என் மலர்

  ஆன்மிகம்

  பூண்டி மாதா பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை
  X

  பூண்டி மாதா பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு புத்தாண்டு பிறப்பு நேற்றுமுன்தினம் நள்ளிரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமை தாங்கினார். துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தைகள் சூசை, சதீஸ்ஏசுதாஸ், ஆன்மிக தந்தைகள் மாசிலாமணி, அருளானந்தம் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியின்போது புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணி அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டது.

  பிரார்த்தனை நிகழ்ச்சியின் முடிவில் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர். இதையடுத்து நேற்று காலை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி, மணத்திடல், பூதலூர், முத்தாண்டிப்பட்டி, சுக்காம்பார், மேகளத்தூர், கோட்டரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.
  Next Story
  ×