என் மலர்
கிறித்தவம்
பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு புத்தாண்டு பிறப்பு நேற்றுமுன்தினம் நள்ளிரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமை தாங்கினார். துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தைகள் சூசை, சதீஸ்ஏசுதாஸ், ஆன்மிக தந்தைகள் மாசிலாமணி, அருளானந்தம் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியின்போது புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணி அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டது.
பிரார்த்தனை நிகழ்ச்சியின் முடிவில் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர். இதையடுத்து நேற்று காலை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி, மணத்திடல், பூதலூர், முத்தாண்டிப்பட்டி, சுக்காம்பார், மேகளத்தூர், கோட்டரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை இருதயபுரத்தில் உள்ள பெத்தேல் ஆலயத்தில் நேற்று முன்தினம் 10.30 மணி முதல் நேற்று அதிகாலை 1.30 மணி வரை 3 மணி நேரம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
உலகம் முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை இருதயபுரத்தில் உள்ள பெத்தேல் ஆலயத்தில் நேற்று முன்தினம் 10.30 மணி முதல் நேற்று அதிகாலை 1.30 மணி வரை 3 மணி நேரம் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஆலயத்தின் போதகர் காட்பெர்க் ஜான் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
அப்போது, இந்திய நாட்டின் நலனுக்காகவும், கர்நாடக மாநிலம் முன்னேற்றம் அடையவும், கோலார் தங்கவயலின் வளர்ச்சி பெறவும், முன்னாள் தங்கச்சுரங்க தொழிலாளர்கள், பி.இ.எம்.எல். தொழிலாளர்கள் நலனுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆலயத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். அதேபோல நேற்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை காட்பெர்க் ஜான் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். புத்தாண்டையொட்டி பெத்தேல் ஆலயத்தில் பெஞ்சமின் தலைமையில் இன்னிசை கச்சேரி நடந்தது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு உலகின் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து, புனித ஆரோக்கிய மாதாவை பயபக்தியுடன் வழிபட்டு செல்வது வழக்கம்.
கிறிஸ்தவ ஆலயங்களில் “பசிலிக்கா” என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி ஆலயம் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடை பெறுவது வழக்கம். அதேபோல் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு 11.45 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், பேராலய அதிபர் பிரபாகர், பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கியசுந்தரம், ஆருண் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் அவர்கள் பிரார்த்தனை நடைபெறும் மேடை அருகே வந்த போது ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் பேராலய பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்தனர். அதைதொடர்ந்து மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி, திருவிவிலியத்தை (பைபிள்) உயர்த்தி காண்பித்து புத்தாண்டு பிறப்பை அறிவித்தார். அதைதொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திருப்பலி முடிவடைந்தவுடன் புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை முதலே வேளாங்கண்ணியில் கூட்டம் அலைமோதியது. இதைதொடர்ந்து நேற்று காலையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.
மணலி புதுநகர் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பங்கு தந்தை பெலவேந்திரம் தலைமையில் மயிலை பேராயர் அந்தோணிசாமி கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தார். வருகிற 8-ந்தேதி வரை விழா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அற்புத குழந்தை ஏசுவின் தேர்த்திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொள்வார்கள். விழா ஏற்பாடுகளை அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

நற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி இறையாட்சி அல்லது விண்ணரசு என்பதாகும். இது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
நற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி இறையாட்சி அல்லது விண்ணரசு என்பதாகும். நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு இறையாட்சி என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. ஆனால், இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது உவமைகள் வழியாக எடுத்துக் கூறினார்.
இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார். கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல புதுமைகள் மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது (காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14).
இயேசு இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்த நிகழ்ச்சிகளும் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56; யோவான் 11:1-44). இயேசு தாமே ஒருநாள் சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுவார் என்பதற்கு இந்நிகழ்ச்சிகள் முன்னோடிபோல் அமைந்தன.
இறையாட்சி என்பது கடவுளின் ஆளுகை இவ்வுலகில் வருவதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இசுரயேல் மக்கள் நடுவே கடவுளை அரசராகக் காணும் வழக்கம் நிலவியது. தாவீது, சாலமோன் போன்ற அரசர்கள் இசுரயேல் மக்கள்மீது ஆட்சி செலுத்திய காலத்தில் கூட, அம்மக்கள் கடவுளைத் தங்கள் அரசராக ஏற்று வழிபட்டனர். இயேசு கடவுளின் ஆட்சி இவ்வுலக மக்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருக்கிறது என்று விளக்கம் தந்தார்.
கடவுள் எந்த மதிப்பீடுகளை உயர்ந்தனவாகக் கருதுகிறாரோ அம்மதிப்பீடுகளை மனிதர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும்போது அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது எனலாம். இந்த ஆட்சி இயேசுவின் வழியாக இவ்வுலகில் செயல்படலாயிற்று என்று நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன. இயேசு அறிவித்த இறையாட்சி என்னும் கருத்து வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்கருத்து கிறித்தவ சமய வரலாற்றிலும் பிற சமய மரபுகளிலும் அறிஞர் சிந்தனையிலும் வெவ்வேறு அழுத்தங்களை ஏற்றது.
இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது, அதன் பண்புகள் என்ன என்பதையெல்லாம் இயேசு தம் போதனை வழியாகவும் செயல் வழியாகவும் காட்டினார். நல்ல சமாரியர் என்னும் கதை வழியாக உண்மையான அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார் (காண்க: லூக்கா 10:25-37). கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு இரக்கம் காட்டி, அவர் நலம் பெறுவதற்கு அனைத்தையும் செய்துகொடுத்தார் அந்த சமாரியர். யூதர் பார்வையில் சமாரியர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்.
ஆனால் அந்த தாழ்ந்த மனிதரே கடவுளின் பார்வையில் உயர்ந்தவரானார். அவர் உண்மையிலேயே இறையாட்சியின் மதிப்பீட்டைத் தம் வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார். அதற்கு நேர்மாறாக, யூத சமயத் தலைவர்கள் அன்பும் இரக்கமும் காட்ட முன்வரவில்லை; தங்கள் சமயச் சடங்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். இத்தகைய போக்கை இயேசு பல இடங்களில் கண்டித்துரைத்தார் (காண்க: மத்தேயு 23:1-36; மாற்கு 12:38-40; லூக் 11:37-52).
இயேசுவின் பொதுப்பணிக் காலத்தில் அவர் மூன்று முறை எருசலேம் நகருக்குச் சென்று பாஸ்கா விழாவில் பங்கேற்றதாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பணி வாழ்வு மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகள் இயேசு தம் பணிக்காலத்தில் ஒருமுறை மட்டுமே எருசலேமுக்குச் சென்றதாகக் காட்டுகின்றன. இந்த முரண்பாடான செய்திகளை எவ்வாறு இணைப்பது என்று அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை.
இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தம்மோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் திருத்தூதர்களுக்கும் தம் போதனையின் உள்கிடக்கையை விளக்கிக் கூறினார் (காண்க: விதைப்பவர் உவமை - மத்தேயு 13:1-9; அந்த உவமைக்கு இயேசு விளக்கம் தருதல் - மத்தேயு 13:18-24) இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட இசுரேல்) மற்றும் பெரேயா (இன்றைய மேற்கு யோர்தான்) என்பனவாகும்.

நாம் அதிகாலையிலே வேதத்தை வாசித்து, தேவனை துதிக்கும்போது, நமக்கு விரோதமான எல்லா நோய்களும், கஷ்டங்களும் மாறிப்போகும்.
மகதலேனா என்ற இடத்தைச் சேர்ந்தவள் மரியாள். மரணம் அடைந்த பின்னர் இயேசு உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு சூரியன் உதயமாகிய அந்த காலை நேரத்தில் சென்றாள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இல்லாததால் கதறி அழுதாள். அப்போது இயேசு அவளுக்கு தரிசனமாகி, ‘ஸ்திரியே! ஏன் அழுகிறாய்? யாரை தேடுகிறாய்?’ என்றார்.
மரியாள், அவரைத் தோட்டக்காரர் என்று எண்ணினாள். இயேசு அவளை நோக்கி ‘மரியாளே!’ என்றார். அவள் திரும்பிப் பார்த்து ‘ரபூனி’ (போதகரே) என்றபடியே தன் கையால் அவரைத் தொட முயன்றாள்.
‘என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை’ என்றார் இயேசு.
மரித்த இயேசுவை அந்த அதிகாலை வேளையிலே தேடின காரணத்தினால், உயிரோடு எழுந்த இயேசுவைக் கண்டாள் மரியாள்.
இந்த நிகழ்வு பற்றி விவிலியம் குறிப்பிடும்போது, ‘அவர்கள் அதைக் கேட்டு அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம் பண்ணினார்கள்’ (அப்.5:21) என்கிறது.
இயேசு உயிரோடு எழுந்த ஆச்சரியத்தைக் கண்ட சீடர்கள், இயேசுவை பற்றி தேவாலயத்தில் சாட்சியம் கூற ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட பிரதான ஆசாரியனும், சதுசேயரும் ஒன்றாக சேர்ந்து, அப்போஸ்தலர்களை பிடித்து சிறையிலே பூட்டி வைத்தார்கள்.
ஆனால் கர்த்தருடைய தூதனோ, இரவில் சிறைச்சாலையின் பூட்டை உடைத்து, கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே கொண்டு வந்து விட்டான். மேலும் ‘நீங்கள் அதிகாலையில் தேவாலயம் சென்று, மக்களுக்கு ஜீவ வார்த்தைகளை பிரசங்கம் செய்யுங்கள்’ என்றும் கூறினான்.
அதன்படியே அப்போஸ்தலர்களும் அதிகாலையிலே தேவ ஆலயத்திலே பிரசங்கித்து, ஜீவ வார்த்தைகளை மக்களுக்கு சொன்னார்கள். அப்போது தேவனின் மகிமை வெளிப்பட்டது. அப்போஸ்தலர்களின் வழியாக மக்களுக்கு அநேக அற்புதங் களையும், தேவ அடையாளங்களையும் இறைவன் உண்டாக்கினார்.
இதைக் கேள்விப்பட்ட மக்கள், திரளான நோயாளிகளையும், அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்கு அழைத்து வந்தார்கள். நோயாளிகளை கட்டில்களின் மேல் கிடத்தி, வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். அப்போது ‘பேதுரு’ என்ற அப்போஸ்தலர் அந்த வழியாக நடந்து சென்றார். அவரது நிழல் பட்ட நோயாளிகள் அனைவரும் குணமானார்கள். ஏனெனில் அப்போஸ்தலர்கள் அனைவரும், தேவனிடம் அதிகாலையில் ஜெபத்தின் மூலம் பேசி தங்களை பெலப்படுத்தி கொண்டார்கள்.
அப்போஸ்தலர்களைப் போன்று நாமும் அதிகாலையிலே வேதத்தை வாசித்து, தேவனை துதிக்கும்போது, நமக்கு விரோதமான எல்லா நோய்களும், கஷ்டங்களும் மாறிப்போகும்.
‘அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு,
வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் அங்கே ஜெபம் பண்ணினார்’ (மாற்.1:35).
இந்த இறை வசனம், மனிதராக பிறந்த இறைமகனும் அதிகாலையில் ஜெபம் செய்தார் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. இறைமகனும் கூட, அதிகாலை ஜெபத்தின் மூலம் தந்தையுடன் பேசி தன்னை பெலப்படுத்திக் கொண்டிருக்கிறார். தன்னை அதிகாலை ஜெபத்தினால் பெலப்படுத்திக் கொண்டதால், இயேசு பல அற்புதங்களைச் செய்தார்.
ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்த ஒருவன் இருந்தான். இயேசு அவனைப் பிடித்திருந்த ஆவியை அதிகாரத்தோடே வெளியேற கட்டளையிட்டார். உடனே அசுத்த ஆவி அவனை விட்டுப் போய்விட்டது.
மேலும் பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டிருந்த அநேகரை இயேசு சுகப்படுத்தினார். அநேகமான பிசாசுகளைதுரத்திவிட்டார். குஷ்டரோகியின் மேல் கை வைத்து, மனமுருகி ‘நீ சுத்தமாகு’ என்று சொன்னவுடன், அவனது குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கியது.
இவ்வாறாக அதிகாலை ஜெபத்தினால் பெற்ற பெலத்தினால், மக்களின் நோய்களையும், கஷ்டங்களையும் இயேசு விரட்டி அடித்தார். இயேசுவை போன்றே அதிகாலையில் நாம் தேவனைத் தேடும்போது வல்லமையும், அதிகாரத்தையும் பெறுகின்றோம்.
‘அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும் உம்மை நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்’ (சங்.143:8).
அதிகாலையில் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு, அவருடைய கிருபை நிச்சயமாக கிடைக்கும். தன் மீது விழும் மழையை, வறண்ட நிலமானது தன்னால் இயன்றவரை உறிஞ்சிக் கொள்ளும். அவ்வாறே நம்மால் முடிந்தவரை கர்த்தரோடு அதிகாலையில் உறவாடவேண்டும். அப்பொழுது தேவனின் மகிமையைக் காணமுடியும்.
சங்கீதக்காரன் தாவீது ராஜா அதிகாலையில் தேவனை தேடினான். எனவே தாவீது போன எல்லா இடத்திலும் இறைவன் அவனோடு இருந்து, அவன் எதிரிகளை எல்லாம் அவனுக்கு முன்பாக நிர்மூலமாக்கினார்.
‘ஏழாம் நாளில் அதிகாலமே கிழக்கு வெளுக்கும் போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்தார்கள்’ (யோசுவா 6:15).
கர்த்தர், யோசுவாவை நோக்கி, ‘எரிகோ பட்டணத்தையும், அதன் ராஜாவையும், யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்’ என்றார். எரிகோ பட்டணத்தை சுற்றி, உயரமான மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் கைப்பற்ற முடியாத, வலுவான கோட்டையாக இருந்தது எரிகோ பட்டணம்.
யோசுவா கர்த்தரின் வார்த்தையை கூறினான். ‘யுத்த புருஷராகிய இஸ்ரவேலர் அனைவரும் ஆறுநாள் அதிகாலை வேளையிலே எரிகோ பட்டணத்தை சுற்றி வாருங்கள். ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழு முறை சுற்றிவரக் கடவர்கள். ஏழு கொம்பு எக்காளங்களை தொனிக்கும் போது மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக் கடவர்கள். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்து விழும்’ என்றான்.
இறைமகனின் வாக்குப்படியே, ஆறு நாள் கோட்டையை அதிகாலை வேளையிலேயே சுற்றி வந்தார்கள். ஏழாம் நாள் அதிகாலையிலே ஏழு முறை சுற்றி வந்து, எக்காளங்களை ஒலிக்கச் செய்தார்கள். அப்போது பட்டணத்தின் வலுவான மதில் இடிந்து விழுந்தது. தேவன் சொன்னபடி அதிகாலை வேளையிலே இஸ்ரவேல் மக்கள் எரிகோ கோட்டையை கைப்பற்றினார்கள்.
எரிகோவைத் தகர்த்த தேவன், எதையும் தகர்க்க வல்லவர். அதிகாலையில் தேவனை தேடும் போது, எரிகோ மதில் போன்ற பெரிய பிரச்சினைகள் நம்மை சூழ்ந்து இருந்தாலும், அவற்றை தேவன் தகர்த்தெரிவார். நமக்கு விரோதமான ஆயுதங்கள் வாய்க்காத போதும், தேவன் தாமே நம்மை கரம் பிடித்து நடத்துவார் என்ற நம்பிக்கையுடன் அதிகாலையில் ஜெபம் செய்யுங்கள். இறைவனின் வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்

இயேசுவின் போதனைகள் கூர்மையாகவும், நேர்மையாகவும், சுவையாகவும் இருந்ததால் மக்கள் கூட்டம் அவற்றை எளிதில் உள்வாங்கிக் கொண்டது.
‘ஒருவர் தம்முடைய மனைவியை ஏதாவது காரணம் காட்டி விலக்கி விடுவது முறையா?’ இயேசுவை நோக்கி சோதிக்கும் கேள்வி ஒன்றை பரிசேயர்கள் நீட்டினார்கள்.
‘படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்கள் துணையாக வாழவேண்டுமென்று தான் விரும்பினார். எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பதே நல்லது’ என்று இயேசு சொன்னார்.
இதைக் கேட்டதும் பரிசேயர்கள் உள்ளுக்குள் குதூகலித்தார்கள். ஏனென்றால் அவர் சொன்னது மோசேயின் கட்டளை ஒன்றுக்கு மாறானதாக இருந்தது.
‘போதகரே... நீர் சொல்வது மோசேயின் கட்டளைக்கு எதிராய் இருக்கிறதே. அவர் மண விலக்குச் சான்றிதழ் கொடுத்து திருமண பந்தத்தை முறித்து விடலாம் என்று சொல்லியிருக்கிறாரே’ என்று அவர்கள் கேட்டார்கள்.
‘உங்களுடைய கடின மனதைக் கண்டே மோசே அப்படிச் சொன்னார். ஆதியில் அப்படி இல்லை என்பதை நீங்கள் மறை நூலில் வாசித்ததில்லையா?. நான் உங்களுக்குச் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். பரத்தைமையில் ஈடுபட்டதைத் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் தன் மனைவியை விலக்கி விட்டு வேறு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரப் பாவம் செய்கிறான்’ இயேசு தெளிவாய்ச் சொன்னார். பரிசேயர்கள் அகன்றார்கள்
இயேசு தொழுகைக்கூடம் ஒன்றிற்கு வந்தார்.
அங்கே இருந்த மக்கள் மோசேயின் சட்ட திட்டங்களையும், தோரா நூலையும் நன்கு அறிந்திருந்தவர்கள். அவர்கள் முன்னிலையில் வந்து நின்ற இயேசு, ஏட்டுச் சுருளை எடுத்து வாசித்தார்.
‘ஆண்டவரின் ஆவி என் மேலே... ஏனெனில் அவர் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார். எளியோருக்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும், குருடருக்குப் பார்வை வழங்கவும், இதயம் நொறுங்குண்டவர்களைத் தேற்றவும், ஆண்டவரின் அருள் தரும் ஆண்டினை பிரகடனப்படுத்தவும் அவர் என்னை ஏற்படுத்தினார்’ இயேசு சொல்ல மக்கள் கூட்டம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது.
இயேசுவின் போதனைகள் அதிலிருந்து ஒரு புது பரிமாணத்தை அடைந்தன. கடவுள் தம்முடன் நேரடியாகப் பேசும் பரவச உணர்வுடன் பலரும் அவருடைய போதனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இயேசுவும் அந்த எளிய மக்களோடு உரையாடுகையில் பழைய சட்ட புத்தகங்களில் புரிந்து கொள்ள முடியாத பகுதி களை வாசித்துச் செல்லும் வழக்கமான மத போதகராக இருக்கவில்லை. அவர் தன்னுடைய சிந்தனைகளை, கருத்துக்களை சொல்வதற்கு கதைகளைத் தேர்ந்தெடுத்தார்.
அவர் தேர்ந்தெடுத்த கதைகளும் மக்களின் அன்றைய தொழில் சார்ந்த கதைகளாக இருந்தன. அவருடைய போதனைகள் கூர்மையாகவும், நேர்மையாகவும், சுவையாகவும் இருந்ததால் மக்கள் கூட்டம் அவற்றை எளிதில் உள்வாங்கிக் கொண்டது.
ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இயேசு போதித்துக் கொண்டிருந்தார்.
திடீரென ஒரு கதறல் ஒலி அந்த அமைதிக் கூடாரத்தைச் சத்தத்தால் நிறைத்தது.
எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தனர். அங்கே கூட்டத்தின் நடுவே பேய் பிடித்த ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். அவரை அந்த கூட்டத்தில் இருந்த பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருந்தது. அவர் சாத்தானின் பிடியில் சிக்கியிருந்தவர்.
அந்நாட்களில் பேய் பிடித்திருப்பது என்பதையும், நோய் பிடித்திருக்கிறது என்பதையும் பாவத்தின் பரிசுகளாகத் தான் மக்கள் பார்த்தார்கள். அவர்களோடு நெருங்கிப் பழகுவது சாத்தானோடு நெருங்கிப் பழகுவது போல என்று நம்பியதால், மக்கள் அவர்களை விட்டு விலகியே இருந்தார்கள். இப்போது அவர் ஆலயத்துக்குள் தைரியமாய் நுழைந்து கூட்டத்தினரிடையே புகுந்து களேபரம் செய் கிறான்.
இயேசு அவரைப் பார்த்தார். அவருடைய பார்வையைத் தாங்க முடியாத அந்த பேய் பிடித்தவன் அலறினான்.
‘நசரேயனாகிய இயேசுவே... ஏன் எங்களை நசுக்கப் பார்க்கிறீர்?’
இயேசு மீண்டும் அவனை உற்றுப்பார்த்தார். பேய்பிடித்தவர் தொடர்ந்து கத்தினார்.
‘வேண்டாம். உமக்கும் எனக்கும் இடையே தகராறு எதற்கு. என்னை என் வழியில் விட்டு விடுங்கள். என்னை நசுக்க வேண்டாம். நீர் யார்? என்பதை நான் அறிவேன். நீர் கடவுளின் மகன்’.
‘நீர் கடவுளின் மகன்’ என்று பேய்பிடித்தவன் அலறியதைக் கேட்ட கூட்டத்தினர் திகிலும், திகைப்பும் அடைந்தனர். அதுவரை மக்கள் அவரைக் கடவுளின் மகன் என்று உரக்கக் கூறியதில்லை. பேய் பிடித்தவன் கத்தியதும் மக்களிடையே பெரும் சலசலப்பு.
‘பேசாதே... இவனை விட்டு அகன்று போ. அவனை நிம்மதியில் இருக்க விடு’ இயேசு பேயை அதட்டினார்.
இயேசுவின் கட்டளையைக் கேட்ட பேய் அந்த மனிதனை கூட்டத்தினரிடையே தள்ளி விட்டு பெரும் கூச்சலுடன் வெளியேறியது.
பேய் நீங்கிய மனிதன் தான் ஒரு கூட்டத்தின் நடுவில் நிற்பதையும், எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டு குழப்பமடைந்தான்.
‘பேய்களுக்குக் கூட கட்டளையிடும் இவர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’ கூட்டத்தினர் பலர் அதிசயித்தனர்.
இயேசு தொடர்ந்து மக்களுக்குப் போதித்தார். மக்களோ சற்று முன் நடந்த நிகழ்ச்சியின் பாதிப்பிலிருந்து விடுபட முடியாதவர்களாக விழித்தனர்.

பூண்டி மாதா பேராலயத்தில் ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பிரசித்திப் பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றான பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைசாமி, உதவி பங்கு தந்தையர்கள் சூசை, சதீஸ்ஏசுதாஸ், ஆன்மிக தந்தையர்கள் மாசிலாமணி, அருளானந்தம் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
அதைதொடர்ந்து குழந்தை ஏசு சொரூபம் கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கப்பட்டு புனிதம் செய்யப்பட்டது. இதேபோல் மைக்கேல்பட்டி, பூதலூர், கோட்டரப்பட்டி, முத்தாண்டிப்பட்டி, மணத்திடல் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்று அழைக்கப்படும் வேளாங் கண்ணி பேராலயத்திற்கு நாள்தோறும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் திரளாக வந்து மாதாவை வழிபட்டு செல்கின்றனர். கிறிஸ்தவ ஆலயங்களில் “பசிலிக்கா” என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாகவும் வேளாங்கண்ணி பேராலயம் சிறப்பிக்கப்படுகிறது.
பேராலயம் வங்க கடற்கரையில் அமைந்துள்ளதால் பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். இதையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 11.30 மணியளவில் புனித ஆரோக்கியமாதா விண்மீன் ஆலயத்தில் இருந்து பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கிய சுந்தரம், அரோன் மற்றும் குருக்கள், கன்னியாஸ்திரிகள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் இரவு 11.45 மணிஅளவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது. இதில் கிருபா ஆசிர்வாதம், மறைஉரை, தமிழ், ஆங்கிலம், ஆகிய மொழிகளில் ஜெபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பாவமன்னிப்புக்கான பிரார்த்தனை நடைபெற்றது.
அதைதொடர்ந்து சூசையப்பர் மற்றும் மரியாளாக வேடம் அணிந்தவர்கள் குழந்தை ஏசுவின் சொரூபத்தை பவனியாக கொண்டு வந்து பேராலய அதிபர் பிரபாகரிடம் கொடுத்தனர். பின்னர் சொரூபத்தை எடுத்து சென்று அருகில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்து குழந்தை ஏசு நாதர் பிறந்து விட்டதாக அறிவித்தார். அப்போது வாணவேடிக்கை நடந்தது.
அதைதொடர்ந்து நள்ளிரவு 1.30 மணி வரை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இதையடுத்து நேற்று அதிகாலைமுதல் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டுதிருப்பலியும் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இவ்வுலகில் பிறந்த இயேசு, உண்மையின் பொருட்டு தம்மையே சிலுவையில் பலியாக்கினார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா, இவ்வுலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.
“இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:10-11).
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து பிறந்தபோது, வானதூதர் அறிவித்த நற்செய்தி இதுவே. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா, பெத்லகேமில் பிறந்த குழந்தை இயேசுவைக் காண நமக்கு அழைப்பு விடுக்கிறது.
பொதுவாகவே, ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதிலும் கடவுளே மனித வரலாற்றில் குழந்தையாய் பிறந்தார் என்றால், அது பெரும் மகிழ்ச்சி தரும் நற்செய்தி அல்லவா! எனவேதான், கிறிஸ்துமஸ் விழாவை உலகமே கொண்டாடி மகிழ்கிறது. “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தையை ‘இம்மானுவேல்’ என்று அழைப்பர்” என்ற இறைவாக்கு நிறைவேறிய நாளே கிறிஸ்துமஸ். இம்மானுவேல் என்றால், ‘கடவுள் நம்மோடு’ என்று பொருள். கன்னி பெண்ணான மரியா, கடவுளின் தூய ஆவியால் இறைமகனை கருத்தாங்கி பெற்றெடுத்தார். இறைமகன் மனிதராகி, இந்த உலகில் நம்மோடு தங்கி வாழ்ந்தார்.
கடவுள் மனிதராக பிறக்க வேண்டும், மனிதரை நல்வழிப்படுத்தும் போதனைகளை அவர் வழங்க வேண்டும், மனிதர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே பலியாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை உலகின் பழங்கால புராணங்களில் காண்கிறோம். இவற்றை நிறைவு செய்ய, இயேசு என்ற பெயருடன் கடவுள் மனித வடிவில் தோன்றினார் என்பதே கிறிஸ்துமஸ் நமக்கு வழங்கும் நற்செய்தி. கடவுள் மனிதரானதில் நமக்கென்ன நற்செய்தி இருக்கிறது? இந்த கேள்விக்கு இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மட்டுமே பதில் கொடுக்க முடியும்.
மாடுகள் தங்கும் தொழுவத்தில் பிறந்த இயேசு, மனிதராக பிறந்த அனைவருக்குமே இந்த உலகம் சொந்தம் என்று கற்பித்தார். பிறந்தவுடன் கந்தல் துணிகளால் பொதியப்பட்டு, வைக்கோல் வைக்கும் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்ட இயேசு, உணவுக்காகவும் உடைக்காகவும் மனிதர்கள் கவலைப்படுவது வீண் என்று கூறினார். பறவைகளுக்கு உணவையும், காட்டு மலர்ச்செடிகளுக்கு அழகையும் கொடுக்கின்ற விண்ணகத் தந்தையாம் கடவுள், மனிதரின் தேவையையும் நிறைவேற்ற வல்லவர் என்றும், அவரிடம் நம்பிக்கை வைக்குமாறும் இறைமகன் இயேசு போதித்தார்.
அந்நியருக்கு சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு, உனக்கு எனக்கு என்று நிலத்தை பங்கிடுவதை விரும்பவில்லை. கடவுள் படைத்த இவ்வுலகின் ஒவ்வொரு இடத்திலும், மனிதர் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று இயேசு போதித்தார். மனிதர்கள் குறைபாடுகளுடன் பிறப்பது குறித்து விளக்கம் அளிக்கும் இயேசு, கடவுளின் மாட்சி வெளிப்படவே அவை நிகழ்வதாக கூறுகிறார். பார்க்காமலும், பேசாமலும், கேட்காமலும், கை, கால் இல்லாமலும் ஒருவர் வாழும்போது அவர் கடவுளை மகிமைப்படுத்துகிறார் என்பதே இயேசுவின் போதனை. நாம் தேவை என்று கருதும் அனைத்தையும் விட, கடவுள் ஒருவரே நமக்கு தேவையானவர் என்பதை அவர்கள் உணர்த்துகின்றனர்.
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில், விடுதியில் கூட இடம் கிடைக்காமல் மாட்டுத் தொழுவத்தில் ஏழ்மைக் கோலத்தில் இயேசு பிறந்ததாக பைபிள் நமக்கு கூறுகிறது. இவ்வுலகில் மனிதராக தோன்ற விருப்பம் கொண்ட இறைமகன், அரண்மனையிலோ, மாளிகையிலோ அல்லாமல், மாடுகளின் மத்தியில் பிறக்கும் அளவுக்கு தம்மையே தாழ்த்திக் கொண்டு நாமும் தாழ்ச்சியோடு வாழ அழைப்பு விடுக்கிறார். “நரிகளுக்கு பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்று கூறிய இயேசு, பிறப்பு முதல் இறப்பு வரை எதையுமே சொந்தமாக வைத்துக் கொள்ளவில்லை.
மனிதர்களும் அவ்வாறே வாழ வேண்டுமென இயேசு விரும்புகிறார். செல்வத்தின் மீதான பற்று, கடவுளின் அருள் பராமரிப்பில் இருந்து விலக்கி கொண்டு செல்கிறது. தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள, ஏழை எளியவர்களை நசுக்கி, ஒடுக்கும் ஆவலைத் தூண்டுகிறது. தன் மீது மிதமிஞ்சிய நம்பிக்கையை ஏற்படுத்தி, கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை இழக்கச் செய்கிறது. இவ்வாறு, கடவுள் படைத்த அருள் நிலையில் இருந்து விலக்கி, மருள் நிலை என்ற பாவத்திற்கு இழுத்து செல்கிறது. இந்த பாவத்தில் இருந்து விடுவிக்கவே, இயேசு இவ்வுலகில் மனிதராக தோன்றி விண்ணகத் தந்தையாம் கடவுள் மீது நம்பிக்கை வைக்குமாறு தூண்டினார்.
ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்று இயேசு போதித்தார். உங்களை நீங்கள் அன்பு செய்வது போன்று, பிறரையும் அன்பு செய்யுங்கள் என்று கற்பித்தார். உனக்கு தாகமாய் இருந்தால் நீ தண்ணீர் குடிப்பது போல், அடுத்தவர் தாகமாய் இருந்தால் அவருக்கு தண்ணீர் கொடு. உனக்கு பசியாய் இருந்தால் நீ உணவு உண்பது போல், அடுத்தவர் பசியாய் இருந்தால் அவருக்கு உணவு கொடு. உன்னை பிறர் குறை கூறுவதை நீ விரும்பாதது போன்று, பிறர் மீது நீ குற்றம் சுமத்தாதே. உன்னை ஒருவர் அடித்தால் வலிக்கும் என்பதை உணர்ந்து, பிறருக்கு அந்த வலியைக் கொடுக்காதே. உனக்கு எதிராக பிறர் தீங்கு செய்தால், அவர்களுக்காக நீ கடவுளிடம் மன்றாடு. இதுதான், நாம் பிறரை எப்படி அன்பு செய்ய வேண்டும் என்பதற்கு இயேசு காட்டித்தந்த வழிமுறைகள்.
இயேசு மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை ஒடுக்கியவர்களை சாடினார். தாமே உலகின் ஒளி என்று கூறிய இயேசு, அவரை பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். உலகப் போக்கின்படி வாழாமல், நல்ல ஆயராம் தம்மை பின்பற்றும்படி இயேசு அழைப்பு விடுக்கிறார். இயற்கை மீது கொண்டிருந்த ஆற்றலாலும், உடல் குறைபாடுகள் மற்றும் நோய்களால் துன்புற்றவர்களுக்கு குணம் அளித்ததாலும், இறந்தோரை உயிரோடு எழுப்பியதாலும் இயேசுவின் இறைத்தன்மையை அவரது சீடர்கள் உணர்ந்து கொண்டனர். இறைமகன் என்ற முறையில், அன்பையும், நீதியையும், சமத்துவத்தையும் வழங்க இவ்வுலகில் பிறந்த இயேசு, உண்மையின் பொருட்டு தம்மையே சிலுவையில் பலியாக்கினார். இருப்பினும், அவர் இன்றும் வாழ்கிறார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா, இவ்வுலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும்!
இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரிய தகவல்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
* இயேசு கிறிஸ்து கி.மு.5ஆம் ஆண்டு, பாலஸ்தீன் நாட்டின் பெத்லகேம் நகரில் பிறந்தார். பெத்லகேம் என்றால் ‘அப்பத்தின் வீடு’ என்பது பொருள்.
* இயேசு என்ற பெயரின் எபிரேய மூலச்சொல்லான ‘யெஷ¨வா’ என்பதற்கு ‘கடவுள் விடுவிக்கிறார்’ என்றும், கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘அருட்பொழிவு பெற்றவர்’ எனவும் பொருள்.
* கி.பி.240களில் மார்ச் 28ந்தேதி கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததாக, அக்கால கிறிஸ்தவ நாள்காட்டி குறிப்பிடுகிறது.
* டிசம்பர் 25ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் கி.பி.336ஆம் ஆண்டு ரோம் நகரில் தோன்றியது. இந்த தேதிக்கு, போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகாரம் வழங்கினார்.
* கிறிஸ்துமஸ் கேரல் கீதங்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் ஆலயங்களிலும், 13ஆம் நூற்றாண்டு முதல் தெருக்களிலும் பாடப்படுகின்றன.
* கிறிஸ்துமஸ் விழாவின்போது, இயேசு பிறந்த காட்சியை குடிலாக அமைக்கும் வழக்கத்தை, அசிசி புனித பிரான்சிஸ் 1223ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
* கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுக்கும் வழக்கம் 10ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும், தொப்பையும், குல்லாவும் கொண்ட சான்டாகிளாஸ் 19ஆம் நூற்றாண்டில்தான் வடிவம் பெற்றார்.
* 16ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்துமஸ் விழாக்களை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன.
* 15ஆம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரம், 1882ஆம் ஆண்டு முதன்முதலாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான பண்டிகையாகும். ஏசு பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதியை கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும், பரிசுகளையும் பரிமாறுதல், கிறிஸ்துமஸ் மரம் வைத்தல், கிறிஸ்துமஸ் பாடல், சிறப்பு விருந்து என்பன அடங்கும்.
இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாட்டு தொழுவத்தில் ஏசு பிறந்ததை நினைவு கூரும் வகையில் தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள், கிறிஸ்தவர்களின் வீடுகள், கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் கிறிஸ்து பிறப்பின் மகிமையை வெளிக்காட்டும் வகையில் வீடுகள் மற்றும் ஆலயங்களில் நட்சத்திரங்கள்(ஸ்டார்) மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. மேலும் ஆலய சுவர்களிலும், ஆலய வளாகத்தில் உள்ள மரங்களிலும் மின்விளக்குகள் ஜொலிக்கின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையைமுன்னிட்டு தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். அதன்படி தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை இன்று(சனிக் கிழமை) நள்ளிரவு நடக்கிறது. அதேபோல பல கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறு கிறது. நாளை(ஞாயிற்றுக் கிழமை) அதிகாலையில் பல கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையைமுன்னிட்டு தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, தெற்குவீதி உள்பட பல்வேறு இடங்களில் கடைகளில் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம், பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.