என் மலர்
ஆன்மிகம்

அருள்நாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை
திருப்பூர் சபாபதிபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. அருள் நாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் சபாபதிபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. அருள் நாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் மாலை கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலயத்தின் ஆயரும், கமிட்டி தலைவருமான ஸ்டேன்லி தேவக்குமார் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஆனைமலை டி.இ.எல்.சி. ஆலயத்தின் ஆயர் தேவநேசன் கலந்து கொண்டு இறைசெய்தி வழங்கி ஜெபம் செய்தார். இதில் பாடல் குழுவினர், பெண்கள் ஐக்கிய சங்கத்தினர், பள்ளி சிறுவர்கள், கிளை சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வெளிப்படுத்தும் பாடல்களை பாடினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாடல்குழு பொறுப்பாளர்கள் மற்றும் ஆலய கமிட்டி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Next Story