிஸ்துமஸ் ஈவ்-யை குறிப்பிடலாம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பை இந்த மாலை நேர விருந்தும், கேளிக்கையும் பெற்று விடுகிறது. நாம் செய்யும் அலங்கரிப்பும், தோரணநிகழ்வுகளும், பட்டொளி வீசும் நட்சத்திர அலங்காரமும் கிறிஸ்துமஸ் இரவு விருந்து நிகழ்விற்கு ஏற்றவாறே அமைகிறது.
ஏனெனில் ஏசு கிறிஸ்து பிறந்தது நல்இரவுதான் என்பதால் அவரை வரவேற்கும் விதமாய் மகிழ்ச்சியுடன் தங்களுக்கென பிரத்யோக உணவுகளை பரிமாறி உண்டு, பரிசளித்து மகிழ்கின்றனர். மாலை நேரத்திலும் நல்இரவிலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அப்பிரார்த்தனையில் ஒவ்வொரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் ஒற்றுமையுடன் கலந்து கொள்வர். இந்த கிறிஸ்துமஸ் இரவு என்பது ஜெர்மனில் ஹெலிஜ் தச்சட் என்றும் (ஹோலி நைட்), நச்சேபுனா என்ற (நல்ல இரவு) ஸ்பானிஷ் மொழியில் அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நல்இரவு கொண்டாட்டம் உலகளவில் அந்தந்த சமூக, கலாசாரத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
தேவாலயங்களில் பிரார்த்தனை:
சில தேவாலயங்களில் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு இரவு 7.00 மணிக்கு பிரார்த்தனை கூட்டம் என்றவாறும், சில தேவாலயங்களில் நல் இரவு பிரார்த்தனை கூட்டம் என்றவாறு இருக்கும். இயேசு கிறிஸ்து குடிலில் பிறக்கும் நேரம் வான வேடிக்கையும், தேவாலய மணிகளின் ஒலியும் வானை பிளக்கும். கிறிஸ்துவ குடும்பங்களின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் புத்தாடை அணிந்து இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வர். கிறிஸ்து பிறந்ததின் மகிழ்ச்சியாய் சாண்டாகிளாஸ் அங்கு குழந்தைகளும் பல்வேறு பிரிசுகளை வாரி வழங்குவார். சில சமயம் அவரவர் வீடுகளுக்கே சாண்டாகிளாஸ் வந்து பரிசுகளை வழங்குவார்.
மின்னொளியில் பிரகாசமாய் இல்லங்கள்:
கிறிஸ்துமஸ் நல்இரவு கொண்டாட்டத்தில் பெரும்பாலும் இல்லங்கள் கிறிஸ்துமஸ் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், பூக்கள், நட்சத்திரங்கள் என மின்னொளியில் பிரகாசிக்கும். கண்சிமிட்டும் மின் விளக்கு ஒளியில் கிறிஸ்துமஸ் மர அலங்காரங்கள் அதிக ஜொலிப்புடன், பரிசுகளுடன் காணப்படுவது கிறிஸ்துமஸ் நல் இரவில்தான். சிலர் வீடுகளில் கிறிஸ்து பிறப்பதற்கு ஏற்ற குடில் அமைப்பை அவரவர் வசதிக்கு ஏற்ப அலங்கரித்து வைப்பர். பின் நல் இரவில் குழந்தை இயேசுவை குடிலில் பிறந்த அமைப்பில் வைத்துவிடுவர். நல் இரவு விருந்து கொண்டாட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை அதிகபடியாக இருக்கும்.
நல் இரவு விருந்தின் உணவு பரிமாற்றங்கள்:
உலகெங்கும் பலவிதமான நல் இரவு விருந்து பரிமாற்றங்கள் நடைபெறும். அவரவர் பாரம்பரிய தன்மைக்கு ஏற்ப இவை மாறுபடுகின்றன. குழந்தைகளுக்கு தரும் கிறிஸ்துமஸ் கேண்டி கேன், பிளம் கேக், ப்ரூட் கேக், ஒயின், வான்கோழி மற்றும் ஆடு, கோழி போன்ற இறைச்சி உணவுகள் பிரதான இடம்பிடிக்கும். அயல் நாடுகள் பலவற்றிலும் கிறிஸ்துமஸ் இரவு விருந்து மேஜையில் முதல் இடம் பிடிப்பவை வான்கோழிதான். ஏனெனில் 16-ம் நூற்றாண்டில் எட்டாம் ஹென்றி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் வான்கோழியை உட்கொண்டதால் இது தொடர்ந்து வருகிறது. பழகேக் என்பது சிறப்பம்சம் கொண்டது. இந்த கிறிஸ்துமஸ்-யில் செய்யப்படும் பழ கேக் அடுத்த கிறிஸ்துமஸ் வரை சேமித்து வைக்கப்பட வேண்டும் என்ற முறை உள்ளது. அறுவடை கால முடிவில் செய்யப்படும் இந்த கேக் அடுத்த அறுவடை அடுத்த அறுவடை காலம் வரை சேமித்து உண்னுதல் வேண்டுமாம். இதனால் அதிர்ஷடம் ஏற்படுமாம். அதுபோல் நல் இரவு விருந்தில் பரிமாற்றப்படும் உணவுகளின் எண்ணிக்கை 5 முதல் பன்ணிரண்டு வரை எண்ணிக்கையில் அமைதல் வேண்டுமாம். ரஷ்யாவில் 12 வகை கிறிஸ்துமஸ் நல் இரவு விருந்து என்றே அழைக்கின்றனர்.
பழங்காலத்தில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு புதிய நாள் தொடங்குகிறது என்பது அர்த்தம். அதனாலேயே டிசம்பர் 24-ம் தேதி இரவை கிறிஸ்துமஸ் விஜில் (அ) கிறிஸ்துமஸ் ஈவ் என்றவாறு சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பார் மீட்கும் பாலகனாய் பெத்லேகேமில் வந்துதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நிகழ்வாம் ‘கிறிஸ்துமஸ்’ நல் வாழ்த்துகள்.

உலகில் பிறந்தவர்களில், வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் சிலர் தான். ‘சாதனையாளர்கள்’ என்று அவர்களின் வாழ்வை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். அந்த பட்டியல் மிக நீளமானது.
1483-ம் ஆண்டு ஜெர்மனியின் ஈச்பென் கிராமத்தில் ஒரு குழந்தை பிறந்தது, அவர்- சமய சீர்திருத்தம் கொண்டு வந்த மார்டின் லூத்தர்.
1809-ம் ஆண்டு அமெரிக்காவில் ஹார்டின் என்னுமிடத்தில், கெண்டகியில் ஒரு மர வீட்டில், ஒரு குழந்தை பிறந்தது. அவர்- அடிமைத்தளத்தை ஒழித்த ஆபிரகாம் லிங்கன்.
1910-ம் ஆன்டு அல்பேனியாவில் எளிமையான சூழலில் ஒரு குழந்தை பிறந்தது. அவர் தான் குப்பைத் தொட்டிகளிலிருந்த குழந்தைகளின் முகத்தில் இயேசுவைக் கண்ட புனித அன்னை தெரசா.
இவர்களுடைய பிறந்தநாள் விழாக்களை நாம் ஆண்டு தோறும் கொண்டாடுகிறோம். ஆனாலும் அவர்களைக் குழந்தையாக நாம் நினைத்துப் பார்த்து விழா எடுப்பதில்லை.
உலகில் பிறந்த குழந்தைகளிலேயே, வாழ்ந்து முடித்து பல நூற்றாண்டுகளான பின்பும், ஒரே ஒருவரின் பிறந்த நாளில் மட்டும் தான் அவரை குழந்தையாக நினைத்துப் பார்க்கிறோம். மற்றவர்களின் பிறந்த நாட்களில் நாம் அவர்களை சாதனை படைத்த பெரியவர்களாகவே கற்பனை செய்து பார்க்க முடி கிறது, நினைவுகூர முடிகிறது.
காரணம், இக்குழந்தை பிறக்கும் போதே சமுதாயத்தில் பல நேர்மறையான சிந்தனைகளைக் கொண்டு வருகின்ற குழந்தையாக இருந்தது.
மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை
‘அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்’ (மத்தேயு 1:21) என இயேசுவை பாவங்களை மீட்க வந்த குழந்தை என விவிலியம் கூறுகிறது.
இயேசு பிறந்த போது ‘ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று’ (மத் 2: 3) என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது.
இக்குழந்தையைக் கருவில் சுமக்கிற போது ஒரு சாதாரண பாமரத்தாய் புரட்சிப்பாடல் பாடினார். இதை லூக் 1:46 முதல் 55 வரையிலான வசனங்கள் விளக்குகின்றன.
எனவே தான் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. பிறக்கும்போதே சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை.
புறப்படச் சொன்ன குழந்தை
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் பெத்லேகேம் எனும் சிறிய பட்டணம் திடீரென அதிக சிறப்புப் பெற்றது. அன்றைய சூழலில் அனேகர் பெத்லேகேம் போனார்கள்.
யூதர்கள் பலர் பெத்லேகேம் சென்றனர். இதை, ‘தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்’ (லூக் 2:3) எனும் வசனம் விளக்குகிறது. ‘அவர்களோடு கூட மரியாளும் யோசேப்பும் நாசரேத்துக்குப் போனார்கள்’ (லூக் 2:5). அப்போது மரியா நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தார்.
‘தேவதூதர்கள், மேய்ப்பர்களுக்கு இயேசுவின் பிறப்பின் செய்தி அறிவிக்கப் போனார்கள். செய்தி கேட்ட மேய்ப்பர்கள் உடனே புறப்பட்டு குழந்தையைப் பார்க்கப் பெத்லேகேம் போனார்கள்’ (லூக் 2:9,12).
‘கிழக்கிலிருந்து வானியல் ஞானியர் பெத்லேகேம் சென்றார்கள், நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்’ (மத் 2:11)
இப்படி உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெத்லேகேம் சென்ற யாருமே பெத்லேகேமில் தங்கிவிடவில்லை. பெத்லேகேமிலிருந்து திரும்பிச்சென்றார்கள்.
கிறிஸ்துமஸ் காலங்களில் ஒவ்வொருவரும் இன்றளவும் கூட கற்பனையில் பெத்லேகேம் போகிறோம். ஆனால் கிறிஸ்மஸ் என்பது பெத்லேகேம் போவதில் அல்ல, பெத்லேகேமிலிருந்து புறப்பட்டுப் போவதில் தான் முழுமை பெறுகிறது.
ஒரு விண்கலத்தில் மனிதன் பயணித்து சந்திரனில் கால்பதிப்பது வரலாற்றுச் சாதனையெனில், கடவுள் விண்ணிலிருந்து புறப்பட்டு பூமியில் கால் பதிப்பது வரலாற்று மாற்றங்களுக்கான சாதனை.
முந்தையது மனிதன் கண்டுபிடித்தது. பிந்தையது மனிதனையே கண்டுபிடித்தது.
முழுமையான அன்பைப் பெற்றிட, அன்பைப் பகிர்ந்திட, விடுதலை வாழ்வை வழங்கிட, வழங்கப்பட்ட விடுதலை வாழ்வு இன்றளவும் பகிரப்பட பெத்லேகேம் போவதில் அல்ல, பெத்லேகேமிலிருந்து புறப்பட்டுப் போவது தான் அழைப்பாய் இருக்கிறது.
நம்மோடு இருக்கும் குழந்தை
“அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்” என்பது இறைவாக்கினர் ஏசாயா (7:14) வாக்கு. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்று அர்த்தம். (மத் 1:23)
ஒரு குடும்பத்தார் ஒரு பெரிய ஓட்டலில் மிகப்பெரிய விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் தற்செயலாக அவர்களை ஓட்டலில் சந்தித்து என்ன கொண்டாட்டம் என வினவினர். ‘எங்கள் வீட்டுக் கடைக்குட்டிக்குப் பிறந்த நாள்’ என்று அவர்கள் பதிலளித்தனர். ‘சரி வந்தது வந்துட்டோம், குழந்தையை வாழ்த்திச் செல்வோம்’ எனும் எண்ணத்தில் ‘குழந்தை எங்கே?’ என்றார்கள்.
‘அவன் இங்கே இருந்தால் அழுது தொந்தரவு செய்வான். விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாது. எனவே அவனை வீட்டிலேயே பாட்டியம்மாவிடம் விட்டு விட்டு வந்து விட்டோம்’ என்றார்கள்.
விழா நாயகன் வீட்டில் பாட்டியம்மா பாதுகாப்பில், விழா நாயகனின் பிறந்தநாள் ஓட்டலில் கோலாகலமாக!
குழந்தை இல்லாமல் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டமாகி விடக்கூடாது இந்த கிறிஸ்து பிறப்பு. இம்மானுவேல்- அவர் நம்மோடு இருப்பதில் தான் அவர் பிறப்பின் நோக்கம் முழுமை அடைகிறது.
கிறிஸ்து பிறப்பின் நோக்கம் உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் முழுமை பெறட்டும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்
ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ்,
நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.

சட்டதிட்டங்களைக் காரணம் காட்டி மனிதநேயத்தை மறுப்பவர்கள் மீது இயேசுவின் கோபம் எப்போதுமே இருக்கும். ஒருவரின் சூம்பிய கையை இயேசு நேராக்கிய கதையை கீழே பார்க்கலாம்.
சட்டதிட்டங்களைக் காரணம் காட்டி மனிதநேயத்தை மறுப்பவர்கள் மீது இயேசுவின் கோபம் எப்போதுமே இருக்கும். தங்களை மதவாதிகளாகவும், கடவுளின் பிரதிநிதிகளாகவும் காட்டிக்கொண்டிருப்பவர்களை அவர் எப்போதுமே எதிர்ப்பார்.
ஓய்வு நாள் என்பது யூதர்களுக்கு மிக முக்கியமான நாள். சட்டத்தின் படி அந்த நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது. ஒரு சின்ன விறகைக்கூட கையில் தூக்கக்கூடாது என்பது அவர்களுடைய சட்டம்.
அப்படி ஒரு ஓய்வு நாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வெளி வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். வயலில் தானியங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தன. சீடர்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் அந்தக் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கி ஊதி தானிய மணிகளை உண்டார்கள்.
இயேசுவின் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது. இயேசுவின் சீடர்கள் ஓய்வு நாளில் வேலை செய்கிறார்கள்!
அவர்கள் இயேசுவை அணுகினார்கள்.
‘இயேசுவே, இன்றைக்கு ஓய்வு நாள். உங்கள் சீடர்கள் செய்வது என்ன என்பது உங்களுக்குத் தெரிகிறதா?’ பரிசேயர்கள் கேட்டார்கள்.
‘பசியாய் இருப்பதால் சில கதிர்களைக் கொய்து உண்கிறார்கள் இதில் என்ன தவறு?’ என்று இயேசு கேட்டார்.
‘மறை நூலை நீங்கள் வாசித்ததில்லையா? ஓய்வு நாளில் உணவு சேகரிப்பது கூட பாவம் என்று மோசே சொல்லியிருக்கிறார்’. பரிசேயர்கள் சற்று எகத்தாளமாய்ச் சொன்னார்கள்.
‘அதே மறை நூலில் நீங்கள் எல்லோரும் புகழ்ந்து பேசும் தாவீது அரசர் செய்த ஒரு காரியமும் சொல்லப்பட்டிருக்கிறது தெரியுமா? அவரும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது ஆலயத்தில் குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அற்பண அப்பங்களை உண்டார்கள். இதை நீங்கள் வாசித்ததில்லையோ?’ இயேசு பதிலடி கொடுக்க, பரிசேயர்கள் அமைதியானார்கள்.
‘ஓய்வு நாளில் குருக்கள் ஆலயத்தில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறிய செயலாகாது என்பதையும் திருச்சட்ட நூல் சொல்கிறதே, தெரியாதா?’ என்று இயேசு மீண்டும் கேட்டார்.
‘ஓய்வு நாளில் விருத்த சேதனம் செய்வது கூட பாவமாகாது என்பதாவது தெரியுமா?’ இயேசுவின் தொடர் கேள்விகளால் அவர்கள் மவுனமானார்கள்.
‘ஓய்வு நாள் இருப்பது மனிதனுக்காக, மனிதன் இருப்பது ஓய்வு நாளுக்காக அல்ல. கடவுள் ஓய்வு நாளிலும் பணியாற்றுகிறார்’ இயேசு அதிகாரத் தோரணையில் சொல்லி விட்டு நகர்ந்தார்.
இயேசு அங்கிருந்து நேராக தொழுகைக் கூடத்துக்குச் சென்றார். அங்கும் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசுவிடம் குற்றம் ஏதேனும் காணவேண்டும் என்னும் நோக்கில் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கே தொழுகைக் கூடத்தில் சூம்பிப் போன கைகளை உடைய ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். இன்று ஓய்வு நாளாயிற்றே, இயேசு அவனைக் குணமாக்குவாரா? ஒரு சண்டைக்குத் தயாராகலாமா? என்று அவர்களுடைய மனம் கேட்டுக் கொண்டிருந்தது.
அவர்கள் இயேசுவை நோக்கி, ‘ஓய்வு நாளில் ஒருவனைக் குணமாக்குதல் முறையா?’ என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களிடம், ‘நீங்கள் சொல்லுங்கள், எது முறை? நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை? எதை ஓய்வு நாளில் செய்யலாம்? சொல்லுங்கள்’ என்று கேட்டார்.
அவர்களிடமிருந்து பதில் இல்லை.
இயேசு கை சூம்பிப்போன அந்த மனிதரை அழைத்து அவர்கள் நடுவிலே நிறுத்தினார். அவர் வந்து இயேசுவின் முன்னால் நின்றார். பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ‘உங்களுடைய ஒரே ஒரு ஆடு ஓய்வு நாளில் பள்ளத்தில் விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதைத் தூக்கி விடுவீர்களா? இல்லை ஓய்வு நாள் முடியும் மட்டும் அந்தக் குழியிலேயே கிடக்கட்டும் என்று விட்டு விடுவீர்களா? தூக்கி விடுவீர்கள் தானே? ஆட்டுக்கே நன்மை செய்ய நீங்கள் நினைக்கும் போது ஆட்டை விட உயர்ந்த மனிதனுக்கு நன்மை செய்ய நான் நினைக்கக் கூடாதா?’ இயேசு அவர்களிடம் கேட்டார்.
அவர்களிடம் பதில் ஏதும் இருக்கவில்லை.
அவர்கள் இயேசுவின் கேள்விகளில் இருக்கும் கூர்மையையும், அவருடைய சட்ட அறிவையும் கண்டு திகைத்துப் போய் பேச்சிழந்து நின்றார்கள்.
‘உன் கையை நீட்டு’ என்று இயேசு கை சூம்பிப் போனவரிடம் சொன்னார்.
அவன் கையை நீட்டினான். கை நேராகிவிட்டது. அவன் மிகவும் ஆனந்தமடைந்து இயேசுவைப் பணிந்து வணங்கினான்.
சட்டங்கள் அல்ல, மனித நேயமே முக்கியம் என்பதை இயேசு மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு தமது செய்கையால் விளக்கினார்.

கவலைப்படுவது கடவுளை அறியாதவர்களின் பணி. நீங்கள் கடவுளைப் பற்றிக்கொள்ளுங்கள். மற்ற அனைத்தையும் பெற்றுக்கொள்வீர்கள்.
‘கவலைகளை விட்டு விடுங்கள். உயிர்வாழ எதை உண்பது, உடலை மூட எதை உடுப்பது என்றெல்லாம் நீங்கள் கவலைப்படுவது வீண். உணவை விட உயிரும், உடையை விட உடலும் சிறந்தவை அல்லவா! வானத்துப் பறவைகளைக் கவனியுங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியங்களில் சேமிப்பதும் இல்லை. ஆனால் கடவுள் அவற்றுக்கும் உணவளிக்கிறார்’.
வயல்வெளி மலர்களையோ, காட்டுச் செடிகளையோ கவனித்திருக்கிறீர்களா? சாலமோன் மன்னன் கூட அணிந்திராத மென்மையில் அந்த மலர்களை கடவுள் உடுத்தியிருக்கிறார்.
கவலைப்படுவதால் உங்களில் யாராவது தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியுமா? கவலைப்படுவதால் உங்கள் தலைமுடியில் சிலவற்றைக் கறுப்பாக்க முடியுமா?
கவலைப்படுவது கடவுளை அறியாதவர்களின் பணி. நீங்கள் கடவுளைப் பற்றிக்கொள்ளுங்கள். மற்ற அனைத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். இயேசு போதனையில் இருந்தார்.
இயேசுவின் சீடரான பேதுரு மாமியார் நோயில் விழுந்தார். பயங்கரமான கொடிய காய்ச்சல் அவளைப் பிடித்தது. வயதானவர்களை வாட்டி எடுக்கும் கொடிய காய்ச்சல்.
அந்தக்காலத்தில் நடைமுறையில் இருந்த வைத்தியம் மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலும் விலங்குகளின் மண்டை ஓடுகளை எரித்த சாம்பலை நெற்றியில் பூசுவதே மருந்து.
சர்வ நிவாரணி போல அவர்கள் கலாசார மருந்து ஒன்று உண்டு. நரியின் மண்டைஓடு, எலியின் தலை, நண்டுகளின் கண்கள், ஆந்தையின் மூளை, தவளையின் ஈரல், யானையின் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் பேன் போன்ற உயிரினங்கள் இவற்றையெல்லாம் கலந்து சுட்டு சாம்பலாக்கியது.
இப்போது வாசித்தால் சிரிப்பை உண்டாக்கும் வைத்தியங்களும் அந்நாட்களில் ஏராளம் உண்டு. ஜலதோஷம் தீரவேண்டுமானால் எலியின் மூக்கில் முத்தமிடுவது, தவளையை வினிகரில் சமைத்து உண்டால் பல்வலி பறக்கும் என்பவையெல்லாம் அவற்றில் சில.
எந்தவிதமான மருந்தும் பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைக் குணப்படுத்தவில்லை. மாறாக காய்ச்சலின் வீரியத்தை அதிகரிக்கவே செய்தன. பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்பதை விட வேறு வழியில்லை.
இயேசுவின் காதுக்கு செய்தி சென்றதும் இயேசு பேதுருவின் வீட்டுக்கு விரைந்தார். பேதுருவின் மாமியார் இறந்து விடுவார் என்றே சுற்றத்தினர் நம்பியிருந்தனர். பேதுரு கூட அவளுடைய நிலைமையைப் பார்த்து அவ்வாறே நினைத்திருக்கக் கூடும்.
இயேசு நேராக பேதுருவின் மாமியார் படுத்திருந்த படுக்கை அருகே சென்றார். அவருடைய கைகளைத் தொட்டார். அவ்வளவு தான், காய்ச்சல் சட்டென்று விலக மாமியார் எழுந்தாள். அனலடித்த தேகம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது.
மூட்டுகளில் இருந்த வலி மறைந்திருந்தது. நடுங்கிக் கொண்டிருந்த உடம்பு இயல்பாக இருந்தது. இயேசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் கண்கள் பனித்தாள். ஒரு தொடுதல் மூலம் தன்னை குணப்படுத்திய இயேசுவின் மீதும் அவருடைய பணிகளின் மீதும் நம்பிக்கை கொண்டாள்.
பேதுருவின் மாமியார் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டார் என்னும் செய்தி சடுதியில் வீதிகள் தோறும் விரைந்தோடியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். இயேசு அப்போது அவர்களுடைய பார்வையில் ஒரு மருத்துவர். காய்ச்சல், தொழுநோய், புற்று நோய், வாதம் என அனைத்து விதமான நோயாளிகளும் வீதிகளில் நிரம்பி வழிந்தார்கள்.
இயேசு வந்தார். வந்திருந்த அனைவரையும் குணமாக்கினார்! அதுவும் மக்களோடு பேசிக்கொண்டே, சிரித்துக் கொண்டே, ஒரு நண்பனைப் போல அவர்களிடையே நடந்து அனைவரையும் தொட்டு சுகமாக்கினார். அனைவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
சுகமாக்கும் போதனையாளர்கள் வரலாற்றில் இருந்திருந்தாலும் இயேசுவின் அணுகுமுறை மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய நோய் தீர்க்கும் முறை பிச்சையிடுவது போல இருக்கவில்லை. ஆத்மார்த்தமான அன்புடன் மிளிர்ந்தது.
மக்கள் இயேசுவை நோக்கி கூச்சலிட்டார்கள், ‘நீர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’.
ஆலய குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டினார்கள். பழைய இறைவாக்கினர்கள் ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா? என்பதை அறிய. அவர்கள் கண்ணுக்குத் தட்டுப்பட்டது இறைவாக்கினர் எசாயா எழுதிய தீர்க்க தரிசனம் ஒன்று.
‘செபுலான் நாடே, நப்தலின் நாடே... இருளில் இருக்கும் மக்கள் பேரொளியைக் காண்பார்கள்...’. கப்பர்நாகும் நகரம் செபுலான், நப்தலி என்னும் நகரங்களின் எல்லையில் தான் இருந்தது. எனவே இந்த தீர்க்க தரிசனம் இயேசுவின் வருகையைக் குறித்ததாக இருக்குமோ என்று அவர்கள் விவாதிக்கத் தொடங்கினர்.
இன்னொருவர் ஏசாயா தீர்க்க தரிசியின் இன்னொரு தீர்க்க தரிசனத்தை குறிப்பிட்டார். ‘அவர் நம் நோய்களைத் தாங்கிக் கொண்டார், நம் வலிகளை ஏற்றுக் கொண்டார்’ இது கூட இயேசுவைக் குறித்ததாக இருக்குமோ? விவாதங்கள் தொடர்ந்தன.
இயேசு சுற்றியிருக்கும் ஊர்களுக்கும் சென்று போதனைகளைச் செய்ய விரும்பினார். கப்பர்நாகூமிலேயே ஒரு மருத்துவரைப் போல தங்கி விட அவர் விரும்பவில்லை. வந்தவர்களைச் சுகமாக்கி விட்டு அவர் சீடர்களுடன் பயணத்தைத் தொடங்கினார்.

திருப்பூர் சபாபதிபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. அருள் நாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் சபாபதிபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. அருள் நாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் மாலை கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலயத்தின் ஆயரும், கமிட்டி தலைவருமான ஸ்டேன்லி தேவக்குமார் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஆனைமலை டி.இ.எல்.சி. ஆலயத்தின் ஆயர் தேவநேசன் கலந்து கொண்டு இறைசெய்தி வழங்கி ஜெபம் செய்தார். இதில் பாடல் குழுவினர், பெண்கள் ஐக்கிய சங்கத்தினர், பள்ளி சிறுவர்கள், கிளை சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வெளிப்படுத்தும் பாடல்களை பாடினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாடல்குழு பொறுப்பாளர்கள் மற்றும் ஆலய கமிட்டி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

நம்முடைய உயிரை இழக்கும் போது கிறிஸ்துவுக்குள் முடிவில்லா வாழ்வைக் கண்டடைய முடியும் என்பதை அறியும் போது நாம் இழப்பதில்லை, பெறுகிறோம்.
ஆண்டவர் நமக்கு அவருடைய குணாதிசயத்தைப் போதிக்கிறார். அதாவது, நம் முடைய லாபங்களை விட நஷ்டங்களினாலும், சுய பாதுகாப்பை விட தியாகங் களினாலும் சொந்த நலனுக்காகச் செலவிடப்படும் நேரத்தைக் விட மற்றவர்களுக்காகச் செலவிடப்படும் நேரங்களினாலும் மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் அன்பை விட மற்றவர்களுக்குக் கொடுக்கும் அன்பினாலும் நம்முடைய வாழ்க்கையை அளக்க வேண்டும் என்பது தான் அந்தப் போதனை.
நாம் கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது நம்முடைய வாழ்க்கையை வீணாக்குவதாக மக்கள் நினைக்கக் கூடும்.
ஆனால் நம்முடைய உயிரை இழக்கும் போது கிறிஸ்துவுக்குள் முடிவில்லா வாழ்வைக் கண்டடைய முடியும் என்பதை அறியும் போது நாம் இழப்பதில்லை, பெறுகிறோம்.
ஒரு விவசாயி தன்னுடைய வயலில் விதை விதைக்கும் போது அவற்றை அவன் பூமியில் வீசி எறிவது போல நமது பார்வைக்கு தெரியும். அவன் விதைகளை வீணாக்குவது போல நமக்குத் தோன்றலாம். ஆனால் அது முளைத்து வளர்கிறது. நாளடைவில் அது பலன் கொடுக்கும் போது அதன் மிகுதியை அறிந்து கொள்ள முடிகிறது.
உலகம் மிகப்பெரிய தேவையை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. சீரழிந்து கொண்டிருக்கும் நம்முடைய உலகத்தில் கடவுள் ஏன் குறுக்கிட்டு அதைச் சீர் படுத்தக் கூடாது என்றும், மனமுடைந்திருக்கும் மக்களுக்கு அவர் ஏன் ஆறுதல் அளிக்கக் கூடாது என்றும் நம்மில் பலர் நினைக்கின்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே குறுக்கிட்டிருக்கிறார். தன்னுடைய மகன் இயேசு கிறிஸ்து வழியாக அவர் உலகில் குறுக்கிட்டுள்ளார்.
ஆண்டவரின் வார்த்தை நம்முடைய வாழ்வில் குறுக்கிடுகிற ஒன்று. ஆண்டவர் தன்னுடைய வார்த்தைகளினால் மனித வாழ்வில் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கிறார்.
என் வாழ்வில் நான் விரும்பியதைச் செய்ய எனக்கு உரிமை உண்டு. ஆனால் நான் செய்யும் செயலைக் குறுக்கிடவும், அதை தம்முடைய குறுக்கீடுகளால் மாற்றவும் இயேசுவுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் அதிகாரம் உண்டு.
இயேசுவின் வார்த்தை குறுக்கிட்ட இரண்டு மனிதர்களைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை அடைந்த மாற்றத்தைப் பற்றியும் பார்ப்போம்.
சீமோன்
இயேசு சீமோனை நோக்கி, ‘ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’ என்றார். சீமோன் மறுமொழியாக, ‘ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள்’ (லூக்கா 5:4)
மீன் பிடித்துக் கொண்டிருந்த சீமோன் இரவு முழுதும் கடின உழைப்பைச் சிந்தினார். ஆனாலும் மீன்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. கவலையுடன் வலைகளை அலசிக் கொண்டிருந்த போது ஆண்டவர் இயேசு தன்னுடைய வார்த்தைகளினால் குறுக்கிடு கிறார்.
இந்தக் குறுக்கீடு மாற்றத்துக்கு நேரான குறுக்கீடு. இரவு முழுவதும் கடினமாய் உழைத்தும் ஒன்றும் அகப்படவில்லையே, பாவம் மிகுதியாக மீன்களைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வீட்டுக்குப் போகட்டும் என்பதோடு இந்தக் குறுக்கீடு முடிந்து விடவில்லை.
சீமோனை நோக்கி, ‘அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்’ என்று சொன்னார் என்கிறது லூக்கா 5:10.
ஆண்டவரின் வார்த்தை நம் வாழ்வில், செயல்பாட்டில், தன்னுடைய சித்தத்தை நிறைவேற்றிக் கொள்ளவே இந்த குறுக்கீடு.
நம் தேவை சந்திக்கப்படுவதற்கான குறுக்கீடு மாற்றம் அல்ல. மற்றவர்களின் தேவை சந்திக்கப்படுவதற்கான குறுக்கீடு தான் மாற்றம்.
சக்கேவு
சக்கேயு குள்ளமான மனிதர். ‘பாவி’ என மக்களால் அழைக்கப்பட்டவர். இயேசுவைக் காண வேண்டும் எனும் ஆவலினால் காட்டு அத்தி மரத்தின் மேல் ஏறி நின்று இயேசு வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அங்கே இயேசு வருகிறார். மரத்தின் அருகே நிற்கிறார். அண்ணாந்து பார்த்து, ‘சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்’ என இயேசு சக்கேவைப் பார்த்துச் சொன்னார். (லூக்கா 19:5)
இந்த ஆண்டவரின் வார்த்தைகள் மாற்றத்துக்கு நேரான, உலகத்தில் ஆண்டவரை அறியாத அனேகருக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய, அங்கீகாரம் வழங்கக் கூடிய வார்த்தைகள்.
சக்கேயுவை கீழே இறங்கி வர அழைத்த அந்த ஆண்டவரின் வார்த்தைகள் சக்கே வின் வாழ்வில் மாற்றத்திற்கு நேரான குறுக்கீடு. சுற்றி நின்றிருந்த அநேகருடைய வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய குறுக்கீடு. மனந்திரும்புகின்ற பாவிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக் கூடிய குறுக்கீடு.
‘இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்’ (லூக்கா 19:9) என்றார் இயேசு.
ஆண்டவர் இயேசுவின் பிறப்பு, திருப்பணி, சிலுவை, மரணம், மற்றும் உயிர்த்தெழுதல் அனைத்தின் மூலமாகவும் இவ்வுலக மக்களின் வாழ்வில் இயேசு குறுக்கிடுகிறார்.
இன்றும் ஆண்டவரின் வார்த்தைகள் மனித வாழ்வில் குறுக்கிடுகிறது. இக்குறுக்கீடு சமய மாற்றத்திற்கு நேரானதல்ல, முழு மனுக்குலமும் நிறை வாழ்வை நோக்கிய பயணம் செய்வதற்கான குறுக்கீடு.
உயிருள்ள ஆன்டவர் இயேசுவின் வார்த்தைகள் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைவாழ்வைப் பெற்றுத் தருவதாக, ஆமென்.
ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கிறது.
கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ் பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலியும் நடக்கிறது.
சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிக்கு மேலமணக்குடி இணை பங்கு தந்தை அருட்பணியாளர் ஜான்பெனிட்டோ தலைமை தாங்குகிறார். மாலை 6.30 மணிக்கு செபமாலையும், மாலை ஆராதனையும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர்பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். அமராவதிவிளை பங்குத் தந்தை அருட்பணியாளர் ஜோசப்ரொமால்டு மறையுரை ஆற்றுகிறார்.
இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 6 மணிக்கு நடைபெறும் பெருவிழா நிறைவு திருப்பலிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெரோமியஸ் தலைமை தாங்குகிறார், ஆற்றுப்படுத்துதல் பணிக்குழு இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன் மறையுரை ஆற்றுகிறார். 8 மணிக்கு ஆங்கிலத் திருப்பலி நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி காசாகிளாரட் அருட்பணியாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். பின்னர் 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. 10.30 மணிக்கு நடைபெறும் மலையாள திருப்பலிக்கு திருவனந்தபுரம் உயர் மறை மாவட்ட நீதித் துறை ஆயர் பதிலாள் அருட்பணியாளர் கிளாடின் தலைமை தாங்குகிறார். பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடக்கிறது.
மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கமும் நற்கருணை ஆசீரும், இரவு 10.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு தந்தை நசரேன், பங்குப்பேரவை துணைத்தலைவர் லியோன், செயலாளர் சேவியர்அமலதாஸ், பொருளாளர் மரியஜாண் மற்றும் பங்குமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், பங்கு அருட் பணியாளர்கள் செய்துள்ளனர்.

ஒவ்வொரு நாளையும் நாம் தொடங்கும்போது அந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை, ஆண்டவரிடத்தில் பெற்றுக்கொள்வது மிக முக்கியம்.
தேவனுடைய அளவற்ற கிருபையினால் இந்த நாளைக் காணச்செய்தது தேவனுடைய அளவற்ற கிருபையே. ஒவ்வொரு நாளையும் நாம் தொடங்கும்போது அந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை, ஆண்ட வரிடத்தில் பெற்றுக்கொள்வது மிக முக்கியம். இந்நாளில் நம் கர்த்தர் உங்களோடிருந்து உங்களுடைய மனவிருப்பத்தை எல்லாம் நிறைவேற்றி உங்களை சந்தோஷப்படுத்துவார்.
‘உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவேன்’ (ஆதி-17:2).
மேற்கண்ட வாக்குத்தத்தத்தின்படி கர்த்தர் நிச்சயம் உங்களை பெருகப்பண்ணி தம்முடைய பரிசுத்தமுள்ள நாமத்தை உங்கள் மூலமாய் மகிமைப்படுத்துவார்.
தேவ சித்தம்
‘நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடுஅதிலேபெருகுவீர் களாக’ (கொலோ-2:7)
ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி நீங்கள் சகலவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் பெருகுவதுதான் தேவனுடைய பரிபூரண சித்தமாயிருக்கிறது. உங்கள் ஆவிக்குரிய வாழ்வில், சரீர ஆரோக்கியத்தில் மற்றும் பொருளாதாரத்தில் சம்பூரணமடைந்து சகலவற்றிலும் ஆண்டவர் உங்களை பெருகச் செய்வார் என்பதை மனப்பூர்வமாய் விசுவாசியுங்கள்.
கர்த்தரை ஆராதியுங்கள்
‘அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகன பலிகளாகப் பலியிட்டான்’ (ஆதி 8:20)
‘பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்புங்கள்’ (ஆதி 9:1) என்றார். இதன்படி அவர்கள் சந்ததியை தேவன் பெருகச் செய்தார்.
‘நம்முடைய ஆண்டவர் ஆராதனைக்குரியவர். ஆண்டவரை தொழுதுகொள்ளும்போது ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்’ என்று யோவான் 4-ம் அதிகாரம் 24-ம் வசனம் கூறுகிறது.
இப்புதிய நாளில் உங்கள் நேரத்தை கர்த்தருக்குக் கொடுத்து கர்த்தரோடு செலவிடுங்கள். ‘என் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன்’ என்று வாக்குப்பண்ணினவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்துப் பெருகச் செய்வார்.
கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள்
‘அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்து கொண்டு, கிழக்கே பிராயணப்பட்டுப் போனான்்: இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்’ (ஆதி 13:11).
கர்த்தருடைய வாக்கை தம் வாழ்வில் சொந்தமாக்கிக் கொள்ள, தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தன்னுடைய தேசம், இனம், தகப்பன் வீடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு புறப்பட்டுப்போனார் என ஆபிரகாம் குறித்து ஆதி-12:4 கூறுகிறது.
போகும் பாதையில் லோத்தின் மந்தை மேய்ப்பருக்கும், ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. தன்னோடு லோத்தைக் கூட்டிக் கொண்டு வந்தது தவறான முடிவு என்பதை உணர்ந்து மிகவும் தைரியமாய் சரியான தீர்மானம் எடுத்து லோத்தை விட்டு ஆபிரகாம் பிரிந்தான்.
இவ்வாறு ஆபிரகாம் தேவனுடைய சித்தத்திற்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்தபடியினால் ‘உன் சந்ததியைப் பூமியின் தூளைப் போலப் பெருகப்பண்ணுவேன்’ (ஆதி 13:16) என்றார்.
இந்த நாளின் ஆசீர்வாதங்களுக்கு இடையூறு உண்டாக்குகிற எல்லாவற்றையும் முற்றிலும் அர்ப்பணியுங்கள்.
மகிழ்ச்சி பெருகும்
‘அந்த ஜாதியைத் திரளாக்கி அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்: அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களி கூருகிறது போலவும் உமக்கு முன்பாக மகிழுகிறார் கள்’. (ஏசா 9:3)
கர்த்தர், நீங்கள் இழந்த மகிழ்ச்சியைத் திரும்ப உங்களுக்குத் தந்து மகிழ்ச்சியினால் பெருகப்பண்ணுவார். ஏனெனில் இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சமாகிய கிறிஸ்துவிடம் வந்ததுபோல, நீங்களும் கிறிஸ்துவின் ரட்சிப்பின் சந்தோஷத்தால் நிரப்பப்படுவீர்கள்.
‘சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்’ (ஏசா 40:29)
இந்நாளில் ஆண்டவரை முற்றிலுமாய் சார்ந்து கொள்ளுங்கள். உங்கள் சுய ஞானம், பலத்தை முற்றிலும் நம்பாதிருங்கள். அவ்வாறு நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளும்போது, உங்களுடைய ஆத்மாவை மாத்திரமல்ல உங்கள் சரீரத்திலே ஒவ்வொரு நாளுக்குரிய புது பலனை அவர் கொடுத்து எல்லாக் களைப்பையும் சோர்வையும் அகற்றிப்போடுவார். எனவே, கர்த்தர் சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்கவும், வேதத்தை வாசிக்கவும் மறந்து போகாதீர்கள்.
பொருளாதாரத்தை பெருகப்பண்ணுவார்
‘விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதை பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்’ (கொரி 9:10)
நீங்கள் தரித்திரத்தில், கடன் பாரத்தில் கட்டப்படுவது தேவ சித்தமே இல்லை. ஏனெனில் நம்முடைய தரித்திரங்களையும், வறுமைகளையும் சிலுவையிலே நம் அருமை ஆண்டவர் சுமந்து விட்டார் (2 கொரி 8:9)
நாம் ஐசுவரியவான்களாக இருப்பதுதான் தேவசித்தம். ஆகவே இப்புதிய நாளில் உங்கள் சகல பொருளாதார தேவைகளையும் கர்த்தர் சந்தித்து திரளாய்ப் பெருகப்பண்ணுவார் என்பதில் சந்தேகமில்லை.
சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.

குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும்.
குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். கேட்ட வரங்களையெல்லாம் புனித சவேரியார் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால்தான் புனித சவேரியாரை ‘கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்‘ என்று வாயார புகழ்கிறார்கள்.
புனித சவேரியார் :
கிறிஸ்தவர்களின் இதய ஆசனத்தில் வீற்றிருக்கும் புனித சவேரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ம் ஆண்டு பிறந்தார். 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்தபிறகுதான் சவேரியாரின் வாழ்க்கை ஆன்மிகத்துக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 1537-ம் ஆண்டு சவேரியார் குருப்பட்டம் பெற்றார். 1542-ம் ஆண்டு அவர் கோவாவுக்கு வந்தார்.
ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். அவரது வார்த்தைகளும், செயல்பாடுகளும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தன. அவர் பாடிய கத்தோலிக்க பாடல்கள் மக்களின் எண்ண ஓட்டங்களில் இடைவிடாது தவழ்ந்தன.
புனித சவேரியார் கோவாவில் இருந்து, கடற்கரை ஓரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாட்டுக்கு சென்று மக்களுக்கு போதனை நடத்தினார். அங்கிருந்து அடிக்கடி நாகர்கோவில் கோட்டாருக்கு அவரது பயணம் அமைந்தது.
மன்னருக்கு உதவி :
அந்த நேரத்தில்தான் திருவிதாங்கூர் மன்னருக்கும், பாண்டிய மன்னருக்கும் போர் நடந்தது. இந்த போரில் திருவிதாங்கூர் மன்னர் வெற்றிபெற புனித சவேரியார் உதவி புரிந்தார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்கு கை கொடுத்த புனித சவேரியாரை அவரும் போற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க புனித சவேரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுள்ள சவேரியார் பேராலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்ட நிலத்தையும், பணத்தையும் மன்னர் பரிசாக கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோட்டாரை மையமாகக் கொண்டு நற்செய்தி பணிகளை சவேரியார் மேற்கொண்டார்.
அதன்பின்னர் புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.
அழியாத உடல் :
அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பேராலயம் :
புனிதர் பட்டம் பெற்ற சவேரியாருக்கு முதல் ஆலயம், நாகர்கோவில் கோட்டார் ஆலயமாகவே இருக்க வேண்டும் என்பது இந்த மறைமாவட்டத்து மக்களின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றினார்கள். உலகில் புனித சவேரியாருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக கோட்டார் ஆலயம் விளங்கி வருகிறது.
கோட்டார் மறைமாவட்ட பேராலயமாக திகழும் இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை நடத்திச் செல்கிறார்கள். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.
திருவிழாவில் மக்களுக்கு சிறப்பு :
சவேரியார் ஆலயம் கட்டும்போது நாகர்கோவில் அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள் அக்காலத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் திருவிழாவின்போது இவ்வூர்களின் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
கொடிபட்டத்தில் கட்டுவதற்கான பூக்கள் மற்றும் பூ மாலைகளை ராஜாவூரில் இருந்தும், நாகர்கோவில் அறுகுவிளையில் இருந்தும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இயேசுவின் போதனைகளில் மிகவும் முக்கியமானது மலைப் பிரசங்கம். மிகவும் தெளிவான, மக்களைக் குழப்பாத எட்டு புதிய விதிகளை இயேசு சொன்னார்.
எளிய மனதோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர் களுக்கு உரியது. ‘எளிய மனம்’ என்ற சொல்லில் இயேசு மனித நேயத்தையும், கர்வத்தின் பக்கம் தலை சாய்க்காத பண்பையும், புகழின் மீது நாட்டம் கொள்ளாத மனநிலையையும் புரிய வைக்கிறார்.
துயருறுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். எளிய மனதோராய் வாழ்வதற்குரிய முயற்சியில் வருகின்ற துயரை, மனிதநேயப் பணிகளில் நடக்கையில் வரும் துயரை இயேசு இப்படிக் குறிப்பிடுகிறார்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்: அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். சட்டங்களைப் பேசித் திரிபவர்கள் அல்ல, மனதளவில் மனித நேயம் கொண்டவர்களே உயர்ந்தவர்கள் என்பதை இயேசுவின் மூன்றாவது மொழி விளக்குகிறது.
நீதியை நிலை நாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இயேசுவின் இந்த விதி இறைமகனின் நீதியைப் பேசுகிறது. மனிதர்களுடனான போராட்டமல்ல, பாவத்துடனான போராட்டமே இயேசுவின் பார்வையில் முதன்மையானது.
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். சக மனிதனோடு இரக்கம் கொள்பவர்கள் இரக்கத்தை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். யூத சட்டங்கள் இரக்கத்தைப் பற்றிப் போதிக்காமல் பலி செலுத்துவதைப் பற்றியும், கண்ணுக்குக் கண் என்னும் போதனைகளைச் சுற்றியுமே இருந்ததால் இயேசுவின் விதிகளில் இரக்கம் இடம் பிடித்தது.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். மனமானது களவு, விபசாரம், வன்மம் போன்ற எந்தவிதமான சிந்தனைகளும் இல்லாமல் தூய்மையாக இருந்தால் விண்ணகம் செல்லலாம் என்கிறார் இயேசு.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப் படுவர். மக்களிடம் வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் மக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக இயேசுவின் ஏழாவது போதனை அமை கிறது.
நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்: ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. ஆன்மிக நீதி சார்ந்த போதனைகளை, யூத சமுதாயத்தின் வீதிகளில் விளம்பி நடக்கும் போது நிச்சயமாக துன்பங்கள் வரும். அந்த துன்பங்களைத் தாங்கும் வலிமை வேண்டும் என்கிறார் இயேசு.
இயேசுவின் போதனைகள் மக்களை சிலிர்க்க வைத்தன. ஆலயத்துக்கு பத்தில் ஒரு பங்கு காணிக்கை கொடுப்பதும், பலியிடுவதும், எருசலேம் தேவாலயத்துக்குப் புனிதப் பயணம் செய்வதும் தான் விண்ணரசுக்கு உரியவை, சுவர்க்கத்தில் நம்மைச் சேர்ப்பவை என்று நம்பிக் கொண்டிருந்த மக்களுக்கு இயேசுவின் இந்த புதிய போதனைகள் வியப்பையும் ஊட்டின.
‘திருச்சட்ட நூலிலுள்ள சட்டங்களை நான் அழிக்க வந்தேன் என்று எண்ண வேண்டாம். அழிப்பதற்கு அல்ல நிறைவேற்றவே வந்தேன். பத்துக் கட்டளை, ‘கொலை செய்யாதே’ என்கிறது. நான் சொல்கிறேன், தன்னுடைய சகோதரன் ஒருவனிடம் கோபம் கொள்வதே பாவம். கொலையல்ல, கொலை செய்யும் எண்ணமே பாவம். கொலைக்கு உன்னைத் தயாராக்கும் கோபமே பாவம்’.
‘நீ ஆலயத்தில் காணிக்கை செலுத்த வரும்போது யாரிடமாவது கோபம் கொண்டிருந்தால் காணிக்கைப் பொருளை அப்படியே விட்டு விட்டு நேராக அவனிடம் சென்று மன்னிப்பு கேள். அதன் பின் வந்து காணிக்கையைச் செலுத்து’.
‘விபசாரம் செய்யாதே’ என்று பத்து கட்டளைகள் சொல்கிறது. நான் உங்களிடம் சொல்கிறேன். இச்சைக் கண்களோடு நீங்கள் ஒரு பெண்ணைப் பார்த்தாலே நீங்கள் மனதில் அவளோடு விபசாரம் செய்கிறீர்கள். செயல் மட்டுமல்ல, செயலுக்கான சிந்தனையே பாவம்.
இயேசுவின் இந்த போதனைகள் மக்களை நேரடியாகச் சென்று தாக்கின.
போதனைகளை முடித்த இயேசு பின்னர் நயீன் எனும் ஊரை நோக்கிச் சென்றார். மக்கள் கூட்டம் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றது.
நயீன் ஊர் வாசலில் ஒரு மரண ஊர்வலம் அவர்களை எதிர்கொண்டது. அழுகையும், ஒப்பாரியுமாய் அவர்களை நெருங்கியது அந்த ஊர்வலம்.
இறந்து போனவன் ஒரு இளைஞன். அவனுடைய தாய்க்கு அவன் ஒரே மகன். அவள் ஒரு கைம்பெண். ஊர்வலம் இயேசுவின் அருகே வந்தது.
இயேசு நின்றார். அந்தத் தாயைப்பார்த்தார். ஆதரவற்ற நிலையில், அனாதைபோல அழுது புலம்பிக் கொண்டிருந்த அவளுடைய நிலை அவருடைய மனதைத் தொட்டது.
‘அழாதீர்கள் அம்மா...’
‘ஐயா... எனக்கு இருந்த ஒரே ஆதரவும் இப்படிப் போய்விட்டதே’ அந்தத் தாய் கதறினாள்.
இயேசு பாடையைத் தொட்டார், ‘இளைஞனே நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு’ என்றார்.
இறந்து கிடந்த அந்த இளைஞன் எழுந்திருந்தான்.
தனது மகன் உயிர்பெற்றதைக் கண்ட தாய் ஆனந்த அதிர்ச்சியடைந்தாள். இயேசுவின் பாதத்தில் விழுந்தாள்.
‘இவர் மிகப்பெரிய இறைவாக்கினர்’ என மக்கள் அழுத்தமாய்ப் பேசத்தொடங்கினார்கள்.

விவிலியத்தில் ஆமேன் விவிலியத்தில் மூன்று பயன்பாடுகள் நேக்கத்தக்கவை. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.
ஆமென் ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும்.
விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் மகிழ்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தில் மட்டுமே ஆரம்பத்தில் பாவிக்கப்பட்டு வந்த இச்சொல் பின்னர் கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும் சொல்லாக பாவிக்கப்பட்டு வருகிறது.
விவிலியத்தில் ஆமேன் விவிலியத்தில் மூன்று பயன்பாடுகள் நேக்கத்தக்கவை.
வசனத்தின் முன் ஆமென், மற்றைய பேச்சாளரின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் போது. உதாரணமாக;1அரசர்1:36 (யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக அப்படியே ஆகுக! என தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக)
ஆச்சரிய ஆமேன், ஆச்சரியத்துகுள்ளான போது. உதாரணமாக;நேகேமியா 5:13 (மேலும், நான் என் ஆடையை உதறிவிட்டு, இவ்வார்த்தையின்படி நடக்காத ஒவ்வொருவரையும் கடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும், திருப்பணியினின்றும் உதறிவிடுவாராக. அவர்கள் இவ்வாறு உதறிவிடப்பட்டு, வெறுமையாக்கப்படுவர் என்றேன். இதற்குச் சபையார் அனைவரும் ஆமென் என்று சொல்லி ஆண்டவரைப் புகழ)
முற்று ஆமேன், ஒரு பேச்சாளர் தனது பிரசங்கத்தை/பேச்சை முடிப்பதற்காக பயன்படுத்துவது. கிறிஸ்தவ விவிலியத்தில் மொத்தம் 99 முறை "ஆமேன்" பாவிக்கப்பட்டுள்ளது.

கோவை பெரியகடை வீதியில் தூய மிக்கேல் அதிதூதர் புதிய ஆலயத்தின் அபிஷேக விழா, 25 ஆயர்கள் சிறப்பு பிரார்த்தனையுடன் கோலாகலமாக நேற்று நடந்தது.
கோவை பெரியகடை வீதியில் 150 ஆண்டுகள் பழமையான தூய மிக்கேல் அதிதூதர் பேராலயம் உள்ளது. கோவை கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்ட பேராலயமான இந்த ஆலயம் மிகவும் பழமையானதால் அதை புதுப்பித்து, புதுமையாக வடிவமைத்து கட்டும் பணி கடந்த 3½ ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த ஆலயம் ரோம்நகரில் உள்ள புனிதபீட்டர் தேவாலய தோற்றத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆலயத்தின் (அபிஷேக விழா) திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் மாலை 4.30 மணிக்கு புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஆயர்கள் தலைமையில், ஆலய பங்கு மக்கள் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள முகப்பு வாயிலை மந்திரித்து புனிதப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் நுழைவு வாயிலை ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் திறந்து வைத்தார். பின்னர் ஆயர்கள், பழைய ஆலயம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில் பலூன்களையும், சமாதானம் மற்றும் அமைதியை வலியுறுத்தி புறாக்களையும் பறக்க விட்டனர்.
இதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கொடிமரம் மந்திரிக்கப்பட்டு அதில், தேர்திருவிழாவுக்கான கொடியை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மறைமாவட்ட பேராயர் பிரகாஷ் மல்லவரம்பு கொடியேற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு புதிய பேராலய திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி, புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி அனந்தராயர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் முதலில், ஆலய கட்டுமான பணிகளை செய்த, ஏ.வி.கட்டுமான நிறுவன உரிமையாளர் வின்சென்ட் ராஜ், அவரது மகன் என்ஜினீயர் லியோ சர்னி வின்சென்ட்ராஜ் ஆகியோர் புதிய ஆலய சாவியை வழங்க, அதனை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பெற்றுக்கொண்டு புதிய ஆலயத்தை திறந்து வைத்தார்.
விழாவில் ஊட்டி மறை மாவட்ட ஆயர் பால்ராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் உள்ளிட்ட பல்வேறு மறை மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயர்கள், 200-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் திருப்பலி பூஜை, மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
விழாவில் கோவை மாவட்டம் மற்றும் அருகில் உள்ள திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டனர். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி கோவை பெரியகடை வீதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.